Advertisment

சிக்னல் அமைச்சரின் ஆன்மிக விழா அமோகம்!

ss

"வாழும் ராஜராஜனே!' என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீது பாசத்தைப் பொழிகிறார்கள் ஆன்மிக அன்பர்கள். விருதுநகர் அருகே மூளிப்பட்டியில் தன் குலதெய்வமான தவசிலிங்க சுவாமிக்கு, கோவில் எழுப்பி மஹா கும்பாபிஷேகமும் நடத்திய அமைச்சரின் பெருமுயற்சியை எண்ணி அவர்கள் பெருமை கொள்கிறார்கள்.

Advertisment

விழாவில் வெண்கொற்றக்குடை பிடித்தபடி அன்பர்கள் பின்தொடர, பட்டுத் தலைப்பாகை அணிந்து, கையில் வாளோடு நடந்துவந்த ராஜேந்திர பாலாஜி, தவசிலிங்க சுவாமியை எண்ணி மனமுருகி வேண்டினார்.

ss

“கடந்த ஒன்றரை ஆண்டாக கட்சிக்குள் ஏகப்பட்ட சோதனைகளை அனுபவித்து நொந்து போயிருக்கும் அமைச்சர், ராப்பகலா இந்த கோவிலையே நினைச்சு, மனசுக்குள்ள திட்டம்தீட்டி, பார்த்துப் பார்த்துக் கட்டினாரு. தவசிலிங்கத்து மேல அவர் வச்சிருக்கிற நம்பிக்கை வீண்போகல. விருதுநகர் மாவட்ட கழகப் பொறுப்பாளரா தலைமை அறிவிச்சது’’ என்கிறார் அமைச்சருக்கு நெருக்கமான நட்பு வட்டத்தில் இருக்கும் ஒருவர்.

Advertisment

500 ஆண்டு

500 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோயில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றதால், கொரோனாவை அறவே மறந்து, பக்தர்கள் பெருமளவில் கூடிவிட்டனர். பலூன் கடை, வளையல் கடை, தின்பண்டக் கடை, பூக்கடை எல்லாம் முளைத்து, திருவிழாக்கோலம் பூண்டது மூளிப்பட்டி. யாகசாலை பூஜை நடந்த முந்தையநாள் இரவு, வாண வேடிக்கையெல்லாம் நடத்தி கொண்டாடி தீர்த்தனர். கையில் குழந்தை யோடு, மாஸ்க் போடாமல் கும்பாபிஷேகம் காணவந்த பக்தர்களிடம் "கொரோனா பயம் இல்லையா?' என்று கேட்டோம். ""சாமி கும்பிடத்தானே வந்திருக்கோம்? எந்த கொரோனாவும் எதுவும் பண்ணாது. இங்கே வந்திருக் கிற எல்லாரு முகத்துலயும் அன்பையும் பாசத்தையும் பார்க்கிறோம். அது போதும்'' என்றார்கள், பக்தி பரவசத் துடன்.

-ராம்கி

வனவிலங்குகளை வெடிவைத்து கொல்லும் மர்ம கும்பல்!

நெல்லை மாவட்டத்தின் பத்தமடைப் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். சொந்தமாக 50 செம்மறி ஆடுகள் வளர்த்து வரும் இவர், சில தினங்களுக்கு முன்னர் பத்தமடை அருகிலுள்ள மலையடிவாரத்தின் இடைஞ்சாலன் குளத்திற்கு பக்கத்தில் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றுள்ளார்.

ss

தண்ணீர் குடிப்பதற்காக ஆடுகள் குளக்கரைக்கு சென்ற போது, திடீரென பயங்கர சத்தத்துடன் ஏதோ வெடித்துள்ளது. பதறியடித்துக் கொண்டு ஓடிப்போய் பார்த்தால், ஒரு ஆடு தலைசிதறி இறந்து கிடந்தது. பதட்டத்துடன் சுற்றும் முற்றும் பார்த்தபோது, வெடி வைத்திருந்த மாம்பழத்தை தின்றதால் ஆடு பலியானதை அறிந்து மாரியப்பன் அதிர்ந்துபோனார்.

உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. களக்காடு முண்டந்துறை வனக்காப்பாளர் இளங்கோ, சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார். தொழிற் போட்டி காரணமா அல்லது வனவிலங்குகளை வேட்டையாட பழத்தில் வெடி வைக்கப் பட்டதா என்ற கோணத்தில் வனத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

“ஊரடங்கால் ஆள் நடமாட்டமில்லாத சூழலைப் பயன்படுத்தி, மலையடிவாரத் திற்கு இரைதேடி வரும் காட்டுப்பன்றி, மிளா போன்ற வனவிலங்குகளை பழத்தில் வெடிவைத்து கொன்று பிடிக்கும் மர்ம கும்பல் தலையெடுத்திருக்கிறது. வனவிலங்குகளின் மாமிசத் திற்காக இதை அவர்கள் செய்ய வாய்ப்பிருக்கிறது’ என்கிறார்கள், அப்பகுதியைச் சேர்ந்தவர்கள்.

சில மாதங்களுக்கு முன்பு, கேரளாவின் மலப்புரம் காட்டில் வெடிமருந்து கலந்த அன்னாசிப்பழத்தைத் தின்ற கர்ப்பிணி யானை பரிதாபமாக உயிரிழந்தது. அந்தக் கொடூரம் தமிழகத்தை நோக்கி நகர்ந்துள் ளது.

-பரமசிவன்

மோடி அரசுக்கு கூட்டணிக் கட்சியின் கோபக்கேள்வி!

ஊரடங்கால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார முடக்கம் எல்லா தரப்பு மக்களையும் திணறடித்திருக்கிறது. குறிப்பாக வங்கிக்கடன், வட்டித் தொகையால் சாமான்யர்களின் வாழ்க்கை மூழ்கிப் போயிருக்கிறது’’என எதிர்கட்சிகள் மட்டுமின்றி, மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்திருக்கும் கட்சிகளும் குரலெழுப்பத் தொடங்கிவிட்டன.

ssதமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணித் தலைவர் ஈரோடு யுவராஜா, “ஊரடங்கில் ஏற்படும் நிதி நெருக்கடியை சமாளிக்க, ஆகஸ்ட் 31ந்தேதி வரை கடன் தவணைகளை செலுத்துவதில் சலுகை வழங்கப்பட்டது. இதனால், இந்தக் காலத்திற்கான கடனோ, வட்டியோ ரத்து செய்யப்பட்டதாக அர்த்தமாகாது. ஊரடங்கு முடிந்ததும் மீண்டும் சுமை அதிகரிக்குமே தவிர, பெரிய பலனொன்றும் கிடையாது. எனவே, இந்தக் காலத்திற்கான வட்டித் தொகையையாவது ரத்து செய்வது கட்டாயமென, உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில், ரிசர்வ் வங்கி சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், கடனைத் தாமதமாக செலுத்துவதற்காக அவகாசம் கொடுக்கப்பட்டதே தவிர, கடனைத் தள்ளுபடி செய்ய முடியாது. வட்டி விவகாரத்தில் வங்கிகளே முடிவெடுக்க அனுமதி வழங்கி யிருக்கிறோம் என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.

தனியார் மற்றும் பொதுத் துறை வங்கிகளில் வாடிக்கையாளர்கள் பெறப்பட்ட கடன் தொகைக்கு ஆறுமாத காலத்திற்கு வட்டியை, பிரதமர் மோடி அரசு ரத்துசெய்ய வேண்டும் என தனது அறிக் கையில் கூறியிருக்கிறார்.

கொரோனாவை விரட்டுவதாக சொல்லி வேலையையும் வருமானத்தையும் முடக்கிவிட்டதால், பிழைப்புக்கே போராடும் மக்களை கடனோடு வட்டியைக் கட்டச் சொல்வது நியாயமா மோடி சர்க்காரே?

-ஜீவாதங்கவேல்

nkn020920
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe