மூத்த தோழருக்கு புது வீடு!

தியாகமும் எளிமையுமே பொதுவாழ்வு என அரசியல் இலக்கணமாகத் திகழும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்ததலைவர் தோழர் நல்லகண்ணு, சென்னை தியாகராய நகரில் உள்ள வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் வசித்து வந்தார். 1953-ல் கட்டப்பட்ட இந்தக் குடியிருப்பில் வசிப்பவர்களை, சீரமைப்புக் காரணங்களுக்காக உடனடியாக வெளியேற உத்தரவிட்டது அரசு.

nk

இது பொதுத்தளத்தில் விவாதத்தைக் கிளப்பிய நிலையில், "பொது ஒதுக்கீட்டில் இங்கு குடியிருந்தவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்துதரப்படும்' என பின்னர் அரசு விளக்கமளித்தது. அரசின் உத்தரவை ஏற்ற நல்லகண்ணு தாமாகவே வீட்டை காலி செய்து வெளியேறினார். அதேசமயம், தனக்கு வீடு இல்லையென் றாலும் பரவாயில்லை. கக்கன் குடும்பத்தினருக்கு வேறு வீடு ஒதுக்கித் தரும்படி தமிழக அரசிடம் வேண்டுகோள் விடுத்தார்.

Advertisment

இந்நிலையில், நல்லகண்ணுவைத் தொடர்புகொண்டு பேசிய துணை முதல்வர் ஓ.பி.எஸ்., மாற்று ஏற்பாடு தொடர்பாக உத்தரவாதம் கொடுத்திருந்தார். அதன்படி, சென்னை நந்தனம் வீட்டுவசதி வாரியக் குடியிருப்புப் பகுதியில் லோட்டஸ் காலனி 3-ஆவது தெருவில், இரண்டு படுக்கை அறைகளைக் கொண்ட தனி வீடு நல்லகண்ணுவிற்கு ஒதுக்கித் தரப்பட்டுள்ளது. இந்த வீட்டில் ஆயுள் முழுவதும் நல்லகண்ணு வசிக்கலாம். வாடகை இல்லை.

தனது இரண்டாவது மகளான ஆண்டாளின், கே.கே.நகர் வீட்டில் குடும்பத்தினருடன் வசித்துவந்த நல்லகண்ணு, தற்போது தனக்கு ஒதுக்கப்பட்ட புதிய வீட்டில் குடியேறியிருக்கிறார். “""நேர்மை மற்றும் எளிமையான அரசியல் வாழ்க்கைக்கு கிடைத்த அங்கீகார மாகவே இதைப் பார்க்கிறேன். என்னிடம் இரண்டாயிரம் புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றை வைப்பதற்காக, இந்த வீட்டில் தனிஅறை ஒதுக்கியிருக்கிறேன். புத்தகங்கள்தான் என் வாழ்வை நகர்த்த உதவுகின்றன. எப்போதெல்லாம் தோன்றுகிறதோ, அப்போதெல்லாம் புத்தக வாசிப்பில் ஈடுபடப் போகிறேன்'' என்கிறார் மூத்த தோழர் நல்லகண்ணு.

-மதி

Advertisment

படம்: அசோக்

துப்பாக்கி லைசன்ஸ் கேட்கும் ஓ.பி.ஆர்.!ss

அ.தி.மு.க.வின் ஒரே எம்.பி.யாக ஓ.பி.ரவீந்திர நாத் குமார் டெல்லி சென்றதால், அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியும் அவருக் குக் கிடைத்தது. ஆனால், அவர் பெரிதும் எதிர் பார்த்த மந்திரி பதவி மட்டும் மிஸ்ஸிங். அதை எப்படியாவது கைப்பற்றி விடவேண்டும் என்று நாளும்பொழுதும் உழைத் துக் கொண்டிருக்கிறார். இதற்காக, முத்தலாக் தடைச் சட்டம், குடியுரி மைத் திருத்தச் சட்டம் போன்ற அடிப்படைவாத சட்டங்களுக்கு ஆதரவாக வாக்களித்தார்.

இது எதிர்க்கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இஸ்லா மிய மக்கள் மத்தியில் ஓ.பி.ஆர். மீது வெறுப்பு உண்டானது. மேலும், இந்துத்வா கூட்டங் களில் கலந்துகொண்டு, அதிரடியாக பேசிக் கொண்டிருக்கிறார். சில வாரங்களுக்கு முன்பு கம்பத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்த ஓ.பி.ஆர். வாகனத்தின் மீது இஸ்லாமிய அமைப்பினர் சிலர் தாக்குதல் நடத்தி னர். ஏரியாவில் மிகப்பெரிய பதற் றத்தை ஏற்படுத்திய இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தொகு திக்கு எப்போதும் பலத்த பாதுகாப் புடனே வருகிறார் ஓ.பி.ஆர்.

இந்நிலையில் தான், அரசியல் வாதிகள், வி.வி.ஐ.பி.க் களைப் போல, தானும் சொந்தமாக துப்பாக்கி வைத்துக்கொள்ளும் முடிவை எடுத்திருக் கிறார் ஓ.பி.ஆர். இதற் கான லைசன்ஸ் கேட்டு மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவிடம் மனுவும் கொடுத் திருக்கிறார். ஓ.பி.ஆரின் இந்த மனுவை ஆட்சியர் ஆய்வு செய்துவரும் நிலையில், கூடியவிரைவில் ஓ.பி.ஆருக்கு துப்பாக்கி வைத்துக்கொள்ளும் லைசன்ஸ் கிடைக்க விருக்கிறது

-சக்தி

டார்கெட் புவனகிரி! குழப்பத்தில் தொண்டர்கள்!

s

ஒரு காலத்தில் பா.ம.க. கோட் டையாக இருந்தது விருத்தாசலம் தொகுதி. ஆனால், கம்மாபுரம் ஒன்றியத் திற்கு உட்பட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள், புவனகிரி தொகுதியோடு சேர்க்கப்பட்டதால், விருத்தாசலத்தில் பா.ம.க.வின் பலம் குறைந்து, தே.மு.தி.க., அ.தி.மு.க. என தொகுதி கைமாறியது.

இந்நிலையில், சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து கூட்டங்கள் நடத்திவரும் அன்புமணி ராமதாஸ், கம்மாபுரம் ஒன்றியத்திற்காகவே விருத்தாசலத்தில் கூட்டம் நடத்தினார். இதன்மூலம், பா.ம.க. விருத்தாசலத் திற்கு மாற்றாக புவனகிரியைக் குறி வைப்பது தெளிவானது.

இதுகுறித்து பா.ம.க.வினரிடையே விசாரித்தபோது, ""கம்மாபுரம் ஒன்றியத் தின் கிராமங்களைச் சேர்ந்த 50 ஆயி ரம் வாக்குகள் புவனகிரிக்கு சென்று விட்டன. அதேசமயம், நல்லூர் ஒன்றியத் தின் கிராமங்கள் விருத்தாசலத்தில் சேர்ந்ததால், பா.ம.க. வெற்றி கேள்விக் குறியானது. மக்களவைத் தேர்தலில் புவனகிரியில் அ.தி.மு.க.வுக்கு பெருவாரி யான வாக்குகள் கிடைக்க பா.ம.க.தான் காரணம். அதனால், கூட்டணியே அமைத் தாலும்கூட புவனகிரியை பா.ம.க. விட்டுக் கொடுக்காது'' என்றனர்.

எம்.பி. தேர்தலில் கடலூரில் போட்டியிட்டு தோல்வியடைந்த மருத் துவர் கோவிந்தசாமி பா.ம.க. வேட் பாளராக புவனகிரியில் போட்டியிடலாம். அதேசமயம், 2016-ல் தனித்துப் போட்டி யிட்டபோது, அண்ணாமலை பல்கலைக் கழக வேலையை விட்டு தேர்தலில் போட்டியிட்டு தோற்றுப்போன அசோக் குமாரும் புவனகிரியைக் குறி வைத்து தீவிரமாக பணியாற்றி வரு கிறார் என்கிறது பா.ம.க. தரப்பு.

அ.தி.மு.க. தரப்பினரோ, ""கடலூர் மேற்கு மாவட்டத்தில் வரும் புவனகிரியை மா.செ. அருண்மொழித் தேவன் விட்டுக் கொடுக்கமாட்டார் என்கின்றனர். ஆனால், "விருத்தாசலத்தைத் தலைமையிடமாகக் கொண்டு, தனி மாவட்டம் ஏற்படுத்த வேண் டும்' என்கிற கோரிக்கை நிறை வேறிவிடும் என்ற நம்பிக்கையில் அருண்மொழித்தேவன் இருக்கிறா ராம். அப்படி நடந்தால், விருத்தா சலத்தின் மா.செ.வாக ஆகி, சட்ட மன்றத் தேர்தலிலும் வெற்றி பெற லாம் என்று கணக்கு போட்டிருக் கிறார்'' என்கிறார்கள் ர.ர.க்கள்.

கூட்டணியில் இருக்கும் இரண்டு கட்சிகளும் ஒரே தொகுதி யைக் குறிவைத்துள்ளதால், தொண் டர்களுக்குத்தான் குழப்பம்.

-சுந்தரபாண்டியன்