Advertisment

சிக்னல் மாணவர் சேர்க்கையில் முறைகேடு!

ss

மாணவர் சேர்க்கையில் முறைகேடு!

மிழகம் முழுவதும் மாணவர் சேர்க்கையைத் தொடங்கி இருக்கின்றன அரசுப் பள்ளிகள். இதில், திண்டுக்கல் மாவட்ட எரியோடு பகுதியிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கையின்போது, பணம் வசூல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக பெற்றோர் தரப்பில் விளக்கம் கேட்டும், பள்ளி நிர்வாகம் முறையான விளக்கம் அளிக்கவில்லை.

Advertisment

ss

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பள்ளி நிர்வாகத்தையும், மாவட்ட பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளையும் கண்டித்து ஊர்முழுக்க போஸ்டர் ஒட்டினர். மாணவர்கள், பெற்றோர்கள் நலக் கூட்டமைப்பு சார்பில் ஒட்டப்பட்ட இந்த போஸ்டரில், “மாணவர் சேர்க்கையில் வகுப்புவாரியாக முறைகேடாக பணம் வசூலித்த தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்காத திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பெற்றோரிடம் வசூல்செய்த பணத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருப்பதோடு, ‘கல்வித்துறை சேவைத் துறையா? கயவர்களின் வேட்டைத்துறையா?’

மாணவர் சேர்க்கையில் முறைகேடு!

மிழகம் முழுவதும் மாணவர் சேர்க்கையைத் தொடங்கி இருக்கின்றன அரசுப் பள்ளிகள். இதில், திண்டுக்கல் மாவட்ட எரியோடு பகுதியிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கையின்போது, பணம் வசூல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக பெற்றோர் தரப்பில் விளக்கம் கேட்டும், பள்ளி நிர்வாகம் முறையான விளக்கம் அளிக்கவில்லை.

Advertisment

ss

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பள்ளி நிர்வாகத்தையும், மாவட்ட பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளையும் கண்டித்து ஊர்முழுக்க போஸ்டர் ஒட்டினர். மாணவர்கள், பெற்றோர்கள் நலக் கூட்டமைப்பு சார்பில் ஒட்டப்பட்ட இந்த போஸ்டரில், “மாணவர் சேர்க்கையில் வகுப்புவாரியாக முறைகேடாக பணம் வசூலித்த தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்காத திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பெற்றோரிடம் வசூல்செய்த பணத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருப்பதோடு, ‘கல்வித்துறை சேவைத் துறையா? கயவர்களின் வேட்டைத்துறையா?’ என்றும் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. இதுதொடர்பாக திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரைத் தொடர்பு கொண்டபோது, “""பள்ளி வளர்ச்சிப் பணிக்காக தலைமை ஆசிரியர் பணம் வசூலித்திருக்கிறார். உடனடியாக அதை பெற்றோரிடமே திருப்பிக்கொடுக்க உத்தரவிட்டிருக்கிறேன். இனி இதுபோல் நடக்காது''’என்று உறுதியளித்தார்.

Advertisment

மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த, அரசுப் பள்ளிகள் கடுமையாக முயற்சித்து வரும் சூழலில், மாணவர் சேர்க்கையிலேயே முறைகேடு செய்திருப்பது நியாயமற்றது என்கிறார் கள் சமூக ஆர்வலர்கள். சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் மீது துறைரீதியில் நடவடிக்கை எடுக்கும்வரை இந்த விவகாரத்தை விடப்போவதில்லை என்று உறுதிபடக் கூறுகிறார்கள் எரியோடு பொதுமக்கள்.

-சக்தி

கட்டாத வீட்டுக்கு கடிதத்தில் வாழ்த்து!

திருவாரூர் மாவட் டம் மன்னார்குடி பகுதியில் பாரத பிரதமர் வீடுகள் வழங்கும் திட்டத்தில் பலநூறு கோடி ரூபாய் மோசடி நடந்தது கண்டு பிடிக்கப்பட்டு, அதில் தொடர்புடைய அதிகாரிகள் மீது துறை ரீதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மன்னார்குடி அடுத்துள்ள தேவேந்திரபுரம், பாமணி, கர்ணாவூர், தருசுவேளி ஆகிய கிராமங்களில் கட்டித்தராத வீடுகளை நன்கு பராமரித்து, சுத்தமாக வைத்து வாழுமாறு மத்திய அரசிடம் இருந்து வாழ்த்துக் கடிதம் வந்திருப்பது, பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

aa

இதுகுறித்து இப்பகுதியின் சமூக ஆர்வலர் ஒருவர் நம்மிடம், ""2018-19 ஆண்டுக்கான பிரதம மந்திரி வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ், கர்ணாவூர் ஊராட்சி யில் உள்ள பயனாளிகளுக்கு 274 வீடுகள், 890 கழிவறைகளைக் கட்டாமலே ஊராட்சி செயலர் அலுவலர், ஆளுங்கட்சியினர் கூட்டணியில் போலி ஆவணங்களைத் தயாரித்து கோடிகளில் மோசடி நடந்திருக்கிறது. மன் னார்குடி ஊராட்சி ஒன்றியம் முழுமைக்கும் கூடுதல் ஆட்சியர் கமல் கிஷோர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட போது, இந்த மோசடி அம்பலமானது. இந்த நிலையில்தான், வீடு கட்டாதவர்களுக்கு, வீடு கட்டிக் கொடுத்ததைப் போலவே மத்திய அரசு வாழ்த்துக் கடிதம் அனுப்பியிருக்கிறது. அதுவும் கட்டாத வீட்டை சுத்தமாகப் பராமரிக்க அறிவுறுத்தி இருப் பது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல் இருக்கிறது'' என்றார் ஆதங்கத்துடன்.

இந்தக் கூத்து அடங்குவதற்குள், நாகப்பட்டினத்தில் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், வீடு கட்டியதாக அங்குள்ள மக்களுக்கும் வாழ்த்துக் கடிதம் வந்திருக்கிறது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஓய்வு பெற்ற துணை தாசில்தார் ஒருவர், முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை கோரி புகார் கொடுத்திருக்கிறார்.

-க.செல்வகுமார்

பார் திறக்க கோரிக்கை!

s

தமிழகத்தில் மது விற்பனை செய்யும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகமான டாஸ்மாக்கில், 80 சதவீதம் விஸ்கி, பிராந்தி, ரம், ஓட்கா, ஒயின் போன்ற மது வகைகளும், மிச்சமுள்ள 20 விழுக்காடு பீர்களும் விற்பனை ஆகின்றன. தமிழக அரசு கொரோனா ஊரடங்கு கெடுபிடிகள் மீதான தளர்வுகளை அமல் படுத்த தொடங்கிய சமயத்திலேயே, மது விற்பனையைத் தொடங்கி இருந்தாலும், டாஸ் மாக்கை ஒட்டியிருக்கும் பார் களைத் திறக்காதது மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்துவதாக பார் ஏலம் எடுத்த உரிமையாளர்கள் வேதனையை வெளிப்படுத்து கின்றனர். இதுகுறித்து நம்மிடம் பேசிய பார் நிர்வாகி ஒருவர், ""திருச்சி மாவட்டத்தில் 9 சட்ட மன்றத் தொகுதிகளில், 176 டாஸ்மாக் கடைகள் இருக்கின் றன. மாநகராட்சிப் பகுதியில் 55 கடைகள் இயங்குகின்றன. அது போல், திருச்சியில் மகாலிங்கம் மற்றும் கரிகாலன் ஆகியோர் தலைமையில் இரண்டு வெவ் வேறு பார் உரிமையாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது.

மாநகரில் 3 சதவீதமாக இருந்த பார் உரிமக்கட்டணம், 1.8 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது. இதனால், ரூ.3 லட்சம் கட்டியவர்கள், இப்போது ரூ.1.8 லட்சம் செலுத்தியுள்ளனர். பார் கடைகளுக்கு மாத வாடகையாக ரூ.75 ஆயிரம் கொடுக்கவேண்டி இருக்கிறது. இதுபோக, குறைந்தபட் சம் 10 பேராவது வேலைக்கு வைத்தாக வேண்டும்.

அவர்களுக்கும் தலைக்கு ரூ.500 தினக்கூலி தரவேண்டும். ஆனால், 7 மாதங்கள் ஆகியும் பார்களை மூடி வைத்திருப்பதால், எங்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் டாஸ்மாக்கைத் திறந்துவிட்ட அரசு, எங்களுக்காகவும் கருணை காட்டவேண்டும்'' என்கிறார், வேண்டுகோளாக.

-ஜெ.டி.ஆர்.

nkn230920
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe