வீட்டுமனைப் பட்டா கொடுங்கய்யா!

சென்னையின் புறநகர்ப் பகுதியான மணலியில் வீடில்லாத ஏழைகளுக்கு இடம் ஒதுக்கியது 1989-ல் ஆட்சியில் இருந்த கலைஞர் அரசு. தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வீடுகட்டி அதற்கு கலைஞர் நகர் எனப் பெயர் சூட்டி 30 வருடங்களுக்கும் மேலாக மக்கள் வசித்து வருகின்றனர். நீர்நிலைகள், உள்ளாட்சி சாலைகள், மாநில-தேசிய நெடுஞ்சாலைகளைத் தவிர்த்து மற்ற புறம்போக்கு இடங்களில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக வசித்தாலே வீட்டுமனைப் பட்டா கொடுக்கலாம் என்கிறது அரசு விதி.

signal

மணலி கலைஞர் நகர்வாசிகளுக்கோ இப்போது வரை பட்டா கிடைக்கவில்லை. இந்த 30 வருடத்தில் அந்த மக்கள் பார்க்காத எம்.எல்.ஏ.க்கள் இல்லை, கலெக்டர்கள் இல்லை, தாசில்தார்கள் இல்லை, வட்டச் செயலாளர்கள் இல்லை. ஆனால் பட்டா மட்டும் வந்தபாடில்லை.

Advertisment

இதுகுறித்து நம்மிடம் பேசிய கலைஞர் நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தின் தலைவர் செல்வம், ""முறையான பட்டா இல்லாததால் அரசாங்கத்தின் எந்த ஒரு பலனும் கிடைக்கமாட்டேங்குது. சின்ன அளவுல லோன்கூட வாங்க முடியல. இதைவிடக் கொடுமை என்னன்னா ஒரே டோர் நம்பர்ல மூணு ரேஷன் கார்டு இருப்பதால அங்கேயும் பிரச்சனை தான். நாங்கெல்லாம் வாழ்றதா? சாகுறதான்னு தெரியல'' என்றார் விரக்தியுடன். கலெக்டர் இரா.கீதாலட்சுமியிடம் நாம் பேசிய போது, ""பட்டா வழங்க உகந்ததாக இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன்'' என்றார்.

-அருண்

மிரளும் மெட்ரிகுலேஷன் துறை!

Advertisment

சென்னை மாநகரின் வேப்பேரியில் உள்ளது எஸ்.டி.ஏ. மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி. இப்பள்ளியின் பிரின்ஸ் பாலாக இருந்த வேதநாயகம் முறையான கல்வித்தகுதி இல்லாமலேயே கோலோச்சி வந்தார். எந்த வகுப்பிற்கு என்ன பாடம் நடத்துகிறார் என்பது அப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கே தெரியாமல் இருந்துள்ளது.

s

ஒருகட்டத்தில் சந்தேகம் வலுப்பெற்ற ஆசிரியர்கள், மெட்ரி குலேஷன் பள்ளிகளின் இயக்குனர் கருப்பசாமிக்கு ரகசியக் கடிதம் போட்டனர். களத்தில் இறங்கி கருப்பசாமி விசாரித்த போது வேதநாயகத்தின் கல்வித் தகுதியைப் பார்த்து அதிர்ச்சியாகிவிட்டார். உடனே அவரை பிரின்ஸ்பால் பதவியிலிருந்து நீக்குமாறு உத்தர விட்டார், நீதிமன்றமும் அதை உறுதி செய்தது.

பார்த்தார் எஸ்.டி.ஏ.கல்வி நிறுவனத்தின் தலைவரான டேனியல் தேவ தாஸ், ""வேதநாயகம் பிரின்ஸ்பாலாத் தானே இருக்கக்கூடாது, பள்ளியின் கரெஸ்பாண்டெண்டா போட்டா என்ன தப்பு?'' என்ற முடிவுடன் வேதநாய கத்தை கரெஸ்பாண் டெண்டாகவும் ஆக்கிவிட்டார். இந்த முறைகேடுகள் குறித்து முதன்மைக் கல்வி அலுவலர் அனிதா விரைந்து நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மெட்ரிகுலேஷன் டிபார்ட்மெண்டிலிருந்து கேள்வி வந்தால், மேலிடத்திலிருந்து டேனியல் தேவதாசுக்கு சப்போர்ட்டாக மிரட்டலும் வருகிறதாம்.

டேனியல் தேவதாசின் நிர் வாகத்தில் தமிழகம்-புதுச்சேரியில் மொத்தம் 156 பள்ளிகள் வருகிறதாம்.

-பாண்டியன்

ஐ.பி.எஸ்.சின் ஐந்து கிலோ தங்கம்!

ஈரோடு மாவட்ட காவல் துறையில் தனிப்பிரிவு கான்ஸ்டபிளாக இருக்கும் வேல்குமார் என்பவரின் வீட்டில் கடந்த ஜனவரி 20-ஆம் தேதி அதிரடி ரெய்டு நடத்தினர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார். சுமார் 15 நாட்கள் கழித்து, அந்த அதிரடி ரெய்டின் தங்க ரகசியம் லீக்காகத் தொடங்கியுள்ளது.

signal

வேல்குமார் வீட்டில் ரெய்டின் போது, பான்பராக், கஞ்சா, லாட்டரி போன்ற அனைத்து இல்லீகல் வியாபாரங்களையும் எந்தவித வில்லங்கமுமின்றி வேல் குமாரே நடந்தி வந்ததற்கான ஆதாரத்தையும், இதற்காக டிபார்ட்மெண்டின் உயர் அதிகாரிகளுக்கு லட்சக்க ணக்கில் மாமூல் சப்ளை ஆனதற்கான ஆதாரத்தையும் கைப்பற்றியது விஜிலென்ஸ்.

இதையெல்லாம் பார்த்து ஜெர்க்கான விஜிலென்ஸ்சையே வெலவெலக்க வைத்துவிட்டது ஐபிஎஸ் அதிகாரி ஒருவருக்கு வேல்குமார் அன்பளிப்பாக வழங்கிய ஐந்து கிலோ தங்கம், 3 கோடி ரூபாய் ரொக்கம் மேட்டர் தான். தங்கம் வாங்கியதற்கான பில், ரொக்கப் பரிமாற்றத்திற்கான வேல்குமாரின் செல்போன் உரையாடல் இவற்றையெல்லாம் மேலிடத்திற்கு சமர்ப்பித்துவிட்டது விஜிலென்ஸ்.

அந்த ஐந்து கிலோ தங்கத்திற்கும் ரொக்கத்திற்கும் சொந்தக்காரர் கொங்கு மாவட்டத்தில் உள்ள உயர் போலீஸ் அதிகாரிதானாம். அவருடைய மாமனாரும் பொள்ளாச்சி துணையும் திக் ஃப்ரெண்ட்சாம். அந்த துணையின் துணை கொண்டு மாவட்ட அமைச்சரைக் கரெக்ட் பண்ணி, அதன் மூலம் ஆட்சி மேலிடத்தையும் சாதிப் பாசத்தால் சரிக்கட்டிவிட்டாரம் காக்கி அதிகாரி.

அப்ப அந்த அஞ்சு கிலோ தங்க சமாச்சாரம் அரோகரா தான்.

-அறிவு