தி.மு.க. உட்கட்சிப் பூசல்!

திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் அனக்காவூர் அடுத்த வெங் கோடு கிராமத்தைச் சேர்ந்தவர் தி.மு.க. முன்னாள் ஒன்றியக்குழு கவுன்சிலர் செல்வகுமார். தீவிர தி.மு.க. அபிமானி யான இவர், சமூக வலைதளங்களில் ரொம்பவே ஆக்டிவ்.

ssசமீப நாட்களாக திருவண்ணாமலை தி.மு.க.வின் உட்கட்சி பிரச்சனைகள் குறித்து தொடர்ச்சியாக பதிவுசெய்து வந்துள்ளார். இந்நிலையில் செய்யாரில் உள்ள மற்றொரு தி.மு.க. பிரமுகரான கலைஞர் பாஸ்கர் என்பவர் தந்துள்ள கொலைமிரட்டல் புகாரின் கீழ் செல்வகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து செல்வகுமாரின் மனைவி பத்மா, சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். தமிழக, முதல்வர், கலெக்டருக்கு அழுதபடி கோரிக்கை விடுத்துள்ள அந்த வீடியோவில், "உட்கட்சி தகராறில் பொய்யான புகாரின்கீழ் எனது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை காப்பாற்ற வேண்டும் என வேண்டு கோள் விடுத்துள்ளதோடு, இதற்கெல் லாம் தி.மு.க.வின் முன்னாள் அமைச்சரும், தெற்கு மா.செவு மான எ.வ.வேலு தான் காரணம்' என்றுகூறி பர பரப்பை ஏற் படுத்தியுள்ளார். இதுதொடர்பாக. தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி யதோடு, வீடியோ மூலமாகவும் பத்மா கோரிக் கை வைத் துள்ளார்.

Advertisment

இதுபற்றி அந்த பெண்மணி யால் குற்றம்சாட்டப்படும் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு எம்.எல்.ஏவிடம் கேட்டபோது, ""கட்சிக்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக கேள்விப்பட்ட பிறகே, தகவல் தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்த பாஸ்கரிடம் கேட்டேன். நான்தான் புகார் தந்தேன் எனச்சொல்லி என்ன நடந்தது என்பதை விளக்கமாகச் சொன்னார். அதன்பிறகே, இந்த விவகாரம் பற்றி எனக்குத் தெரியும். இதில் என் பெயரை இழுத்துவிட்டால், பரபரப்பு கிடைக்கும் என்பதற்காக அந்தப் பெண்மணியை பின்னால் இருந்து யாரோ இயக்குகிறார்கள்'' என முடித்துக்கொண்டார்.

- து.ராஜா

இப்படியொரு ரிஸ்க் தேவைதானா?

Advertisment

நாமக்கல் மாவட்டம், சோழசிராமணி, கதவணை சோதனைச் சாவடியில் மாஸ்க் அணிந்திருக்கும் மாணவர்கள், கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டிருப்பதாக சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

ss

தமிழகத்தில் கொரோனா பரவலானது சமூகத் தொற்றை நோக்கி நகர்ந்து வருகிறது. மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவலர்கள், பத்திரிகையாளர்கள் போன்றோர் பாதிப்புக்கு ஆளாகிவரும்போது, இந்த ரிஸ்க் தேவைதானா? என்ற கேள்வி பரவலாக எழுந்தது. இதுகுறித்து நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அய்யண்ணனிடம் கேட்டோம். ""ஆசிரியர்கள் 100 பேர் மட்டும்தான் கொரோனா பரவல் தடுப்பு பணிக்காகச் சென்றிருக்கிறார்கள். இதில் ssஎப்படி மாணவர்களை எங்களால் ஈடுபடுத்த முடியும்?''’என்றார்.

“அந்தப் புகைப்படத்தில், "நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையம் காவல்துறை'’என்ற பேரிகார்டு தெரிகிறது. ""கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டிருப்பது மாணவர்கள் போலவே தெரிகிறது. ஆனால், அம் மாணவர்கள் சாரணர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்...''’ என்றார், ஆசிரியர் ஒருவர். மேலும் அவர், “பள்ளிப் பரு வத்தில் சாரணர் இயக்கத்தில் சேர்ந்து நற்பண்புகளையும், நம்பிக்கையையும், நாட்டுப் பற்றையும் மாணவர்களால் வளர்த்துக்கொள்ள முடியும். ராணுவப் பயிற்சியையும் அளிக்கக்கூடிய தன்னார்வ அமைப்பு இது.

தர்மபுரி மாவட்டத்தில், கொரோனா தடுப்புப்பணியில் சாரணர் ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சாரணர், சாரணி யர் இயக்கம் சார்பில், மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கை கழுவுதல், சமூக இடை வெளியைக் கடைப்பிடித்தல் போன்றவை தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்துகிறார்கள்.

இதெல்லாம் சரிதான்! கொரோனா நோய்த்தொற்று போன்ற அபாயகரமான சூழ்நிலையில், மாணவர்களை இச்சேவையில் ஈடுபடுத்தத்தான் வேண்டுமா? என்ற கேள்வி நியாயமானதுதான்'' என்றார்.

தமிழக பள்ளிக்கல்வித்துறை, கொரோ னா தடுப்பு சேவையில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் விஷயத்தில் கவனத்துடன் செயல்பட்டு, விமர்சனங்கள் எழாதவாறு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

- ராம்கி

கறுப்புத் துணியுடன் கவன ஈர்ப்புப் போராட்டம்!

ஊரடங்கு காலத்தில், அன்றாட வாழ்க்கையை நடத்துவதே மக்களுக்கு மிகப்பெரிய போராட்டமாக இருக்கிறது. அவர்களின் கவலையைத் தீர்க்குமளவுக்கு அரசுத் திட்டங்கள் போதுமானதாக இல்லை. அல்லது சரியாக சென்று சேரவில்லை என்ற

ff

குற்றச்சாட்டு எழுகிறது. இந்த நிலையில்தான், ஊரடங்கு நெருக்கடியை வெல்ல உடனடியாக ரூ.5 லட்சம் கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கவேண்டும். நிரம்பி வழியும் இந்திய உணவுக் கிடங்கிலிருந்து, உணவு தானியங்களை மூன்று மாதங் களுக்கு இலவசமாக வழங்கவேண்டும். ஒவ்வொரு குடும் பத்திற்கும் மாதம் ரூ.6 ஆயிரம் வீதம், மூன்று மாதங் களுக்கு வழங்கவேண்டும். மருத்துவர்கள், செவிலியர்கள், நல்வாழ்வுப் பணியாளர்களுக்கு பாதுகாப்புக் கருவிகளைத் தரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முற்போக்குத் தளத்தில் இயங்கும் அமைப்புகளின் கூட்டமைப்பான கவன ஈர்ப்பு இயக்கம் வலியுறுத்தி வருகிறது.

இந்தக் கோரிக்கைகளை முன்னிறுத்தி, ஏப்ரல் 26ந்தேதி மாலை 5.30 மணிக்கு, மாநிலம் தழுவிய அளவில், கவன ஈர்ப்பு இயக்கத்தினரும், பொதுமக்களும் அவரவர் வீடுகளில் கறுப்புத் துணியுடன் போராட்டம் நடத்தியுள்ளனர். திருச்சி உய்யக்கொண்டான் திருமலை சாந்தசீலா நகரில் நடைபெற்ற கவன ஈர்ப்புப் போராட் டத்தில் கோரிக்கைகளை விளக்கும் பதாகைகளை ஏந்தி ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதேபோல், அரவனூரில் மக்கள் அதிகாரம் அமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த தோழர் ஞா.ராஜா தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் மா.ப.சின்னதுரை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

தமிழகம் தழுவிய இந்தப் போராட்டத்தில், அனைவரும் தனிமனித இடைவெளியைக் கடைபிடித்து, முகக்கவசம் அணிந்து பாதுகாப்புடன் கலந்துகொண்டது குறிப்பிடத் தக்கது.

ஜெ.டி.ஆர்.