Advertisment

சிக்னல்! கடை விரித்தோம்… கொள்வாரில்லை!

ss

கடை விரித்தோம்… கொள்வாரில்லை!

நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் ஊட்டி, இந்தியாவின் முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்று. இங்கிருக்கும் தாவர வியல் பூங்கா, சிம்ஸ் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா, சூட்டிங் ஸ்பாட், லேம்ஸ் ராக், டால்பினோஸ் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பகுதிகளை சுற்றிப்பார்க்க, உலகெங்கிலும் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகிறார்கள்.

Advertisment

ss

கோடை விடுமுறை நாட்களில் பொதுமக்கள் படையெடுக்கும் குளுகுளு ஊட்டி, கொரோனா ஊரடங்கினால் களையிழந்து கிடக்கிறது. இதனால், சாலையோர வியாபாரிகள் முதல் பெருந்தொழில் நடத்துபவர்கள் வரை சுற்றுலாப் பயணிகளை நம்பியிருக்கும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். சுமார் முன்னூறு கோடி ரூபாய்க்கும் மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில்தான், செப்டம்பர் மாதம் முதல் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளில், உள்ளூர் வாகனங்களை இயக்கவும், தங்கும் விடுதிகளைத் திறக்கவும் மாவட்ட ஆட

கடை விரித்தோம்… கொள்வாரில்லை!

நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் ஊட்டி, இந்தியாவின் முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்று. இங்கிருக்கும் தாவர வியல் பூங்கா, சிம்ஸ் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா, சூட்டிங் ஸ்பாட், லேம்ஸ் ராக், டால்பினோஸ் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பகுதிகளை சுற்றிப்பார்க்க, உலகெங்கிலும் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகிறார்கள்.

Advertisment

ss

கோடை விடுமுறை நாட்களில் பொதுமக்கள் படையெடுக்கும் குளுகுளு ஊட்டி, கொரோனா ஊரடங்கினால் களையிழந்து கிடக்கிறது. இதனால், சாலையோர வியாபாரிகள் முதல் பெருந்தொழில் நடத்துபவர்கள் வரை சுற்றுலாப் பயணிகளை நம்பியிருக்கும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். சுமார் முன்னூறு கோடி ரூபாய்க்கும் மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில்தான், செப்டம்பர் மாதம் முதல் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளில், உள்ளூர் வாகனங்களை இயக்கவும், தங்கும் விடுதிகளைத் திறக்கவும் மாவட்ட ஆட்சியர் அனுமதி தந்துள்ளார். இருப்பினும், சுற்றுலா வாகனங்களுக்கு அனுமதியில்லை எனும்போது, இதனால் எங்களுக்கு என்ன பிரயோஜனம் என்று உதட்டைப் பிதுக்கிறார்கள் வியாபாரிகள்.

Advertisment

நீலகிரி மாவட்டம் கர்நாடகா, கேரளா எல்லைகளை ஒட்டியிருப்பதால், தனிமனித இடைவெளியைக் கருத்தில் கொண்டு, கோடை விழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. செப்டம்பர் முதல் இரண்டாம் சீசன் தொடங்கியிருந்தும், சுற்றுலாப் பயணிகளின் வருகையின்றி 300க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேயிலை, ஹோம்மேட் சாக்லெட் கடைகள், நீலகிரி தைல உற்பத்தியாளர்கள், நூற்றுக்கணக்கான கைடுகள் என லட்சக்கணக்கான ஊட்டிவாசிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

- அருள்குமார்

சங்கு ஊதி மலர் தூவி நூதன போராட்டம்!

புதுச்சேரி மாநிலத்தில் பத்தாண்டுகளுக்குப் பிறகு, 2018ல்தான் காவலர் தேர்வு அறிவிக்கப்பட்டது. வெறும் 390 காலிப்பணியிடங்களுக்கு 16 ஆயிரத்துக்கும் அதிகமான இளைஞர்கள் விண்ணப்பித்தனர். தேர்வு அறிவிப்பு வெளியாகி இரண்டு ஆண்டுகள் ஆகியும், இதுநாள் வரையில் தேர்வு நடத்தப்படவில்லை.

s

இதைக் கண்டித்து, புதுச்சேரி தலைமை தபால் நிலையம் முன்பாக, புதுச்சேரி மாணவர்கள் கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது காவலர் தேர்வு அறிவித்த இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தும் விதமாக மலர்தூவி, மணியடித்து, சங்கு ஊதி நூதன போராட்டத்தை வெளிப்படுத்தினர்.

