Advertisment

சிக்னல் அதிகாரிகளின் அலட்சியத்தால் கோவிலுக்குள் புகுந்த நீர்!

ss

அதிகாரிகளின் அலட்சியத்தால் கோவிலுக்குள் புகுந்த நீர்!

தென்னிந்தியாவில் மிகவும் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில், சாதாரண நாட்களில் ஆயிரக்கணக்கிலும், கார்த்திகை தீபம் போன்ற திருவிழா நாட்களில் லட்சக்கணக்கிலும் பக்தர்கள் வருவார்கள். ஊரடங்கு கெடுபிடிகளால் தற்போது பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதியில்லை.

Advertisment

ss

இந்நிலையில், ஜூன் 24ந்தேதி இரவுநேர பூஜைக்காக கோவிலுக்குள் நுழைந்த சிவாச்சாரியார்களுக்கும், கோவில் ஊழியர்களுக்கும் பேரதிர்ச்சி காத்திருந்தது. அன்றைய தினம் பெய்து ஓய்ந்த அடைமழையால், கோவிலின் கொடிமரம் அமைந்துள்ள பிரகாரத்தில் 3 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியிருந்தது. கோவிலுக்குள் விழும் மழைநீர் குளத்திற்கு செல்ல ஏற்பாடு செய்திருந்தும், தண்ணீர் தேங்கியது எப்படி என்ற கேள்வி எழுந்தது.

Advertisment

இதுபற்றி நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர், வழக்கறிஞர் பாபு, அண்ணாமலையார் கோவிலைச் சுற்றி, ஆண்டுதோறும் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு தார்ச்சாலை போடுகிறார்கள். புதிதாக சால

அதிகாரிகளின் அலட்சியத்தால் கோவிலுக்குள் புகுந்த நீர்!

தென்னிந்தியாவில் மிகவும் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில், சாதாரண நாட்களில் ஆயிரக்கணக்கிலும், கார்த்திகை தீபம் போன்ற திருவிழா நாட்களில் லட்சக்கணக்கிலும் பக்தர்கள் வருவார்கள். ஊரடங்கு கெடுபிடிகளால் தற்போது பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதியில்லை.

Advertisment

ss

இந்நிலையில், ஜூன் 24ந்தேதி இரவுநேர பூஜைக்காக கோவிலுக்குள் நுழைந்த சிவாச்சாரியார்களுக்கும், கோவில் ஊழியர்களுக்கும் பேரதிர்ச்சி காத்திருந்தது. அன்றைய தினம் பெய்து ஓய்ந்த அடைமழையால், கோவிலின் கொடிமரம் அமைந்துள்ள பிரகாரத்தில் 3 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியிருந்தது. கோவிலுக்குள் விழும் மழைநீர் குளத்திற்கு செல்ல ஏற்பாடு செய்திருந்தும், தண்ணீர் தேங்கியது எப்படி என்ற கேள்வி எழுந்தது.

Advertisment

இதுபற்றி நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர், வழக்கறிஞர் பாபு, அண்ணாமலையார் கோவிலைச் சுற்றி, ஆண்டுதோறும் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு தார்ச்சாலை போடுகிறார்கள். புதிதாக சாலை அமைத்தால், பழைய சாலையை கொத்திவிட்டு போடுவது விதிமுறை. ஆனால், ஒப்பந்ததாரர்கள் இதனை மதிக்காமல் பழைய சாலையின் மீதே புதிய சாலைகளைப் போடுகிறார்கள். அதிகாரிகளும் இதைக் கண்டுகொள்வதில்லை. இதனால், சாலையின் உயரம் அதிகரித்து, மழை பெய்யும்போது நான்கு கோபுரங்களின் வழியாக மழைநீர் கோவிலுக்குள் நுழைகிறது.

இன்னொருபுறம் சாலையின் உயரம் அதிகரிப்பதால், திருவண்ணாமலை நகரத்தின் முக்கிய வீதிகளில் உள்ள கடைகள் பள்ளத்திற்குள் போய், தற்போது உயரமேற்றி கட்டப்பட்டுள்ளன. குடியிருப்புகளுக்கும் இதே கதிதான். அதிகாரிகளிடம் முறையிட்டு எந்தப் பயனுமில்லை’’ என்றார் வேதனையான குரலில். கோவில் நிர்வாகத்திடம் கேட்டபோது, வெளியிலிருந்து நீர் உட்புகாதபடி கால்வாய் அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

-து.ராஜா

மிரட்டும் மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்கள்!

ஊரடங்கு கெடுபிடியால் அன்றாடப் பிழைப்புக்கே அல்லாடுகிறார்கள் பொதுமக்கள். அவர்களிடம் கடன் தவணைத் தொகையைக் கட்டச்சொல்லி நிர்பந்திக்க வேண்டாமென்றும், அவகாசம் வழங்கவும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது ரிசர்வ் வங்கி. மத்திய அரசும் இதை வலியுறுத்தியது.

ss

இருந்தும், கடன் தொகையை செலுத்துமாறும், தவறியவர்கள் அபராத வட்டி செலுத்தவும் மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்கள் பொதுமக்களை நிர்பந்தம் செய்கின்றன. இதைத் தடுக்கக் கோரியும், கொரோனா காலமான மார்ச் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான ஆறுமாத தவணைக்கான வட்டித்தொகையை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரியும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.

இதன் தொடர்ச்சியாக, ஈரோடு மாவட்ட கம்யூனிஸ்ட் கட்சிப் பொருளாளரும், மைக்ரோ ஃபைனான்ஸ் டார்ச்சர் தடுப்புக்குழுவின் கன்வீனருமான எஸ்.டி.பிரபாகரன் தலைமையில் ஈரோடு மாவட்ட கலெக்டரிடம் விரிவான கோரிக்கை மனுவைக் கொடுத்துள்ளனர். இதுபற்றி அவர்கள் கூறுகையில், அன்றாடம் காட்சிகளான அமைப்புசாரா தொழிலாளர்களின் குடும்ப நிதிச்சுமையை சரிசெய்ய, பொதுத்துறை வங்கிகள் பெரும்பாலும் கடன் தருவதில்லை. இதனால், அந்தக் குடும்பத்துப் பெண்கள் குழுக்களாக இணைந்து, மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்களிடம் கடன் பெற்றுள்ளனர். அதேபோல், கடும் நெருக்கடிக்கு மத்தியிலும் தவணைத் தொகையையும் தவறாமல் செலுத்தி வந்தனர்.

தற்போது, ஊரடங்கால் வேலையின்றி, வருமானமின்றி வாழ்க்கை நடத்தவே சிரமப்படும் அவர்களிடம், கடன் தொகையை உடனே கட்டச் சொல்வதும், கட்டாதவர் களுக்கு அப ராதத் தொகை செலுத்த நிர்பந்திப்பதும், இயலாதவர்களை மிரட்டுவதுமாக இருக் கின்றன சம்மந்தப்பட்ட நிறுவனங்கள். எனவே இந்த விவகாரத்தில் தலையிட்டு, அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் நடவடிக்கை எடுக்கக்கோரி வலியுறுத்துகிறோம் என்றனர்.

- ஜீவாதங்கவேல்

உறவாய் நின்ற சுகாதாரப் பணியாளர்கள்!

கொரோனாவால் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தவர்களின் உடல்கூட தொற்றுக்குக் காரணமாகும் அச்சுறுத்தல் இருக்கிறது என்பதால், அடக்கம் செய்யும்போது சுகாதாரப் பணியாளர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், மனவலியை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை சுகாதார மேற்பார்வையாளர் முத்துகுமார், தனது முகநூல் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், கடந்த 27ந்தேதி நள்ளிரவில் தஞ்சாவூர் மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து அழைப்பு வந்தது. அதில், கொரோனா தொற்றினால் உயிரிழந்த 13 வயது சிறுவனின் உடலை உறவினரிடம் ஒப்படைக்க இயலாது. எனவே சுகாதார மேற்பார்வையாளரான நீங்களும், வட்டாட்சியரும் வந்து பெற்றுக்கொள்ளுங்கள் என்றார்கள்.

ss

உடனடியாக துணை இயக்குனர் கலைவாணிக்கும், மாவட்ட கலெக்டருக்கும் தகவல் அளித்தோம். விடிந்தும் விடியாத பொழுதில் சம்மந்தப்பட்ட பகட்டுவான்பட்டி ஊராட்சிமன்றத் தலைவரை அணுகி, உடலைப் புதைக்க குழிதோண்ட ஆயத்தமானோம். குழிக்கான காரணமறிந்த ஜே.சி.பி. இயக்குனர் பாதியிலேயே ஓடிவிட, சுகாதாரப் பணியாளர்களும், அந்த கிராமத்து இளைஞர்களும் இணைந்து குழி தோண்டினோம். உறவினர்கள் யாரும் அங்கே நெருங்கமுடியாத நிலையில், சுகாதாரத்துறையினர், காவல்துறை ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகிய நாங்களே அந்த சிறுவனின் உடலை நல்லடக்கம் செய்தோம்’’என்று முத்துகுமார் எழுதியிருக்கிறார். உயிர் பயத்தால் உறவுகளே தயங்கும் நிலையில், சிறுவனின் உறவுகளாய் நின்று உடலை நல்லடக்கம் செய்த அதிகாரிகளை அந்த கிராம மக்கள் பாராட்டி வருகிறார்கள்.

-இரா.பகத்சிங்

nkn040720
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe