சிக்னல் அரசியல் கட்சிகளை அதிரவைத்த தொழிலதிபர்!

signal

அரசியல் கட்சிகளை அதிரவைத்த தொழிலதிபர்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் தி.மு.க. எம்.பி.யாக இருந்தவர் முருகையன். மறைந்த இவருக்கு பேரன் உறவுமுறையான தொழிலதிபர் தணிகைவேல்; ம.தி.மு.க., தே.மு.தி.க., தி.மு.க. என பலகட்சிகள் மாறியவர். சென்னையில் சினிமா தயாரிப்பாளராகவும், பைனான்ஸ் பார்ட்டியாகவும் இருக்கிறார்.

signal

தற்போது, ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில், தொழிலதிபர் தணிகைவேல், திருவண்ணாமலையில் தனது ஆதரவாளர்கள் உள்ள சமுத்திரம் காலனி, கல்நகர், தியாகி அண்ணாமலை நகர், பேகோபுரம் தெரு, செட்டிக்குளமேடு, ஆடையூர் உள்ளிட்ட பல பகுதிகளில் ஏழ்மையானவர்களின் பட்டியலைத் தயார் செய்துள்ளார்.

.இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 5 ஆயிரம் குடும்பங்களுக்குத் தேவையான 10 கிலோ அரிசி, பருப்பு வகைகள், எண்ணெய், கடுகு, மிளகாய்த்தூள், சோப்பு என தலா ரூ.600 மதிப்புள்ள தொகுப்பை வழங்கிவருகிறார். குறிப்பாக, இந்தப் பொருட்களை நேரடியாக வழங்காமல், அந்தந்த பகுதிகளில்

அரசியல் கட்சிகளை அதிரவைத்த தொழிலதிபர்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் தி.மு.க. எம்.பி.யாக இருந்தவர் முருகையன். மறைந்த இவருக்கு பேரன் உறவுமுறையான தொழிலதிபர் தணிகைவேல்; ம.தி.மு.க., தே.மு.தி.க., தி.மு.க. என பலகட்சிகள் மாறியவர். சென்னையில் சினிமா தயாரிப்பாளராகவும், பைனான்ஸ் பார்ட்டியாகவும் இருக்கிறார்.

signal

தற்போது, ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில், தொழிலதிபர் தணிகைவேல், திருவண்ணாமலையில் தனது ஆதரவாளர்கள் உள்ள சமுத்திரம் காலனி, கல்நகர், தியாகி அண்ணாமலை நகர், பேகோபுரம் தெரு, செட்டிக்குளமேடு, ஆடையூர் உள்ளிட்ட பல பகுதிகளில் ஏழ்மையானவர்களின் பட்டியலைத் தயார் செய்துள்ளார்.

.இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 5 ஆயிரம் குடும்பங்களுக்குத் தேவையான 10 கிலோ அரிசி, பருப்பு வகைகள், எண்ணெய், கடுகு, மிளகாய்த்தூள், சோப்பு என தலா ரூ.600 மதிப்புள்ள தொகுப்பை வழங்கிவருகிறார். குறிப்பாக, இந்தப் பொருட்களை நேரடியாக வழங்காமல், அந்தந்த பகுதிகளில் இருக்கும் இளைஞர் அமைப்புகள் மூலமாகவே மக்களிடம் கொண்டு சேர்க்கிறார். முதல் இரண்டு கட்டமாக மூவாயிரம் குடும்பங்களுக்கும், மூன்றாவது கட்டமாக 2 ஆயிரம் குடும்பங்களுக்கும் பொருட்களைத் தொடர்ந்து வழங்கி வருவதாக தணிகைவேல் நம்மிடம் தெரிவித்துள்ளார். சுமார் 30 லட்ச ரூபாய் செலவில் ஒரு தொழிலதிபர் 5 ஆயிரம் குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருட்களைக் கொடுத்திருப்பது ஆளுங்கட்சி, எதிர்கட்சி பாரபட்சமில்லாமல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பா.ஜ.க.வில் இணைவதற்கு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திவருகிறாராம் தணிகைவேல்.

