Advertisment

சிக்னல் கதைத் திருட்டு வழக்கு!

signal

கதைத் திருட்டு வழக்கு!

நக்கீரனின் முதன்மைத் துணைஆசிரியரும் கவிஞருமான ஆரூர் தமிழ்நாடன் எழுதிய சிறு கதையான ‘ஜுகிபா’வை மையமாகக்கொண்டு டைரக்டர் ஷங்கர் ரஜினியை வைத்து ‘எந்திரன்’ படத்தை எடுத்தார். மேற்படி கதைத் திருட்டு சம்பந்தமான வழக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஒருமுறை கூட ஷங்கர் ஆஜராகவில்லை. உச்சநீதிமன்றம்வரை சென்றும் ஷங்கரின் வாதம் எடுபடவில்லை.

Advertisment

signal

இந்த நிலையில்தான் கடந்த 29-ஆம் தேதி எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது தமிழ்நாடன் ஆஜரானார், வழக்கம் போல் ஷங்கர் ஆஜராகவில்லை. எனவே ஷங்கருக்கு எதிரான பிடிவாரண்டை நீதிமன்றம் பிறப்பிப்பு என இ-கோர்ட் மூலம் ஊடகங் களுக்கு தகவல் வெளியானது. நக்கீரன் உள்பட பல இதழ்களிலும் மீடிய

கதைத் திருட்டு வழக்கு!

நக்கீரனின் முதன்மைத் துணைஆசிரியரும் கவிஞருமான ஆரூர் தமிழ்நாடன் எழுதிய சிறு கதையான ‘ஜுகிபா’வை மையமாகக்கொண்டு டைரக்டர் ஷங்கர் ரஜினியை வைத்து ‘எந்திரன்’ படத்தை எடுத்தார். மேற்படி கதைத் திருட்டு சம்பந்தமான வழக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஒருமுறை கூட ஷங்கர் ஆஜராகவில்லை. உச்சநீதிமன்றம்வரை சென்றும் ஷங்கரின் வாதம் எடுபடவில்லை.

Advertisment

signal

இந்த நிலையில்தான் கடந்த 29-ஆம் தேதி எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது தமிழ்நாடன் ஆஜரானார், வழக்கம் போல் ஷங்கர் ஆஜராகவில்லை. எனவே ஷங்கருக்கு எதிரான பிடிவாரண்டை நீதிமன்றம் பிறப்பிப்பு என இ-கோர்ட் மூலம் ஊடகங் களுக்கு தகவல் வெளியானது. நக்கீரன் உள்பட பல இதழ்களிலும் மீடியாக்களிலும் செய்தியாக வெளியானது.

இதனால் பரபரப்பான ஷங்கரின் வழக்கறிஞர், பிடிவாரண்டை ரத்து செய்யுமாறு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதியரசர், ’ஷங்கருக்கு எதிராக பிடிவாரண்ட் எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. வருகிற 19-ஆம் தேதி கண்டிப்பாக நேரில் ஆஜராகவேண்டும் என்ற நோட்டீஸ்தான் அனுப்பப்பட்டுள்ளது. இ-கோர்ட் இணையதளத்தில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வந்துள்ள தவறான பதிவு நீக்கப்படும்’’ என உத்தரவிட்டதையடுத்து மனுவை திரும்ப பெற்றுக்கொண்டார் ஷங்கரின் வக்கீல்.

Advertisment

கதைத் திருட்டு வழக்கில் வருகிற 19-ஆம் தேதியாவது நேரில் ஆஜராவாரா டைரக்டர் ஷங்கர்?

-கீரன்

பா.ஜ.க.வின் விஷமப் பிரச்சாரம்!

