Advertisment

சிக்னல் அறக்கட்டளை வழக்கில் வெற்றி!

signal

அறக்கட்டளை வழக்கில் வெற்றி!

ss

Advertisment

வன்னியர் சமூகத்திற்குச் சொந்தமான செங்கல்வராய நாயக்கர் கல்வி அறக்கட்டளையின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 9 பேர். இதில் 4 பேர் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்கள். மீதி 5 பேர் வன்னியர் அல்லாத மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்கள். உறுப்பினர் களை நியமிக்கும் அதிகாரம் நீதிமன்றத்தின் கட்டுப்பாட் டில் இருந்தது. வன்னியர் சமூக அறக்கட்டளை மாற்று சமூகத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதும், நிர்வாக முறைகேடுகளும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்தன. இந்த நிலையில் வன்னியர் சமூக தலைவர்களான சி.ஆர்.ராஜன், நாகரத்தினம் உள்ளிட்டோர் அறக்கட்டளையில் நடந்து வரும் முறைகேடுகளை தட்டிக்கேட்டும் அம்பலப்படுத்தி யும் வந்ததோடு, செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளையின் அனைத்து உறுப்பினர் பதவிகளையும் வன்னியர் சமூகத்தினரையே நியமிக்க வேண்டும் என போராடி வந்ததுடன் வழக்கும் தொடுக்கப்பட்டது.

இதற்கு எதிராக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் களமிறங்கினார். சில பல அரசியல்களும் நடந்தன. இந்த நிலையில், இது தொடர்பான

அறக்கட்டளை வழக்கில் வெற்றி!

ss

Advertisment

வன்னியர் சமூகத்திற்குச் சொந்தமான செங்கல்வராய நாயக்கர் கல்வி அறக்கட்டளையின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 9 பேர். இதில் 4 பேர் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்கள். மீதி 5 பேர் வன்னியர் அல்லாத மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்கள். உறுப்பினர் களை நியமிக்கும் அதிகாரம் நீதிமன்றத்தின் கட்டுப்பாட் டில் இருந்தது. வன்னியர் சமூக அறக்கட்டளை மாற்று சமூகத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதும், நிர்வாக முறைகேடுகளும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்தன. இந்த நிலையில் வன்னியர் சமூக தலைவர்களான சி.ஆர்.ராஜன், நாகரத்தினம் உள்ளிட்டோர் அறக்கட்டளையில் நடந்து வரும் முறைகேடுகளை தட்டிக்கேட்டும் அம்பலப்படுத்தி யும் வந்ததோடு, செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளையின் அனைத்து உறுப்பினர் பதவிகளையும் வன்னியர் சமூகத்தினரையே நியமிக்க வேண்டும் என போராடி வந்ததுடன் வழக்கும் தொடுக்கப்பட்டது.

இதற்கு எதிராக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் களமிறங்கினார். சில பல அரசியல்களும் நடந்தன. இந்த நிலையில், இது தொடர்பான வழக்கில், அறக்கட்டளையின் 9 உறுப்பினர்களும் வன்னியர் சமூகத்தினர்தான் இருக்க வேண்டும் என்பதையும், இதற்கு எதிராக குரல் கொடுத்த பா.ம.க.வை எதிர்த்தும் வாதாடினார் வழக்கறிஞர் உதயக் குமார். இதனையடுத்து, அறக்கட்டளையின் 9 உறுப்பினர் களையும் வன்னியர் சமூகத்தினர்தான் நியமிக்கப்பட வேண்டும் என தீர்ப்பளித்து சமீபத்தில் உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன் றம். டாக்டர் ராம தாசுக்கு எதிரான வன்னியர் சமூக தலைவர்களுக்கு கிடைத்திருக்கும் வெற்றியில் அன்பு மணி ராமதாசின் மைத்துனர் டாக்டர் விஷ்ணு பிரசாத் எம்.பி.யும் இருந்துள்ளார் என்ப தைத்தான் தைலாபுரம் தோட்டத்தினால் ஜீரணிக்க முடியவில்லையாம். பல்வேறு நிலைகளில் போராடி வெற்றியை தேடித்தந்த சி.ஆர்.ராஜன், நாகரத்தி னம், உதயக்குமார் ஆகியோருக்கு வாழ்த்துகள் குவிந்தபடி இருக்கிறது.

-இளையர்

தகவல் ஆணையத்தின் தடாலடி!

sas

Advertisment

2017-ஆம் ஆண்டு சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக சுவாமிநாதன் இருந்த போது உதவி பேராசிரியர், பேராசிரியர் பணியிடங் களுக்கும் பதவி உயர்வுகளுக்கும் தாறு மாறாக கலெக்ஷன் வேட்டை நடந்தது. கல்வித் தகுதியை எட்டாதவர்களும் உதவிப் பேராசிரியர்களாக நியமிக்கப் பட்ட அதிசயமும் நடந்தது. இதற்கெல் லாம் ஏகப்பட்ட ஆதாரங்கள் இருந்தும் இன்றுவரை அவர்கள் பேராசிரியர்களாக தொடர்வது அதைவிட அதிசயம்.

இந்த முறைகேடுகள், கலெக்ஷன்கள் குறித்து சேலம் விஜிலென்சுக்கு ஆதாரத் துடன் புகார் அனுப்பினார் அதே பல்கலையில் பொருளாதாரத்துறை உதவிப் பேராசிரியராக இருக்கும் வைத்திய நாதன். இதனால் கடுப்பான பல்கலை நிர்வாகம் வைத்தியநாதனை சஸ்பெண்ட் செய்ததுடன், ரிடையர்டு மாஜிஸ்ட்ரேட் சாத்தப்பிள்ளை தலைமையில் வைத்தி யைப் பற்றி விசாரிக்க விசாரணைக் கமிஷனையும் அமைத்தது.

"களத்தில் சந்திப்போம்' என இறங்கி னார் வைத்தியநாதன். மாஜிஸ்ட்ரேட் சாத்தப்பிள்ளை, ஊழல் புகார் கொடுக்கப் பட்ட இதழியல்துறை பேராசிரியர் நடராஜன், சாத்தப்பிள்ளையின் உறவினர் கள் யாரேனும் பல்கலையில் பணிபுரி கின்றனரா போன்ற விவரங்களைக் கேட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தார். பதில் அளிக்க மறுத்த தோடு வைத்தியநாதனும் மிரட்டப்பட்டார்.

இரண்டாவது முறையும் மறுப்பு, மிரட்டல் தொடர்ந்ததால், மாநில தகவல் ஆணையத்தின் கதவைத் தட்டினார் வைத்தியநாதன். 11 மாதங்கள் விசா ரணைக்குப் பின், கடந்த வாரம் தடாலடி தீர்ப்பை வழங்கியது தகவல் ஆணையம். அதில், “"பல்கலை நிர்வாகம் செய்தது மிகப்பெரிய தவறு. லஞ்சம், ஊழல் குறித்து தகவல் கேட்பது அடிப்படை உரிமை'’’ எனக் கூறியுள்ளது. "ஆர்.டி.ஐ. ஆர்வலர்களுக்கு இந்த தீர்ப்பு மிகப்பெரிய சப்போர்ட்' என்கிறார் வைத்தியநாதன்.

-இளையராஜா

போங்கய்யா வெங்காயங்களா!

என்றைக்கு இந்த வேளாண் சட்டத் திருத்தம் வந்ததோ, அன்றைக்கே விவசாயிகளுக்கு மட்டுமல்ல, இந்திய மக்களுக்கே கிறுகிறுப்பு வந்துவிட்டது. வெங்காய விலை ஏறுது, உருளைக் கிழங்கு விலை ஏறுது, சமையல் எண்ணெய் விலை ஏறுது. காரணம் கேட்டா விளைச்சல் இல்லை, வரத்து இல்லை எனச் சொல்லி எகிப்திலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்தார்கள்.

signal

வெங்காய விலை ஏற்றத்தால் ஆட்சிகள் கவிழ்ந்த வரலாறும் உண்டு. தற்போதைய வெங்காய விலையேற்றத் திற்கு காரணம் விளைச்சல் குறைச்சல் காரணமல்ல, பதுக் கல் தான் முக்கிய காரணம் என்பதற்கு பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவமே உதாரணம். இம் மாவட்டத்தின் ஆலத்தூர் ஏரியாவில் வெங்காயத்தின் விளைச்சல் நன்றாகவே இருக்கிறது. விவசாயிகளும் தங்க ளின் விளைபொருளை விற்பனைக்கு அனுப்பிவிடுவார்கள். ஆனால் அப்படி அனுப்பப்படும் வெங்காய மூட்டைகளை, மூடிக்கிடக்கும் கோழிப்பண்ணைகளில் பதுக்கியிருக் கிறார்கள்’’ என பெரம்பலூர் கலெக்டருக்கு தகவல் போயுள்ளது. கலெக்டரின் உத்தரவின் பேரில் தோட்டக் கலைத் துறை இயக்குனர் பாத்திமா தலைமையிலான அதிகாரிகள் கோழிப்பண்ணைகளில் ரெய்டு அடித்த போது, "இதெல்லாம் விதை வெங்காயம்'’என அங்கிருந்தவர்கள் சொன்னதைக் கேட்டு, ஒன்றும் சொல்லாமல் திரும்பிவிட்டனர் அதிகாரிகள்.

""பதுக்கல்காரர்கள் மீது ஆக்ஷன் எடுக்கவேண்டிய அதிகாரிகளே பம்மிவிட்டால், ஒரு கிலோ வெங்காயம் 200 ரூபாய்க்கும் விற்கும் 500 ரூபாய்க்கும் விற்கும்''’’ என்கிறார் பெரம்பலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற விவசாயப் பிரிவு பொறுப்பாளர் கார்த்திகேயன்.

-எஸ்.பி.எஸ்.

nkn141120
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe