Advertisment

சிக்னல் வேகமும் சோகமும்!

ss

வேகமும் சோகமும்!

1989-ல் கலைஞர் தலைமையில் அசுரபலத்துடன் தி.மு.க. ஆட்சி அமைந்தபோது சிவகங்கை தொகுதியின் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பா.மனோகரன். தி.மு.க. இளைஞரணியின் மாவட்ட அமைப்பாளராக இருந்ததால், சிவகங்கை மன்னர் sதுரைசிங்கம் அரசு கல்லூரி மாணவர்களுடன் அதிகம் நட்பு பாராட்டியவர். அதனால் மனோகரனைச் சுற்றி எப்போதுமே இளைஞர்கள் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். இரண்டாண்டுகள் மட்டுமே எம்.எல்.ஏ.வாக இருந்தாலும் காங்கிரஸ் கோட்டையாக இருந்த சிவகங்கையை தி.மு.க. வசப்படுத்தினார் மனோகரன்.

Advertisment

சிவகங்கை நகராட்சி, பெண்களுக்கு ஒதுக்கப்பட்டபோது மனோகரனின் மனைவி சாந்தி நகராட்சித் தலைவியானார். மனோகரன் கடந்த 13-ஆம் தேதி சிவகங்கையைச் சேர்ந்த தையாபுதீன் என்பவரின் மோட்டார் பைக்கில் மதுரை நோக்கி சென்றுகொண்டிருந்தார். படமாத்தூர் அருகே எதிரே வந்த லாரி ஒன்று மனோகரனும் தையாபுதீனும் சென்ற பைக் மீது திடீரென மோத

வேகமும் சோகமும்!

1989-ல் கலைஞர் தலைமையில் அசுரபலத்துடன் தி.மு.க. ஆட்சி அமைந்தபோது சிவகங்கை தொகுதியின் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பா.மனோகரன். தி.மு.க. இளைஞரணியின் மாவட்ட அமைப்பாளராக இருந்ததால், சிவகங்கை மன்னர் sதுரைசிங்கம் அரசு கல்லூரி மாணவர்களுடன் அதிகம் நட்பு பாராட்டியவர். அதனால் மனோகரனைச் சுற்றி எப்போதுமே இளைஞர்கள் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். இரண்டாண்டுகள் மட்டுமே எம்.எல்.ஏ.வாக இருந்தாலும் காங்கிரஸ் கோட்டையாக இருந்த சிவகங்கையை தி.மு.க. வசப்படுத்தினார் மனோகரன்.

Advertisment

சிவகங்கை நகராட்சி, பெண்களுக்கு ஒதுக்கப்பட்டபோது மனோகரனின் மனைவி சாந்தி நகராட்சித் தலைவியானார். மனோகரன் கடந்த 13-ஆம் தேதி சிவகங்கையைச் சேர்ந்த தையாபுதீன் என்பவரின் மோட்டார் பைக்கில் மதுரை நோக்கி சென்றுகொண்டிருந்தார். படமாத்தூர் அருகே எதிரே வந்த லாரி ஒன்று மனோகரனும் தையாபுதீனும் சென்ற பைக் மீது திடீரென மோதியதால், இருவரும் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர்.

மனோகரன் மரணமடைந்த செய்தியால் சிவகங்கையே சோகத்தில் மூழ்கியது. பொதுமக்களும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். தி.மு.க.தலைவர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார்.

இந்த நேரத்தில் ஒரு பழைய சம்பவம்... 91-96 ஜெ. ஆட்சியின்போது, அமைச்சர் கண்ணப்பன் ஆட்களால் நமது நக்கீரன் சிவகங்கை நிருபர் சண்முகசுந்தரம் மிகக்கடுமையாக தாக்கப்பட்டார். மாவட்டம் முழுவதும் நக்கீரனை பறிமுதல் செய்து, விற்பனை செய்ய முடியாத நிலையை உருவாக்கியது ஆளுந்தரப்பு. அப்போது மனோகரன் தனது அம்பாசிடர் காரில் இளைஞர்கள் துணையுடன் நக்கீரனை அனைத்துக் கடைகளிலும் விற்பனை செய்ய பேருதவி புரிந்தவர்.

-செந்தில்குமார்

அன்பு சுரக்கும் வாழ்க்கை!

Advertisment

காதல் என்பது சாதி பார்க்காது, மதம் பார்க்காது என்பது காலம் காலமாக இருந்து வருவது. ஆனால் அன்பு மட்டுமே சுரக்கும் அபூர்வக் காதலை பார்ப்பதென்பதும் அபூர்வமே. புதுக்கோட்டை மாவட்டம் சம்மட்டிவிடுதி ஊராட்சி, மேலவிடுதி ssகிராமத்தினைச் சேர்ந்தவர் ராஜா. திருமணத்திற்குப் பின் இரு கால்களையும் ராஜா இழந்தாலும் குடிசை வீட்டில் வசித்தாலும் இவரின் காதல் மனைவி விமலா, ராஜாவுக்கு அன்னையாகவும் இருந்து அனைத்துப் பணிவிடைகளையும் செய்கிறார்.

இந்த அபூர்வ அன்புக் காதலர்களைப் பற்றி "மக்கள் பாதை' என்ற அமைப்பின் மூலம் உறுதிப்படுத்திக்கொண்ட பிறகு நக்கீரன் இணையத்தில் செய்தியாகவும் வீடியோ காட்சியாகவும் வெளியிட் டோம். இதைப்பார்த்த அமைச்சர் விஜயபாஸ்கர், புதுக்கோட்டை கலெக் டர் உமாமகேஸ்வரி, எஸ்.பி.பாலாஜி சரவணன், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவி ஜெயலட்சுமி ஆகியோர் ராஜா-விமலா தம்பதிகளுக்கு அனைத்து உதவிகளையும் செய் வதாக உறுதியளித் தனர்.

அதேபோல் நமது இணைய தள வாசகர்கள் நம்மிடம் ராஜா தம்பதியின் செல்ஃபோன் நம்பரை வாங்கி, அவர்களுக்கு ஆறுதல் கூறியதுடன் வேண்டிய உதவிகளைச் செய்வதாக ஊக்கப்படுத்தியுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள், மா.செ. நியாஸ் அகமது தலைமையில் ஒரு மாதத்திற்கு தேவையான மளிகைப் பொருட்களுடனும் நேரில் வரமுடியாத ஒருவர் கொடுத்த பணத்துடனும் ராஜா வீட்டுக்குச் சென்று அந்த அபூர்வ தம்பதிகளை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளனர்.

-பகத்சிங்

தோனி ரசிகரின் அசத்தல் வீடு!

இந்தியாவில் ஐ.பி.எல். ஆட்டம் அறிமுகம் ஆனபின் ஒவ்வொரு மாநிலத்தின் பேரிலும் இருக்கும் டீமை அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வெறிகொண்டு ரசிக்க ஆரம் பித்தார்கள். சென்னை சூப்பர் கிங்ஸின் (சி.எஸ்.கே.) மீதும் கேப்டன் தோனி மீதும் வெறிகொண்ட ரசிகர் ஒருவர், அணி வீரர்களின் ஜெர்ஸி கலரான மஞ்சள் நிறத்தை உடலெங்கும் பூசிக்கொண்டு, சி.எஸ்.கே. விளையாடும் எல்லா மைதானங்களிலும் கொடி அசைத்துக் கொண்டே இருப்பார்.

ss

அவரைப் போன்றே தோனியின் தீவிர ரசிகர்தான் கடலூர் மாவட்டம் அரங்கூர் கிராமத்தைச் சேர்ந்த கோபிகிருஷ்ணன். 10 ஆண்டுகளாக துபாயில் வேலை பார்க்கும் இவர், இந்தியா, தென்னாப்பிரிக்காவில் நடந்த ஐ.பி.எல். மேட்சுகளில் சி.எஸ்.கே. விளையாடுவதை தவறாமல் பார்த்துவிடுவார். இப்போது துபாயில் நடக்கும் ஐ.பி.எல். மேட்சில் சி.எஸ்.கே. சொதப்புகிறது. இதனால் ஆத்திரமான ரசிகர்கள், தோனியை கடுமையாக விமர்சித்தும், அவரது மகளுக்கு மிரட்டல்விடும் அளவுக்குப் போய்விட்டனர்.

இந்நிலையில், கடந்த வாரம் சொந்த ஊருக்கு வந்த கோபிகிருஷ்ணன், இதைப்பார்த்து மனம் நொந்தாலும் ஆத்திர ரசிகர்களும் சிந்திக்கும்விதமாக தனது வீடு முழுவதிற்கும் மஞ்சள் பெயிண்ட் அடித்து, அணியின் சிங்கம் சின்னத்தையும் வரைந்து அசத்திவிட்டார். அத்துடன் "ஹோம் ஆஃப் தோனி ஃபேன்'’என்பதையும் முகப்பில் எழுதிவிட்டார். வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு அழகு. அதுபோல்தான் "தலன்னா தோனிதான், தோனின்னா தலதான்' என்கிறார் பூரிப்புடன்.

-எஸ்.பி.எஸ்.

nkn211020
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe