Advertisment

சிக்னல் : பெண்கள் படும் அவஸ்தை!

signal

பெண்கள் படும் அவஸ்தை!

சிலபல மாதங்களுக்கு முன்பு "தூய்மை இந்தியா' திட்டத்திற்காக கவர்னரில் ஆரம்பித்து தமிழக பா.ஜ.க. பிரபலங்கள் அத்தனைபேரும், கொண்டுவந்து கொட்டப்பட்ட குப்பைகளை கர்மசிரத்தையாக கூட்டிப் பெருக்கி சுத்தப்படுத்தி போஸ் கொடுத்தனர். சிறந்த நிர்வாகத்தில்(?!) இந்தியாவில் இரண்டாவது இடத்தில் உள்ள நம்ம எடப்பாடி அரசும் குடிநீர், கழிப்பிட வசதியில் தமிழகம் தன்னிறைவு பெற்றுள்ளதாக கூறியது.

Advertisment

signal

ஆனால் ஈரோடு மாவட்டம் குருந்தன்வலசு காலனி என்ற கிராமத்து பெண்களின் குரலோ, தாங்கள் படும் அவஸ்தையை எதிரொலிப்பதாக இருக்கிறது. அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கக் கூட்டம் தாலுகா செயலாளர் மாணிக்கம் தலைமையில் மேற்படி கிராமத்தில் நடந்தது. வீட்டுமனை கேட்டு விண்ணப்பித்த தகுதியான அனைவருக்கும் உடனே வீட்டுமனை வழங்க வேண்டும், சாக்கடை வசதி, வீடுகளின் மேலே உரசிக் கொண்டு செல்லும் கரண்ட் கம்பிகளை அப்புறப்படுத்த வேண்டும

பெண்கள் படும் அவஸ்தை!

சிலபல மாதங்களுக்கு முன்பு "தூய்மை இந்தியா' திட்டத்திற்காக கவர்னரில் ஆரம்பித்து தமிழக பா.ஜ.க. பிரபலங்கள் அத்தனைபேரும், கொண்டுவந்து கொட்டப்பட்ட குப்பைகளை கர்மசிரத்தையாக கூட்டிப் பெருக்கி சுத்தப்படுத்தி போஸ் கொடுத்தனர். சிறந்த நிர்வாகத்தில்(?!) இந்தியாவில் இரண்டாவது இடத்தில் உள்ள நம்ம எடப்பாடி அரசும் குடிநீர், கழிப்பிட வசதியில் தமிழகம் தன்னிறைவு பெற்றுள்ளதாக கூறியது.

Advertisment

signal

ஆனால் ஈரோடு மாவட்டம் குருந்தன்வலசு காலனி என்ற கிராமத்து பெண்களின் குரலோ, தாங்கள் படும் அவஸ்தையை எதிரொலிப்பதாக இருக்கிறது. அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கக் கூட்டம் தாலுகா செயலாளர் மாணிக்கம் தலைமையில் மேற்படி கிராமத்தில் நடந்தது. வீட்டுமனை கேட்டு விண்ணப்பித்த தகுதியான அனைவருக்கும் உடனே வீட்டுமனை வழங்க வேண்டும், சாக்கடை வசதி, வீடுகளின் மேலே உரசிக் கொண்டு செல்லும் கரண்ட் கம்பிகளை அப்புறப்படுத்த வேண்டும் இப்படி பல கோரிக்கைகளை மக்கள் தெரிவித்தனர்.

அங்கு திரண்டிருந்த ஒட்டு மொத்த பெண்களின் கோரிக்கையோ, ""ஏனுங்க, கழிப்பிட வசதி இல்லாமல் ரொம்பவே அவஸ்தையா இருக்குதுங்க, இதுக்கு ஒரு ஏற்பாடு பண்ணச் சொல்லுங்க''’என்பதாகத்தான் இருந்தது. கூட்டத்தில் கலந்துகொண்ட கிளைத் தலைவர் வசந்தமணி, செயலாளர் சுமதி உட்பட அனைவருமே "ஆவன செய்வோம், அவஸ்தையைப் போக்குவோம்' என உறுதியளித்தனர். அந்த கிராமம் இருப்பது வேறு எங்கும் அல்ல, சாயக்கழிவுகளை சோப்பு நுரையாக்கிய சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பணின் ஊரான கவுந்தப்பாடியிலிருந்து நான்கு கிலோமீட்டரில்தான்.

-அறிவு

ஜெயில்னா இதெல்லாம் சர்வ சாதாரணமப்பா!

Advertisment

மாநிலம் சிறியதென் றாலும் புதுச்சேரியில் ரவுடிகளின் லிஸ்ட் ரொம்ப பெரிதாகவே இருக்கும். பட்டப்பகலில் நட்டநடு ரோட்டிலேயே தங்களது கொலை வித்தைகளைக் காட்டுவார்கள். ஜெயிலுக்குப் போவதும் வெளியே வருவதும் அவர்களுக்கு பொழுது போக்காகவே மாறிவிட்டது.

signL

சாமியார்கள் இருக்கும் ஜெயில் செல்லிலேயே சகல வசதிகளும் இருக்கும். மெகா ரவுடிகள் இருக்கும் ஜெயிலில் வசதிகளுக்கு கேட்கவா வேண்டும்? புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள மத்திய சிறைச்சாலையின் கண்காணிப்பாளர் கோபிநாத் சில நாட்களுக்கு முன்பு சிறைக்குள் ரோந்து சென்றபோது, கைதிகளிடமிருந்து 2 செல்போன்கள் மற்றும் சார்ஜரைக் கைப் பற்றியதுடன் காலாப்பட்டு காவல்நிலையத்திலும் முறைப்படி புகார் அளித்தார்.

புகாரைப் பெற்றுக் கொண்டதும் சிறப்பு அதிரடி போலீசார் உதவியுடன் மத்திய சிறைக்குள் சென்று அதிரடி சோதனை செய்தனர் காலாப்பட்டு போலீசார். இப்போது 12 செல்போன்கள் மற்றும் சார்ஜர்களைக் கைப்பற்றி, ஆறு தண்டனைக் கைதிகள், எட்டு விசாரணைக் கைதிகள் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

கைதிகளிடம் விசாரணை நடத்திய போது, “""இதெல்லாம் சர்வசாதாரணம் சார். ஜெயில் வார்டன் ஆனந்த ராஜ் சாரை கவனிச்சுட் டாப் போதும் சார்... செல் போன் என்ன சகலமும் கிடைக்கும் சார்''’’ என விரிவாகவே சொல்லியிருக்கிறார்கள். இதை யடுத்து ஆனந்தராஜை சஸ்பெண்ட் செய்து, துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார் சிறைத்துறை ஐ.ஜி. பங்கஜ்குமார்.

-சுந்தரபாண்டியன்

டாக்டர் ரூமில் ஏடாகூடம்!

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் அவசர ஆம்புலன்ஸ் சேவையான 108-ல் நர்சாக பணிபுரிந்தவர் மார்த் தாண்டத்தைச் சேர்ந்த ரம்யா. அதே ஆம்புலன்சின் டிரைவரான பாபுவுக்கும் ரம்யாவுக்கும் இடையே லவ் ஃபயர் பத்திக்கிச்சு. இந்தக் காதலின் அருமை தெரியாத மாவட்ட சுகாதாரத்துறை, ரம்யாவை குலசேகரத்திற்கு டிரான்ஸ்பர் போட்டது.

signal

டிரான்ஸ்பர் போட்டாலும் வேறுவேறு இடத்தில் இருந்த இருவரது காதல் டிரான்ஸ்பார்மர்களும் ஹைவோல்டேஜில் இயங்கிக் கொண்டு தான் இருந்தன. செல்போன் பேச்சு வெறுமையாப் போச்சு, நேரில் சந்தித்தால் தித்திப்பா ஆச்சு என்ற முடிவுடன் பாபுவை குலசேகரம் அரசு மருத்துவமனைக்கே வரவழைத்துள்ளார் ரம்யா.

இது கொரோனா காலம் என்பதால், அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்துள்ளது குலசேகரத்தில். அதிலும் மத்தியான நேரம் பார்த்து, சிக்கன் பிரியாணி, மல்லிகைப்பூ, அல்வா சகிதம் ஆஜராகிவிட்டார் பாபு. காதலர்களுக்கு தகுந்த இடம் தனிமை தான். ஆனால் ரம்யாவும் பாபுவும் இருப்பதோ குலசேகரம் அரசு மருத்துவமனை. அவர்களின் கண்களில் தட்டுப்பட்ட ஒரே இடம் டூட்டி டாக்டரின் ரூம்.

"வாங்களேன் உட்கார்ந்து பேசுவோம்' என டாக்டரின் அறைக்குள் போனார்கள் பாபுவும் ரம்யாவும். ரொம்ப நேரமாகியும் பேச்சு சத்தமே கேட்கவில்லை. மைல்டா ஒரு டவுட் வந்து சில நோயாளிகள் டாக்டரின் அறையை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு போலீசுக்குத் தகவல் தெரிவித்தனர். உடனே வந்து அறையைத் திறந்து பார்த்த போலீசிடம் எசகுபிசகான நிலையில் மாட்டினார்கள் ரம்யாவும் பாபுவும்.

"கருமம்... கருமம்... கவர்மெண்ட் ஆஸ்பத்திரியிலேயேவா…போய்த்தொலைங்க' என எச்சரித்து அனுப்பியது குலசேகரம் போலீஸ்.

-மணிகண்டன்

nkn111120
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe