சிக்னல் பேரிடர் நேரத்தில் இது தேவைதானா?

signal

பேரிடர் நேரத்தில் இது தேவைதானா?

கொரோனா வைரஸ் பெருந்தொற்று உலகையே ஆட்டிப் படைக்கிறது. படிப்பை விடவும் உயிர் முக்கியம் என்பதால், கல்வி நிலையங்கள் மூடப்பட்டு, பொதுத் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. ஆனால், நாடு முழுவதும் நீட் தேர்வை நடத்தியே தீருவேன் என்று அடம்பிடிக்கிறது மத்திய அரசு.

ss

வழக்கம்போல மே முதல் வாரத்தில் நடக்கவிருந்த நீட் தேர்வு, ஊரடங்கால் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஜூலை 26ந்தேதி தேர்வு நடக்குமென்று அறிவித்திருப்பது பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ""வயிற்றுப் பிழைப்புக்கே மக்கள் அல்லாடும் நிலையில், பிள்ளைகளை தேர்வுக்கு எப்படி ஆயத்தப்படுத்துவார்கள்'' என்று கல்வியாளர்கள் கொந்தளிக்கிறார்கள்.

ஊரடங்கால் குடும்ப வன்முறையின் களமாக வீடுகள் மாறிவரும் சூழலில், பிள்ளை கள் முழுமனதாக தேர்வுக்கு தயாராவது சிக்கல் தான் என்கிறார்கள் மனநல மருத்துவர்கள். இதுதொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்கத் தலைவர் பி.கே. இளமாறன், ""அரசுப்பள்ளி மாணவர்கள் படிப்பதற்கு போது வசதி யில்லை. கிராமப்புற மாணவர்களுக்கு இண

பேரிடர் நேரத்தில் இது தேவைதானா?

கொரோனா வைரஸ் பெருந்தொற்று உலகையே ஆட்டிப் படைக்கிறது. படிப்பை விடவும் உயிர் முக்கியம் என்பதால், கல்வி நிலையங்கள் மூடப்பட்டு, பொதுத் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. ஆனால், நாடு முழுவதும் நீட் தேர்வை நடத்தியே தீருவேன் என்று அடம்பிடிக்கிறது மத்திய அரசு.

ss

வழக்கம்போல மே முதல் வாரத்தில் நடக்கவிருந்த நீட் தேர்வு, ஊரடங்கால் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஜூலை 26ந்தேதி தேர்வு நடக்குமென்று அறிவித்திருப்பது பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ""வயிற்றுப் பிழைப்புக்கே மக்கள் அல்லாடும் நிலையில், பிள்ளைகளை தேர்வுக்கு எப்படி ஆயத்தப்படுத்துவார்கள்'' என்று கல்வியாளர்கள் கொந்தளிக்கிறார்கள்.

ஊரடங்கால் குடும்ப வன்முறையின் களமாக வீடுகள் மாறிவரும் சூழலில், பிள்ளை கள் முழுமனதாக தேர்வுக்கு தயாராவது சிக்கல் தான் என்கிறார்கள் மனநல மருத்துவர்கள். இதுதொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்கத் தலைவர் பி.கே. இளமாறன், ""அரசுப்பள்ளி மாணவர்கள் படிப்பதற்கு போது வசதி யில்லை. கிராமப்புற மாணவர்களுக்கு இணைய வசதியும் இல்லாத தால், சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். தேர்வு நடந்தால் குழந்தை களின் எதிர்காலம் பாதிக்குமோ என்ற அச்சத்திலும் பெற்றோரும் உள்ளார்கள். எனவே, பேரிடர் காலத்தை நினைவிற்கொண்டு, நீட் தேர்வினை ரத்துசெய்து, பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவச் சேர்க்கை நடத்த ஆவன செய்ய வேண்டும். இல்லையேல், மாணவர், பெற்றோர் நலன்கருதி நீட் தேர்வினை மறுபரிசீலனை செய்யுமாறு மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும்''’ என் கிறார் நம்மிடம்.

நாடு முழுவதும் 14 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வெழுத விண்ணப்பித்துள்ளனர். அவர் களில், தமிழ்நாட்டில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவுசெய்துள்ளார்கள். இதில் 20,000 பேர் அரசுப்பள்ளி மாண வர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- அருண்பாண்டியன்

எளிமையாக நடந்த அமைச்சர் வீட்டுத் திருமணம்!

ss

கூட்டம் கூடினால் கொரோனா பரவும் அச்சுறுத்தல் இருப்பதால், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தள்ளிவைக்கப் படுகின்றன. தடபுடலாக நிச்சயிக்கப்பட்டி ருந்த திருமணங்கள் கூட, மிகச் சாதாரண மாக வீட்டுக்குள் நடத்தி முடிக்கப்படுகின்றன.

சாமான்ய மக்கள் மட்டுமின்றி, அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் இதுதான் நிலை என்பதை உணர்த்தி இருக்கிறது அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும், தமிழ் நாடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நலத்துறை அமைச்சருமான வளர்மதியின் இளையமகன் திருமணம்.

அமைச்சர் வளர்மதியின் மூத்தமகன் திருமணம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்தது. பிரம்மாண்டத்தால் திருச்சியையே அதகளப்படுத்தி இருந்தார் அமைச்சர். அதுபோலவே இரண்டாவது மகனுக்கும் திருமணம் நடத்தவேண்டும் என்று திட்டமிட்டிருந்தார். அதன்படி, அமைச்சரின் இளையமகன் ஹரிராம், மண மகள் சூரியபிரபா ஆகியோரின் திருமணம் மே 04, 05 தேதிகளில் நடைபெறுவதாக இருந் தது. ஊரடங்கு நீடிப்பதால், வேறு வழியின்றி மே 06ந்தேதி காலையில், திருச்சி குணசீலம் ஸ்ரீபிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோவிலில் வைத்து திருமணத்தை சாதாரணமாக நடத்தி முடித்தார். பூட்டிய கோவிலின் வாசலில் நின்றபடியே திருமணம் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குடும்ப உறவுகள் மட்டுமே கலந்துகொண்டனர். அவர்களுக்கு முகக்கவசமும், கைகளைக் கழுவ சானிடைச ரும் கொடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் திருச்சி அ.தி.மு.க. மா.செ. குமார், அமைச்சர் வெல்ல மண்டி நடராஜன், திருச்சி மாவட்ட ஆட்சி யர் சிவராசு, ஆவின் சேர்மன் கார்த்திகேயன் ஆகியோரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

- ஜெ.டி.ஆர்.

அலட்சியத்தால் பச்சை மண்டலத்தை இழந்த கரூர்!

மருத்துவர்களின் விடா முயற்சியும், மாவட்ட நிர்வாகத்தின் தொடர் முயற்சியும் கரூரை கொரோனா இல்லாத மாவட்டமாக மாற்றியது. ஆனால், அலட்சியமாக இருந்த ஆம்புலன்ஸ் ஊழியரால், இந்த மொத்த முயற்சிகளும் பாழாகிவிட்டன. சென்னையில் 108 ஆம்புலன்ஸில் ஊழியராக இருந்த ஒருவர், பெங்களூருவில் பயிற்சிக்கு சென்று திரும்பினார். அப்போது அவருக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது, நோய்த்தொற்று இல்லை என்று வந்தது. பிறகு, தனது சொந்தவூரான கரூரில் இருக்கும் சின்ன வரப்பாளையத்திற்கு மாற்றல் கேட்டு வந்துள்ளார்.

ss

ஏற்கனவே, கொரோனா பரிசோதனை செய்யப் பட்டவர் என்பதால், அதிகாரிகள் அவரை 24 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், அவரோ வெள்ளியணை 108 ஆம்புலன்ஸில் வேலைக்குச் சென்றிருக்கிறார். இடையிடையே நண்பர்களோடு ஊர்சுற்றி நாட்களைக் கழித்திருக்கிறார்.

இந்த நிலையில்தான், அவருக்கு காய்ச்சல், மூச்சுத் திணறல், இருமல் போன்ற பிரச்சனைகள் வந்துள்ளன. இதையடுத்து அவரைப் பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதியானது. இதுதொடர்பாக கடம்பங்குறிச்சி வி.ஏ.ஓ. கொடுத்த புகாரில், ஆம்புலன்ஸ் ஊழியர் மீதும், அவருக்கு வெள்ளியணையில் பணி வழங்கிய திட்ட மேலாளர் அறிவுக்கரசு மீதும் நோய்த் தொற்று தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக் குப்பதிவு செய்துள்ளனர். அந்த ஊழியருடன் தொடர் பில் இருந்த 130 பேர் இப்போது தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல், கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து கரூர் வந்த 42 பேரில், ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், மற்றவர்களின் பரிசோதனை முடிவுகளுக்காகவும் மாவட்ட நிர்வாகம் விரக்தியுடன் காத்திருக்கிறது. விரைவில் பச்சை மண்டலமாக கரூர் மாவட்டம் மாறும் என்ற மக்களின் எண்ணத்தைப் பொய்யாகி இருந்தாலும், விட்டுக்கொடுக்காமல் முயற்சிப்போம் என்று மாவட்ட நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.

- தாவீதுராஜா

nkn090520
இதையும் படியுங்கள்
Subscribe