Advertisment

சிக்னல் முரட்டு மீசையை முடக்கிய புற்று நோய்!

signal

முரட்டு மீசையை முடக்கிய புற்று நோய்!

இயக்குனர் பாரதிராஜாவின் ‘"கிழக்குச் சீமையிலே'’ படம் மூலம் சினிமா நடிகராக அறிமுகமானவர் மதுரையைச் சேர்ந்த தவசி. காமெடி, குணசித்திரம், ஊர்த்தலைவர் போன்ற கேரக்டர்களில் நடித்த தவசிக்கு அடையாளம் தந்தது ‘"வருத்தப்படாத வாலிபர் சங்கம்'’ படத்தின் ’"கருப்பன் குசும்புக்காரன்'’’ டயலாக்தான். காமெடி நடிகர் சூரியின் அப்பாவாக அப்படத்தில் நடித்திருக்கும் தவசியின் அடையாளமே பொசு பொசுவென வளர்ந்திருக்கும் முரட்டு மீசை.

Advertisment

signal

அந்த முரட்டு மீசை நடிகரை உணவுக்குழாய் புற்று நோய் தாக்கியதால், மனிதர் உருக்குலைந்து போனார். சினிமாவில் சின்ன நடிகர்களை வாட்டும் வறுமை நோயும் தவசியை தொற்றியதால் வைத்தியச் செலவுக்கு வழியின்றி தவித் தார். இவரின் உடல்நிலை குறித்து இளைஞர் ஒருவர் பேசிய வீடியோவை வாட்ஸ்-அப்பில் பார்த்து கவலைப்பட்ட திருப்பரங் குன்றம் தி.மு.க. எம்.எல்.ஏ. டாக்டர் சரவணன், தனது மருத்துவமனையிலேயே சேர்த்த

முரட்டு மீசையை முடக்கிய புற்று நோய்!

இயக்குனர் பாரதிராஜாவின் ‘"கிழக்குச் சீமையிலே'’ படம் மூலம் சினிமா நடிகராக அறிமுகமானவர் மதுரையைச் சேர்ந்த தவசி. காமெடி, குணசித்திரம், ஊர்த்தலைவர் போன்ற கேரக்டர்களில் நடித்த தவசிக்கு அடையாளம் தந்தது ‘"வருத்தப்படாத வாலிபர் சங்கம்'’ படத்தின் ’"கருப்பன் குசும்புக்காரன்'’’ டயலாக்தான். காமெடி நடிகர் சூரியின் அப்பாவாக அப்படத்தில் நடித்திருக்கும் தவசியின் அடையாளமே பொசு பொசுவென வளர்ந்திருக்கும் முரட்டு மீசை.

Advertisment

signal

அந்த முரட்டு மீசை நடிகரை உணவுக்குழாய் புற்று நோய் தாக்கியதால், மனிதர் உருக்குலைந்து போனார். சினிமாவில் சின்ன நடிகர்களை வாட்டும் வறுமை நோயும் தவசியை தொற்றியதால் வைத்தியச் செலவுக்கு வழியின்றி தவித் தார். இவரின் உடல்நிலை குறித்து இளைஞர் ஒருவர் பேசிய வீடியோவை வாட்ஸ்-அப்பில் பார்த்து கவலைப்பட்ட திருப்பரங் குன்றம் தி.மு.க. எம்.எல்.ஏ. டாக்டர் சரவணன், தனது மருத்துவமனையிலேயே சேர்த்து, உணவுக்குழாயில் ஸ்டெண்ட் பொருத்தி இலவச சிகிச்சை அளித்து வருகிறார். சரியான நேரத்தில் டாக்டர் சரவணன் செய்த உதவியைக் கேள்விப் பட்ட நடிகர் விஜய்சேதுபதி 1 லட்சம் கொடுத் துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன், தனது ரசிகர் மன்றத் தலைவர் மோகன் மூலம் 25 ஆயிரம் கொடுத்து உதவியுள்ளார். அதேபோல் நடிகர் சூரியும் முதல்கட்டமாக 20 ஆயிர மும் மருத்துவமனையில் தவசியுடன் இருக்கும் உதவியாளருக்கு மூன்று வேளை உணவுச் செலவையும் ஏற்றுக் கொள்வதாக சொல்லி யுள்ளார்.

-அண்ணல்

கேண்டீன் திறக்கப்படாத மர்மம்!

சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனைத்து விதமான உயர்தர சிகிச்சைகளும் ஏழை மக்களுக்கு கிடைக்கும் வகையில் அளிக் கப்படுகிறது. இம் மருத்துவனைக்கு நாள்தோறும் 15 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட வெளிப்புற நோயாளிகள், அவர்களைப் பார்க்க வரும் உறவினர்கள், என 50 ஆயி ரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.

