Advertisment

சிக்னல் கியர் போடும் போக்குவரத்து அமைச்சர்!

signal

கியர் போடும் போக்குவரத்து அமைச்சர்!

கரூர் மாவட்டத்தில் தனக்கு தலைவலியாக இருந்த செந்தில் பாலாஜி தி.மு.க.வுக்கு தாவிவிட்டார். அத்துடன் அவர் போக்குவரத்து மந்திரியாக இருந்த போது, டிரைவர், கண்டக்டர் போஸ்டிங் போடுவதற்காக கலெக்ஷன் பண்ணிய விவகாரம் சூடுபிடித்து. போ.வ.துறையின் மேலாண்மை இயக்குனர் கணேசன் கைதுவரை வந்து நிற்கிறது. இன்னொரு தலைவலியான தம்பிதுரை சுத்தமாக ஆஃபாகிவிட்டார். இதனால் ரொம்பவே உற்சாகமாகிவிட்ட போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தனது தொகுதி வாக்காளர்களுக்கும் கட்சிக் காரர்களுக்கும் தீபாவளி பரிசு கொடுத்து குஷிப்படுத்தி, தேர்தலுக்கான கியர் போட ஆரம்பித்துவிட்டார்.

Advertisment

signal

பொதுவாக மே மாதம் தேர்தல் என்றால், கட்சிக்காரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கி, பாசமழையை பொழிவார்கள் அமைச்சர்கள். ஆனால் போ.வ.விஜயபாஸ்கரோ, கொரோனாவால் சம்பாத்தியத்திற்கு வழியில்லாமல் கட்சிக்காரர்கள் கஷ்டப்படுவார்கள், அதைவிட தனது தொகுதி மக

கியர் போடும் போக்குவரத்து அமைச்சர்!

கரூர் மாவட்டத்தில் தனக்கு தலைவலியாக இருந்த செந்தில் பாலாஜி தி.மு.க.வுக்கு தாவிவிட்டார். அத்துடன் அவர் போக்குவரத்து மந்திரியாக இருந்த போது, டிரைவர், கண்டக்டர் போஸ்டிங் போடுவதற்காக கலெக்ஷன் பண்ணிய விவகாரம் சூடுபிடித்து. போ.வ.துறையின் மேலாண்மை இயக்குனர் கணேசன் கைதுவரை வந்து நிற்கிறது. இன்னொரு தலைவலியான தம்பிதுரை சுத்தமாக ஆஃபாகிவிட்டார். இதனால் ரொம்பவே உற்சாகமாகிவிட்ட போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தனது தொகுதி வாக்காளர்களுக்கும் கட்சிக் காரர்களுக்கும் தீபாவளி பரிசு கொடுத்து குஷிப்படுத்தி, தேர்தலுக்கான கியர் போட ஆரம்பித்துவிட்டார்.

Advertisment

signal

பொதுவாக மே மாதம் தேர்தல் என்றால், கட்சிக்காரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கி, பாசமழையை பொழிவார்கள் அமைச்சர்கள். ஆனால் போ.வ.விஜயபாஸ்கரோ, கொரோனாவால் சம்பாத்தியத்திற்கு வழியில்லாமல் கட்சிக்காரர்கள் கஷ்டப்படுவார்கள், அதைவிட தனது தொகுதி மக்கள் ரொம்பவே சிரமப்படுவார்கள் என நினைத்து நினைத்து உருகியிருப்பார் போல. அதனால் இரண்டு லட்சம் வாக்களர்கள், கட்சியின் நிர்வாகிகள் என அனைவருக்கும் இனிப்பு, காரம் அடங்கிய பைகளில் எம்.ஆர்.பி. டிரஸ்ட் என பிரிண்ட் பண்ணி, சகட்டுமேனிக்கு சப்ளை பண்ணிவிட்டார். முக்கிய நிர்வாகிகளுக்கு கரன்சி கவனிப்பும் உண்டாம்.

தொகுதியின் வளர்ச்சிக்கும் மக்களின் மகிழ்ச்சிக்கும் எவ்வளவோ பாடுபட்டிருக்கிறேன். மகிழ்ச்சியும் வளர்ச்சியும் தொடர இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்’ என்ற துண்டுப் பிர சுரத்தையும் தீபாவளி பரிசுப் பைகளில் வைத்து அனுப்பியிருக்காராம் விஜயபாஸ்கர். ’எங்க அமைச்சரின் பஸ் ஸ்டார்ட் ஆகிருச்சு. தைப் பொங்கலுக்கு ஸ்பெஷல் கவனிப்பு இருக்குன்னு சொல்லிருக்கார்’என்கிறார்கள் கரூர் ர.ர.க்கள்.

-ஜீவா தங்கவேல்

ரிசார்ட்டில் நடந்த நிச்சயதார்த்தம்!

Advertisment

கொரோனா லாக்-டவுனில் சில தளர்வுகள் அமலுக்கு வந்ததும் அரசியல் வி.ஐ.பி.க்களின் வீடுகளில் சுபகாரியங்கள் நடைபெற ஆரம்பித்தன. அந்த வகையில் அ.ம.மு.க.வின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், தனது மகள் ஜெயஹரிணிக்கும் தஞ்சை பகுதியின் காங்கிரஸ் பெரும்புள்ளியான மாஜி எம்.பி. துளசி வாண்டையார் பேரனும் கிருஷ்ணசாமி வாண்டையாரின் மகனுமான ராமநாதனுக்கும் திருமணம் செய்துவைக்க செப்டம்பரில் உறுதி பண்ணியிருந்தார். அந்த உறுதி பண்ணும் நிகழ்ச்சியின்போது டி.டி.வி., அவரது மனைவி அனுராதா, துளசி வாண்டையார் குடும்பத்தினர் மட்டும் கலந்து கொண்டனர். மன்னார்குடி சொந்தங்கள் யாரையும் தினகரன் அழைக்கவில்லை. சில நாட்களுக்கு முன்பு, முறைப்படியான நிச்சய தார்த்த விழாவையும் மிக சிம்பிளாக நடத்தி முடித்துள்ளார் தினகரன்.

signal

சுவாமிமலை அருகே உள்ள ரிசார்ட் ஒன்றில் நடந்த நிச்சயதார்த்த விழாவிற்கு, தனது உடன்பிறப்பு என்ற முறையில் பாஸ்கரன் குடும்பத்திற்கு மட்டுமே அழைப்பு விடுத்திருந்தார் டி.டி.வி. அதேபோல் மணமகன் வீட்டாரைத் தவிர வாண்டையார் குடும்ப உறவுகளும் அவ்வளவாக கலந்து கொள்ளவில்லை. உடல்நிலை காரணமாக துளசி வாண்டையாரால் கலந்து கொள்ள முடியவில்லை. “அண்ணனின் வலதுகரமாக இருந்த வெற்றிவேலின் மறைவு, இப்போது அடிக்கும் அரசியல் காற்று எப்போது திசைமாறும் எனத் தெரியாத நிலை, இவற்றால் ரொம்பவே சிம்பிளாக தனது மகளின் நிச்சயதார்த்தை நடத்தி முடித்துவிட்டார். கால நேரம் கைகூடி வந்ததும் ஜெயஹரிணியின் கல்யாணத்தை ஜெகஜோதியாக நடத்துவார்’’என்றார்கள் டி.டி.வி.யின் விசுவாசிகள்.

-மகேஷ்

கடைய எப்ப சார் திறப்பீங்க?

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவி லூர் சாலையில் உள்ள காணை ஓரளவு பெரிய ஊராகும். இந்த காணை யச் சுற்றியுள்ள இருபதுக்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு, அத்தியாவசிய பொருட்கள் வாங்க இந்த ஊர்தான் முக்கியமான பர்சேஸ் ஸ்பாட். ஊராட்சி ஒன்றிய அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம் என அரசு அலுவலகங்கள் பரபரப்பாகத் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் ஒருசில அரசு அதிகாரிகளோ மெத்தனத்திலும் மெத்தனமாக இருக்கிறார்கள்.

signal

காணையின் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் எதிரே 2016-ஆம் ஆண்டு 14 கடைகள் கொண்ட சின்ன காம்ப்ளக்ஸ் கட்டி முடிக்கப்பட்டது. நாலு வருசம் ஆகிருச்சே, கடையெல்லாம் திறக்கப்பட்டு நல்லா வியாபாரம் நடக்குமேன்னு நீங்க நினைச்சா, அது ரொம்ப தப்பு. பலகோடி ரூபாய்ல பாலம் கட்டி பலமாசமா திறக்காம இருக்கறப்போ, இதை மட்டும் திறந்துவிடுவார்களா?

நாலு வருசமா திறக்காததால், மொத்த கடைகளும் புதர் மண்ட ஆரம்பிச்சிருச்சு. இன்னும் சில மாதங்களில் காணையின் கடைகள் காணாமல் போனாலும் போகலாம். என்ன தான் பிரச்சனை என நாம் விசாரித்த போது, ""கடைகளுக்கு டெபாசிட் வாங்குவது, வாடகை நிர்ணயம் பண்ணுவது எல்லாம் பொதுப்பணித்துறை அதிகாரிகள். கடைகளை நிர்வாகம் செய்வது ஊ.ஒ. அலுவலக அதிகாரிகள். இவர்களுக்கிடையே இருக்கும் ஈகோ யுத்தத்தால் மொத்த கடைகளும் கோவிந்தாவாகப் போகிறது'' என்கிறார்கள் காணை மக்கள்.

கடைய எப்ப சார் திறப்பீங்க என கலெக்டரிடம் முறையிட முடிவு செய்திருக்கிறார்கள் மக்கள்.

-எஸ்.பி.எஸ்.

nkn181120
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe