Advertisment

சிக்னல் : மயானக் கொள்ளை! மக்கள் கொந்தளிப்பு!

signal

டலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள மாமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட மேல்பாதி கிராம மக்களுக்கு பொது மயானம் இல்லாததால் கொண்ட சமுத்திரத்தில் ஒரு இடத்தை மயானமாக பயன்படுத்தி வந்தனர். அந்த இடம் விராகுடி தெருவில் உள்ளவர்களுக்குச் சொந்தம் என்பதால், பிணங்களை நல்லடக்கம் செய்யும் போது, மேல்பாதி கிராமத்தினருக்கும் விராகுடி தெருவாசிகளுக்கும் இடையே அவ்வப்போது சண்டை மூண்டு கைகலப்பில் முடியும். இதனால் வெறுத்துப் போன மேல்பாதி கிராமத்தினர் சப்-கலெக்டர், தாசில்தார், பி.டி.ஓ.ஆகியோருக்கு தொடர்ச்சியாக மனுக்கள் அனுப்பி, "ஒண்ணு பொதைக்கவிடுங்க, இல்ல எரிக்கவிடுங்க' என கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் சமீபத்தில் ஊராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மதியழகனின் தொடர்முயற்சியாலும் ஒரு வழியாக, மாமங்கலம் எல்லைக்குட்பட்ட செங்கால் ஓடையில் அரசு புறம்போக்கு இடத்தை மயானத்திற்கு தேர்வு செய்தனர் அதிகாரிகள்

டலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள மாமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட மேல்பாதி கிராம மக்களுக்கு பொது மயானம் இல்லாததால் கொண்ட சமுத்திரத்தில் ஒரு இடத்தை மயானமாக பயன்படுத்தி வந்தனர். அந்த இடம் விராகுடி தெருவில் உள்ளவர்களுக்குச் சொந்தம் என்பதால், பிணங்களை நல்லடக்கம் செய்யும் போது, மேல்பாதி கிராமத்தினருக்கும் விராகுடி தெருவாசிகளுக்கும் இடையே அவ்வப்போது சண்டை மூண்டு கைகலப்பில் முடியும். இதனால் வெறுத்துப் போன மேல்பாதி கிராமத்தினர் சப்-கலெக்டர், தாசில்தார், பி.டி.ஓ.ஆகியோருக்கு தொடர்ச்சியாக மனுக்கள் அனுப்பி, "ஒண்ணு பொதைக்கவிடுங்க, இல்ல எரிக்கவிடுங்க' என கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் சமீபத்தில் ஊராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மதியழகனின் தொடர்முயற்சியாலும் ஒரு வழியாக, மாமங்கலம் எல்லைக்குட்பட்ட செங்கால் ஓடையில் அரசு புறம்போக்கு இடத்தை மயானத்திற்கு தேர்வு செய்தனர் அதிகாரிகள். சுற்றுச் சுவர் மற்றும் தகன மேடை அமைக்க பொருட்கள் வந்திறங்கியது.

Advertisment

signal

இதைப் பார்த்ததும்... "நிறுத்து நிறுத்து இது என்னோட இடம்' என, மயானத்திற்கு அருகில் வயல் வைத்திருக்கும் ஒருவர் வந்தார். இது குறித்து ஊ.ம. தலைவர் மதியழகன் அதிகாரிகளுக்குச் சொல்லியும் ஆக்ஷன் இல்லாததால் மக்களுடன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். இதையறிந்த சி.பி.எம். வட்டக்குழு உறுப்பினர் வெற்றிவீரன், மாவட்டக் குழு உறுப்பினர் பிரகாஷ், நிர்வாகிகள் காசிராஜன், நமச்சிவாயம், கே.பி.குமார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். “"அரியலூர் மாவட் டத்தில் ஆரம்பித்து காட்டுமன்னார்கோவில் வழியாக பல கிராமங்களின் விவசாயத்திற்கு ஆதாரமான செங்கால் ஓடையை ஆக்கிரமிப்பால் பலர் சேதாரப்படுத்தியுள்ளனர். அதிகாரிகள் இதைக் கவனிக்க வேண்டும்'’என்கின்றனர் சி.பி.எம்.மினர்.

-காளிதாஸ்

தங்கம் தென்னரசுவின் நேர்மை!

