கொரோனா வைரஸ் பரவலை எதிர்த்து உலக நாடுகள் போர் புரிந்து கொண்டிருக்கின்றன. ஆயுதமில்லாத இந்தப் போரில் மருத்துவர்களும், செவிலியர்களும் உயிரைப் பணயம் வைத்து தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு இணையாக இந்த நெருக்கடியான காலகட்டத்தில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களின் அர்ப்பணிப்பும் கவனம் பெற்றுள்ளது. பல இடங்களில் தூய்மைப் பணியாளர்களைக் கவுரவப்படுத்துகிறார்கள். அவர்களின் கால்களைக் கழுவி, நன்றி தெரிவிக்கும் செய்திகளைப் பார்க்க முடிகிறது. இந்த நிலையில்தான், தூய்மைப் பணியாளர்கள் ஊதிய உயர்வுகேட்டு ஆர்பாட்டத்தில் இறங்கியுள்ளனர்.

dd

“""தினமும் வெறும் ரூ.300 கூலிக்காக தூய்மைப் பணியாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளோம். ஆனால், நிரந்தரப் பணியாளர்களுக்கு இணையாக எங்களுக்கு வேலை வழங்குகிறார்கள். எனவே, தினசரி கூலியை ரூ.600ஆக உயர்த்தித் தரவேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்துவருகிறோம். அரசு செவிசாய்க்கவில்லை'' என்கிறார்கள் தூய்மைப் பணியாளர்கள்.

எனவே, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, தமிழ்நாடு முழுவதும் தூய்மைப் பணியாளர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தென்காசி மாவட்டத்தின் சங்கரன்கோவில், கடையநல்லூர், குற்றாலம் உள்ளிட்ட 18 பகுதிகளைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள், துப்புரவு வார்டு மற்றும் நகராட்சி பகுதிகளில் ஆர்பாட்டம் நடத்தினர். இதில் கலந்துகொண்ட தென்காசி தூய்மைப் பணியாளர் சங்கத் தலைவர் நாராயணன், சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் தூய்மைப் பணியாளர்களுடன் சேர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

Advertisment

மலர்தூவி மரியாதை செய்வதோ, காலைக் கழுவுவதோ அல்ல. தூய்மைப் பணியாளர்களின் நியாயமான உரிமைக் குரலுக்கு வலுசேர்ப்பதே உண்மையான நன்றியாகும்.

- பரமசிவன்

வனவர்களைத் துரிதமாக காப்பாற்றிய முதியவர்!

Advertisment

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ளது வல்லாக்குண்டாபுரம் ஊராட்சி. இதை ஒட்டிய மலையடிவாரப் பகுதியில், பி.ஏ.பி. தண்ணீரை திருமூர்த்தி அணைக்குக் கொண்டுசெல்லும் காண்டூர் கால்வாய் இருக்கிறது. இந்தக் கால்வாயில் காட்டு யானை ஒன்று தவறி விழுந்ததாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.

ss

இதையடுத்து, உடனடியாக அங்குவிரைந்த வனத்துறையினர், கட்டயன்செட்டு மூலப்படி அருகில் தண்ணீரில் தத்தளித்து வந்த யானையை ஜே.சி.பி. மூலம் மீட்க முயன்றனர். இந்த முயற்சியில் எதிர்பாராத விதமாக மூன்று வனத்துறை பணியாளர்கள், கால்வாய் நீரோட்டத்தில் சிக்கிக் கொண்டனர்.

இதைக் கவனித்த 60 வயதான விவசாயி கார்த்திகேயன், கிழக்கே சுரங்கக் கால்வாய் உள்ளதால், விபரீதத்தை உணர்ந்து தனது வேட்டியை அவிழ்த்து ஒருமுனையை கால்வாயில் திணறிக் கொண்டிருந்த வனப்பணியாளர் முன்பு வீசினார். அதைப் பிடித்து அவர் மேலேறி வந்தார். பிறகு கீழே கிடந்த மரக்கழி ஒன்றை எடுத்துக்கொண்டு, அந்த வனப்பணியாள ருடன் பைக்கில் அமர்ந்துகொண்ட கார்த்திகேயன், மற்றவர்களை விரட்டிச் சென்றார்.

ஒரு இடத்தில் கரையை நோக்கி வந்த இருவரையும் நோக்கி, மரக்கழியை கார்த்திகேயன் நீட்டியபோது ஒருவரை மட்டுமே மீட்க முடிந்தது. இன்னொருவர் சுரங்கப்பாதை வழியாக அடித்துச் செல்லப்பட்டார். அவரும் யானையும் 12ந்தேதி சடலமாக மீட்கப்பட்டனர்.

ஆபத்தில் சிக்கியிருந்த உயிர்களைக் காக்க, அறுபது வயதானாலும் துணிச்சலாக களமிறங்கி, இரண்டு பேரை மீட்ட கார்த்திகேயனை அந்தப் பகுதியினர் பாராட்டி வருகின்றனர்.

- அருள்குமார்

இளைஞர்களை ஏமாற்றும் அரசுகள்!

தமிழகத்தில் அனைத்துத் துறை அரசுப் பணியாளர்களின் ஓய்வுபெறும் வயதை 58லிருந்து, 59ஆக உயர்த்தி அறிவித் தது தமிழக அரசு. இந்த உத்தரவு உடனடி யாக அமலுக்கு வருவதாகவும் அரசு குறிப் பிட்டது. தமிழக அரசின் இந்த அறிவிப்பிற்கு எதிராக, அரசு ஊழியர் சங்கங்கள், அரசியல் அமைப்புகள் என பலதரப்பில் இருந்தும் கண்டனக் குரல்கள் ஒலிக்கின்றன. ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு உடனடியாக பணப்பலன்களை வழங்க, போதுமான நிதி ஆதாரம் இல்லாததும், நிர்வாகத்திறமை இல்லாததுமே அரசின் இந்த முடிவுக்குக் காரணம் என விமர்சனங்கள் முன்வைக்கப் படுகின்றன.

dd

இந்நிலையில், அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது வரம்பை நீட்டித்திருப் பதைக் கண்டித்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், தமிழகம் முழுவதும் வயிற்றில் ஈரத்துணியைக் கட்டிக்கொண்டு நூதனமுறையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட னர். சேலத்தில் சாமிநாதபுரம், சின்னேரி வயல்காடு, ஆலமரத்துகாடு, மெய்யனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டத்தில் கலந்து கொண்டு, எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதுதொடர்பாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ரெஜீஸ்குமாரிடம் பேசியபோது, “ஏற்கனவே தமிழக அரசின் 56வது அரசாணை, இருக்கிற அரசு ஊழியர் இடங்களை காலிசெய்து விட்டு, அதை அவுட்சோர்ஸிங் செய்யச் சொல்கிறது. இப்படிச் செய்வதால், ஒப்பந்தப் பணியாளர்கள், தங்களை நிரந்தரமாக்கச் சொல்லி போராட முடியாது.

மத்திய அரசுக்கும் நிரந்தரப் பணி யாளர்களை வைத்துக் கொள்வதில் விருப்ப மில்லை. வேலையில்லாத் திண்டாட்டத்தால் பட்டதாரி இளைஞர்கள் தவித்துக் கொண்டி ருக்கும் சூழலில், அரசு இப்படியொரு முயற்சி எடுத்திருப்பது வேதனை யளிக்கிறது. கொரோனா காலத்தை மக்கள் விரோதப் போக்கிற்காக, மத்திய, மாநில அரசுகள் பயன் படுத்துவது அப்பட்டமாக தெரிகிறது’"" என்றார் ஆவேசமான குரலில்.

-இளையராஜா