நடிகர் கார்த்தியின் இயற்கை பொங்கல்!
ஈரோடு மாவட்டம் கொடு முடிக்கு அருகே யுள்ளது கிளாம்பாடி கிராமம். இதிலிருந்து வயல்பரப்புக்குள் இருக்கிறது குமார சாமி கவுண்டன் பாளையம். இந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சின்னுச்சாமி கவுண்டரின் மகள் ரஞ்சனியைத்தான், நடிகர் சிவக்குமாரின் இரண்டாவது மகன் கார்த்தி திருமணம் செய்துள்ளார்.
தீபாவளி, பொங்கல் போன்ற விஷேச நாட்களில், குடும்பத்துடன் மாமனார் வீட்டிற்கு வருவதை நடிகர் கார்த்தி வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அதேபோல் இந்தப் பொங்கலுக்கும் வந்திருந்தார். இந்த கிராமத்தை ஒட்டியுள்ள நிலங்கள் வளமுடன் இருக்க காளிங்கராயன் வாய்க்கால் நீர்தான் காரணம். 1280-ஆம் ஆண்டு பவானி ஆற்று நீரைத் தடுத்து அணைகட்டி, சுமார் 80 கி.மீ. தூரத்திற்கு வாய்க்கால் வெட்டி நீரைக் கொண்டுவந்தவர் காளிங்கராயன். இதனால் அவர் பெயரிலேயே அழைக்கப்படும் வாய்க்காலில், மனைவி ரஞ்சனி, மகள் உமையாளுடன் சென்று முளைப்பாரிவிட்டு, வாய்க்காலுக்கு மரியாதை செலுத்தியதோடு, அங்கு பணிசெய்து கொண்டிருந்த விவசாயிகளுடன் அமர்ந்து பேசினார் கார்த்தி.
""ஒடக்கான்கூட முட்ட

""ஒடக்கான்கூட முட்டை வைக்காத வறப்பட்டிக்காடு எங்கள் கிராமம். போதுமான நீராதாரம் இல்லாததுதான் அதற்குக் காரணம். ஆனால், இந்தக் கிராமம் எங்கு பார்த்தாலும் பசுமையாகக் காட்சியளிக்கிறது. இந்த பசுமைக்கும், செழுமைக்கும் காரணம், காளிங்கராயன் என்கிற தனிமனிதன். ஊர்நலனுக்கு அவர் உருவாக்கிய வாய்க்கால், பலநூறு ஆண்டுகளாக பலனளிக்கிறது. அதில் சாய விஷக் கழிவுகளைக் கலக்கிறார்கள். இதனால், நம் ஆரோக்கியம் பாழாகிறது. வரும் தலைமுறையினர் இதனை சரிசெய்வார்கள் என்று நம்புகிறேன்'' என்றார் உணர்ச்சியுடன்.
நடிகர் கார்த்தியின் வேண்டுகோளை விவசாயிகளும், இளைஞர்களும் உறுதிமொழியாக எடுத்துக் கொண்டனர். ஊடக வெளிச்சத்திற்கு வராத இந்த நிகழ்வு நடந்து கொண்டிருக்கும்போதே, ஒரு அரசியல்வாதி தன்னை விவசாயி என்று விளம்பரப்படுத்திக் கொண்டிருந்தார்.
-ஜீவாதங்கவேல்
பள்ளிச் சிறுமியின் சட்டப் போராட்டம்!
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியைச் சேர்ந்தவர் சமூக ஆர்வலரும், வழக்கறிஞ ருமான பாஸ்கரன். இவரது ஆறுவயது மகள் அதிகை முத்தரசி, அப்பகுதியில் உள்ள மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இரண் டாம் வகுப்பு படித்துவருகிறார்.
இந்தப் பள்ளியின் கட்டிடங்கள் பழுதாகி, நீர் கசிவதாக மாவட்ட ஆட்சியர், கல்வி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளைச் சந்தித்து, மாணவி அதிகை புகாரளித் திருந்தார். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், தனது தந்தையின் வழிகாட்டுதலின்படி சென்ற ஆண்டு செப்டம்பரில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந் தார்.
