சிக்னல் : எடப்பாடி பழனிச்சாமியின் பழனி பாசம்!

ss

எடப்பாடி பழனிச்சாமியின் பழனி பாசம்!

திண்டுக்கல் மாவட்டம் ஒடுக்கம் பகுதியில், 14-ந் தேதி புதிய மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டுவிழா நடந்தது. 25 ஆயிரம் பேர் அமர்வதற்கான கொட்டகையும் போடப்பட்டிருந்தது.

s

முகப்பில் காவிரி காப்பாளர் என்ற அடை மொழியுடன், முதல்வர் விவசாயி எடப்பாடியின் பெரிய படமும், துணை முதல்வர் ஓ.பி.எஸ். படம் ஒரு ஓரமாகவும் இடம்பெற்றிருந்தன. குப்பைக் கிடங்கு இருந்த இடத்தைத்தான், மருத்துவக் கல்லூரி கட்டிக்கொள்ள ஒதுக்கியுள்ளது மாநகராட்சி. ஏற்கனவே கொரோனா பீதியில் மக்கள் கூட்டம் சேர்வதைத் தவிர்த்து வரும் நிலையில், இந்தக் காரணமும் சேர்ந்துகொள்ள பத்தாயிரம் பேரைத் திரட்டவே பெரும்பாடுபட்டார்கள் ர.ர.க்கள்.

விழாவில் கலந்துகொண்ட பொதுமக்கள் பலர், கைகளைக் கழுவாமல் நுழைந்தனர். பலருக்கு இருமல், தும்மல் பிரச்சனைகள் இருந்தும் அலட்சியத்துடன் அனுமதித்து விட்டார்கள். கொரோனா பீதி சமயத்தில் இதெல்லாம் தேவையா? சுகாதாரத்துறை அதிகாரிகள் நொந்துகொண் டார்கள்.

பூமிபூஜை உள்ள

பூமிபூஜை உள்ளிட்ட சம்பிரதாயங் களை முடித்துவிட்டு மேடையேறிய முதல்வர் எடப்பாடி, “"உலகப் பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலை நவீனப்படுத்த ரூ.58 கோடி ஒதுக்கி அடிப்படை வசதிகளை மேம்படுத்தி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு இணையாக மாற்றுவோம்'’ என்று உறுதியளித்தார்.

பழனி முருகன் மீதான முதல்வரின் திடீர் பாசம் பற்றி விசாரித்த போது, “""தீவிர முருக பக்தரான எடப்பாடியின் மனைவி பழனிக்கு அடிக் கடி செல்வார். அப்படி சென்றபோது, அங்கிருக்கும் குறைகளை அவரிடம் சொன்ன ஐயர்கள், "இதைச் சரி செய்தால் செவ்வாய்க்கு உகந்தவ ரான முருகப்பெருமான், உங்கள் கணவரின் ஆட்சி அதிகாரத்தைக் காத்தருள்வார்' என்று கூறியதன் விளைவுதான் அறிவிப்பாகி இருக் கிறது''’என்கின்றனர்.

-சக்தி

ஆதாரம் கேட்டவர்களுக்கு அதிரடி பதில்!

s

குடியுரிமை திருத்தச் சட்டம் நிறை வேற்றப்பட்டதில் இருந்தே, நாடு முழுவதும் பல்வேறு பகுதியில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதுவரை 12 மாநில அரசுகள் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிவிட்டன. பா.ஜ.க. ஆதரவுள்ள மாநில அரசுகளுமே கூட, இதை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று அறிவித்து வருகின்றன. அதேசமயம், இந் தச் சட்டத் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்த அ.தி.மு.க. தரப்பு, இதனால் முஸ்லிம்கள் உள்ளிட்ட மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று சொல்லிவருகிறது.

இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்தால் ஏற்படும் பிரச்சனைகளை, "அரசியலமைப்புச் சட்டமும், குடியுரிமை திருத்த சட்டமும்' என்று புத்தகமாக எழுதி இருக்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர் த.லெனின். உலகநாடுகளின் குடியுரிமைச் சட்டங்கள், மனித உரிமை பாதுகாப்பு தொடர்பான உல களாவிய ஆதாரங் கள், அவற்றோடு சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர். ஆகிய சட்டத் திட்டங்களின் பொருந்திப் போகாத்தன்மை மற்றும் இந்தியாவிற்கு புகலிடம் தேடிவந்தவர்களும், இந்தியாவின் பூர்வகுடிகளும் தங்களது பூர்வீகத்தை நிரூபிக்க முடியாமல் போனால் ஏற்படும் துன்பங்கள் உள்ளிட்டவற்றை கையேடு போன்ற இந்தப் புத்தகத்தில் ஆழமாக விளக்கி இருக்கிறார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தால் யாராவது ஒருவர் பாதிப்படைந்ததாக நிரூபித்தால், ஒரு கோடி ரூபாய் பரிசு தரத்தயார் என சென்னையில் போஸ்டர் ஒட்டி பா.ஜ.க.வினர் பரபரப்பு கிளப்பினர். அவர்கள் கேட்ட ஆதாரத்தை இந்த நூல் அதிரடியாக முன்வைக்கிறது.

-மதி

மாணவி மர்ம மரணம்! விசாரணை கோரும் பெற்றோர்!

s

திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி அருகே, வடுகர்பேட்டையில் புனித ஜார்ஜ் பெண்கள் மேல் நிலைப்பள்ளி இயங்கிவரு கிறது. அரியலூர் மாவட்டம் அயன் சுத்தமல்லி கிராமத் தைச் சேர்ந்த நடராஜன் மகள் ரேகா, இந்தப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்துவந்தார்.

பிப்ரவரி மாதம் 19-ந் தேதி, காலை 7.30 மணிக்கு ரேகாவைக் காணவில்லை என பள்ளி நிர்வாகம் சார்பில் அழைப்புவந்தது. பள்ளிக்கூடத் தைச் சுற்றி பல இடங்களில் தேடியும் ரேகா கிடைக்க வில்லை. கல்லக்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத் திருந்த நிலையில், கல்லக்குடி ரயில்நிலையம் அருகே, மாலை ரயிலில் அடிபட்டு இளம்பெண் இறந்துகிடப்பதாக ரயில்வே போலீசார் தகவல் கொடுத்தனர்.

உடனடியாக அங்கு விரைந்த உறவினர்கள், இறந்து கிடந்தது ரேகாதான் என்பதை உறுதிசெய்தனர். ரேகாவின் தொடையில் ஆசிரியர்கள் அடித்து பலத்த காயம் இருந்தது. ஆனால், பள்ளி நிர்வாகத்திற்கு சாதகமாக ரயில்வே போலீசார் உடற் கூறாய்வில் அதை மறைத்து விட்டனர். அவரது மரணத்தில் மர்மம் இருக்கிறது எனக்கூறி, ரேகாவின் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இப்போதுவரை இந்த சம்பவத்தில் யாரும் கைது செய்யப்படவில்லை.

மாணவிகள் மர்மமாக இறப்பது அந்தப் பள்ளியில் தொடர்கதையாகி வருகிறது. விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை கள் எழுகின்றன. இதுபற்றி பள்ளியின் விடுதி வார்டன் திராவிடச் செல்வியிடம் கேட்டபோது, “""மாணவிகள் மரணம் பற்றிய குற்றச் சாட்டுகள் பொய்யானவை. ஒரு மாணவி அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்ட தற்கு பள்ளி நிர்வாகம் பொறுப்பாக முடியாது. ரேகா வின் மரணம் எல்லோரையும் துயரத்தில் ஆழ்த்தி இருக்கிறது'' ’என்றார். "தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறோம்' என்பதோடு முடித்துக்கொண் டனர் திருச்சி போலீசார்.

-எஸ்.பி.சேகர்

nkn210320
இதையும் படியுங்கள்
Subscribe