எஸ்.ஐ. தற்கொலைக்கு டி.எஸ்.பி. காரணமா?
ருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் உள்ள ஜம்னாமாத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு உதவி ஆய்வாளராக இருந்தவர் ரவி. 52 வயதான இவரை, ஊரடங்கு அறிவிக்கப்பட்டது முதல் வேலூர் - திருவண்ணாமலை மாவட்ட எல்லையில் சோதனைச்சாவடி கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தியுள்ளனர். வழக்கம்போல் வேலைக்குச் சென்றுவிட்டு, கடந்த ஜூலை 09ந் தேதி காலை ஜம்னாமாத்தூரில் இருக்கும் தனது குடியிருப்புக்குச் சென்றுள்ளார்.
மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் பணிக்குத் திரும்பவில்லை. சக போலீசார் செல்போனில் அழைத்தும், பதில் இல்லாததால் நேரடியாக ரவியின் வீட்டிற்கே சென்று பார்த்துள்ளனர். அப்போது வீடு பூட்டப்பட்டிருந்தது. கதவைத் தட்டியும் திறக்காததால், உடைத்துக் கொண்டுபோய் பார்த்தபோது, சீலிங் ஃபேனில் தூக்கிட்டு சடலமாகத் தொங்கிக் கொண்டிருந்தார் ரவி.
இதுபற்றி உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, சடலம் வேலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. திருவண்ணாம
எஸ்.ஐ. தற்கொலைக்கு டி.எஸ்.பி. காரணமா?
ருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் உள்ள ஜம்னாமாத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு உதவி ஆய்வாளராக இருந்தவர் ரவி. 52 வயதான இவரை, ஊரடங்கு அறிவிக்கப்பட்டது முதல் வேலூர் - திருவண்ணாமலை மாவட்ட எல்லையில் சோதனைச்சாவடி கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தியுள்ளனர். வழக்கம்போல் வேலைக்குச் சென்றுவிட்டு, கடந்த ஜூலை 09ந் தேதி காலை ஜம்னாமாத்தூரில் இருக்கும் தனது குடியிருப்புக்குச் சென்றுள்ளார்.
மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் பணிக்குத் திரும்பவில்லை. சக போலீசார் செல்போனில் அழைத்தும், பதில் இல்லாததால் நேரடியாக ரவியின் வீட்டிற்கே சென்று பார்த்துள்ளனர். அப்போது வீடு பூட்டப்பட்டிருந்தது. கதவைத் தட்டியும் திறக்காததால், உடைத்துக் கொண்டுபோய் பார்த்தபோது, சீலிங் ஃபேனில் தூக்கிட்டு சடலமாகத் தொங்கிக் கொண்டிருந்தார் ரவி.
இதுபற்றி உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, சடலம் வேலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்தத் தற்கொலை பற்றி காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, “ஆரணியில் அவர் பணியாற்றியபோது, ஒரு பெண் காவலர் விவகாரத்தில் பெயர் அடிபட்டு, இடமாற்றம் செய்யப்பட்டார் ரவி. இவருக்கும் போளூர் டி.எஸ்.பி. குணசேகரனுக்கும் புகைச்சல் இருந்துள்ளது. வேலை செய்யவில்லை எனச் சொல்லி டார்ச்சர் செய்வதாக, சக காவல்துறை நண்பர்களிடம் பலமுறை புலம்பியிருக்கிறார்.
இந்த நிலையில்தான், போலீஸ் கேம்ப் ஆபீசுக்கு வருமாறு ரவியிடம் டி.எஸ்.பி. சொன்னதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இந்த விரக்தியில்தான் ரவி தற்கொலை செய்திருக்கிறார். தற்கொலைக்கு முன்பாக அவர் எழுதிவிட்டுச் சென்ற கடிதத்தையும், டி.எஸ்.பி.யுடன் பேசிய செல்போன் உரையாடலையும் மறைத்துவிட்டார்கள் என்று பகீர் கிளப்புகிறார்கள்.
-து.ராஜா
கரண்ட் பில் கட்ட கூலிவேலை!
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகேயுள்ள கொத்தமங்கலத்தைச் சேர்ந்தவர் செந்தில். பல ஆண்டுகளாக ஆலங்குடியில் ஐஸ்கிரீம் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலைசெய்த இவர், ரூ.15 லட்சம் முதலீட்டில் (எல்லாமே கடன்) ஐஸ்கிரீம் தயாரிக்கும் இயந்திரத்தை அமைத்து ஜனவரியில் தொழில் தொடங்கினார்.
திருவிழாக்களில் ஓரளவுக்கு தொழிலை ஓட்டிய இவருக்கு, மாசிமகம்தான் கடைசி வியாபாரம். எப்படியும் ஊரடங்கு முடிந்துவிடும் என்ற நம்பிக்கையில், ரூ.2 லட்சத்துக்கு ஐஸ்கிரீம் தயாரித்து, குளிர்சாதனப் பெட்டியில் பாதுகாத்து வைத்தார். இப்படியே நான்கு மாதங்கள் ஓடிவிட்டன. இப்போது வேறுவழியின்றி, தான் பாதுகாத்துவந்த ஐஸ்கிரீம் பெட்டிகளை சாலையில் கொட்டி அழித்திருக்கிறார்.
இதுபற்றி செந்தில் கூறும்போது, ""லட்சக்கணக்கில் கடன்வாங்கி தொழில் தொடங்கிய ஒரே மாதத்தில் கொரோனா வந்து கெடுத்துவிட்டது. கடன் கொடுத்த வர்கள் கழுத்தைப் பிடிக்கிறார்கள். வட்டி கட்டக்கூட வழியில்லை. தயாரித்து வைத்த ஐஸ்கிரீமை குளிர்சாதனப் பெட்டியில் பாதுகாத்து வைத்தால், மாதாமாதம் மின்கட்டணம் மட்டுமே ரூ.15 ஆயிரம் ஆகிறது. கூலி வேலைக்குப்போய் மின் கட்டணத்தை கட்டுகிறேன். பிழைப்பே கெட்டுவிட்ட விரக்தியில்தான், இத்தனை நாள் பாதுகாத்த ஐஸ்கிரீமை சாலையில் கொட்டி அழித்துவிட்டேன். என்னைப் போன்ற சிறுதொழில் செய்பவர்களுக்கு நிவாரணமும், மீண்டும் தொழில் தொடங்க கடனுதவியும் வழங்கி அரசு உதவவேண்டும்'' என்றார் வேதனையுடன். கொரோனாவால் நேரடியாக ஏற்பட்ட பாதிப்பை விடவும், மறைமுக பாதிப்புகள் ஏராளம்.
- இரா.பகத்சிங்
‘காலையில் ஒரு கட்சி; மாலையில் ஒரு கட்சி!’
வெம்பகோட்டை ஒன்றியம், ஏழாயிரம்பண்ணை பகுதியில் அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலராக இருப்பவர் கோவிந்தலட்சுமி. இவரது மகனும், விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. இளைஞரணி இணைச் செயலாளருமான ராஜாசிங்கிற்கு, சொந்தக் கட்சியினரிடையே ஒத்துப்போகவில்லை.
இந்தக் கோபத்தில், வெம்பக்கோட்டை, தி.மு.க. கிழக்கு ஒ.செ. கிருஷ்ண குமாரையும், மேற்கு ஒ.செ. ஜெயபாண்டியனையும் சந்தித்து, தி.மு.க.-வில் சேர்ந்தார். அவர்களும், ராஜாசிங்கை வரவேற்று, தி.மு.க. கரைபோட்ட வேஷ்டி யையும், சால்வையும் அவர் கழுத்தில் போட்டு, போட்டோ எடுத்துக்கொண்டனர். இது, தி.மு.க. மா.செ. கே.கே.எஸ்.எஸ்.ஆருக்கும் தெரிவிக்கப்பட்டது.
இந்தத் தகவல், சென்னையிலிருந்த விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. பொறுப்பாளர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு சென்றது. உடனே, அவர் ராஜாசிங்கிடம் பேச, அன்று மாலையே, பழைய கட்சிக்குத் திரும்பினார். மேலும், ""என் அரசியல் பயணம் அண்ணன் கே.டி.ஆர். வழியில்தான்'' என்று விளக்கம்வேறு தந்தார், ராஜாசிங்.
""காலையில் ஒரு கட்சிக்கு தாவி, மாலையில் பழைய கட்சிக்கே திரும்பியது வேடிக்கையாக அல்லவா இருக்கிறது?'' என்று ராஜாசிங்கிடமே கேட்டோம். அதற்கு அவர் ஏதேதோ உளற, ""உண்மை பேச மாட்டீங்களா?'' என்று இடைமறித்தோம்.
""ஆமாங்க.. எனக்கும் லோக்கல் எஸ்.ஐ.க்கும் ஆகல. எனக்கு வேண்டிய ஆளுங்க மேல அவரு கேஸ் போடறாரு. அதனால்தான், தி.மு.க.-வுக்கு போனேன். அப்புறம், அமைச்சர் கே.டி.ஆர். போன்ல கூப்பிட்டு என்னைத் திட்டினார். அ.தி.மு.க.-வுக்கு வந்துட்டேன். நான் எப்பவும் அ.தி.மு.க.-தான்'' ’என்றவர், “""நான் சொன்னதை அப்படியே பேட்டியா போட்டுக்கங்க...'' என்று அரசியல்தனத்துடன் சொன்னார்.
-ராம்கி