இதுவும் உயரதிகாரிகளின் பணிதான்!

நேரம் காலம் பார்க்காமல் பணியில் இருக்கும் காவலர்கள் இறந்துவிட்டால், அவர்களது குடும்பம் நிலைகுலைந்து போகிறது. அதுபோன்ற சூழலில் காலத்தே உதவிசெய்து முன்னுதாரணமாக திகழ்கிறது ஈரோடு மாவட்ட காவல்துறை.

ss

ஈரோடு மாவட்டம் பங்களாபுதூர் காவல்நிலையத்தில் பணிபுரிந்தவர் வரதராஜன். சென்ற ஆண்டு நவம்பர் 11-ல் கோபி சத்திசாலை கரட்டடிபாளையம் அருகே, சாலைவிபத்தில் உயிரிழந்தார். இதேபோல், ஈரோடு வடக்கு போக்குவரத்துக் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக இருந்த செந்தில்குமார், அதேமாதம் 20-ந் தேதி கனிராவுத்தர் குளம் அருகே சாலைவிபத்தில் இறந்தார்.

Advertisment

இந்த இரண்டு காவலர்களின் குடும் பத்திற்கும், ஈரோடு எஸ்.பி.ஐ. வங்கி மூலமாக, காவலர் குழு திட்டத்தின் கீழ் தலா ரூ.30 லட்சம் பெறப்பட்டது. இதனை விபத்தில் உயிரிழந்த வரதராஜனின் மனைவி பாரதி மற்றும் செந்தில்குமார் மனைவி கலா ஆகியோருக்கு நிதி வழங்கும் விழா, கோவை ஐ.ஜி. அலுவலகத்தில் நடந்தது. தலா ரூ.30 லட்சத்திற்கான காசோலையை அவர்களிடம் ஐ.ஜி. பெரியய்யா வழங்கினார்.

""ஈரோடு மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களில் உயிரிழந்த காவலர்களின் குடும்பத்திற்கு, இதுவரை 1 கோடியே 20 லட்ச ரூபாயை, காவலர் குழு காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பெற்றுத் தரப்பட்டுள்ளது. இது மட்டுமில்லாமல், அரசால் வழங்கப்பட வேண்டிய பணப்பயன்களும் தாமதமின்றி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்ட எஸ்.பி. சக்திகணேசனின் தனிப்பட்ட முயற்சி தான் இதற்குக் காரணம்''’என்கிறார்கள் போலீசார்.

பணியில் இருக்கும் காவலர்களை வேலைவாங்குவது மட்டுமே உயரதிகாரிகளின் வேலை கிடையாது. அவர்களின் எல்லாச் சூழலிலும் உடனிருந்து உதவுவதும் அதிகாரிகளின் பணிதான் என்பதை எஸ்.பி. சக்திகணேசன் உணர்த்தி இருக்கிறார்.

Advertisment

-ஜீவாதங்கவேல்

நக்கீரன் தந்த பரிசு! நெகிழும் வைத்தியர்!

ss2018-ல் "இதுதாண்டா மருத்துவம்' என்ற தலைப்பிட்ட சிறப்புக் கட்டுரையை நக்கீரன் இணையதளத்தில் வெளியிட்டிருந் தோம். எலும்பு முறிவு, தசைப்பிடிப்பு போன்றவற்றால் நாள்பட்ட அவதிக்கு ஆளாகிவரும் பலரையும் மூலிகை எண்ணெய் கொண்டு குணப்படுத்தும் 80 வயது வைத்தியர் மாரிமுத்துவைப் பற்றிய செய்திதான் அது.

உலகெங்கும் பரவிய இந்த செய்தியால், கோவை தொண்டாமுத்தூர் மெயின் சாலை யில், பூசாரிபாளையம் பனைமரத்தூரைத் தாண்டியதும் வரும் மூங்கத் தூரில் இருக் கும் வைத்தியர் மாரிமுத்துவை நோக்கி மக் கள் படை யெடுக்கத் தொடங்கி னார்கள்.

வைத் தியர் மாரி முத்துவைச் சந்தித்து நாம் பேசியபோது, ""இந்தப் பட்டிக்காட்டுக்குள்ள மட்டுமே அறியப்பட்ட என்னை, உலகம் பூராவும் தெரியப்படுத்தினது நக்கீரன்தான் தம்பி. அமெரிக்காவுக்குக் கூட என்னுடைய மூலிகை எண்ணெய் விமானத்துல போகுது''’என்று பேசிக் கொண்டிருந்தபோதே, ஆட்டோவில் வந்திறங்கிய ஒரு பெண், ""வைத்தியரே என் இடதுகையைத் தூக்கவே முடியலை'' என்று கதறியழுதார்.

சட்டென்று பூஜை அறைக்குள் நுழைந்து, சிவபெருமானைத் தரிசித்து விட்டு, அந்தப் பெண்ணுக்கு வைத்தியம் பார்த்தார். அதோடு சிறிய பாட்டிலில் எண்ணெயைக் கொடுத்து, ""கட்டுப்போட்ட இடத்தில் ஊத்திட்டே இரும்மா, சரியாகிடும்'' என்றார். அதுவரை துடித்துக் கொண்டிருந்த அந்தப்பெண், வலி தீர்ந்தபடி நூறு ரூபாயை அவரிடம் கொடுத்துவிட்டுக் கிளம்பினார்.

""வர்றவங்க குணமடைஞ்சி போறப்ப கிடைக்கிற நிம்மதி அலாதியானது. நன்றிப் பெருக்கோடு அவங்க கையெடுத்துக் கும்பிடும்போது உண்டாகிற சிலிர்ப்பு பல கோடிகளுக்குச் சமம். இதுதான் தம்பி நான் என் வாழ்க்கையில் சம்பாதிச்ச மிகப்பெரிய சொத்து'' என்று வைத்தியர் மாரிமுத்து சொல்லிக் கொண்டிருக்கையில் வரிசை நீண்டது. ""இது நக்கீரன் எனக்குக் கொடுத்த பரிசு'' என்று புன்னகைத்தார்.

-அ.அருள்குமார்

நடுக்காட்டில் பிரசவம்! காதலனால் விபரீதம்!

ss

நவீன தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் பலநேரங்களில் உதவிகரமாக இருக்கிறது. சில சமயங்களில் அது விபரீதமான முடிவுகளுக்கும் காரணமாகிறது. அப்படி எடுக்கப்பட்ட முடிவால் வயிற்றில் சுமந்த குழந்தையைப் பறிகொடுத்துவிட்டு, உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார் 19 வயது மாணவி.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப் பூண்டி அருகேயுள்ள கம்மார்பாளையத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி சித்ரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அதேபகுதியில் கேஸ் சிலிண்டர் தொழில் நடத்திவரும் சௌந்தர் என்ற இளைஞரோடு சித்ராவுக்குக் காதல். காதலர்கள் இருவரும் தனிமையில் சந்தித்து எல்லைமீறியதால், கர்ப்பமானார் சித்ரா. கருவைக் கலைக்க எடுத்த முயற்சிகளும் பொய்த்துப்போக, தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு சௌந்தரை நிர்பந் திக்கத் தொடங்கினார் சித்ரா.

இப்படியே 9 மாதங்கள் கடந்துவிட, நிறைமாத கர்ப்பிணியான சித்ரா கடந்த 18-ந் தேதி பிரசவ வலியால் துடித்தார். அப்போது சௌந்தரைத் தொடர்புகொண்டு வர வைத்துள்ளார். சித்ராவை அருகிலுள்ள காப்புக்காட்டிற்குள் அழைத்துச் சென்ற சௌந்தர் செய்வதறியாது ஒரு கட்டத்தில் யூடியூப்பில் "பிரசவம் பார்ப்பது எப்படி?' என்ற வீடியோவைப் பார்த்து, அதில் உள்ளபடியே பிரசவம் பார்த்திருக்கிறார்.

இதில் குழந்தை முழுமையாக வெளி வராமல், ரத்தப்போக்கு அதிகமானது. வலியால் அலறிய சித்ராவை அதன் பிறகே ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ மனைக்கு அனுப் பினார் சௌந்தர். ஆபரேஷன் மூலம் இறந்தநிலையில் ஆண் குழந்தையை மீட்டெடுத்த மருத்துவர்கள், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் சித்ராவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்தனர்.

சௌந்தரை கைது செய்த கும்மிடிப் பூண்டி காவல்துறையினர், “இதில் சௌந்தர் மட்டுமே ஈடுபட்டாரா அல்லது மருத்துவம் தொடர்பான அனுபவமுள்ள வேறு யாரையும் உதவிக்கு அழைத்தாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். சித்ராவின் கர்ப்பம் குறித்து அவரது பெற்றோரிடம் விசாரணை தொடர்கிறது.

-அரவிந்த்