அமைச்சருக்கு மட்டும் கொரோனா பரவாதா?
திருச்சி மாவட்டம் கொரோனா பாதிப்பில், சிவப்பு மண்டலத்தில் இருந்து, ஆரஞ்சு மண்டலமாக மாறி இருக்கிறது. இருப்பினும் ஊரடங்கு கெடுபிடிகள் தொடர்வதால், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியில் உள்ள காவிரிக் கரையில் மறைந்தவர்களுக்கு திதி கொடுக்க வழக்கம்போல் கூடும் கூட்டத்தை போலீசார் விரட்டியடித்து வருகிறார்கள்.
இந்த சூழலில், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சமீபத்தில் மறைந்த தனது மனைவி கண்ணாத்தாளுக்கு திதி கொடுப்பதற்காக, திடீரென மே 03ந்தேதி காலை அம்மா மண்டபம் வந்திருந்தார். அவருடன் ஆறு கார்களில் அமைச்சருக்கு வேண்டப்பட்டவர்களும் அதிரடியாக வந்திறங்கியதைப் பார்த்து, அப்பகுதி மக்கள் அதிர்ச்சியும், ஆச்சர்யமும் அடைந்தார்கள்.
நேராக, அம்மா மண்டபம் படித்துறை நோக்கி படையெடுத்த அமைச்சர் வகையறாக்கள், சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக அஸ்தி கரைப்பு, காரியம் போன்ற சம்பிர தாயத்தில் ஈடுபட்டனர். இத்தனை நாட்களாக அந்தப் பகுதியில் திதி கொடுக்க வந்தவர்களை விரட்டியடித்து வந்த காவல்துறையினர், அமைச்சருக்கு பாது காப்பு கொடுப்பதில் மும்முரமாக இருந்தனர். இதைப் பார்த்த பொதுமக்கள், அமைச்சருக்கு மட்டும் கொரோனா பரவாதா? என்று தங்களுக்குள் ளாகவே பேசிக் கொண்டார்கள். தனித்திருப்போம் என்கிறார் முதல்வர். அதை அமைச்சரே மீறலாமா எனக் கேட்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
- ஜெ.டி.ஆர்.
காவல்துறை அகராதியில் கெட்ட வார்த்தையான கொரோனா!
இந்திய தண்டனைச் சட்டம் 294-பி பிரிவின் கீழ் காவல் நிலையங்களில் பதிவாகும் முதல் தகவல் அறிக்கையில், குற்றம் சாட்டப்படும் நபர், பொது இடத்தில் எந்த மாதிரியான கெட்ட வார்த்தைகளைப் பேசி னார் என்பதை ‘அப்படியே’ குறிப்பிடுவது வழக்கம்.
அந்த வார்த்தைகளெல்லாம், பெரும்பாலும் அச்சிலேற்ற முடியாத ரகமாகவே இருக்கும். தற்போது, "கொரோனா வந்து சாவாய்.." என்று திட்டியதாக, கெட்ட வார்த்தை பட்டிய லில், புதிதாக ஒன்றைச் சேர்த்துள்ளனர். சாத்தூர் வட்டம் - இருக்கண்குடி காவல்நிலையத்தில்தான் அப்படியொரு கெட்ட வார்த்தை பேசியதாக வழக்கு பதிவாகியிருக்கிறது.
ஆளும் கட்சியைச் சேர்ந்த விருதுநகர் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஒருவரின் கணவரும், கிராம ஊராட்சி தலைவர் ஒருவரது கணவரும், தேர்தல் முன்விரோதம் காரணமாக, உள் நோக்கத்துடன் ஆள் பலத்துடன் மோதிக் கொண்டார்கள். அந்த விவகாரத்தை, குழா யடி சண்டையாகச் சித்தரித்து, இரு தரப் பினர் மீதும் வழக்கு பதிவு செய்தபோது தான், "கொரோனா'’என்ற புதிய கெட்ட வார்த்தை காவல்துறைக்கு பயன்பட்டிருக்கிறது. இதில், தலா 8 பேர் என இரு தரப்பினரும் கைதான நிலையில், சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கொடிய தொற்று நோயாக இருக்கும் கொரோனா, என்றிலிருந்து கெட்ட வார்த்தையாக புரமோஷன் வாங்கியது. எப்போது அது காவல்துறையினர் அகராதியில் இடம் பெற்றது என்பதுதான் புரியாத புதிராகவே இருக்கிறது.
- ராம்கி
தி.மு.க. ஒ.செ.வைச் சிக்கவைத்த ஆடியோ!
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் தி.மு.க. ஒ.செ.வாக இருப்பவர் விசு அண்ணாதுரை. இவர் தி.மு.க. மா.செ. பூண்டி கலைவாணனுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால், சொந்தக் கட்சியினரையே ஒருமையில்தான் பேசுவார். அப்படி சமீபத்தில் இவர் காட்டிய அதிரடி, ஆடியோவாக வைரலாகி தலைமையின் ஒழுங்கு நடவடிக்கைக்கும் காரணமாகி இருக்கிறது.
நீடாமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகத்திடம் செல்போனில் பேசும் அந்த ஆடியோவில், நாக்கூசும் வார்த்தைகளில் காட்டமாகப் பேசுகிறார் விசு அண்ணாதுரை. இந்த ஆடியோவை ஆதாரமாக வைத்து, ஆறுமுகம் புகார் கொடுத்திருக்கிறார்.
இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகத்திடம் பேசினோம். ""அரசு கொடுக்கும் கொரோனா நிவாரண பொருட்களை, அளவுக் கதிமாக தனக்கு வழங்கவேண்டு மென்று விசு அண்ணாதுரை கேட்டார். ஆனால், மக்கள் பிரதிநிதியாக இல்லாத ஒருவருக்கு அப்படியெல்லாம் தரமுடியாது என்று மறுத்துவிட்டேன். இதனால், என் மீதுள்ள ஆத்திரத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு குடிபோதையில் சென்று ரகளை செய்துவிட்டார். அங்கிருந்த பெண்களிடம் தகாத வார்த்தையில் பேசிவிட்டு, என்னையும் செல்போனின் வசைபாடினார். ஏற்கனவே இதுபோல் மூன்று முறை செய்திருக்கிறார். பொறுக்க முடி யாமல் புகார் தந்திருக்கிறேன்'' என்றார் கலக்கத்துடன்.
விசு அண்ணாதுரையை போனில் அழைத்து இதுதொடர்பாக விளக்கம் கேட்டபோது, ""ஆரம்பத்தில் இருவரும் பேசுவதை விட்டுவிட்டு, கடைசியில் நான் திட்டியதை மட்டும் புகார் சொல்கிறார். நீடாமங்கலம் அ.தி.மு.க. ஒ.செ. ஆதிஜனகரின் மைத்துனர்தான் இந்த ஆறுமுகம். அவர் எப்போதும் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாகவே செயல்படுகிறார். தி.மு.க.வினர் பொறுப்பிலிருக்கும் பகுதிகளில் முறையாக பொருட்கள் விநியோகிக்கவில்லை என்ற புகார் வந்தது. அதைக் கேட்டபோது அவர்தான் முதலில் தவறான வார்த்தையை விட்டார். உள்ளாட்சித் தேர்தல் சமயத்திலும் மனசாட்சி இல்லாமல் அதிமுகவுக்கு சாதகமாக செயல்பட்டார். அதை மனதில் வைத்தே இப்போது புகார் கொடுத்திருக்கிறார்'' என்றார்.
தி.மு.க. தலை மை வரை இந்த விவகாரம் சென்ற நிலையில், விசு அண்ணாதுரை மீது ஒழுங்கு நட வடிக்கை எடுத்துள் ளார் தி.மு.க. தலைவர்.
-க.செல்வகுமார்