வழக்கு விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில், பள்ளியின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாவட்ட நீதிபதி சரஸ்வதிக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வு உத்தரவிட்டது. கடந்த 10-ந் தேதி இந்த அறிக்கை தாக்கல் செய்யப் பட்ட நிலையில், மாணவி அதிகை முத்தரசியை அழைத்து, பள்ளி யின் நிலைகுறித்து நீதிபதிகள் கேட்டறிந்தனர். பிறகு அரசு வழக்கறிஞர் முனுசாமியை அழைத்து, "மாணவர்களின் கல்வி விவகாரத்தில் அரசு கவுரவம் பார்க்கக்கூடாது' என கண்டித்த தோடு, இதுவரை எடுக்கப் பட்டுள்ள நடவடிக்கை குறித்து 27-ந் தேதி அறிக்கை சமர்ப்பிக்கு மாறு உத்தரவிட்டனர்.
இதுதொடர்பாக நம்மிடம் பேசிய மாணவி அதிகையின் தந்தை பாஸ்கரன், ""இந்த முயற்சி களால் என் மகளை பள்ளியில் தனிமைப்படுத்தி, மன உளைச்ச லுக்கு ஆளாக்குகிறார்கள். மதிய உணவு கொண்டுசெல்லும் என் மனைவியை பள்ளிக்குள் அனு மதிப்பதில்லை. பள்ளிக்கு அருகில் காலியாக இருக்கும் அரசு நிலத்தை ஆக்கிரமிக்கும் முயற்சிகள் நடக்கின்றன. அதை யும் தடுக்கவே அதிகை மனு செய்துள்ளார். நீதிமன்றம் நல்ல தீர்ப்பு வழங்கும் என்றே எதிர்பார்க்கிறோம்'' என்றார்.
-அரவிந்த்
பக்தர்களைக் குறிவைக்கும் கிராக்கி கும்பல்!
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் உலகப் பிரசித்தி பெற்றது. இங்கு சாதாரண நாட்களில் ஆயிரக்கணக்கிலும், விஷேச நாட்களில் லட்சக்கணக்கிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களின் சிபாரிசுக் கடிதங்களுடன், அம்மனை சிறப்பு தரிசனம் செய்யவும் பக்தர்கள் அனுமதிக்கப்படு கிறார்கள்.
இப்படி வரும் சிபாரிசுக் கடிதங்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரிக்கத் தொடங்கியது. இதன் பின்னணியை அறிய விசா ரணையில் இறங்கிய போது தான், ஏரியா அமைச்சர் வளர்மதியின் பெயரில் போலி சிபாரிசுக் கடிதங்கள் வருவது தெரியவந்தது. ஒரு கடிதத்திற்கு ஐந்துபேர் வீதம் அனுமதித்து, தலைக்கு ரூ.500 வசூல் செய்கிறார்கள். இதை விற்பதற்காகவே சமயபுரம், துறையூர், மகாளிகுடி போன்ற இடங்களில் இருந்து புரோக் கர்கள் கிளம்பி வருகிறார்கள்.
25 பேருக்கும் மேல் இந்த கும்பலில் இயங்கி வருவதாகவும், இவர்கள் காக்கிகளுக்கு தவறாமல் கப்பம் கட்டுவதாகவும் சொல்கிறார்கள். சமீபத்தில் சமயபுரம் கோவிலுக்குள் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த கும்பலை, கோவில் இ.ஒ. நடராஜன் விரட்டியபோது, அமைச்சரின் போலியான கையெழுத்துடன் சிபாரிசுக் கடிதங்களை அந்த கும்பல் விட்டுச்சென்றது.
கோவிலின் சி.சி.டி.வி. ஆதாரங்களை வைத்து ஆய்வு செய்தபோது, துறையூரைச் சேர்ந்த கோவிந்தன், மகாளிகுடியைச் சேர்ந்த செந்தில் ஆகியோர் அந்த கும்பலில் இருந்தது தெரியவந்தது. ஆனாலும், இதுவரையும் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.
இதுபற்றி கோவில் இ.ஒ. நடராஜனிடம் கேட்டபோது, ""இதுக்குப் பெயர் ஏதோ கிராக்கி கும்பல்னு வச்சிருக் காங்களாம். இவுங்க அட்டகாசம் அதிகமாத்தான் இருக்கு. போலீஸ்கிட்ட சொன்னோம். சிலரைப் பிடிச்சிட்டு போனாங்க. அடுத்து என்ன நடந்துச்சுனு தெரியல'' என்றார்.
-ஜெ.தாவீதுராஜ்