வாபஸ் வாங்குங்க! ஸ்டாலின் கண்டிப்பு!

மக்கள் கிராமசபைக் கூட்டத்தின் முக்கிய பயணமாக கடந்த 20-ஆம் தேதி தேனி மாவட்டம் போடி தொகுதிக்குட்பட்ட அரண்மனைப்புதூருக்கு வந்தார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின். துணை முதல்வர் ஓ.பி.எஸ். தொகுதியில் தி.மு.க.வின் கிராமசபை கூட்டத்திற்கு ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டிருந்தனர். மற்ற ஊர்களின் மக்கள் சபைக்கூட்டம் போல, பெண்கள் மத்தியில் நடந்துகொண்டே பேச ஆரம்பித்தார் ஸ்டாலின். ""கடந்த பத்து ஆண்டுகளாக தி.மு.க. ஆட்சியில் இல்லாவிட்டாலும், ஆளும் கட்சியைவிட மக்கள் பிரச்சனைகளுக்கு முன்னிற்கிறோம். அதுசரி... இந்த தொகுதியின் எம்.எல்.ஏ.வான பன்னீர்செல்வத்தை எப்பவாவது பார்த்திருக்கிறீர்களா? உத்தமபுத்திரர் மாதிரி, ஜெயலலிதா சமாதியில் தியானம் இருந்தார், தர்மயுத்தம் நடத்தினார். எதுக்காகன்னா ஜெயலலிதா சாவுல மர்மம் இருக்கு அதுக்கு விடை தெரியணும்கிறதுக்காக. ஆனா விடை தான் தெரியல. ஜெ. சாவு மர்மத்தை மக்களுக்கு அம்பலப்படுத்தாம இந்த ஸ்டாலின் ஓயமாட்டான்''’என்றதும் கூடியிருந்த பெண்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு.

signal

""ஒங்களோட கருத்துகளை தைரியமா சொல்லுங்க''’என ஸ்டாலின் சொன்னதும் எழுந்தார் நாகலாபுரம் ராசாத்தி. “"கொஞ்ச நாளைக்கு முன்னாலதான் இந்த ஏரியாவுல ரோடு போட்டாங்க. கமிஷன் கொள்ளையால இப்ப பல் இளிச்சிருச்சு. அந்த ரோட்டுக்கு ப்ளாஸ்திரி போட்டு ஒட்டிக்கிட்டிருங்காங்க''’என்றார்.

Advertisment

ஆவேசமாக எழுந்த பூதிப்புரம் லட்சுமியோ, ""எங்க ஊருக்கு ஓ.பி.எஸ். வரட்டும், எனக்கு இருக்கிற ஆத்திரத்துல அவரை...'' ’’என ஆத்திரப்பட்டு ஒருவார்த்தையை கனலாக வெளிப்படுத்தினார். இதைக்கேட்டு திடுக்கிட்ட ஸ்டாலின், ""உங்க ஆத்திரம் புரியுது, ஆனா தப்பான வார்த்தையை விட்டுடீங்க... அதை வாபஸ் வாங்குறேன்னு மைக்ல சொல்லுங்க''’என்றதும், “"இல்லங்க அவ்வளவு கோபத்துல இருக்கோம் நாங்க''’என பதில் சொன்னார் லட்சுமி. ""சொன்ன வார்த்தையை வாபஸ் வாங்குறேன்னு சொல்லுங்க''’’ என ஸ்டாலின் உறுதியாகச் சொல்ல, “""வாபஸ் வாங்கிக்கிறேங்க''’’எனச் சொல்லிவிட்டு அமர்ந்தார் லட்சுமி. "வார்த்தை வாபஸ் ஆனாலும், மக்களின் கொந்தளிப்பு உணர்வு தேர்தலில் எதிரொலிக்கும்' என்கிறார்கள் போடி வாக்காளர்கள்.

-சக்தி

அப்பாடா நிம்மதி! அ.தி.மு.க.வினர் குஷி!

Advertisment

ஜெயலலிதா ஆட்சியின் போது, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வரின் தனிப் பிரிவு அதிகாரியாக இருந்தவர் இன்னோசெண்ட் திவ்யா. முதல் வரின் தனிப்பிரிவில் மனு கொடுத் தால் தங்களது பிரச்சனைகள் தீரும், கோரிக்கைகள் நிறை வேறும் என்ற நம்பிக்கை மக்களுக்கு இருந்தது. அதனால் தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டமான கன்னியாகுமரியி லிருந்து கூட தலைமைச்செயலகம் வந்து மனு கொடுப்பார்கள்.

signal

தினமும் ஆயிரக்கணக்கான வர்களின் மனுக்களை கனிவுடன் வாங்கி, இன்முகத்துடன் மக்களை அனுப்புவார் இன்னோ செண்ட் திவ்யா. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நீலகிரி கலெக்டராக நியமிக்கப்பட்ட திவ்யாவால் ரொம்பவே திண்டாடினார்கள் ஆளும் கட்சிப் புள்ளிகள்.

ஆளும் கட்சியினரால் நடத்தப்படும் அனுமதியில்லா ரிசார்ட்டுகள், கட்டப்பட்ட பல மாடிக் கட்டிடங்கள், மலைமேல் தடை செய்யப்பட்ட பொக்லைன் எந்திரங்களை வைத்து பாறை களை உடைத்தல் இவற்றுக் கெல்லாம் செக் வைத்தார் இன்னோசெண்ட் திவ்யா.

"ஐயையோ' என அலறிய அ.தி.மு.க. புள்ளிகள், எடப்பாடியிடம் முறையிட... திவ்யாவுக்கு டிரான்ஸ்பர் ஆர்டர் வந்தது. இதை எதிர்த்து யானை ராஜேந்திரன் என்பவர் உயர்நீதிமன் றத்தில் வழக்குத் தொடர, நீதிமன்ற உத்தரவால் திவ்யாவின் டிரான்ஸ்பர் கேன்சலானது. அப்போது ஆஃப்பான டிரான்ஸ்பர் ஆர்டர், இப்போது மீண்டும் ஆன் ஆகிவிட்டதால், வேறு பணிக்கு ரெடியானார் இன்ன செண்ட் திவ்யா.

"அப்பாடா'……என நிம்மதியாகி விட்டார்கள் அ.தி.மு.க.வினர்.

-அருள்குமார்

கெத்து காட்டும் வெத்து இன்ஸ்பெக்டர்!

s

1996-ஆம் ஆண்டு நேரடியாக சப்-இன்ஸ்பெக்டராக தேர்வானவர் வைரவன். 2002 முதல் 2005 வரை பள்ளிக் கரணை போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ.யாக இருந்தபோது வாரிச் சுருட்டியதால், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வைரவன் மீது வழக்கு பாய்ந்து, இப்போது வரை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.

ஆனாலும் தனது கெத்தைக் காட்டி, தன்மீது தவறு இல்லை என டிபார்ட்மெண்ட் ரீதியாக ரிப்போர்ட்டையும் தாக்கல் செய்ய வைத்துவிட்டார். அதனாலேயே சென்னை ரயில்வே மாவட்டத்தின் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டராக கோலோச்சுகிறார் வைரவன்.

அந்தளவுக்கு ரயில்வே போலீஸ் டி.ஜி.பி.யான சைலேந்திரபாபுவிடம் செல்வாக்கை வளர்த்து வைத்துள்ளார் வைரவன். இல்லேன்னா செங்கல்பட்டு இருப்புப் பாதை இன்ஸ் பெக்டராக இருக்கும் வைரவனால் டெபுடேஷனில் நுண்ணறிவு தனிப்பிரிவு இன்ஸ்பெக்டராக டபுள் ஆக்ட் கொடுக்கமுடியுமா? இந்த டெபுடேஷனால் செம டென்ஷனில் இருக்கிறார் அந்தப் பதவிக்கு வரவேண்டிய இன்ஸ்பெக்டர் சசிகலா.

சைலேந்திரபாபுவிடம் தனக்கு இருக்கும் செல்வாக்கால், தனக்கு பிடித்தவர்களுக்கு பிடித்த இடத்திற்கு போஸ்டிங் கும், பிடிக்காதவர்களுக்கு டார்ச்சரும் தருவதை வழக்கமாக வைத்திருக்காராம் வைரவன். நேர்மையான அதிகாரியான சைலேந்திரபாபு நிச்சயம் இதனைக் கவனிப்பார்.. கண்டிப்பார் என நம்புகிறார்கள் ரயில்வே காக்கிகள்.

-அரவிந்த்