ஆபரேஷன் சமுத்ரசேது! மீட்கப்பட்ட தமிழர்கள்!
சுனாமியாக வேகமெடுக்கும் கொரோனாவால், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் மக்கள் கூட்டம் சொந்தமண்ணை நோக்கி திரும்பிக் கொண்டிருக்கிறது. கல்வி, வணிகம், வேலைவாய்ப்பு, மருத்துவம் போன்ற காரணங்களுக்காக வெளிநாடுகள் சென்று பிள்ளைக் குட்டிகளுடன் சிக்கிக்கொண்ட இந்தியர்களை விமானம் மற்றும் கப்பல்கள் மூலம் மீட்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறது மத்திய அரசு.
அதன்படி இலங்கையில் தவித்துவந்த தென்னிந்தியாவைச் சேர்ந்த 713 பேர், கடற்படை கப்பல் ஐ.என்.எஸ். ஜலஷ்வா மூலம் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் வயதானவர்கள், நோயாளிகள் மற்றும் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் உட்பட தமிழர்கள் மட்டுமே 693 பேர். மற்றவர்கள் கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள். ஜூன் 01ந்தேதி இலங்கைத் துறைமுகத்திலிருந்து கப்பல் புறப்பட்டது. முன்னதாக, கடற்படை மருத்துவர் பிரசாந்த் தலைமையிலான மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியா
ஆபரேஷன் சமுத்ரசேது! மீட்கப்பட்ட தமிழர்கள்!
சுனாமியாக வேகமெடுக்கும் கொரோனாவால், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் மக்கள் கூட்டம் சொந்தமண்ணை நோக்கி திரும்பிக் கொண்டிருக்கிறது. கல்வி, வணிகம், வேலைவாய்ப்பு, மருத்துவம் போன்ற காரணங்களுக்காக வெளிநாடுகள் சென்று பிள்ளைக் குட்டிகளுடன் சிக்கிக்கொண்ட இந்தியர்களை விமானம் மற்றும் கப்பல்கள் மூலம் மீட்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறது மத்திய அரசு.
அதன்படி இலங்கையில் தவித்துவந்த தென்னிந்தியாவைச் சேர்ந்த 713 பேர், கடற்படை கப்பல் ஐ.என்.எஸ். ஜலஷ்வா மூலம் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் வயதானவர்கள், நோயாளிகள் மற்றும் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் உட்பட தமிழர்கள் மட்டுமே 693 பேர். மற்றவர்கள் கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள். ஜூன் 01ந்தேதி இலங்கைத் துறைமுகத்திலிருந்து கப்பல் புறப்பட்டது. முன்னதாக, கடற்படை மருத்துவர் பிரசாந்த் தலைமையிலான மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர் குழு பரிசோதனை மேற்கொண்டது.
ஆபரேஷன் ‘சமுத்ரசேது’ என்று பெயரிடப்பட்ட இந்த மீட்புப்பணிக்காக கப்பற்படையின் கிழக்குப் பிரிவு ஈடுபட்டது. 03ந்தேதி காலை பெர்த்துக்குள் நுழைந்த கப்பல் ஜலஷ்வாவை தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி, மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன். எஸ்.பி. அருண் பாலகோபாலன், துறைமுக சபை சேர்மன் ராமச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் கைதட்டி வரவேற்றனர்.
கப்பலில் வந்தவர்கள் 25 பேருந்துகளில் சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு மீண்டும் சோதனை செய்யப்பட்டு, பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டும் என்றார் கலெக்டர் சந்தீப் நந்தூரி. மீண்டும் 7ந் தேதி மாலத்தீவில் இருந்தும், 17ந்தேதி ஈரானில் இருந்தும் இந்தியர்களை மீட்டு தூத்துக்குடி துறைமுகம் வரவிருக்கின்றன இந்திய கடற்படையின் கப்பல்கள்.
- பரமசிவன்
வங்கி மேலாளரின் கவரிங் நகை மோசடி!
மகளிர் சுய உதவிக்குழு பெண்ளுக்கு கடன், அடமான கடன், வீட்டுப்பத்திரம் அடமான கடன், நகைகள் அடமான கடன் உள்ளிட்ட கடன்கள் வழங்கும் ஜனா வங்கி திருச்சி திருவெறும்பூரில் இயங்குகிறது.
இந்த வங்கியில் கடந்த மாதம் வாடிக்கையாளர் ஒருவர் தான் அடமானம் வைத்த நகைக்கு வட்டி கட்ட வந்துள்ளார். நகை மதிப்பீட்டாளர் சிவந்திலிங்கம், இன்னொரு நகைக்கு வட்டி கட்டாமல் உள்ளது அதை எப்போது மீட்க போகிறீர்கள் என கேட்டார்.
அதற்கு வாடிக்கையாளர் அது என்னுடையதல்ல ஏற்கனவே இங்கு நகை மதிப்பீட்டாளராக இருந்த பாலசுப்ரமணியன் எனது பெயரில் வைத்துள்ளார் என தெரிவித்தார். இதையடுத்து கிடப்பில் இருந்த அந்த அடமான நகைகளை பரிசோதனைக்கு உட்படுத்தியபோது அவையனைத்தும் கவரிங் நகைகள் என்பது தெரியவந்தது. தொடர் ஆய்வில் 250 பவுன் மதிப்பில் போலி நகைகளை 80 வாடிக்கையாளர் பெயரில் கள்ளத்தனமாக அவர்களுக்கு தெரியாமல் வைத்து ரூ 50 லட்சம் வரை மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
டிஎஸ்பி சிவசுப்ரமணியன் தலைமையில் மாவட்ட குற்ற பிரிவு ஆய்வாளர் உஷாநந்தினி விசாரணை நடத்தினார். வங்கிக் கிளையின் முன்னாள் மேலாளர் பிரவீன்குமாரும், மதிப்பீட்டாளராக இருந்த பாலசுப்ரமணியமும் சுமார் இரண்டு ஆண்டுகள் இந்த மோசடியில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. இவர்களுக்கு உதவியாக வங்கியில் கலெக்சன் பிரிவு, கடன் வழங்குதல் பிரிவுகளில் வேலை பார்க்கும் யோகராஜ், வடிவேல், ராஜேந்திரன், சிலம்பரசன் ஆகிய 4 பேரும் உதவியாக இருந்துள்ளனர். வாடிக்கையாளர்களுக்கு கடன் ஏற்பாடு செய்யும்போது, அவர்களிடம் லாவகமாக பேசி, அவர்கள் அறியாமலேயே கவரிங் நகைகளை ஒரிஜினல் போல் காட்டும் போலி ஆவணங்களைத் தயாரித்து இந்த மோசடி நடந்துள்ளது.
பாலசுப்பிரமணியன் கடந்த மாதம் இறந்துவிட்ட இந்நிலை யில் மீதமுள்ள 5 பேர் மீது வழக்குப் பதிந்து கைது செய்யப்பட்டனர்.
-ஜெ.டி.ஆர்.
கலைஞரின் சிலை முன்பு சுயமரியாதைத் திருமணம்!
தமிழக முன்னாள் முதல்வரும், தி.மு.க. முன்னாள் தலைவருமான கலைஞரின் 97வது பிறந்த தினமான ஜூன் 03ந்தேதியன்று, தி.மு.க.வினர் சிறப்பாகக் கொண்டாடினார்கள். தனது சமூகநீதித் திட்டங்களால் தமிழகத்தை நவீனப்படுத்தியவர் என்பதால், கலைஞரின் பிறந்த தினத்தில் பொதுமக்களும் கலந்துகொண்டனர். இதேநாளில், ஈரோட்டில் உள்ள கலைஞரின் சிலைமுன்பு காதல் ஜோடியொன்று திருமணம் செய்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகேயுள்ள ராகராயன் குட்டையைச் சேர்ந்தவர் சந்திரகாந்த். இவரும் அத்தமாப்பேட்டையைச் சேர்ந்தவரான பிரிந்தியா தேவியும் நீண்ட காலமாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் தான், கலைஞரின் பிறந்த தினத்தன்று, ஈரோட்டிலுள்ள அவரது சிலை முன்பு மாலைமாற்றி சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டனர்.
இந்தத் திருமணம் குறித்து மணமகன் சந்திரகாந்த் கூறுகையில், ""நானும், பிரிந்தியா தேவியும் பள்ளிக் காலத்தில் இருந்து நல்ல நண்பர்களாக பழகி வந்தோம். பின் நாளடைவில் எங்களது நட்பு காதலானது. இருவரும் மனமொத்து திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தோம். சமூக நீதிக்காக இறுதி வரை போராடிய தலைவரான கலைஞர், உயிரோடு இருக்கும்போது, எங்களால் திருமணம் செய்துகொள்ள முடியவில்லை. ஆகவே, கலைஞரின் பிறந்ததினமான ஜூன் 03ந்தேதி, அவரது குருகுலமான ஈரோட்டில் உள்ள அவரது சிலை முன்பு மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டோம்'' என்றார் மகிழ்ச்சியுடன்.
- ஜீவாதங்கவேல்