கட்டாய ஊரடங்கு! முன்னுதாரண இளைஞர்கள்!
தனிமையை சுதந்திரமாக எண்ணி மக்களை வெளியே அனுமதித்த இத்தாலி, அமெரிக்கா போன்ற நாடுகள் கொரோனாவின் பிடியில் சிக்கி கொடூரமான அழிவைச் சந்தித்திருக்கின்றன. இதனை உணர்ந்ததால், இந்திய அரசு 21 நாட்கள் முழு ஊரடங்குக்கு உத்தரவிட்டது.
அரசின் இந்த உத்தரவைப் பலரும் அலட்சியப்படுத்தி வரும் நிலையில், நாட்டுக்கே முன்னுதாரணமாகத் திகழ்கிறார்கள் புதுக்கோட்டை மாவட்டதைச் சேர்ந்த கிராமத்து இளைஞர்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேயுள்ளது மறமடக்கி கிராமம். இங்கிருந்து வெளிநாடுகளிலும், வெளியூர்களிலும் வேலைச் சென்றுள்ளனர் நூற்றுக்கணக்கான இளைஞர்கள். தற்போது கொரோனா பரவல் காரணமாக அவர்களில் பலர் கிராமத்திற்குத் திரும்பியுள்ளனர். அப்போது நேரடியாக தங்கள் வீடுகளுக்குச் செல்லாமல், கிராமத்தின் காவல்தெய்வமான பொழிஞ்சியம்மன் கோவில் வளாகத்திலேயே அவர்கள் தங்கியுள்ளனர்.
“பல நாடுகளில் இருந்து சொந்தஊருக்கு வந்திருக்கிறோம். நாட்டிற்குள் வரும்போது நோய்த்தொற்று இல்லை என்பதைப் பரிசோதனை மூலம் உறுதி செய்துகொண்டோம். இருப்பினும், அரசு அறிவித்துள்ள ஊரடங்கு முடியும்வரை இந்தக் கோவில் வளாகத்திலேயே போதிய இடைவெளிவிட்டு தங்கி இருக்கிறோம். குறிப்பிட்ட நாட்கள் வரை எங்களுக்கு நோய்த்தொற்று இல்லை என்பதை உறுதி செய்து கொண்ட பிறகே, வீடுகளுக்குச் செல்வோம். எங்களால் சமூகத்தொற்று நிகழாமல் தவிர்க்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது’’ என்று உறுதி படக் கூறும் இந்த மறமடக்கி இளைஞர்கள், எங்களைப் போலவே மக்கள் அனைவரும் தாமாகவே தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றனர். மறமடக்கி இளைஞர்களின் இந்தச் செயலை, உள்ளூர் மட்டு மின்றி, மாவட்டம் முழுவதும் உள்ள மக்கள் பாராட்டி மகிழ்கின்றனர்.
இரா.பகத்சிங்
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/signal_139.jpg)
எல்லையில் தவித்த தமிழக மீனவர்கள்!
கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப் படுத்த நாடு முழுவதும் 21 நாட்களுக்கு முழு ஊரடங்கை அறிவித்தார் பிரதமர் மோடி. சொந்த மண்ணை விட்டு இடம் பெயர்ந்து பணிபுரியும் பலருக்கும் இதனால் பெருத்த சிக்கல் ஏற்பட்டது.
ராமநாதபுரம் மாவட் டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 669 மீனவர்கள், கர்நாடக மாநிலம் மங்களூரு வில் ஆழ்கடலில் மீன்பிடிப் பதற்காக சென்றிருந்தனர். அவர்கள் மகாராஷ்டிரா கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சமயத்தில் தான், பிரதமர் மோடி ஊரடங்கு உத்தரவை அறி வித்தார். இதையறிந்த மீன வர்கள், இரண்டு நாட்கள் கடற்பயணத்திற்குப் பிறகு கரையை வந்தடைந்தபோது, அவர்களைக் கூட்டிவந்த ஒப்பந்த நிறுவனங்கள் தமிழ்நாட்டிற்குச் செல்லுமாறு 27 வாகனங்களில் அனுப்பி வைத்தன. அவர்களைக் கூட்டிக்கொண்டு ஈரோடு மாவட் டம் சத்தியமங்கலம் அருகேயுள்ள தமிழக கர்நாடக எல்லையான, காரப்பள்ளம் சோதனைச்சாவடி வரை வந்த ட்ராவல்ஸ் ஓட்டுநர்கள், இதற்குமேல் செல்லமுடியாது எனக்கூறி கீழே இறக்கிவிட்டனர். இதனால், அங்கிருந்து நடந்தே செல்லவேண்டிய கட்டாயத்திற்கு ஆளான மீனவர்கள், குழப்பத்தில் அங்கேயே நின்றனர். அப்போது அந்தவழியே ரோந்து சென்ற தமிழ்நாட்டின் ஆசனூர் காவல்துறையினர் அவர்களை விசாரித்தனர்.
விவரத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், உடனடியாக மாவட்ட எஸ்.பி. சக்திகணேசனுக்கும், மாவட்ட ஆட்சியர் கதிரவனுக்கும் தகவல் தெரிவித்தனர். அவர்களின் மூலமாக அங்குவந்த மருத்துவக் குழுவினர் மீனவர்களைப் பரிசோதனை செய்து, காய்ச்சல் அறிகுறி இருப்பவர்களைத் தனிமைப் படுத்தி 16 அரசுப் பேருந்துகளில் ராமேஸ்வரத்திற்கு அனுப்பிவைத்தனர். மீனவர்களுடன் சென்ற போலீசார், மீனவர்களை ராமநாதபுரம் ஆட்சியரிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தனர்.
அவசரகதியில் அரசு எடுக்கும் முடிவால், அன்றாடப் பிழைப்பை நம்பி இருப்பவர்கள் படும் இன்னல்கள் கொஞ்சமல்ல. அதில் மிகப்பெரிய உதாரணமாக இந்தச் சம்பவம் அமைந்து விட்டது.
- ஜீவாதங்கவேல்
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/signal1_130.jpg)
அடிக்க மட்டுமல்ல! அணைக்கவும் செய்வோம்!
பிழைப்புதேடி தமிழகம் வந்து கொத்தடிமைகளைப் போல குறைந்த ஊதியத்தில் வேலைசெய்யும் வடமாநிலத்தவர்கள் ஏராளம். அவர்களில் ரோட்டோரக் கடைகளைப் போட்டு போர்வை, பெல்ட் போன்ற பொருட்கள் விற்பனை செய்பவர்களுக்கு, தினசரி வருமானம்தான் ஒரே ஆதாரம்.
அப்படி மத்தியப்பிரதேசத்தில் இருந்து வந்த திருநெல்வேலி ஜங்ஷன் பகுதியில் தங்கி, கடந்த ஆறு மாதங்களாக வியாபாரம் செய்துவந்த 25 குடும்பங்களையும் கொரோனா கெடுபிடிகள் விட்டுவைக்கவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்களை அதே பகுதியிலுள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான விடுதியொன்றில் தங்கவைத்தது மாநகராட்சி நிர்வாகம். உயிருக்கு பாதுகாப்பு தந்தவர்கள் வயிறுக்கு ஆதாரம் தரவில்லை.
இது உள்ளூர் சமூக ஆர் வலர்கள் மூலமாக, ஜங்ஷன் காவல் ஆய்வாளர் பெரியசாமி யின் கவனத்திற்குப் போனது. அவரது முயற்சியில், உதவி ஆணையர் சதீஷ்குமார், இணை ஆணையர் சரவணன் ஆகியோ ரும் ஒன்றிணைய, மாநகராட்சி விடுதிக்கே வந்து அங்கு தங்கி யுள்ள 25 குடும்பங்களுக்குத் தேவையான அரிசி, கோதுமை, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியா வசியப் பொருட்களை வழங்கி யது நெல்லை காவல்துறை.
ஊரடங்கு நேரத்தில் ஊர் சுற்றித் திரிபவர்களை லத்தியால் போலீசார் சாத்தும் வீடியோக் கள் வைரலாவதைப் போலவே, இந்த நிகழ்வும் நெல்லை முழு வதும் பாராட்டுதலோடு வைர லானது. “வந்தாரை வாழவைக் கும் தமிழ்நாட்டில், அதுவும் நெல்லுக்கு வேலிபோட்ட நெல் லைக்கு வந்தவர்கள் பட்டினியால் தவிப்பதைப் பார்த்து சும்மா இருக்கமுடியுமா? சக மனிதனுக்கு பசியாற்றுகிற மனசு எங்களுக்கும் இருக்கு’’ என்று நெகிழ்கின்றனர்’’ நெல்லை போலீசார்.
-நாகேந்திரன்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-04-01/signal-t.jpg)