நடு இரவில் திறக்கப்படும் சிலைகள்!

அ.தி.மு.க.வை கண்ணசை வில் வைத்திருந்த ஜெ.வின் உருவச் சிலைகளை, சமீபகால மாக நடுராத்திரியிலேயே திறக்கின்றனர் அ.தி.மு.க.வினர். தஞ்சை ரயிலடியில் எம்.ஜி.ஆர். சிலை அருகில் வைக்கப்பட்ட ஜெ. சிலையைத் திறந்ததும் நள்ளிரவில்தான். இது ர.ர.க்கள் மத்தியில் கொந் தளிப்பை ஏற்படுத்தியது.

ss

ஒரு காலத்தில் அ.தி. மு.க.வின் அதிகார மைய மாக இருந்த திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி யிலும் இதேபோல ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. இங்குள்ள அ.தி.மு.க. கட்சி அலுவலகம் எதிரில், தெற்கு வீதியும் கிழக்குவீதியும் சந்திக்கும் இடத்தில் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு எம்.ஜி.ஆர். சிலை அமைக்கப்பட்டது. இந்த சிலையைத் திறந்தால் அமைச் சர் காமராஜின் பதவிக்கு ஆபத்தாகும் என்று, அவரது ஆஸ் தான ஜோதிடரான கேரள நம்பூதிரி, அமைச்சர் மனைவியிடம் சொன்னதால், சிலையை மூடியே வைத்திருந்தனர். அதையும் மீறி, கடந்த ஆண்டு மர்ம நபர்கள் சிலர் சிலையைத் திறந்து மாலை அணிவித்துச் சென்றனர். இதனால் சிலையை மூடி, சுற்றிலும் தகரத்தில் செட் போட்டு மறைத்தார் அமைச்சர்.

Advertisment

இந்நிலையில், கடந்த 07-ந் தேதி காலை அந்தப்பக்கம் வந்தவர்களுக்கு ஒரே வியப்பு. தடுப்புகள் அகற்றப்பட்டதோடு, எம்.ஜி.ஆர். சிலைக்கு அருகில் புதிதாக ஜெ. சிலை வைக்கப்பட்டு மாலையும் அணிவிக்கப்பட்டிருந்தது. புதிதாக ஒரு சிலையைக் கொண்டுவந்து நிறுவ, குறைந்தது 4 மணிநேரமாவது பிடிக்கும் என்பதால், சந்தேகம் வலுக்கிறது.

எம்.ஜி.ஆர்., ஜெ. மாதிரி பெரிய தலைவர்களின் சிலை களை கோலாகலமாகத் திறக்காமல், இப்படி யாருக்கும் தெரியாமல் நடு இரவில் திறந்து அவர்களை சிறுமைப்படுத்து கிறார்களே என்று ஆதங்கப்படுகிறார்கள் ர.ர.க்கள். அமைச்சர் தரப்பில் விசாரித்தால், “""இதற்கும் கேரள நம்பூதிரி, அமைச்சருக்குக் கொடுத்த ஐடியாதான் காரணம். இவ்வளவு பெரிய சம்பவம் ரோந்து போகிற காக்கிகளுக்குத் தெரியாமலா நடந்திருக்கும்'' என்று சிரிக்கிறார்கள்.

-இரா.பகத்சிங்

Advertisment

வேட்பாளரைப் புலம்ப வைத்த தேர்தல் தில்லுமுல்லு!

ss

""வாக்கு எண்ணும்போது, நானும் சக போட்டியாளரான சரவணனும் சரிசமமாக 183 வாக்குகள் பெற்றிருந்தோம். குலுக்கல் முறையில் வெற்றியை அறிவிப்பதாக சொல்லிவிட்டு, சத்தமில்லாமல் சரவணனுக்கு வெற்றிச் சான்றிதழைக் கொடுத்துவிட்டார்கள். தேர்தல் அதிகாரிகளுக்கு ரூ.1 லட்சம் கொடுத்து சரவணனை வெற்றியாளராகக் காட்டிவிட்டனர் ஆளுங்கட்சியினர்.

லஞ்சம் வாங்கியவர்களில் ஒருவரான காஜாமைதீன் வந்தே நவாஸ், உடல்நலக்குறைவு எனச்சொல்லி மருத்துவமனையில் போய் படுத்துக்கொண்டார். அலுவலகப் பக்கமே வரவில்லை'' – விருதுநகர் ஒன்றியத்தில் கூரைக்குண்டு ஊராட்சியின் 8-வது வார்டில் உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்டு ஏமாற்றப்பட்ட ராமமூர்த்தியின் புலம்பல்தான் இது.

இதுதொடர் பான புகாரை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் மற்றும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியிருக்கிறார் ராமமூர்த்தி. தனக்கு இழைக்கப்பட்ட அநீதி ஏற்படுத்திய மன உளைச்சலால், தீக்குளிக்க முயற்சித்து காவலர்களால் தடுக்கப்பட்டார். தனது ஆதரவாளர்களுடன் சாலைமறியல் நடத்தியதால், 42 பேர்மீது வழக்கு வேறு பதிவாகியுள்ளது.

தேர்தல் அதிகாரி காஜாமைதீனை நேரில் சந்தித்து நியாயம்கேட்டே ஆகவேண்டும் என்று ராமமூர்த்தி அடம்பிடிக்க, அருப்புக்கோட்டையிலுள்ள அந்தத் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். படுக்கையில் இருந்தவரைப் பார்த்த மாத்திரத்தில் ராமமூர்த்தி டென்ஷனாகி சத்தம் போட்டிருக்கிறார். உடன்வந்த போலீஸ் அதிகாரி ராமமூர்த்தியின் வாயைப்பொத்தி, “""இப்படியெல்லாம் சத்தம் போட்டீங்கன்னா.. அவருடைய உயிருக்கே ஆபத்தாகிவிடும்'' என்றுகூறி வெளியே இழுத்து வந்திருக்கிறார்.

காஜாமைதீனை பலமுறை தொடர்புகொண்டோம். நாம் அனுப்பிய குறுந்தகவலுக்கும் பதிலில்லை. “

""இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்ற நம்பிக்கையில், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டதுதான், நான் செய்த மிகப்பெரிய தவறு'' என்று கண்ணீர்விட்ட ராமமூர்த்தி, ""நீதி கிடைக்கும்வரை ஓயமாட்டேன்'' என்றார் பரிதாபமான குரலில்.

-ராம்கி

பா.ஜ.க. பேரணியை புறக்கணித்த சரத்குமார்!

ss

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடிக்கின்றன. அரசியல் கட்சிகள், மாணவர்கள் நடத்தும் இந்தப் போராட்டங்களுக்கு பொதுமக்களும் ஆதரவு தெரி விக்கின்றனர். இதையடுத்து குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து வள்ளுவர் கோட்டத்தில் பா.ஜ.க. நடத்திய ஆதரவுப் போராட்டம் பெரியளவில் கவனம் பெறவில்லை.

இதற்கிடையே, தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சென்னையில் நடத்திய பேரணி இந்திய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் வலுக்கும் போராட்டங்களால் எரிச்சலான பா.ஜ.க. தலைமை, குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து வீடுவீடாக பிரச்சாரம் செய்யுங்கள் என தொண்டர்களுக்கு உத்தரவிட்டது. இதைச் செய்வதோடு, பல இடங்களில் பேரணியாக சென்று மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வருகின்றனர் பா.ஜ.க.வினர்.

தமிழகத்திலேயே திருச்சியில்தான் முதல்முதலில் இஸ்லாமிய அமைப்புகள் ஒன்றுதிரண்டு மத்திய அரசைக் கண்டித்து மிகப்பெரிய பேரணி நடத்தின. இப்ராஹிம் சாலையில் நடந்த இந்த பேரணிதான், தமிழகத்தின் பிற பகுதிகளிலும் இஸ்லாமிய அமைப்புகள் ஒன்றுதிரள காரணமாக அமைந்தது.

இதைக் குறிவைத்தே, 09-ந் தேதி பா.ஜ.க. சார்பில் திருச்சி தபால்நிலையம் அருகில் மிகப்பெரிய பேரணியை நடத்தியது பா.ஜ.க. இந்தப் பேரணிக்கு சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், நடிகை கவுதமி ஆகியோரை சிறப்பு அழைப்பாளர்களாக அறிவித்து போஸ்டர் அமைத்திருந்தனர். அதில், ஒரு கட்சியின் தலைவரான தனது பெயருக்கு இணையாக, நடிகை கவுதமியின் பெயர் இருப்பதைக் கண்டு அதிர்ந்த சரத்குமார், பேரணியில் கலந்துகொள்வதை தவிர்த்துவிட்டார்.

ஏற்கனவே, பா.ஜ.க. நடத்தும் போராட்டங்களில் கூட்டணிக் கட்சிகளான அ.தி.மு.க.வும், பா.ம.க.வும் கலந்துகொள்வதில்லை. இப்போது சரத்குமாரும் ஒதுங்கிவிட்டார்.

-ஜெ.டி.ஆர்.