Advertisment

signal

மருத்துமனையில் நான்கிற்கும் மேற்பட்ட உணவகங்கள், மற்றும் டீக்கடைகள் செயல்பட்டு வந்தன. நோயாளிகள் மட்டுமல்ல, மருத்துவமனை யின் ஊழியர்களுக்கும் இந்த கேண்டீன்களும் இதனுடன் அம்மா உணவகமுமே பசி தீர்க்கும் ஸ்பாட். கொரோனா லாக்-டவுன் ஆரம்பித்ததும் அத்தனை கேண்டீன்களுக்கும் ஷட்டவுன் போட்டனர். அப்போது இழுத்துவிட்ட ஷட்டரை இன்னும் திறக்காமல் மூடியே வைத்துள்ளனர். விதிவிலக்காக அம்மா உணவகம் மட்டும் செயல்படுவதால், நோயாளிகளும் அவர்களைப் பார்க்க வரும் உறவினர்களும் ரொம்ப நொந்து நொம்பலமாகிவிடுகின்றனர்.

""தமிழ்நாடு முழுவதும் லாக்-டவுன் தளர்வுகள் அமலுக்கு வந்துவிட்ட பிறகு, அரசு மருத்துவமனை கேண்டீனுக்கு மட்டும் ஏன் இந்த கெடுபிடி?'' என காண்ட்ராக்டர் ஒருவரிடம் கேட்டோம். "சுகாதார அமைச்சரின் பி.ஏ.சீனி வாசனின் திருவிளையாடல்தான்'’’ என்றார். மருத்துவமனையின் டீன் தரணிராஜனிடம் இந்த விஷயத்தைச் சொன்னபோது, “""அப்படியா... திறக்கலையா? நான் பெர்மிஷன் கொடுத்துட் டேனே''’என நம்மிடம் ஆச்சர்யம் காட்டினார். சுகாதாரத்தின் பி.ஏ.சீனிவாசனோ தீபாவளி குஷி, பிஸியில் இருந்தார்.

"ஏழைங்க வயிறு நிறையட்டும்யா... சீக்கிரம் கேண்டீனை திறங்கய்யா...'

-அரவிந்த்

இவ்விடம் டூப்ளிகேட் பட்டா வழங்கப்படும்!

signalதிண்டுக்கல் மாவட்டம் நிலக் கோட்டை அருகே இருக்கும் ஒருதட்டு கிராமத்தின் காமாட்சி என்பவருக்கு இரு மனைவிகள். இதில் இரண்டாவது மகனான செல்லதுரையின் பேரில் நிலக்கோட்டையில் உள்ள 35 செண்ட் நிலத்தை எழுதி வைத்தார் காமாட்சி. மதுரை அலங்காநல்லூ ரில் வசிக்கும் செல்லதுரைக்கு வாரிசுகள் இல்லாததால், தனது தங்கை ராணி மற்றும் அவரது மகன் சரவணன் பெயருக்கு எழுதிக் கொடுத்துவிட்டார். ஒருதட்டு கிராமத்தி லிருந்து மூதாட்டி ராணி யால் அடிக்கடி நிலக்கோட்டைக்குச் செல்ல முடிய வில்லை.

"நீ போகாட்டி என்ன நாங்க போவோம்ல' என, காமாட்சியின் முதல் மனைவியின் மகன் கதிரேசன், மகள்கள் செல்வி, ராதா ஆகியோர் அந்த நிலத்துப் பக்கம் அடிக்கடி போய் வந்து, ஒருவழியாக 11 செண்ட் நிலத்திற்கு டூப்ளிகேட் பட்டாவைத் தயார் செய்து ஒரு கோடி ரூபாய்க்கு விற்றும்விட்டனர்.

"கதிரேசனால் மட்டும் காரியம் சாதிக்க முடியுமா என்ன?' ஒருதட்டு வி.ஏ.ஓ. முத்துப் பாண்டி, நிலக்கோட்டை தாசில்தார் ருக்மணி, சப்-ரிஜிஸ்ட்ரார்கள் அருண் பிரசாத், சதாசிவம், பத்திர எழுத்தர்கள் பூர்ணசந்திரன், கோபால் ஆகியோர் கொண்ட வலுவான டீமுடன் மூதாட்டி ராணியின் நிலத்தை ஆட்டையப் போட்டுவிட்டார்கள். இதை லேட்டாகத் தெரிந்து பதறியடித்து நில அபகரிப்பு தடுப்புப் பிரிவில் புகார் கொடுத்தார் ராணி. ஆக்ஷனில் இறங்கிய இன்ஸ்பெக்டர் வினோதா, டூப்ளிகேட் பட்டா தயார் செய்ததை உறுதி செய்து, 15 பேர் மீது எஃப்.ஐ.ஆர். போட்டார். சிவில் கேஸ் என்பதால் யாரையும் அரெஸ்ட் பண்ணவில்லை.

டூப்ளிகேட் பட்டாவை சிறப்பாக தயார் செய்ய உதவிய அரசு அதிகாரிகள் அனைவருமே பதவி உயர்வில் சென்றுவிட்டார்கள். "எங்களுக்கும் அந்த சொத்தில் பங்கு இருக்கு' என்கிறார் கதிரேசன். பரிதவிக்கிறார் மூதாட்டி ராணி.

-சக்தி

nkn211120
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe