சமுதாய மக்களுக்கு உதவும் சாதி அமைப்புகள்!
தேனி மாவட்டத் தில் முக்குலத்தோர், பட்டியலின மக்கள், கவுண்டர், நாயக்கர் உள்ளிட்ட பலதரப்பட்ட மக்களுடன், முஸ்லிம் மற்றும் கிறித்தவ மக்களும் வசித்து வருகின்றனர். இவர்கள் சார்ந்த அந் தந்த சமுதாய அமைப்புகள், அவ்வப்போது தங்கள் மக்க ளுக்குத் தேவையான உதவிகளைச் செய்துவந்தன. ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு தினசரியைக் கடக்கவே மக்கள் அல்லாடும் இக்கட்டான சூழலிலும், அந்த உதவி தொடர்கிறது.
போடி தர்மத்துப்பட்டியைச் சேர்ந்த மணிக் குமாரிடம் இது பற்றி பேசினோம். ""மாவட்டத்தில் இருக்கும் கம்பம், கூடலூர், சில்ல மரத்துப்பட்டி, புதுப்பட்டி, தர்மத்துப்பட்டி, சுருளிப் பட்டி, போடி, தேனி, பெரியகுளம் உள்ளிட்ட சில பகுதிகளில், எங்களுடைய ஒக்கலிகர் கவுண்டர் சமுதாய மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். அங்கெல்லாம் எங்கள் சமுதாய அமைப்புகளை உரு வாக்கி, மாதாமாதம் தலைக்கட்டு வரி என்ற பெயரில் சந்தா வசூல் செய்கிறோம். பொது நிதியான அந்தப் பணத்தை எங்கள் மக்களின் நல்லது, கெட்டதுக்கு பயன் படுத்துவோம். இப்போது, கொரோனா ஏற்படுத்தி இருக்கும் வறுமையால் தவிக்கும் எங்கள் சமுதாய மக்களுக்கு, வீடுவீடாக ஆயிரம், ரெண்டாயிரம் என கொடுத்து வருகிறோம்'' என்றார்.
இதேபோல், மற்ற சமுதாய அமைப்புகளும், மாவட்டத்தில் இருக்கும் தங்கள் மக்களுக்கு பணம் மற்றும் அத்தியாவசியத் தேவை களைப் பூர்த்தி செய்து வருவதால், கொரோ னாவால் ஏற்பட்டிருக்கும் வறுமையை ஓரளவுக்கு ஈடுசெய்கிறார்கள் மக் கள். அதேசமயம், மக்களின் தேவைகளை முழுமையாக பூர்த்திசெய்ய, அரசு நலத்திட்டங்களால் மட்டுமே முடியும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
- சக்தி
மதம் கடந்த மனிதநேயத்தால் மிளிரும் காவலர்!
ஊரடங்கால் அடங்கிக் கிடந்த மணப்பாறை பகுதியில், காமராஜர் சிலை அருகே ஏப்ரல் 13ந் தேதி தன் கணவர் ஏழுமலையுடன் நடந்து சென்று கொண்டிருந் தார் சுலோச்சனா என்ற பெண்மணி. காரணம் அறிய அவர்களை அழைத்தார் பாதுகாப்பிற்கு நின் றிருந்த காவலர் ஒருவர்.
நிறைமாத கர்ப் பிணியாக நிற்கக்கூட முடியாமல் நெளிந்து கொண்டிருந்தார் சுலோச்சனா. பிரசவ வேதனையில் துடிக்கும் அவருக்கு, அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்லியிருந்தார்கள்.
சிசேரியன் செய்ய ரத்தம் தேவைப்படும். ஆனால், ஊரடங்கு நேரத்தில் அதை ஏற் பாடு செய்வது அத்தனை எளிதாக இல்லை. மணப்பாறை முழுவதும் அலைந்து திரிகிறோம் என்று இயலாமையை வெளிப்படுத்தி இருக் கிறார் ஏழுமலை.
நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த அந்தக் காவலர், உட னடியாக ஒரு வாகனத் தைத் தயார்செய்து வழியில் யாரும் தடுத்து நிறுத்தாதபடி ஏற்பாடு களைச் செய்தார். அவர் கள் மருத்துவமனை சென்றடைந்ததை உறுதிப்படுத்திவிட்டு, நேராக மருத்துவ மனைக்கே சென்று ரத்ததானம் செய்தார். சுலோச்சனாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்தத் தகவலை அறிந்த காவல்துறை கண்காணிப்பாளர், ஆயிரம் ரூபாயை அந்தக் காவலரின் பணியைப் பாராட்டி விருதாக வழங்கினார். டி.ஜி.பி. அவரை நேராக அழைத்து பத்தாயிரம் ரூபாய் சன்மானமாக வழங்கிப் பாராட்டினார்.
அந்தப் பணத்தையும், நேராக சுலோச்சனாவிடம் சென்று, குழந்தை யின் கையில் திணித்துவிட்டு, அங்கிருந்து கிளம்பினார் அந்தக் காவலர்.
இந்த அரும்பணி யைச் செய்த அந்தக் காவலரின் பெயர் சையது அபுதாகீர். மத்திய, மாநில அரசுகளே கொ ரோனாத் தொற்றுக்கு மதச்சாயம் பூசி, மதநல்லிணக்கத்தை கேலிக்கூத்தாக்கி வரும்நிலையில், மதத்தை வீழ்த்தி மனிதத்தை வளர்த்த அந்தக் காவலரை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
-மதிவாணன்
வி.ஐ.பி.க்களின் லாக்-டவுன் ரம்மி!
தூத்துக்குடியின் இதயப்பகுதியான தெப்பக்குளம் அருகேயுள்ளது ஐ.ஓ.சி. எனப்படும் இந்தியன் ஆபீசர்ஸ் கிளப். ஆங்கிலேயர் காலத்தில் இந்திய அதிகாரிகளுக்காகக் கட்டப்பட்ட இந்த கிளப், காலப்போக்கில் பணபலம் கொண்ட வி.ஐ.பி.களின் சூதாட்டக் களமாக மாறியது.
ஊரடங்கு கெடுபிடிகள் ஒருபுறமிருக்க, மத்திய போலீஸ் ஸ்டேஷன் லிமிட்டில் வரும் இந்தக் கிளப்புடன் ஸ்டேஷன் அதிகாரி ஒரு புரிதலை ஏற்படுத்திக் கொண்டார். அதன்படி, வெளியே 14ந்தேதி வரை கிளப் மூடப்படுவதாக அறிவித்து, பெரிய பூட்டைப் போட்டுவிட்டு, உள்ளே சூதாட்டம் அனல்பறந்தது. அப்படி, ஏப்ரல் 01ந்தேதி சூதாட்டத்தில் கலந்து கொண்டு மொத்தத்தையும் இழந்த அந்த பெரும்புள்ளி, மாவட்டக் கலெக்டருக்கும், மாநகராட்சிக் கமிஷனருக்கும் தகவல் சொன்னார்.
பதறிப்போன அதிகாரிகள், மொத்தப் படையுடன் கிளப்பை முற்றுகையிட்டதும் சூதாட்டம், சிக்கன் வறுவல், சரக்கு என தள்ளாடிக் கொண்டிருந்த வி.ஐ.பி.க் களுக்கு வியர்த்துதான் போனது. 20க்கும் மேற்பட்ட வி.ஐ.பி.க்களை கஸ்டடிக்குள் கொண்டுவந்த அதிகாரிகள், கிளப்புக்கும் சீல் வைத்தனர்.
எங்கே, இந்த விவகாரம் வெளிவந்தால், பெயர் கெட்டுப்போகுமோ என்று அஞ்சிய வி.ஐ.பி.க்கள் சிலர் அரசியல் தலைகளிடம் தஞ்சம் புகுந்தனர். அ.தி.மு.க. மா.செ.வும், எம்.எல்.ஏ.வுமான சண்முகநாதனின் உதவி யாளரும், மாவட்டக் கழக அலுவலகப் பொறுப்பாளருமான அந்தப் புள்ளி டீல் பேச, வி.ஐ.பி.க்களைத் தப்பவிட்டு, கிளப் நிர்வாகி களைக் கைதுசெய்து கடமையை நிறை வேற்றியது காவல்படை.
இதுகுறித்து, மாவட்ட எஸ்.பி. அருண் பாலகோபாலனிடம் பேசினோம். வி.ஐ.பி.க்கள் தப்பவிடப்பட்டது குறித்து சொன்னதுமே, விரிவான விசாரணைக்கு ஏற்பாடு செய்வதாக நம்மிடம் உறுதியளித்தார்.
- பரமசிவன்