இந்தியா முழுவதும் சிறுபான்மையினருக்கு எதிராக விஷமக்கருத்துக்களை கக்கி வரும் பா.ஜ.க., தமிழக தேர்தல் நேரம் நெருங்கி வரும் நேரத்தில் விஷமத்தின் வீரியத்தைக் கூட்ட ஆரம்பித்துள்ளது. மேட்டுப்பாளையத்தில் தமிழக பா.ஜ.க. சார்பில் கடந்த 01-ஆம் தேதி நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது, கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரான கல்யாணராமன் என்கிற கல்யாண் என்பவர், இஸ்லாமியர்கள் பெருமதிப்பிற்குரிய இறைத்தூதரான நபிகள்நாயகம் குறித்து விஷமத்தனமாக பேசினார். இவரின் பேச்சுக்கு வேலூர் இப்ராஹிம் என்பவரும் ஒத்து ஊதியதுதான் பெருங்கொடுமை.

ss

மேற்படி கருத்தால் கொந்தளித்த இஸ்லாம் சமூக மக்கள், அன்றிரவே தமிழகம் முழுவதும் சாலை மறியல் போராட் டத்தில் இறங்கி னார்கள். திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலை அரியமங்க லம் பால் பண்ணை ரவுண்டானா அருகே நடந்த சாலை மறியலால் இரண்டுமணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவும் இஸ்லாமியர் களின் கொந்தளிப்பைத் தணிக்கவும் அன்றிரவே கல்யாணராமனை கைது செய்தது போலீஸ். இந்தத் தகவல் உறுதி செய்யப்பட்ட பிறகே, சாலை மறியலைக் கைவிட்டனர் இஸ்லாமியர்கள்.

திரைப்பட இயக்குனர் அமீரும், “தமிழகத்தின் பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கல்யாணராமனையும் வேலூர் இப்ராஹிமையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்''’என அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

-மகேஷ்

அனுமதியில்லாத உல்லாச மாளிகை!

கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள உத்தண்டி, சென்னை புறநகரில் மிக காஸ்ட்லியான ஏரியாக்களில் ஒன்று. இங்கே ஒருகிரவுண்ட் நிலத்தில் தரை தளத்துடன் முதல் தளம் மட்டும் கட்டுவதற்குத்தான் அனுமதி. ஆனால் பிரபல கார்ப்பரேட் கம்பெனியான ஓயோவோ, உத்தண்டி பிரதான சாலையில் ஒருகிரவுண்ட் நிலத்தில் ‘ஓயோ டவுன் ஹவுஸ் என்ற பெயரில் மூன்றுமாடி கொண்ட கட்டிடத்தைக் கட்டி, எந்தவித அனுமதியும் இல்லாமல் தங்கும் விடுதியாக நடத்துகிறார்கள். அதிலும் டூவீலருக்கோ, கார்களுக்கோ பார்க்கிங்கிற்கு இடமில்லை. கட்டிடத்தின் நுழைவு வாயில் பகுதியே மெயின் ரோட்டில்தான் முட்டிக்கொண்டு நிற்கிறது.

signal

ஓயோ நிறுவனம் தங்கும் விடுதி சேவையில் பெயர் பெற்றது. அவரவர் பட்ஜெட்டுக்கேற்ற வகையில் பல ஊர்களிலும் ஹோட்டல்களை நிர்வகிப்பதில், தொழில்துறையில் லாபகரமானதாக இருக்கிறது.

அதனால் ஓயோவின் ஷேர்ஹோல்டர்களாக உயர் அதிகாரிகள் பலர் உள்ளனர். இதுவே அனுமதிதான் என்பதுபோல, உத்தண்டியில் வீக் எண்ட் பார்ட்டி மட்டுமல்ல, வீக் முழுவதுமே பார்ட்டியோ பார்ட்டிதான். அந்த ஏரியாவில் வீடு கட்டி நிம்மதியாக இருக்கலாம் என்ற நினைப்புடன் போனவர்கள் எல்லாம் அடக்கடவுளே இதென்ன கொடுமை? என நொந்து போகும் நிலைக்கு ஆளாகிவிட்டார்களாம்.

-பரமு

nkn060221
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe