தற்கொலைக்குத் தள்ளிய தாமத அறிக்கை!

அரியலூர் மாவட்டம் கடம்பூரைச் சேர்ந்த ஒருவர், கேரளாவுக்கு வேலைக்காக சென்றிருந்தார். கடந்த 6ந்தேதி வீடுதிரும்பிய ssநிலையில், அவருக்கு காய்ச்சல், இருமல் பிரச்சனை இருந்துள்ளது. இது கொரோனா தொற்றாக இருக்குமோ என்ற சந்தே கத்தில், அரியலூர் அரசு மருத்துவமனை யின் தனி சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இவருக்கு செய்யப்பட்ட மருத்துவப் பரிசோதனை அறிக்கை வருவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால், தொடர்ந்து தனி வார்டில் இருந்த அவர், என்னை வீட் டுக்கு அனுப்பி விடுங்கள் என்று மருத்துவர்களிடம் அடிக்கடி வாக்கு வாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். மருத்துவ அறிக்கை வந்ததும் நீங்கள் கிளம்பலாம் என்று மருத்துவர்கள் சொல்லிவந்த நிலையில்தான், கடந்த 10ந்தேதி மாலை 7 மணிக்கு அவர் தான் சிகிச்சைபெற்ற அறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அதேசமயம், அடுத்த ஒரு மணிநேரத்தில் தற்கொலை செய்து கொண்டவருக்கான மருத்துவ பரிசோதனை அறிக்கை வந்தது. அதில், அவருக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. இத்தனை காலம் பொறுத்தவர் ஒரு மணிநேரம் காத்திருந்தால், வீட்டிற்கு சென்றிருக்கலாம். மன உளைச்சல் அவரைத் தற்கொலைக்குத் தள்ளிவிட்டது என்கிறார்கள் மருத்துவர்கள்.

Advertisment

தமிழகத்துக்கு வரவேண் டிய துரித பரிசோதனை உபகரணங்களை, அமெரிக்கா விற்கு தாரை வார்த்த மத்திய, மாநில அரசுகளின் அலட்சி யப் போக்கும் ஒருவகையில் இதற்குக் காரணம்தான்.

- எஸ்.பி.சேகர்

கொலைமுயற்சி வழக்கில் கொரோனா நோயாளி!

Advertisment

டெல்லி சென்று திரும்பிய திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. உடனடியாக அவர்கள் திருச்சி அரசு மருத்துவமனையின் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டனர். மேலும், இந்த 17 பேரின் குடும்ப உறுப்பினர்கள் 67 பேர் மற்றும் தாமாக முன்வந்த 21 பேர் என மொத்தம் 88 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

ss

பரிசோதனையின் முடிவில் 17 பேரின் குடும்பத்தில் 3 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இவர் களில் இரண்டு பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலை யில், ஒருவர் மட்டும் மருத்துவமனையில் அட்மிட் ஆகமாட் டேன் என்று அடம் பிடித்தார். சுகாதாரத் துறையினர் அவரது வீட்டிற்கே சென்று அழைத்தும், ஒத்துழைக்கவில்லை. மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிக்கு செல்போனில் அழைத்து, என்னால் வரமுடியாது என்று கூறியிருக்கிறார்.

இதைக்கேட்டு ஆத்திரமடைந்த சிகிச்சையில் இருந்த நோயாளி, நான் மட்டும் இங்க கிடந்து சாகணுமா? நீங்களும் செத்துப்போங்க எனக் கத்தியபடி, முகத்தில் அணிந்திருந்த மாஸ்கைக் கழற்றி டாக்டர் மீது வீசியும், செவிலியர் மீது எச்சில் உமிழ்ந்தும் தகராறில் ஈடுபட்டார்.

இதையடுத்து, அரசு மருத்துவமனை செவிலியர் கொடுத்த புகாரின் அடிப்படையில், நோய்த்தொற்று இருப்பது தெரிந்தும் செவிலியர் மீது எச்சில் உமிழ்ந்த குற்றத்திற்காக, நோயாளி மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர் காவல்துறையினர்.

-ஜெ.தாவீதுராஜ்

கெட்டது மட்டும்தான் வேகமா பரவுது!

"70 வயசானாலும், அண்ணாச்சி இருக்குற இடத்துல கலகலப்புக்கு பஞ்சமிருக்காது. எப்போதும் யதார்த்தப் பேச்சால எல்லோரையும் ஈர்த்திடு வாரு'’என்று பெயரெடுத்தவர், விருதுநகர் தெற்கு தி.மு.க. மா.செ.வும் முன்னாள் அமைச்சருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.

s

தற்போது வைரலாகும் ஒரு வீடியோவில், ""நீங்க தள்ளி நில்லுங்கப்பா.. உங்களாலதான் கொரோனா பரவுது...''’ என்று தன்னருகே நின்ற இஸ்லாமிய சமுதா யத்தினரிடம் எரிந்து விழுந்தது தொடர்பாக, அண்ணாச்சியைத் தொடர்புகொண்டு சிறுபான்மை அமைப்பைச் சேர்ந்த ஒருவர் பேச, அந்த உரையாடலும் வைரலாகிவிட்டது.

“""ஏற்கனவே, சங்பரிவார் குரூப், இதைத்தான் முழுப் பிரச்சாரமாக பண்ணிவருகிறது. இப்போ உங்கக்கிட்ட இருந்து இப்படியொரு வார்த்தை வந்தது சங்கடமா இருக்கு அண்ணாச்சி'' என்று அந்த நபர் வருத்தப்படுகிறார்.

அண்ணாச்சியோ அவரை மாமா என்று உரிமையோடு அழைத்து, ""நான் திட்டியது வாஸ்தவம்தான். மாஸ்க் போடாமல் வந்த தால் திட்டினேன். நீங்க எச்சரிக்கையா இல்லேனா, உங்க குடும்பத்திற்குத்தானே பாதிப்புன்னு சத்தம் போட்டேன். நம்ம ஊரில் (அருப்புக்கோட்டை) அதிகாரிங்களால எந்தத் தொந்தரவும் இல்லாம நான் வச்சிட்டிருக்கேன். அந்த மாதிரி நல்ல காரியம்லாம் வரல. கெட்டது மட்டும்தானே வேகமா வெளிலவருது. தப்பா நினைக்க வேண்டாம்னு நம்மாளுங்கக்கிட்ட சொல்லிருங்க''’ என்று தனக்கேயுரிய இயல்புடன் நிலைமையை விளக்கி சமாதானக் குரலில் பேசியிருக்கிறார்.

தி.மு.க. .ஆதரவு இஸ்லாமியர்களின் வாக்குகளை இழுக்க, ஆளுந்தரப்பு கிளப்பிவிட்ட பிரச்சனைதான் இது என்று "உச்'’கொட்டினார்கள் அருப்புக்கோட்டை உ.பி.க்கள். இந்த விவகாரத்தில் பா.ஜ.க.வும் மூக்கை நுழைத்து தன்னாலான பங்களிப்பை சிறப்பாக செய்துவருகிறது.

- ராம்கி