இதில் கலந்துகொண்ட மாண வர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சீ.சு. சுவாமிநாதன், “""ஏற்கனவே காலம்கடந்து அறிவிக்கப்பட்ட இந்தத் தேர்வில், வயது வரம்பு தளர்வு கேட்டு பல்வேறு போராட்டங்களை நடத்தி, இறுதியில் நீதிமன்றத்தின் மூலம் அனுமதிபெற்றோம். இருந்தும் தேர்வு நடத் தப்படவில்லை. இரண்டாண்டுகளாக இதை நம்பியே இருக்கும் இளைஞர்களின் எதிர்காலம் என்னவாகும்?

புதுச்சேரி மாநில முதல்வர் நாரா யணசாமி காவலர் தேர்வு நடத்துவதற்காக பலமுறை ஆணையிட்டும், எதுவும் நடக்காமல் இருப்பதற்கு பின்னணியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இருக்கிறாரோ என்ற சந்தேகம் இருக்கிறது. ஏற்கனவே, வயதுவரம்பு தளர்வு தரமாட்டேன் என்று பிடிவாதமாக இருந்தது அவர்தான். இப்போதும், தலைமை செயலர், காவல்துறை உயரதிகாரிகளை தனது அதிகாரத்தின் மூலம் கட்டுக்குள் வைத்துக்கொண்டு, தடுக்கிறாரோ என்று சந்தேகிக்கிறோம்'' என்றார்.

- சுந்தரபாண்டியன்

மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் கரம்!

இந்திய அரசின் உயரிய வாழ்நாள் சாதனையாளர் விருதான தயான் சந்த் விருதைப் பெற்றிருக்கிறார் மதுரையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ரஞ்சித்குமார். போலியோவால் பாதிக்கப்பட்டும் தொடர் முயற்சியால் தேசிய அளவிலான விளையாட்டுகளில் சாதனைபுரிந்த இவர், தம்மைப் போலவே சாதிக்கத் துடிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்சியளித்து வருகிறார்.

ss

இவருக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பே காலிப்பர் கருவி வழங்கி உதவிய திருப்பரங்குன்றம் தி.மு.க. எம்.எல்.ஏ. டாக்டர் சரவணன், தற்போது தயான் சந்த் விருதுபெற்று மதுரையைக் கவுரவப்படுத்தியதற்காக பாராட்டு விழா நடத்தியதோடு, ரூ.50 ஆயிரம் உதவித்தொகையும் வழங்கியுள்ளார். மேலும், ரஞ்சித்குமாரிடம் பயிற்சிபெறும் கணேஷ், மனோஜ் ஆகிய மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கு ஸ்பான்சர்ஷிப் வழங்கி, இதுபோல தமிழகத்தில் சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு பலரும் உதவ முன்வரவேண்டும் என்றும் டாக்டர் சரவணன் கேட்டுக்கொண்டார்.

ஏற்கனவே, மதுரையைச் சேர்ந்த பூரணசுந்தரி என்ற பார்வைத்திறன் குறைபாடுள்ள பட்டதாரி பெண், ஐ.ஏ.எஸ். தேர்வில், அகில இந்திய அளவில் 286-வது இடத்தைப் பிடித்து தேர்ச்சி பெற்றிருக்கும் நிலையில், அவரது அரசுப்பணி வாய்ப்புக்கு இடையூறாக இருந்து விடக்கூடாது என்பதற்காக, தொழில்நுட்ப ரீதியில் ஆர்கேம் என்கிற ரூ.3 லட்சம் மதிப்புள்ள அதிநவீன கண்ணாடியோடு, ஆர்பிட்ரீடர் என்கிற எளிதாக படிக்க உதவும் பிரெய்லி கருவியையும் தனது சூர்யா தொண்டு நிறுவனத்தின் மூலம் டாக்டர் சரவணன் வழங்கியதை நக்கீரன் பதிவு செய்திருந்தது.

- ஈ.பா.ப.

nkn090920
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe