Advertisment

சிக்னல் : அலுவலகம் சரியாச்சு! அமைச்சர் வருவாரா?

adadf

அலுவலகம் சரியாச்சு! அமைச்சர் வருவாரா?

ட்டுப் போட்டு ஜெயிக்க வைப்பதோடு சரி, அதன் பின் அந்த தொகுதியின் எம்.எல்.ஏ.வை மக்கள் பார்ப்பதென்பது மோடியின் 15 லட்சத்தைப் பார்ப்பது போலாகிவிடும். இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகத்தான் 1996ல் கலைஞர் முதல்வராக இருந்தபோது, 234 தொகுதிகளிலும் சட்டமன்ற உறுப்பினர் அலு வலகத்தைத் திறந்து மக்களின் பிரச்சினைகளைக் கேட்டுத் தீர்வு சொல்ல வழி ஏற்படுத்தினார். ஆனாலும் பல எம்.எல்.ஏ.க்கள் அரசாங்கம் கட்டிய எம்.எல்.ஏ. அலுவலகத்தில் வசதி குறைவாக இருப்பதாகச் சொல்லி, இங்கே வருவதே இல்லை.

Advertisment

signal

இன்னும் சில எம்.எல். ஏ.க்களோ தங்களது சொந்த செலவில் காஸ்ட்லியான கட்டிடங்களில் அமர்ந்து கொண்டு, அவ்வப்போது காட்சி தருவார்கள். இதனால் 200க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ. அலுவலகங்கள் முட்புதர்கள், செடிகொடிகளும் மண்டி சரக்கு பார்ட்டிகளுக்கும் சல்லாப ஜோட

அலுவலகம் சரியாச்சு! அமைச்சர் வருவாரா?

ட்டுப் போட்டு ஜெயிக்க வைப்பதோடு சரி, அதன் பின் அந்த தொகுதியின் எம்.எல்.ஏ.வை மக்கள் பார்ப்பதென்பது மோடியின் 15 லட்சத்தைப் பார்ப்பது போலாகிவிடும். இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகத்தான் 1996ல் கலைஞர் முதல்வராக இருந்தபோது, 234 தொகுதிகளிலும் சட்டமன்ற உறுப்பினர் அலு வலகத்தைத் திறந்து மக்களின் பிரச்சினைகளைக் கேட்டுத் தீர்வு சொல்ல வழி ஏற்படுத்தினார். ஆனாலும் பல எம்.எல்.ஏ.க்கள் அரசாங்கம் கட்டிய எம்.எல்.ஏ. அலுவலகத்தில் வசதி குறைவாக இருப்பதாகச் சொல்லி, இங்கே வருவதே இல்லை.

Advertisment

signal

இன்னும் சில எம்.எல். ஏ.க்களோ தங்களது சொந்த செலவில் காஸ்ட்லியான கட்டிடங்களில் அமர்ந்து கொண்டு, அவ்வப்போது காட்சி தருவார்கள். இதனால் 200க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ. அலுவலகங்கள் முட்புதர்கள், செடிகொடிகளும் மண்டி சரக்கு பார்ட்டிகளுக்கும் சல்லாப ஜோடிகளுக்கும் தோதான இடமாகப் போய்விட்டது.

அப்படிப்பட்ட ஒரு வசதியான கட்டிடம் தான் கடலூர் தொகுதி எம்.எல். ஏ.வும் அமைச்சருமான எம்.சி.சம்பத்தின் எம்.எல்.ஏ. அலுவலக கட்டிடம். கொஞ்ச நேரம் கூட ஏசி இல்லாமல் இருக்கமுடியாத எம்.சி.சம்பத்தால், எப்படி இந்தக் கட்டிடத்தில் உட்கார்ந்து மக்கள் குறைகளைக் கேட்கமுடியும்?

Advertisment

சம்பத்தை சந்திக்க முடியாமல் மக்கள்படும் வேதனைகளை கடந்த 28-ஆம் தேதி நக்கீரன் இணைய தளத்தில் செய்தியாக வெளியிட்டோம். இதைப் பார்த்த அரசு அதிகாரிகள், பொக்லைன், மண்வெட்டி, கடப்பாறை சகிதம் வந்து சம்பத்தின் அலுவலகத்தை சீர்படுத்தினார்கள். "இது எம்.எல்.ஏ. அலுவலகம்' என்ற பெயர்ப் பலகையும் பளிச்சிட்டது. இதைப் பார்த்த தொகுதி மக்கள், நக்கீரனுக்கு நன்றி தெரிவித்து, அமைச்சருக்கான மனுக்களுடன் அவரது எம்.எல்.ஏ. அலுவலகத்திற்கு வரத் தொடங்கி விட்டார்கள். ஆனால் அமைச்சர் சம்பத் வருவாரா? மாட்டாரா? எனத் தெரியவில்லை.

