சிக்னல் : போலீஸ் ஸ்டோரீஸ்!

signal

போலீஸ் ஸ்டோரீஸ்!

சென்னை விருகம்பாக்கத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மட்டுமே தங்கக்கூடிய அந்தப் பிரம்மாண்ட அடுக்கு மாடிக் குடியிருப்பை தனி உலகம் என்பார்கள்.

signal

அதில் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவருக்குச் சொந்தமான வீட்டில், ஹவுஸ் கீப்பிங் என்ற பெயரில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார் ஒரு இளம் பெண். இயக்குனர் கே.பாலச்சந்தரால் அறிமுகம் செய்யப்பட்ட நாயகியின் பெயர்கொண்ட அவருக்கும், அதே குடியிருப்பில் தங்கியிருக்கும் சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மற்றும், ரிடையர்டான சில ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கும் இடையே எல்லை மீறிய பழக்கமாம். இதில், லட்சங்களில் குளித்திருக் கிறார் அந்தப்பெண். இதைக் கேள்விப்பட்டு கொதித்துப் போயிருக்கிறார்களாம், சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் வீட்டுப்பெண்கள். கூடியவிரைவில் விவகாரம் பெரிதாக வெடிக்கலாம் என்கிறார்கள்.

சேலையூரில் நீண்ட காலமாக இன்ஸ்பெக்டராக இருந்து, அதே பகுதி யில் ஏ.சி.யாக புரமோஷன் வாங்கியவர் சகாதேவன். இந்தப் பகுதியில் ஊரடங்கினால் தவிக்கும் இயலாத மக்களுக்கு உதவுவதற்காக, காளீஸ்வரி ரீஃபைனரி நிறுவனத்தின் சார்பி

போலீஸ் ஸ்டோரீஸ்!

சென்னை விருகம்பாக்கத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மட்டுமே தங்கக்கூடிய அந்தப் பிரம்மாண்ட அடுக்கு மாடிக் குடியிருப்பை தனி உலகம் என்பார்கள்.

signal

அதில் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவருக்குச் சொந்தமான வீட்டில், ஹவுஸ் கீப்பிங் என்ற பெயரில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார் ஒரு இளம் பெண். இயக்குனர் கே.பாலச்சந்தரால் அறிமுகம் செய்யப்பட்ட நாயகியின் பெயர்கொண்ட அவருக்கும், அதே குடியிருப்பில் தங்கியிருக்கும் சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மற்றும், ரிடையர்டான சில ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கும் இடையே எல்லை மீறிய பழக்கமாம். இதில், லட்சங்களில் குளித்திருக் கிறார் அந்தப்பெண். இதைக் கேள்விப்பட்டு கொதித்துப் போயிருக்கிறார்களாம், சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் வீட்டுப்பெண்கள். கூடியவிரைவில் விவகாரம் பெரிதாக வெடிக்கலாம் என்கிறார்கள்.

சேலையூரில் நீண்ட காலமாக இன்ஸ்பெக்டராக இருந்து, அதே பகுதி யில் ஏ.சி.யாக புரமோஷன் வாங்கியவர் சகாதேவன். இந்தப் பகுதியில் ஊரடங்கினால் தவிக்கும் இயலாத மக்களுக்கு உதவுவதற்காக, காளீஸ்வரி ரீஃபைனரி நிறுவனத்தின் சார்பில் 350 அரிசி மூட்டைகளுடன், உணவுப் பொருட்களையும் ஏ.சி. சகாதேவனிடம் கொடுக்கப்பட்டது. மேலும், இவரது கஸ்டடியில் வரும் சிட்டிலப்பாக்கம், பீர்க்கன்காரனை பகுதிகளின் இன்ஸ்பெக்டர்கள் மூலமாகவும் 1,800 அரிசி மூட்டைகளை வாங்கியிருக்கிறார்.

ஆனால், அந்தப் பகுதி மக்களுக்கு அவர் எதையும் வழங்கவில்லை. மாற்றாக, தனது சொந்த ஊரான உத்திரமேரூருக்குக் கொண்டுசென்று, ஏதோ சொந்த செல வில் உதவுவதுபோல வாரி வழங்கிவரு கிறார். இதன் பின்னணியை விசா ரித்தபோது, ""இன் னும் இரண்டு ஆண்டுகளில் ஏ.சி. சகாதேவனின் சர்வீஸ் முடியப்போகிறது. அதற்கு முன்பாகவே வி.ஆர்.எஸ். வாங்கிவிட்டு, உத்திரமேரூர் பகுதியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சீட் வாங்குவதுதான் சகாதேவனின் விருப்பம். இதற்காகவே ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களும், அமைச்சர்களும் மனம்குளிர நடந்துகொள்கிறார்'' என்கிறார்கள்.

- பரமேஷ்

கொரோனாவோடு கைகோர்த்த குடிநீர்ப் பஞ்சம்!

ரடங்கைப் போலவே, மார்ச் மாதத்தில் தண்ணீர்ப் பஞ்சமும் தமிழகத்தை வாட்டியெடுக்கத் தொடங்கியது. கொரோனா அச்சத்தால் வீடுகளுக்குள் முடங்கியிருக்கும் மக்க ளுக்கு, உணவும் தண்ணீரும் ஓரளவுக்குக் கிடைப்பதே பெரும்பாடாக இருந்தது.

ss

கிராமப்புறங்களில் வாரத்திற்கு இரண்டு நாள் மட்டுமே குடிதண்ணீர் கிடைக்கிறது. ஏனெனில், நகர்ப்புறங்களின் நிலையைத் தனியாக விவரிக்கத் தேவையில்லை. கடந்த காலங்களில் கோடை வருவதற்கு முன்பே, சிறப்பு ஏற்பாடுகள் மூலம், உள்ளாட்சித் துறைக்கு நிதி ஒதுக்கி, குடிநீர்ப் பிரச்சனைக்கான தீர்வுகளை அரசு தேடியது. இப்போதோ இந்தப் பிரச்சனையைத் தட்டிக்கழிக்க கொரோனா என்றொரு காரணம் அரசுக்குக் கிடைத்திருக்கிறது.

ஊரடங்கு ஓரளவுக்கு தளர்ந்த போதிலும், இன்றியமையாத தேவையான தண்ணீர் கேட்டு இன்றும் மக்கள் திணறுகிறார்கள். இதில் திருவண்ணாமலை மாவட்டத்தின் நிலையோ படுமோசம். இதுதொடர்பாக, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமிக்கு கடிதம் எழுதி இருக்கிறார் திமுக தெற்கு மா.செ.வும், எம்.எல்.ஏ.வுமான எ.வ.வேலு.

அதில், “ஒவ்வொரு ஆண்டும் பருவமழை பொய்த்துப் போவதால், திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர்ப் பஞ்சம் தலை விரித்தாடுகிறது. முழுக்க முழுக்க விவசாயத்தை நம்பியிருக்கும் சூழலில், மக்கள் அவதிக்குள்ளாகி றார்கள். 144 தடை உத்தரவு இருப்பதால், தண்ணீர் கேட்டு மக்களால் போராடக்கூட முடியவில்லை. இதைக் கருத்தில் கொண்டு உள்ளாட்சி நிர்வாகத்துக்கு சிறப்பு நிதியை ஒதுக்கி, பிரச்சனைக்குத் தீர்வுகாண வேண்டுகிறேன்’’ என தெரிவித்துள்ளார்.

கொரோனாவோடு, குடிநீர்ப் பஞ்சமும் கைகோர்த்திருக்கும் நிலையில், அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

- து.ராஜா

கண்டுகொள்ளாத ஒ.செ.! விரக்தியில் ர.ர.க்கள்!

ss

கொரோனா நிவாரணப் பணிகளில் தி.மு.க. காட்டும் வேகம், அ.தி.மு.க.வினரை மலைக்க வைத்திருக்கிறது. தஞ்சை மாவட்டத்தைப் பொறுத்தவரை தி.மு.க. பொறுப் பாளர்கள் ஒன்றுசேர்ந்து நிவாரண உதவிகளை சிறப்பாக செய்கின்றனர்.

இதில் கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் ஆகிய தொகுதி களைக் கையில் வைத்திருப்பது தி.மு.க.வின் பலம். பாபநாசம் மட்டுமே தங்கள் கைவசம் இருப்பதால், அ.தி.மு.க.வினரால் கவுன்டர் கொடுக்க முடியவில்லை. பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏ.வும், தஞ்சை வடக்கு மா.செ.வுமான அமைச்சர் துரைக்கண்ணுவோ, சொந்தத் தொகுதி செல்வாக்கைத் தக்கவைப்பதிலேயே மும்முரம் காட்டுகிறார்.

இதை ரசிக்காத கட்சிப் பொறுப்பாளர் கள் அமைச்சரிடம் முறையிட்டுள்ளனர். இதன்பிறகே, குடிமராமத்துப் பணிகள் மற்றும் பொதுப்பணித்துறைக்காக ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் தலா ரூ.3 கோடிவரை ஒதுக்கி, அதில் 10 சதவீதம் கமிஷனை ஒ.செ.க் களுக்கு வாங்கிக்கொடுத்து நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் கூறிவிட்டாராம்.

இந்நிலையில், தனக்குக் கிடைத்த தொகையில் இருந்து, ஊராட்சிச் செயலாளருக்கு ரூ.2 ஆயிரமும், கிளைச்செயலாளருக்கும், ஒன்றியப் பொறுப்பாளருக்கும் தலா ஆயிரம் ரூபாயும், பேரூர் வார்டு செயலாளருக்கு ரூ.500 மற்றும் பேரூராட்சி செயலாளருக்கு ரூ.5 ஆயிரமும் ஒதுக்கியிருக்கிறார் கும்பகோணம் அ.தி.மு.க. ஒ.செ. அறிவழகன்.

""நெருக்கடியான நேரத்தில் உங்களுக்குக் கணிசமாக கிடைத்த தொகையில் கிள்ளிக் கொடுக்கிறீர்களே'' என்று அ.தி.மு.க. நிர்வாகிகள் ஏமாற்றத்தில் கேட்டுள்ளனர். ஒ.செ. அறிவழகனோ, ""என் கைக்காசைப் போட்டு செலவு பண்றேனப்பா. வேணும்னா வச்சிக்கோ. வேண்டாமுன்னா திருப்பிக் கொடுத்திரு'' என்று சொல்லிவிட்டாராம். விரக்தி யுடன் வீடு திரும்பினார்களாம் ர.ர.க்கள்.

- க.செல்வகுமார்

nkn200520
இதையும் படியுங்கள்
Subscribe