புதிய ஊராட்சிகள் காலத்தின் கட்டாயம்!

ssமக்கள்தொகைப் பெருக்கம், நிர்வாக வசதி போன்ற காரணங்களுக்காக மாவட்டங்களின் எண்ணிக்கையை 37ஆக அதிகரித்தது தமிழக அரசு. தாலுகாக்களும், வரு வாய்க் கோட்டங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஆனால், தமிழகத்தில் இருக்கும் 12 ஆயிரத்து 524 ஊராட்சிகளில், பெரிய ஊராட்சிகளைப் பிரித்து தனித்தனி ஊராட்சிகளாக அறிவிக்கும் பொதுமக்களின் கோரிக்கைக்கு தமிழக அரசோ, அதிகாரிகளோ செவிசாய்ப்பதில்லை.

சுமார் 40 ஆண்டுகளாக இருக்கும் இந்தநிலையை மாற்ற வழக்குத் தொடர்ந்து வென்றிருக்கிறார் வெங்க டேசன். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் உள்ள நெடி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன், “""போதுமான காரணிகள் இருந்தும் எங்கள் கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்கவில்லை. இது தொடர்பாக 1996-ல் இருந்து போராடி வருகிறோம். 2017-ல் சென்னை உயர்நீதி மன்றம் கொடுத்த தீர்ப்பையும் இப்போது வரை மதிக்கவில்லை. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளோம். சமீபத்தில் தங்கள் கிராமங்கள் பிரிக்கப்பட்டதைக் கண்டித்து பொதுமக்கள் வீதிக்கு வந்ததும், அதிகாரிகள் பின்வாங்கினார்கள். அப்படி போராடினால்தான் கோரிக்கைகள் நிறைவேறுமென்றால், அதற்கும் தயார்''’என்றார் உறுதியுடன்.

நெடி கிராமத்தைப் போலவே, ஒலக்கூர் ஊராட்சியில் இருக்கும் செங்கேணிக்குப்பம் கிராமம், கடலூர் மாவட்டம் தொளார் ஊராட்சியில் உள்ள செங்கமேடு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களும், போதுமான காரணிகள் இருப்பதைச் சுட்டிக்காட்டி தனி ஊராட்சி கோரிக்கையை முன்வைக்கின்றனர். இந்நிலையில், கடந்த 05-ந் தேதி விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் ஊராட்சிகளை அதிகப்படுத்துவது தொடர்பாக மனு தந்துள்ளனர் பொதுமக்கள். கோரிக்கைகள் மீது நேரடி ஆய்வுசெய்து அதற்கான முடிவுகள் விரைவில் வெளியாகும் என்று உறுதியளித்துள்ளார் மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி.

Advertisment

மக்களின் தேவைகளும், அரசுத் திட்டங்களும் விரைவில் பூர்த்தியாக, புதிய ஊராட்சிகள் காலத்தின் கட்டாயம்.

-எஸ்.பி.சேகர்

தொடரும் மின்வேலி படுகொலைகள்!

Advertisment

ss

தமிழக வனப் பகுதிகளில் அதிகம் வாழும் காட்டு விலங்கினம் என்றால், அவை யானைகள்தான். பொதுவாக, யானைகள் தங்கள் குட்டிகளுடன் கூட்டம் கூட்டமாக வலசை வருவது வழக்கம். வனஅழிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், யானைகள் ஊருக்குள் நுழைந்துவிடும் சம்பவங்களும் நடக்கின்றன.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதி யில் வசிக்கும் நூற்றுக் கணக்கான யானைகள், அருகாமை கிராமங்களின் தோட்டங்களில் அடிக்கடி நுழைகின்றன. தோட்டங்களில் கிடைக்கும் உணவுப்பொருட் களின் ருசி பழகியதே, இதற்குக் காரணம் என்று சொல்கிறார்கள். இப்படி நுழையும் யானைகளால் ஏற்படும் இழப்பைத் தடுக்க, விவசாயிகள் தங்களது தோட்டங்களில் மின்வேலிகளை அமைக்கின்றனர். சிறிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த வேலிகளைக் கடக்க முயற்சிக்கும் யானைகள், படாரென்று அச்சுறுத்தும் ஷாக் அடித்த வுடன் அங்கிருந்து கிளம்பிவிடும்.

இதேபோல் தாளவாடி அருகெ ஜீரகள்ளி வனப்பகுதியில், கரளவாடி என்ற கிராமத்தில், தனக்குச் சொந்த மான கரும்புத் தோட்டத்தில் மின்வேலியை அமைத்திருந்தார் விவசாயி கருப்பசாமி.

கடந்த பிப்ரவரி 27-ந் தேதி அதிகாலையில், இந்த தோட் டத்திற்குள் நுழைய முயன்ற ஆறுவயது ஆண் யானையும், ஐந்துவயது பெண் யானையும், மின்வேலியில் சிக்கி துடிதுடித்து இறந்துபோயின. அதிக மின்ன ழுத்த வேலிகளை அமைத் திருந்ததே யானைகள் இறப்புக்குக் காரணம் என்கிறார்கள்.

உடனடியாக, நிகழ்விடத் திற்கு வந்த வனத்துறை அதிகாரி களும், மருத்துவர்களும் யானை களைச் சோதித்து அங்கேயே குழிதோண்டிப் புதைத்துவிட்ட னர்.

மேலும், சட்டவிரோதமாக அதிக மின்னழுத்த வேலியை அமைத்து, பாதிப்பை ஏற்படுத்திய விவசாயி கருப்பசாமியிடம் விசாரணை நடக்கிறது.

-ஜீவாதங்கவேல்

அதிகாரி அட்ராசிட்டி! ஆக்ஷன் ரிப்போர்ட்!

ss

திருநெல்வேலி மாவட்டம் வி.கே.புரம் ரத்னா ஜுவல்லரி நகைக்கடையில், நகைகள் கொள்ளை யடிக்கப்பட்டன. இதுதொடர்பாக விசாரணை நடத்திய வி.கே.புரம் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி தலைமையிலான தனிப்படை, சொற்ப நகைகளை மட்டுமே மீட்டு, பாண்டித்துரை, கருவாடு மாரியப்பன் ஆகியோரைக் கைதுசெய்து கணக்கை முடித்தது.

இதில் தனிப்படையின் செயல்பாடுகள் மீது எழுந்த சர்ச்சைகள் குறித்து, பிப்.26-28 தேதியிட்ட நக்கீரன் இதழில் விரிவாக எழுதியிருந்தோம். மேலும், நமக்குக் கிடைத்த தகவல்களை, நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபுவிடம் தெரிவித்தோம். அவற்றை முழுமையாக உள்வாங்கிய டி.ஐ.ஜி., இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்த புதிய தனிப்படை அமைத்தார்.

டி.ஐ.ஜி.யின் இந்த வேகத்தை இன்ஸ் ராஜகுமாரி எதிர்பார்க்கவில்லை. நகைக்கொள்ளை தொடர்பான 295/2019 கிரைம் நம்பரை டி.ஐ.ஜி.யின் தனிப்படை கேட்டபோது, கிறங்கிப் போயிருந்தார். காரணம், அதற்கு முந்தைய நாள்தான் நக்கீரன் சார்பில் இதே நம்பரைக் கேட்டிருந்தோம்.

அடுத்தடுத்து நடந்த விசாரணையில், கேரளாவைச் சேர்ந்த பட்டறை சுரேஷின் கைது, முக்கியத் திருப்பங்களை ஏற்படுத்தியது. அவரிடம் இருந்து ஏழேமுக்கால் லட்சம் மதிப்பிலான கொள்ளைபோன பொருட்களும், ரொக்கமும் மீட்கப்பட்டன. மேலும், இதில் தொடர்புடைய சுள்ளான் சுரேஷ் என்பவரும் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை முதலில் விசாரித்த ராஜகுமாரியின் செயல்பாடுகள் மேலிடத்திற்குப் போகாமல், ஆழ்வார்குறிச்சி எஸ்.எஸ்.ஐ. முருகனால் காப்பாற்றப்பட்டதும் தெரியவந்துள்ளது.

இதுபற்றி டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபுவிடம் பேசியபோது, “""சரியான நேரத்தில் நக்கீரன் என்னுடைய கவனத் திற்கு கொண்டுவந்த தகவல்கள் அடிப்படையில், மேக்சிமம் நகைகள் மீட்கப்பட்டுவிட்டன. இந்த ரெக்கவரி தொடர்பான தகவல்கள், அதிகாரிகளின் செயல் பாடுகள் குறித்து ரிப்போர்ட் கேட்டிருக்கிறேன்''’என்றார்.

-பரமசிவன்