-எஸ்.பி.எஸ்.

sss

மனசோடு போய்விடுமா மருத்துவப் படிப்பு?

ஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகில் உள்ள ஓமவயல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயக் கூலித்தொழி லாளியான ராமமூர்த்திக்கு வருமானம் என்பதும் நல்ல சாப்பாடு என்பதும் எப்போதாவதுதான் கிடைக்கும். கஜா புயலில் சேதமடைந்த வீட்டைக்கூட சீரமைக்க முடியாமல், தார்ப்பாயை வைத்து மூடி தற்காலிக நிம்மதியில் இருக்கிறது அந்தக் குடும்பம்.

குடும்பத்தை தாக்கும் வறுமையை தனது படிப்பால் விரட்டியடிப்போம் என்ற லட்சியத்துடன் கொன்றைக்காடு அரசுப்பள்ளியில் படித்த ராமமூர்த்தியின் மகள் ஓவியா, 10-ஆம் வகுப்பில் 344, +1, +2வில் 503 மதிப்பெண்கள் வாங்கி பள்ளியிலேயே முதலிடம் பெற்றார்.

""கால்நடை மருத்துவப் படிப்பிற்கு முயற்சி செய்'' என ஆசிரியர்களும் உடன் படித்தவர்களும் கூறியதன்பேரில் அந்தப் படிப்புக்கு விண்ணப்பித்தார். சில நாட்களுக்கு முன்பு கவுன்சிலிங்கிலும் கலந்துகொண்டு, சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரியில் இடமும் கிடைத்து, ஜன.13-ஆம் தேதிக்குள் 20 ஆயிரம் பணம் கட்டச் சொல்லி உத்தரவும் கிடைத்தது.

ஓவியாவோ "மருத்துவப் படிப்பு என்பது மனசோடு போய்விடுமோ' என கவலையில் இருக்கிறார். காரணம்... ’’""கவுன்சிலிங்கிற்குச் செல்வதற்கே இரண்டாயிரம் ரூபாய் வட்டிக்கு கடன் வாங்கி என்னை அனுப்பினார் அப்பா. இப்ப அட்மிஷனுக்கு இருபதாயிரத்துக்கும் ஹாஸ்டல் பில்லுக்கும் புத்தகம் வாங்கவும் சில ஆயிரம் செலவாகுமே. அதுக்கு நான் எங்கே போவேன்?'' என்கிறார் கலக்கத் துடன்.

ஓவியாவின் கனவுச் சித்திரம் கலையாமல் உதவக்கூடிய உள்ளங்களே.. கவனத்தில் கொள்ளுங்களேன்.

-பகத்சிங்

காத்திருப்பு போராட்டம்!

தமிழகத்தில் சீர்மரபினர் (டி.என்.டி) மக்களைக் கணக்கெடுத்து ஒரே சான்றிதழ் வழங்க வேண்டும் என்பது அந்த சமூக மக்களின் நீண்டநாள் கோரிக்கை. தேர்தல் நெருக்கத்தில் பல சாதி அமைப்புகளும் தங்க ளுக்குத் தேவையானவற்றை வலியுறுத்திவரும் இந்த நேரத்தில் "சீர்மரபினர் சமூகத்தின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்' என களத்தில் இறங்கியுள்ளார் தென்னிந்திய தேசிய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு.

அய்யாக்கண்ணு தலைமையில் முத்தரையர் அரசியல்களம் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜா முன்னிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட டி.என்.டி நிர்வாகிகள் ஒருங்கிணைந்தனர். திருச்சி-ஸ்ரீரங்கம் மாம்பல சாலையில் உள்ள பிறபடுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதி அலுவல கத்தின் முன்பு கடந்த 04-ஆம் தேதி காலை 11 மணிக்கு திரண்டனர்.

இந்த தகவல் அமைச்சரின் கவனத்திற்குச் சென்றாலும் அலுவலகம் பக்கமே வராமல் டிமிக்கி கொடுத்தார். என்ன ஆனாலும் சரி, அமைச்சர் வளர்மதியை சந்திக்காமல் திரும்புவதில்லை என்ற உறுதியுடன் காத்திருப்பு போராட்டத்தை மேற்கொண்டனர் அய்யாக்கண்ணு தலைமையிலான நிர்வாகிகள்.

-மகேஷ்

nkn090121
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe