சிக்னல் : திருநங்கையின் சட்டப் போராட்டம்!

ss

திருநங்கையின் சட்டப் போராட்டம்!

பெயர்தான் தாய்நாடு. ஆனால், சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகளில் ராணுவத்தில் பெண்கள் உயர்பதவி அடைவதற்கான ssவாய்ப்பே இப்போதுதான் கிடைக்கிறது. பெண்கள் நிலையே இதுதான் என்றால், திருநங்கைகளைப் பற்றி சொல்லவா வேண்டும்? பொதுசமூகம் கண்டுகொள்ளாத இந்தப் பிரிவிலிருந்து, தனது அடையாளத்துடனே வென்று காட்டியிருக்கிறார் திருநங்கை ரக்ஷிகாராஜ்.

இந்தப்பயணம் பற்றி நம்மிடம் பேசிய ரக்ஷிகாராஜ், ""காஞ்சிபுரம், வாலாஜாபாத்தான் சொந்த ஊர். பள்ளிக் காலத்தில் என்னைத் திருநங்கையாக உணர்ந்த தருணத்திலேயே ஒடுக்குதலை எதிர்கொண்டேன். இருந்தபோதும், விரும்பிய பி.எஸ்.சி. நர்சிங் படிப்பை, பத்மஸ்ரீ நர்சிங் கல்லூரி முதல்வர் டாக்டர்.மேனகா வழிகாட்டுதலுடன், ஆண் (ராஜ்குமார்) என்ற அடையாளத்துடனே தொடங்கினேன்.

தனியாக வாடகைவீடு. செலவுக்கு, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு இயக்கத்தில் பகுதிநேர வேலை. ஒருவழியாக கெசட்டில் பெயரை ரக்ஷிகாராஜ் என்று மாற்றிக்கொண்டு, 2018-ல் படிப்பையும் முடித்தேன். தமிழ்நாடு செவிலியர் கவுன்சிலில் பதிவுசெய்யப் போனால், படிவத்தில் ஆண்/பெண் என்று மட்டுமே இருந்தது. இ

திருநங்கையின் சட்டப் போராட்டம்!

பெயர்தான் தாய்நாடு. ஆனால், சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகளில் ராணுவத்தில் பெண்கள் உயர்பதவி அடைவதற்கான ssவாய்ப்பே இப்போதுதான் கிடைக்கிறது. பெண்கள் நிலையே இதுதான் என்றால், திருநங்கைகளைப் பற்றி சொல்லவா வேண்டும்? பொதுசமூகம் கண்டுகொள்ளாத இந்தப் பிரிவிலிருந்து, தனது அடையாளத்துடனே வென்று காட்டியிருக்கிறார் திருநங்கை ரக்ஷிகாராஜ்.

இந்தப்பயணம் பற்றி நம்மிடம் பேசிய ரக்ஷிகாராஜ், ""காஞ்சிபுரம், வாலாஜாபாத்தான் சொந்த ஊர். பள்ளிக் காலத்தில் என்னைத் திருநங்கையாக உணர்ந்த தருணத்திலேயே ஒடுக்குதலை எதிர்கொண்டேன். இருந்தபோதும், விரும்பிய பி.எஸ்.சி. நர்சிங் படிப்பை, பத்மஸ்ரீ நர்சிங் கல்லூரி முதல்வர் டாக்டர்.மேனகா வழிகாட்டுதலுடன், ஆண் (ராஜ்குமார்) என்ற அடையாளத்துடனே தொடங்கினேன்.

தனியாக வாடகைவீடு. செலவுக்கு, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு இயக்கத்தில் பகுதிநேர வேலை. ஒருவழியாக கெசட்டில் பெயரை ரக்ஷிகாராஜ் என்று மாற்றிக்கொண்டு, 2018-ல் படிப்பையும் முடித்தேன். தமிழ்நாடு செவிலியர் கவுன்சிலில் பதிவுசெய்யப் போனால், படிவத்தில் ஆண்/பெண் என்று மட்டுமே இருந்தது. இங்கு பதிவுசெய்தால் மட்டுமே நர்சிங் வேலைசெய்ய லைசன்ஸ் கிடைக்கும். மூன்றாம் பாலினம்தான் எங்கள் அடையாளம். அப்படித்தானே பதிவுசெய்ய முடியும் என்று முறையிட்டால், வேறு வழியில்லை என்றார்கள். நான் விடவில்லை.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரில் தொடங்கி பலரிடமும் புகாரளித்தேன். பலனில்லை. நீதிமன்றத்தை நாடினேன். விண்ணப்பத்தில் தற்காலிகமாக மூன்றாம் பாலினத்தவர் என்ற பிரிவை உருவாக்கி, பதிவுசெய்துகொள்ள நீதி இடம் தந்தது. இன்று இந்தியா விலேயே மூன்றாம் பாலினத்தவராக பதிவுசெய்த முதல் திருநங்கை நான்'' என்று பெருமிதம் கொள்கிறார்.

ரக்ஷிகாவின் இந்த சட் டப்போராட்ட வெற்றி, அவரைப் போன்ற திருநங்கைகளுக்கு சுயமரியாதையையும், வாய்ப் பையும் ஏற்படுத்தித் தந்தி ருக்கிறது.

-அரவிந்த்

சி.ஏ.ஏ. ஸ்டார்ட்! சிறையில் நால்வர்!

ss

அண்டைநாடான வங்கதேசத் தில் இருந்து ஏராளமானோர் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங் களில் தஞ்சம் புகுந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலா னோர் பிழைப்புத்தேடி பிற மாநிலங்களுக்கும் செல் கின்றனர். நல்லகூலி கிடைப்பதால், தமிழகத் திலும் தங்கி பலர் வேலை செய்து வருகின்றனர்.

குறிப்பாக கோவை, திருப்பூர், பெருந்துறை போன்ற தொழில் நகரங் களில் இதுபோல வந்தவர் கள் குடும்பம் குடும்பமாக தங்கியுள்ளனர். இவர்களி டம் பாஸ்போர்ட், விசா போன்ற எந்த அடையாளங் களும் இருப்பதில்லை. இப்படி இந்தியக் குடி யுரிமை இல்லாதவர்களை தீவிரமாகக் கண்காணிக்கு மாறு, தமிழக உளவுத்துறை போலீசாருக்கு சமீபத்தில் ரகசிய உத்தரவு பிறப்பித் துள்ளது.

இதன்படி, ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள திருவேங்க டம் பாளையம் புதூர் மாகாளியம்மன் கோவில் அருகில், வாகனத் தணிக்கை யில் ஈடுபட்டிருந்தார் ஆய்வாளர் செந்தில்குமார். அப்போது, அந்தவழியே நடந்துசென்ற நான்குபேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்துள்ளார்.

இதில், நால்வரும் வங்கதேசத்தைச் சேர்ந்த பரூக் ஹாஜி, ஹிமுல் இஸ்லாம், சிராஜ் ஹாஜி, ரொபியுல் இஸ்லாம் என்பதும், இந்தியக் குடி யுரிமைக்கான எந்த ஆதாரங் களும் இல்லாமல் திருவேங் கிடம்பாளையம் புதூரில் தங்கி, பெருந்துறை சிப்காட் தொழிற் பேட்டையில் செயல்படுகிற தனியார் நிறு வனங்களில் வேலைசெய்வதும் தெரியவந்துள்ளது. இதனை சம்பந்தப் பட்ட நிறுவனங் களும் உறுதிசெய் தன. இதையடுத்து, சட்டவிரோதமாக குடியேறியதாக வழக்குப் பதிவு செய்த பெருந் துறை காவல் ஆய்வாளர் சர வணன், நான்கு பேரையும் புழல் சிறையில் அடைத் தார்.

சட்ட விரோத மாக குடியேறி இருந்தாலும், சம்பந்தப்பட்ட நாட்டிற்கு தகவல் தெரிவித்து, அனுப்பி வைக்க வேண்டியது அரசின் கடமை. ஆனால், சி.ஏ.ஏ.வின் முன்வடிவம் போல, அரசே அவர்களை சிறையில் அடைக் கிறது.

-ஜீவாதங்கவேல்

நாளை இதுதான் கதி! நூதனப் போராட்டம்!

குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறப் போவதில்லை என்று பிடிவாதம் காட்டுகிறது மத்திய அரசு. இந்தியாவின் பல பகுதிகளைப் போலவே, தமிழகமும் இதற்கு எதிராக கொந்தளிக்கிறது. வண்ணாரப் பேட்டையில் போராட்டம் நடத்தியதற்காக ssகாவல்துறை தாக்கியதில் இருந்து, தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. கேரளாவைப் போல தமிழ்நாட்டிலும் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றச் சொல்கிறார்கள் போராட்டக்காரர்கள். ஆனால், இந்த சட்டத்தால் பாதிப்பு வராது என்று மத்திய அரசே சொல்லிவிட்டது என சட்டமன்றத்தில் பேசி, போராட்டக்காரர்களின் எதிர்பார்ப்பை பொய்யாக்கிவிட்டது தமிழக அரசு. இதனால், தமிழகத்தின் பல பகுதிகளில் டெல்லியின் ஷாகீன்பாக் போல, தொடர் காத்திருப்புப் போராட்டங்கள் நடக்கின்றன.

திருவாரூர் மாவட்டத்தில், முத்துப்பேட்டையில் நடந்துவரும் காத்திருப்புப் போராட்டத்தில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர். தினந்தோறும் போராட்டத்தை திருவிழாவைப் போல நடத்துகிறார்கள்.

இதன் நான்காவது நாள் போராட்டத்தில், சிறைபோல கூண்டுசெய்து, "இன்று நாம் அமைதியாக இருந்தால், நாளை நமக்கும் இந்தக் கூண்டுதான்' என்ற வாசகத்துடன் இளைஞர் கள் கூண்டுக்குள் இருந்தபடி நூதனப் போராட்டத்தில் ஈடு பட்டனர். இவர்களின் போராட் டம் வேகமெடுப்பதைப் பார்த்த போலீசார், "இரவு -பகலென்று 24 மணிநேரமும் போராடாதீர்கள். இரவு 10 மணிக்கெல்லாம் முடித்துக் கொள்ளுங்கள்' என்று கேட்டுக் கொண்டதால், அதற்கு மதிப்புக் கொடுத்து, காலை 6 மணிமுதல் இரவு 10 மணிவரை மட்டுமே போராடி வருகின்றனர்.

இதுகுறித்து போராட்டத்தில் இருந்த இளைஞர்கள் பேசும்போது, ""உரிமைக்காக போராடுகிறோம். இது அமைதிவழிப் போராட்டம். இஸ்லாமியர்கள் மட்டுமின்றி, அனைத்துத் தரப்பின ரும் வீதிக்கு வந்து போராடுகிறார்கள். அரசு கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கும் வரை ஓயமாட்டோம்'' என்றனர் உறுதியுடன்.

-இரா.பகத்சிங்

nkn260220
இதையும் படியுங்கள்
Subscribe