-து.ராஜா

மன அழுத்தம் நீக்கும் பெரியார் பல்கலை!

s

சமூக விலங்கான மனிதனுக்கு ஊரடங்கு என்பது அத்தனை ருசிகரமான விஷயம் கிடையாது. ஒட்டுமொத்த சமூகத்துக்குமான நன்மையை எண்ணி இதை ஏற்றுக்கொண்டாலும், பலருக்கு கடும் மனஉளைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. மதுரையில் வீட்டிலேயே அடைந்து கிடந்ததால் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதும், மற்றொரு பகுதியில் இதே காரணத்திற்காக விரக்தியில் மூதாட்டியை ஒருவர் கடித்தே கொன்றதும் இந்த மனஉளைச்சலின் வெளிப்பாடுகளே. இப்படியான சூழலில்தான், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் உளவியல் துறை, ஊரடங்கால் மனஅழுத்தத்திற்கு ஆளாகும் மக்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்க சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இதுகுறித்து பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் குழந்தைவேல் கூறுகையில், ""ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் நோய்த்தொற்று தொடர்பாக வெளியாகும் தகவல்களில் இயல்பாகவே மூழ்கிவிடுகிறோம். இதைத் தவிர்த்து இசையை ரசிக்கலாம். குழந்தைகளோடு நேரம் செலவழிக்கலாம். சதா வேலை வேலையென்று சுழன்றவர்களுக்கு, குடும்பத்தோடு பழக இது பொன்னான நேரம்.

ஆகவே, ஆரோக்கியமான குடும்பச் சூழலை அமைப்பதில் கவனம் செலுத்தலாம். நேர்மறையான சிந்தனைகளை வளர்த்தெடுப் பதன் மூலம் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக் கிறது. இதையும் மீறி மனநல ஆலோசனை பெற விரும்புவோர் உளவியல் துறை பேராசிரியர்களை காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை 94434 96299, 99946 20123, 80126 98558 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம்'' என தெரிவித்துள்ளார்.

- இளையராஜா

வைகையாற்றில் அழகர்! மதுரை நம்பிக்கை!

signal

“எப்படிப் பார்த்தாலும் மே 7-ந் தேதி வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்குவதும், உலகப் பிரசித்திபெற்ற அத்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவதும் நடந்தே தீரும். அதற்குள் இந்த கொரோனாவை உலகத்தைவிட்டே விரட்டிவிடுவாள் அன்னை மீனாட்சி’ என, பெரிதும் நம்பிக்கையோடு சொன்னார் அந்த அம்மன் பக்தர்.

""தினமும் ஆறுகால பூஜைகள் மீனாட்சியம்மன் கோவிலில் நடக்கின்றன. உலக நலனுக்காக, நாள்தோறும் பஞ்சகவ்ய அபிஷேகம் செய்யப்படுகிறது. இடர்கள் அனைத்தும் விலகுவதற்காக திருநீற்றுப்பதிகமும் பாடப்படுகிறது''’என்றார் பரவசத்துடன்.

ரூ.354 கோடி மதிப்பீட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரையில் நடந்துவந்த பணிகள் ஊரடங்கு உத்தரவால் முடங்கிவிட்டன. ஆனாலும், மீனாட்சியம்மன் கோவிலுக்கு வெளியே, கிழக்கு சித்திரை வீதியில் கல் பதிக்கின்ற சாலைப்பணி உட்பட சகலமும் தடைபடாமல் நடக்கிறது.

‘ஊரடங்கு வேளையிலும், தவறாமல் வேலை நடக்கிறதே?’ என்று அங்கிருந்த மேற்பார்வையாளரிடம் கேட்டோம். ""இவங்க எல்லாருமே வடமாநிலத்துக் காரங்க கொரோனாவுக்கு பயந்து நிறையபேரு சொந்த ஊருக்கு போயிட்டாங்க. சித்திரை திருவிழா வருதுல்ல. மிச்சம் இருக்கிற ஆட்களை வச்சி வேலை வாங்கு றோம்''’ என்றார். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இணை கமிஷனர் நடராஜனோ, ""கொரோனா அச்சுறுத்தல் முற்றிலும் நீங்கி, 144 தடையுத்தரவெல்லாம் விலக்கப்பட்டு, முறையான அரசு அறிவிப்பு வெளிவந்த பிறகுதான், சித்திரை திருவிழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்படும்'' என்கிறார்.

‘மதுரை சித்திரை திருவிழா ஆண்டாண்டு கால மாக நடைபெற்று வருகிறது. கொரோனா விரட்டப் பட்டு, மே 4-ந்தேதி மீனாட்சி திருக்கல்யாணம் நடக்கும். 7-ந்தேதி, அழகர் வைகை ஆற்றில் இறங்குவார்’ என்பது மக்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

- ராம்கி

nkn080420
இதையும் படியுங்கள்
Subscribe