ஜொள்ளு இன்ஸ்பெக்டருக்கு கட்டாய ஓய்வு!

திருச்சி சிறுகனூர் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக இருந்தவர் மணிவண்ணன். புகார் கொடுக்க ஸ்டேஷனுக்கு வரும் பெண்களிடம் தனியே சென்று விசாரணை என்கிற பெயரில் ஜொள்ளு விடுவதில் இவருக்கு பெரிய ஹிஸ்டரி இருக்கிறது. உடன் பணிபுரியும் பெண் போலீசாரிடமும் அநாகரீகமாக பேசுவதாக வாய்மொழி புகார்களும் இவர்மீது சென்றுள்ளன.

ss

ஸ்டேஷனில் பஞ்சாயத்து செய்வது, ஊரடங்கில் பிடிபட்ட வாகனங்களைத் திருப்பிக் கொடுப்பதற்கு லஞ்சப்பணம், ரியல் எஸ்டேட் பேர்வழி என இன்ஸ்பெக்டர் மணிவண்ணனைச் சுற்றி எப்போதுமே சர்ச்சைகள்தான்.

Advertisment

திருச்சி பொன்மலையில் இன்ஸ் பெக்டராக இருந்தபோது, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. படிக்க வந்த இலங்கைப் பெண்ணின் விசா தொடர்பான பிரச்சனையில், நேரடியாக வீட்டுக்கே சென்று தவறாக நடக்க முயற்சித்தது, மிகப்பெரிய பிரச்சனையாக வெடித்தது. (இதுதொடர்பாக நக்கீரன் இதழில் விரிவான கட்டுரை எழுதியிருந்தோம்)

பெரம்பலூர் மாவட்டத்திற்கு ட்ரான்ஸ்ஃபர் செய்யப்பட்டும் சும்மா இருக்காமல், புகார்தர வந்த பெண்ணிடம் நள்ளிரவு நேரங்களில், விசாரணை என்கிற பெயரில் செல்போனில் அழைத்து தொடர்ந்து ஜொள்ளு விட்டிருக்கிறார். இதில் மிரண்டுபோன அந்தப்பெண், அப்போதைய டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணனிடம் புகார் கொடுத்திருக்கிறார்.

இதுதொடர்பாக விசாரிக்க உத்தரவிட்ட டி.ஐ.ஜி., இதுபோன்ற புகார்கள் மணிவண்ணன் மீது பஞ்சமின்றி இருப்பதை அறிந்து, உடனடியாக கட்டாய பணிஓய்வு பெற உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகல் கொடுப்பதைத் தெரிந்துகொண்டு, ஸ்டேஷனுக்கு செல்வதைத் தவிர்த்து வந்த மணிவண்ணனுக்கு, ஒரு வாரத்திற்குப் பிறகு கட்டாய பணிஓய்வுக்கான உத்தரவு நகல் நேரடியாக வழங்கப்பட்டது.

Advertisment

உத்தரவைப் பிறப்பித்த டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன், தமிழகம் முழுவதும் 39 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றப் பட்டதில், சென்னைக்கு மாற்றப்பட்டு விட்டார்.

- ஜெ.டி.ஆர்.

அலட்சியத்தால் கர்ப்பிணிக்கு கொரோனா?

sஉணவுத்துறை அமைச்சர் காமராஜின் சொந்த ஊரான மன்னார்குடியைச் சேர்ந்த நிறை மாத கர்ப்பிணி ஒருவர், கடந்த ஜூன் 24ந் தேதி மாதாந்திர செக்கப்பிற்காக மகப்பேறு நிலை யத்திற்குச் சென்றிருக்கிறார். குழந்தை பிறக்க ஒருவாரமே இருந்த நிலையில், மகப்பேறு சோதனைக்குப் பதிலாக, அவருக்கு கொரோனா சோதனை செய்து பாசிட்டிவ் என்று அறிவித்துள்ளனர்.

""தயாராக இருங்கள். ஆம்புலன்ஸ் வரும். திருவாரூர் அரசு மருத்துவமனை கொரோனா வார்டுக்கு செல்ல வேண்டும்'' என்று அவர்கள் கூறியதைக் கேட்டு அதிர்ந்து போனார் அந்தப்பெண். பதறியடித்துக் கொண்டு தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் கொரோனா சோதனை செய்து கொண்டு, ஆம்புலன்ஸ் வராததால் தனியார் ஆம்புலன்ஸ் புக்செய்து திருவாரூர் அரசு மருத்துவமனையில் சோதனை செய்துகொண்டு கொரோனா வார்டில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். அந்தப் பெண்ணின் கணவர், உறவினர்கள் உள்ளிட்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட, அவர்களின் பகுதிகளும் லாக் செய்யப்பட்டன. இந்நிலையில், தஞ்சாவூர், திருவாரூர் அரசு மருத்துவமனைகளில் அந்தப்பெண்ணிடம் எடுக்கப்பட்ட சோதனை நெகட்டிவாக வந்தது. இதைக்கண்டு ஆத்திர மடைந்த அந்த அந்தப்பெண், அரசின் அலட்சியத்தால் கொரோனா இல்லாத என்னை கொரோ னா வார்டில் சிகிச்சைக்குச் சேர்த்துவிட்டார்கள். இனி எனக்கு என்ன நேர்ந்தாலும் அரசே பொறுப்பேற்க வேண் டும்’ என்று கொதித்துக் கொண்டிருக்கிறார்.

""தான் எங்கு சென்றா லும் பத்திரிகையாளர்களை யும் கூடவே கூட்டிச்செல்லும் உணவுத்துறை அமைச்சர் காமராஜ், “இந்த ஆட்சி கொரோனா நெருக்கடியை சிறப்பாகக் கையாளுகிறது. இறப்பு விகிதம் குறைவான மாவட்டமாக திருவாரூர் இருக்கிறது என பெருமை பேசிவருகிறார். ஆனால், தனது சொந்த ஊரில் நிறை மாத கர்ப்பிணிப் பெண் ணுக்கு அரசின் அலட்சித் தால் நேர்ந்த துயரம் குறித்து மௌனம் காக்கிறார்'' என மன்னார்குடிவாசிகள் கொந்தளிக்கிறார்கள்.

-செல்வகுமார்

38 உயிர்களைப் பறித்த பட்டாசு அதிபர் பலி!

ss

எட்டு வருடங்களுக்கு முன், தேசத்தையே உலுக்கிய கோரநிகழ்வு அது. 2012, செப்டம்பர் 5-ந் தேதி, சிவகாசியை அடுத்துள்ள ஓம்சக்தி பட்டாசு ஆலை, அப்பட்டமான விதிமீறலுடன் இயங்கிய போது, விபத்துக்குள் ளானது. அந்த வெடிவிபத்தில் கருகி, 38 பேர் மாண்டு போனார்கள்.

அந்தப் பட்டாசு ஆலை, அப்போது விருதுநகர் ஒன்றிய அ.தி.மு.க. கவுன்சிலராக இருந்த முருகேசனுக்குச் சொந்தமானது. அதை அவர் லீசுக்கு விட்டிருந்தார். அந்த வழக்கில் முருகேசனும் உள் குத்தகைதாரர்கள் 11 பேரும் கைதானார்கள். அப்போது, விபத்துக்கு காரணமான விதிமீறல்கள் குறித்து, நக்கீரன் அட்டைப்படக் கட்டுரையே வெளியிட்டது.

காலச்சக்கரம் சுழல்கிறது. அந்த நேரத்தில் பட்டாசு ஆலை உரிமையாளராக இருந்த முருகேசன், தற்போது, விருதுநகர் அருகிலுள்ள நல்லமநாயக்கன்பட்டியில், பிளேவர் பிளாக் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். விருதுநகர் முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவரான அவர், விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தில், 12-வது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினரும் ஆவார்.

தரையில் பதிக்கப்படும் கற்களை உற்பத்தி செய்யும் அந்த தொழிற்சாலையில் இயங்கிவந்த மோட்டார் பழுதானது. பழுது பார்த்து முடிந்ததும், மின்னிணைப்பு தந்துள்ளனர். அப்போது மோட்டார் பாகங்கள் முறையாக இணைக்கப்படாத நிலையில், அதிகப்படியான மின்சாரம் பாய்ந்ததன் காரணமாக, மோட்டார் தூக்கி எறியப்பட்டபோது, பழுதுபார்த்த முருகேசனின் முகத்தில் பலமாக அடிபட்டிருக்கிறது. அதனால், சம்பவ இடத்திலேயே, அவர் இறந்துபோனார்.

விபத்துகளுக்கு மனித உயிர்களின் மதிப்பு தெரிவதில்லை. மரணம் முதலாளி-தொழிலாளி பேதம் பார்ப்பதில்லை.

-ராம்கி