வாட்ஸ்அப் வழியே கூக்குரல்! உதவிய உதயநிதி!

ஊரடங்கு நெருக்கடியால் சாதாரண மக்களே பல்வேறு இன்னல் களுக்கு ஆளாகும் நிலையில், மாற்றுத்திறனாளிகள் படும் துயரத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப் பட்ட போதும், மாற்றுத் திறனாளி ஒருவர் ஏமாற்றப்பட்ட கொடுமை அரங்கேறியது. இந்நிலையில்தான், திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியத்தில் இருக்கும் அய்யம்பாளை யத்தைச் சேர்ந்த பார்வைத் திறனற்ற மாற்றுத் திறனாளிகள் சிலர், ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால், தினந்தோறும் சாப்பாட்டுக்கே மிகவும் சிரமமாக இருக்கிறது. ஏதாவது உதவி செய்யுங்கள் என்று தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாட்ஸ்அப் வழியாக வேண்டுகோள் விடுத்தனர்.

s

இதைக்கேட்ட உதயநிதி ஸ்டாலின், உடனடியாக தி.மு.க. மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமியையும், திண்டுக்கல் கிழக்கு மா.செ. ஐ.பி.செந்தில்குமாரையும் தொடர்புகொண்டு, தன்னிடம் வாட்ஸ் அப் மூலமாக உதவிகேட்ட அய்யம் பாளையம் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டார்.

Advertisment

இதைத் தொடர்ந்து, ஐ.பெரிய சாமியும் ஆத்தூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ராமன் மற்றும் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மணலூர் மணிகண்டனையும் தொடர்புகொண்டு, மாற்றுத் திறனாளி களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்களையும், காய்கறி களையும் வாங்கித்தர உத்தரவிட்டார்.

அய்யம்பாளையம் சென்ற சென்ற கட்சிப் பொறுப்பாளர்கள் அங்குள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரண உதவிகளைச் செய்தனர். ஏற்கனவே, சென்னையில் இருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின், மாற்றுத் திறனாளிகளுக்குத் தேவையான உதவிகளைச் செய்து கொடுத்தார். அதுபோலவே, வாட்ஸ்அப் மூலமாக உதவி கேட்டதையும் ஏற்றுக் கொண்டு, வேண்டிய தை செய்து கொடுத்த உதயநிதிக்கு அய்யம்பாளையம் மாற்றுத் திறனாளிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

-சக்தி

Advertisment

பெண் பத்திரிகையாளரை ஒடுக்கும் அரசு!

ss

காஷ்மீரில் ஏற்கனவே மனித உரிமைகள் மீறப்பட்டு வரும் நிலை யில், பத்திரிகை சுதந்திரத்தையும் கேள்விக்குறியாக்கி இருக்கிறது அரசு.

மஸ்ரத் ஜேரா என்ற பெண் பத்திரிகையாளர், உலகின் புகழ்பெற்ற பல்வேறு பத்திரிகைகளில் புகைப்படக் கலைஞராக பணியாற்றியவர். இவர் மீது உபா சட்டத்தின் 13வது பிரிவு மற்றும் 505-வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

முகநூல் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் தேசவிரோத கருத்து களைப் பதிவு செய்தார். இளைஞர் களை தெருவிலிறங்கி போராடு வதற்குத் தூண்டும் வித மாகவும், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகை யிலும் அவரது பதிவுகள் இருக்கின் றன’என்று மஸ்ரத் ஜேரா மீது புகார்களை அடுக்கு கிறது ஸ்ரீநகர் காவல்துறை. ஆனால், இந்தக் குற் றச்சாட்டுகளுக்குக் கார ணமான பதிவை மட்டும் காவல்துறை தெளிவு படுத்தவில்லை.

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டமான, உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தால், யாரை வேண்டுமானாலும் தீவிரவாதி என்று முத்திரை குத்தமுடியும். ஜாமீன் இல்லாமல் சிறையில் அடைத்து வைக்கமுடியும்.

இப்படியொரு கொடிய சட் டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் மஸ்ரத், ""ஜம்மு காஷ்மீரில் நடப் பவற்றை வெளிக்கொண்டு வரும் பத்திரிகையாளர்களின் குரலை ஒடுக்கப் பார்க்கிறது அரசு. என்மீதான வழக்கில் ஒரு இடத்தில்கூட என்னைப் பத்திரி கையாளர் என்று குறிப்பிடவில்லை. மிக முக்கியமாக, நான் சமூக வலைதளங்களில் பதிவிட்ட அனைத்துமே இந்திய மற்றும் சர்வதேச ஊடகங்களில் பதிவான செய்திகள் மட்டுமே''’என்று கூறி யுள்ளார்.

மஸ்ரத்திடம் விசாரணை தொடர்கிறது. அவர்மீதான இந்த நடவடிக்கை பத்திரிகை சுதந் திரத்திற்கு இந்திய அரசு விடுத்திருக்கும் சவாலாகவே பார்க்கப்படுகிறது.

- மதி

கட்டுப்பாடு மட்டும் போதுமா? கவலையில் புளியங்குடி மக்கள்!

தமிழகமெங்கும் எலுமிச்சைப் பழத்தை விநியோகம் செய்வதால் லெமன் சிட்டி எனப் பெயர்பெற்ற புளியங்குடி, இன்றைக்கு தென்காசி மாவட்டத்தின் கொரோனா சிட்டியாக மாறியிருக்கிறது. மாவட்டத்தின் பெரும்பாலான நோயாளிகள் இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களாக இருப்பதால், கெடுபிடிகளால் நகரமே இறுக்கப்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டத்தைக் கட் டுப்படுத்த பல தெருக்கள் தக ரத் தடுப்பு களால் மறைக்கப்பட்டுள்ளன.

ss

""இந்தக் கட்டுப் பாடுகள் எங்களுடைய நன்மைக்காகத்தான்னு புரியுது. ஆனாலும் வேறு சில விஷயங்கள்லயும் நகராட்சி கவனம் செலுத்தி யிருக்கணும்ல. காய்கறி சரிவர கிடைக்கிறதில்ல. மளிகை பொருட்களுக் காக கொடுக்கப்பட்டி ருக்கும் எண்களுக்கு வாட்ஸ்அப் செய்தால் பொருட்கள் வீடுதேடி வருமென்கிறார்கள். ஆனால் ரெண்டு மூன்று நாட்களாகிறது பொருட்கள் வந்துசேர. பல பகுதி களில் பால் கிடைப்பதிலும் சிரமம் இருப்பதால், குழந்தைகளை வெச்சி ருக்கிற வீடுகள்ல நிலைமை திண் டாட்டம்தான். செல்போனில் அழைத்துதான் மருந்துகள் வாங்கவேண்டி இருக்கிறது. சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற வற்றுக்கும் ப்ரிஸ்கிரிப்ஷன் கேட்பதால், வயதானவர்களுக்கு பெரிதும் சிக்கலாக இருக்கிறது''’என்கிறார்கள்.

""தென்காசியின் கொரோனா ஹாட் ஸ்பாட்டாய் மாறிவிட்ட நிலையில், புளியங்குடிக்கு ஊரடங்கு அகற்றப்படுமா என்பது சந்தேகம். அதைக் கருத்தில்கொண்டு ரேஷ னில் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களோடு நிவாரணத் தொகையும் வழங்கவேண்டும். இல்லையெனில் கரோனா நோயின் தாக்கத்தைவிட பசியின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாகிவிடு வார்கள்'' என்கிறார்கள் நம்மிடம்.

-க.சுப்பிரமணியன்