கொரோனா காலத்தில் காணொலிக் காட்சி வாயிலாக தி.மு.க. மா.செ.க்களையும் நிர்வாகிகளையும் சந்தித்து உரையாடினார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின். மாவட்டம் தோறும் நடக்கும் முப்பெரும் விழாவையும் காணொலி மூலம் நடத்திய ஸ்டாலின், இப்போது தமிழக அரசியல் கட்சிகளுக்கு முன்மாதிரியாக கட்சியின் சிறப்புப் பொதுக்கூட்டங்களையும் காணொலிக் காட்சியால் கவர்ந்துவருகிறார்.

Advertisment

signal

அந்தவகையில் "தமிழகம் மீட்போம்'’என்ற தலைப்பில் "2021 சட்டமன்றத் தேர்தல் சிறப்புப் பொதுக்கூட்டம் விருதுநகர் தெற்கு, வடக்கு மாவட்டங்கள் சார்பில் நடைபெறும்' என அறிவாலயம் அறிவித்தது. 372 இடங்களில் இந்தக் கூட்டம் நடைபெறுவது குறித்து கிராமக் கிளை, ஒன்றிய, நகர, கட்சி நிர் வாகிகளுக்கும் பொதுமக்க ளுக்கும் மா.செ.க்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் பெயரில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது. அந்த சுற்றறிக்கையில் கையெழுத்திட்டிருந்த மா.செ.க் களின் பெயர்களுக்கு முன்னால் "திரு' என குறிப் பிடப்பட்டிருந்தது குறித்து தங்கம் தென்னரசுவிடம் கேட்டோம். “""கண்டிப்பாக அது தவிர்க்கப்பட்டி ருக்க வேண்டும். மறைந்த எனது அம்மாவின் 30-ஆம் நாள் காரியத்திற்குச் சென்றுவிட்டதால் நேரடியாக என்னால் கையெழுத்துப் போட முடியவில்லை. எஹஸ்ரீள்ண்ம்ண்ப்ங் (சரியான நகல்) மூலம் கையெழுத்து பெறப்பட்டதால் நேர்ந்த தவறு இது. வருங்காலங்களில் இதுபோன்று நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன்.''

தவறு சிறியதுதான் என்றாலும் அதை நேர்மையுடன் ஒத்துக்கொண்ட தங்கம் தென்னரசு பாராட்டுக்குரியவர்தான்.

-ராம்கி

நூலகரான முடிதிருத்துனர்!

signalதூத்துக்குடி மில்லர் புரத்தைச் சேர்ந்த பொன்.மாரியப்பன் என்பவர் வக்கீல் அலுவலக குமாஸ்தாவாக வேலை பார்த்து வந்தார். சிலபல சூழ்நிலைகளால் சலூன் கடையை ஆரம்பித்தார். எல்லா சலூன்கடைகாரர்களைப் போல மாரியப்பனும் எல்லா தினசரிகளையும் வாங்கிப் போட்டார்.

மத்தியானத்திற்குள் அந்த தினசரிகள் படும்பாட்டைப் பார்த்தவருக்கு வக்கீல் அலுவலக புத்தக அலமாரி நினைவுக்கு வந்து, தன்னுடைய சலூன் கடையிலேயே சின்னதாக ஒரு நூலகத்தை அமைத்தார். இலக்கியம், சிறுகதை, ஆன்மீகம் என புத்தகங்களை அடுக்கினார், வாடிக்கையாளர்களையும் வசப்படுத்தினார். இதைக் கேள்விப்பட்ட கனிமொழி எம்.பி., மாரியப்பனை பாராட்டியதோடு, தனது பங்கிற்கு சில நூல்களை வழங்கி மகிழ்ச்சிப்படுத்தினார். இந்த சலூன் நூலக விஷயம் நெல்லை மாவட்ட நூலக ஆணைக்குழுவிற்குச் சென்று அவர்களும் மாரியப்பனை அழைத்துப் பாராட்டி, புத்தகங்களைப் பரிசாக வழங்கியுள்ளனர்.

சலூன் நூலகப் புகழ் மாரியப்பனைப் பற்றிக் கேள்விப்பட்ட பிரதமர் மோடி, தனது மான்கீபாத் நிகழ்ச்சி மூலம் மாரியப்பனிடம் சில நிமிடங்கள் தமிழில் உரையாடி மகிழ்ச்சிப்படுத்தியுள்ளார். "இப்போது நீங்கள் படிக்கும் புத்தகம் என்ன?' என மோடி கேட்ட போது, "திருக்குறள்'’என கணீர்க் குரலில் சொன்னார் மாரியப்பன்.

-பரமசிவன்

nkn071120
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe