Advertisment

சிக்னல்! ஆய்வாளருக்கு சல்யூட் அடித்த ஆட்சியர்!

ss

ஆய்வாளருக்கு சல்யூட் அடித்த ஆட்சியர்!

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அமைந்துள்ள ஆயுதப்படை மைதானத்தில், 74-வது சுதந்திர தின விழாவுக்கான கொடியேற்றம் நடைபெற்றது.

Advertisment

ss

கொரோனா பரவல் தடுப்புப் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய முன்களப் பணியாளர்கள் 78 பேருக்கு பதக்கம், சான்றிதழ்களை வழங்கினார் திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி. அப்போது, இன்ஸ்பெக்டர் அல்லிராணியை மேடையில் ஏற்றி, மாவட்ட கலெக்டர் கந்தசாமி கீழே பரிசு வாங்குபவர்கள் நிற்கும் இடத்தில் நின்றபடி சல்யூட் அடித்தார். அந்த புகைப் படத்தை, ‘யாரும் எதிர்பார்க்காத மொமண்ட்’ என பெருமிதத்துடன் குறிப்பிட்டு சோஷியல் மீடியாவில் பதிவிட்டிருக்கிறார், இன்ஸ் பெக்டர் அல்லிராணியின் பேட்ச் மேட்டான இன்ஸ்பெக்டர் கவிதா.

Advertisment

இரண்டு மாதங்களுக்கு முன்பு, வந்தவாசி அருகே நாவல்பாக்கம் கிராமத் தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான அமா வாசை, ஏரிப்பட்டு கிராமத்தில் இருக்கும் கரும்புத்தோட்ட மின்வேலியில் சிக்கி உயி ரிழந்தார். இது

ஆய்வாளருக்கு சல்யூட் அடித்த ஆட்சியர்!

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அமைந்துள்ள ஆயுதப்படை மைதானத்தில், 74-வது சுதந்திர தின விழாவுக்கான கொடியேற்றம் நடைபெற்றது.

Advertisment

ss

கொரோனா பரவல் தடுப்புப் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய முன்களப் பணியாளர்கள் 78 பேருக்கு பதக்கம், சான்றிதழ்களை வழங்கினார் திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி. அப்போது, இன்ஸ்பெக்டர் அல்லிராணியை மேடையில் ஏற்றி, மாவட்ட கலெக்டர் கந்தசாமி கீழே பரிசு வாங்குபவர்கள் நிற்கும் இடத்தில் நின்றபடி சல்யூட் அடித்தார். அந்த புகைப் படத்தை, ‘யாரும் எதிர்பார்க்காத மொமண்ட்’ என பெருமிதத்துடன் குறிப்பிட்டு சோஷியல் மீடியாவில் பதிவிட்டிருக்கிறார், இன்ஸ் பெக்டர் அல்லிராணியின் பேட்ச் மேட்டான இன்ஸ்பெக்டர் கவிதா.

Advertisment

இரண்டு மாதங்களுக்கு முன்பு, வந்தவாசி அருகே நாவல்பாக்கம் கிராமத் தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான அமா வாசை, ஏரிப்பட்டு கிராமத்தில் இருக்கும் கரும்புத்தோட்ட மின்வேலியில் சிக்கி உயி ரிழந்தார். இதுகுறித்து தெள்ளார் இன்ஸ் பெக்டர் அல்லிராணிக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. விசாரிப்பதற்காக நிகழ்விடத்திற்கு வந்தவர், பிரேதப் பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அமாவாசையின் உடலை கொரோனா அச்சத்தால் உறவினர்கள்கூட தொட்டுத்தூக்க அச்சமடைந்திருப்பதை உணர்ந்தார். உடனடியாக ஆட்டோ டிரைவர் உதவியுடன், உடலைத் தூக்கி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

‘இயன்ற மட்டும் எல்லா இடத்திலும் இடைவிடாது அறச்செயல் செய்க’ என்ற வள்ளுவனின் கூற்றை இன்ஸ் பெக்டர் அல்லிராணியின் செயல் நினைவுபடுத்துகிறது.

-து.ராஜா

நீதிமன்றத்தைத் திறக்கப் போராடிய வழக்கறிஞருக்கு மிரட்டல்!

மக்கள் நலன்சார்ந்த பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருபவர் ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் கு.பாரதி. வழக்கறிஞர் கள், குமாஸ்தாக்களுக்கு மாதாமாதம் நிவாரண உதவி வழங்கவேண்டும். நீதி மன்றத்தைத் திறக்கவேண்டும் என்று இவர் நடத்திய போராட்டம் குறித்து நக்கீரனில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

ss

இந்நிலையில்தான், கடந்த ஆகஸ்ட் 02ந் தேதி காலை 10 மணிக்கு, வழக்கறிஞர் கு.பாரதியின் வீட்டுமுன் பெரிய வேனுடன் குவிந்திருக்கிறது போலீஸ். இதுகுறித்து அவர் நம்மிடம், ""அம்பத்தூர் ஸ்டேஷன் எஸ்.ஐ.க்கள் விஜயகுமார், பரந்தாமன் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட போலீசார் வீட்டுவாசலில் நின்னுக்கிட்டு, பாரதி இருக்காரா? இன்ஸ்பெக்டர் கூப்பிடுறாரு என்று மிரட்டலாக என் மனைவியிடம் விசாரித்தனர். என்னவென்று கேட்கப் போனால், இன்ஸ்பெக்டர் சிதம்பரநாதன் முருகேசன் ஜீப்பில் உட்கார்ந்தபடி, “இ.ஐ.ஏ. மசோதா, புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக உங்க வீட்டுவாசலில் 10 பேரைத் திரட்டி சில அமைப்புகள் போராட் டம் நடத்தப்போறதா தகவல் வந்திருக்குன் னார். எனக்கும் அவங்க நடத்தப்போற போராட்டத்துக்கும் எந்த சம்மந்தமுமில்ல என்றதும், வேற பாரதின்னு நினைச்சு தப்பா வந்துட் டோம் என்று கிளம்பிவிட்டார்கள். மனைவி, குழந்தைக்கு பயம். தெருவெல் லாம் ஒரே பதட்டம். இனி நடத்தப்போகும் போராட்டங்களை ஒடுக்கச்செய்யும் மிரட்டல்தானே இது? ஆனால், எங்களது மக்கள்நலப் போராட்டங்கள் தொடரும்'' என்றார்.

இதைக்கண்டித்து அம்பத்தூர் வழக்கறிஞர்கள் சங்கம், வி.சி.க. வழக்கறி ஞர்கள் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடத்திய வழக்கறிஞர்கள், ஏ.சி. கண்ண னிடமும், ஜே.சி. மகேஸ்வரியிடமும் புகார் கொடுத்துள்ளனர். இதுகுறித்து அம்பத்தூர் இன்ஸ்பெக்டர் சிதம்பரநாதன் முருகேச னிடம் கேட்டால், “தகவலின் அடிப் படையில் அங்கு சென்றோம். அவர் அறிமுகமானவர் என்று தெரிந்ததுமே கிளம்பிவிட்டோம். உள்நோக்கமெல்லாம் கிடையாது''’என்றார்.

போராட்டங்களை எந்த வடிவத் திலும் ஒடுக்கிவிட முடியாது!

-மனோசௌந்தர்

அமைச்சரின் ஆன்மிகமும் ஆகஸ்ட் பதினைந்தும்!

எடப்பாடி ஆதரவு ட்வீட் மூலம், அ.தி.மு.க.வில் கலகத்தை ஏற்படுத்திவிட்டு, தனது தொகுதியான சிவகாசிக்கு திரும்பிய அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, தங்கமுலாம் பூசிய கலசம் ஒன்றைக் கையில் ஏந்தியபடி மங்கல இசையால் கோவிலே அதிர, உள்ளே சென்றார். மஞ்சள் உடையுடன், மாலையும் கழுத்துமாக தரையில் அமர்ந்திருந்த விதம், அமைச்சர் தர்மயுத்தத்துக்கு தயாராகிவிட்டாரா என்றே கேட்கத் தோன்றியது.

ss

சிவகாசியை அடுத்துள்ள ஆமத்தூர் - மூளிப்பட்டியில் அமைந்திருக்கிறது, ஸ்ரீ தவசிலிங்க சுவாமி திருக்கோவில். ராஜேந்திர பாலாஜிக்கு குலதெய்வக் கோவிலாம். அரசியலில் வம்பிழுப்பதில் வல்லவராக இருக்கும் இவரது நிம்மதிக்கு இடைஞ்சல் வரும்போதெல்லாம், மனதுக்கு நிறைவையும், அமைதியையும் தருவது ஆன்மிகம் மட்டுமே என்பது அவரது அனுபவ ரீதியான நம்பிக்கை. ரஜினியைப் போலவே ஆன்மிகத் தேடலோடு, இவரும் சத்தமில்லாமல் அடிக்கடி வடக்கே போய்விடுகிறார்.

குலதெய்வக் கோவிலுக்கு குடமுழுக்கு நடத்தும் ராஜேந்திரபாலாஜி, அதற்கு முன், கோயில் மூலஸ்தானத்தில் கலசங்களை வைத்து, விக்ரகங்களுக்கு சொர்ணாபிஷேகம் நடத்திய நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் அமைச்சர்.

அதுமட்டுமல்ல, ஆகஸ்ட் 15 அன்று அதிகாரிகளையும் காவல்துறையினரையும் தன் வீட்டு மொட்டை மாடிக்கு வரவைத்து தேசியக் கொடியை ஏற்றி, ஒரே ஒரு குருக்கள் வர்றார் என்பதுபோல ஒரேயொரு துப்பாக்கி ஏந்திய போலீசை சல்யூட் அடிக்க, ராஜேந்திர பாலாஜி கொண்டாடிய சுதந்திரதின வீடியோ வழக்கமான கமெண்ட்டுகளுடன் வைரலாகிறது.

-ராம்கி

nkn220820
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe