போதை கணவனை அடித்தே கொன்ற மனைவி!
முத்துராஜுக்கு சொந்த ஊர் சிவகாசியை அடுத்துள்ள கே.மடத்துப் பட்டி. புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்ததோ ஓசூர் பார்டரில். இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவைதான், மனைவி தனலெட்சுமி, மகன் அரவிந்தைப் பார்க்க சொந்த கிரா மத்தில் தலைகாட்டுவார். வீட்டுக்குள் எண்ட்ரி ஆகும்போது நிதானம் தவறிய தள்ளாட்டம்தான்.
சந்தேகப்பேய் தொற்றிக்கொள்ள, குடிபோதையில் தனலெட்சுமியிடம், "நான் ஊர்ல இல்லாதப்ப நீ என்னென்ன பண்றன்னு எனக்குத் தெரியும்டி' என்று கண்டபடி பேசுவார், அடிப்பார். வீட்டுப் பிரச்சினை வெம்பக்கோட்டை காவல்நிலையம் வரை போகும். காக்கிகள் முத்துராஜுவை கண்டித்து அனுப்புவார்கள்.
வழக்கம்போலவே, 22-ந் தேதியும் வீட்டில் ரகளை செய்துவிட்டு, பேச்சு மூச்சற்று கிடந்தார் முத்துராஜு. கம்பால் அடிபட்டதால் உடம்பெல்லாம் வரிவரியாகக் காயங்கள். தலையிலும் பலத்த அடி. வலது காது கிழிந்து தொங்கியது. முத்துராஜுவின் உடலில் உயிரில்லாததை அக்கம்பக்கத்தினர் வந்துதான் உறுதிசெய்தனர்.
போலீஸ் மோப்பநாய் ராக்கியின் தேடலில் பிடிபட்டார் அவரது மனைவி தனலெட்சுமி. அவர் அளித்த வாக்குமூலத்தில், "எந்நேரம
போதை கணவனை அடித்தே கொன்ற மனைவி!
முத்துராஜுக்கு சொந்த ஊர் சிவகாசியை அடுத்துள்ள கே.மடத்துப் பட்டி. புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்ததோ ஓசூர் பார்டரில். இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவைதான், மனைவி தனலெட்சுமி, மகன் அரவிந்தைப் பார்க்க சொந்த கிரா மத்தில் தலைகாட்டுவார். வீட்டுக்குள் எண்ட்ரி ஆகும்போது நிதானம் தவறிய தள்ளாட்டம்தான்.
சந்தேகப்பேய் தொற்றிக்கொள்ள, குடிபோதையில் தனலெட்சுமியிடம், "நான் ஊர்ல இல்லாதப்ப நீ என்னென்ன பண்றன்னு எனக்குத் தெரியும்டி' என்று கண்டபடி பேசுவார், அடிப்பார். வீட்டுப் பிரச்சினை வெம்பக்கோட்டை காவல்நிலையம் வரை போகும். காக்கிகள் முத்துராஜுவை கண்டித்து அனுப்புவார்கள்.
வழக்கம்போலவே, 22-ந் தேதியும் வீட்டில் ரகளை செய்துவிட்டு, பேச்சு மூச்சற்று கிடந்தார் முத்துராஜு. கம்பால் அடிபட்டதால் உடம்பெல்லாம் வரிவரியாகக் காயங்கள். தலையிலும் பலத்த அடி. வலது காது கிழிந்து தொங்கியது. முத்துராஜுவின் உடலில் உயிரில்லாததை அக்கம்பக்கத்தினர் வந்துதான் உறுதிசெய்தனர்.
போலீஸ் மோப்பநாய் ராக்கியின் தேடலில் பிடிபட்டார் அவரது மனைவி தனலெட்சுமி. அவர் அளித்த வாக்குமூலத்தில், "எந்நேரமும் குடிதான். அன்னைக்கு ராத்திரி வீட்ல நாங்கள்லாம் விரதம் இருந்தோம். அவரு, புரோட்டாவும், சிக்கனும் வாங்கிட்டு வந்து மாலை போட்டிருந்த மகனை சாப்பிடச் சொல்லி கட்டாயப்படுத்தினாரு. என் தம்பி சஞ்சீவி கிட்ட, நான் வெளியூர் போனதும் உன் அக்காவ வச்சி நீ சம்பாதிக்கிறன்னு கேவலமாகப் பேசினார். அவரு பேச்சைக் கேட்டு ஆத்திரத்துல நானும், தம்பியும் கம்பால மாறி, மாறி அடிச்சோம். செத்துட்டாரு'' என்று ஒப்புக்கொண்டுள்ளார்.
குடியும் சந்தேகமும் மனைவி தனலெட்சுமியின் கையாலேயே முத்துராஜுவின் உயிரைப் பறித்துவிட்டது. தனலெட்சுமியும், அவரது தம்பி சஞ்சீவியும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
-ராம்கி
தங்கத்தேர் இழுக்கும் மோடியின் முரட்டு பக்தர்!
திருச்சி மாவட்டம் துறையூர் அருகேயுள்ள எரகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர். விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணுவுடன் இருந் தவர், பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அவரிடமிருந்து பிரிந்துவிட் டார். பா.ஜ.க. உறுப்பினரான இவர், தனக்குச் சொந்தமான விவசாய நிலத் திலேயே பிரதமர் மோடிக்கு, சின்னதாக ஒரு கோவிலைக் கட்டி, அதில் மோடியின் சிலையையும் வைத்துள்ளார்.
மோடிக்கு கோவில் கட்டியதற் கான காரணத்தை சங்கரிடம் கேட்ட போது, “""என் மகள் தீபா ப்ளஸ்டூவில் 1,105 மதிப்பெண் பெற்றார். ஆனால், போதுமான கட்-ஆப் இல்லாததால், டாக்டராக முடியவில்லை. அப்போது நீட் தேர்வு இருந்திருந்தால், என் மகள் டாக்டராகி இருப்பார். மோடி அரசு நீட் தேர்வைக் கொண்டுவந்திருக்கிறது. என் மகனை நம்பிக்கையோடு நீட் கோச்சிங்கில் சேர்த்துள்ளேன்.
விவசாயிகளுக்கு ஏராள மான திட்டங்கள், இலவச கியாஸ் இணைப்பு, முத்ரா கடன் திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்களைக் கொண்டுவந்த பிரதமர் மோடியை, நான் கடவுளாகவே பார்க் கிறேன். யாருடைய உதவி யும் இல்லாமல், சொந்த செலவில் மோடிக்கு கோவில் கட்ட விரும்பி னேன். எட்டு மாதங் களுக்கு முன்னால் கோவில் கட்டும் பணிகளைத் தொடங்கினேன்.
பா.ஜ.க.வின் மூத்த தலைவர்கள் ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரை வரவழைத்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பதுதான் எனது ஒரே லட்சியம்'' என்கிறார்.
கோவிலுக்குள் மறைந்த முன்னாள் முதல்வர் கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவப் படங்களோடு, உயி ரோடு உள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதல் வர் எடப்பாடி பழனிசாமியின் படங்களுக்கும் பொட்டு வைத்திருக்கிறார். தினமும் மோடி சிலைக்கு பாலாபி ஷேகம், தீபாராதனை காண்பித்து வழிபாடும் நடத்துகிறார்.
மோடியே மீண்டும் இந்தியாவை ஆளவேண்டும் என்பதற்காக பழனி முருகன் கோவிலில் மொட்டைபோட ஓராண்டாக முடி வளர்த்து வரும் சங்கர், கும்பாபிஷேகம் முடிந்ததும் நேர்த்திக்கடனை செலுத்தி, தங்கத்தேர் இழுக்கவுள்ளதாகவும் அதிரடி கிளப்புகிறார்.
-ஜெ.டி.ஆர்.
இதென்ன புதுசா...? தமிழக பா.ஜ.க. கிறுகிறுப்பு!
மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை, கிராமப்புற மக்களுக்கு தெரிவிக்கும் விதமாக ‘"பிரதான் மந்திரி ஜன்கல்யாண்காரி யோஜனா பிரசார் அபியான்'’ (பெயரைக் கேட்டாலே தலைசுற்றுது) என்ற பெயரில் நாடுமுழுவதும் ரத யாத்திரை நடத்துகிறார்கள் பா.ஜ.க.வினர். இதற்கான சகல உதவிகளையும் பிரதமர் அலுவலகமே செய்துதருகிறது.
அதன் ஒருபகுதியாக, தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி பகுதிகளில் ரத யாத்திரைக்கான நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர். 25-ந் தேதி சென்னையில் ரதயாத்திரைக்கான மாநில ஒருங்கிணைப்பாளர் ராம்குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் ஜெய்கணேஷ் நிர்வாகிகளை அறிமுகப்படுத்தினார்.
மாநில கவுரவத் தலை வர்களாக ஓய்வுபெற்ற நீதிபதிகள் கிருஷ்ணன், வள்ளிநாயகம், பெண்கள் பிரிவு மாநிலச் செயலாள ராக சசிகலா, பிரச்சாரப் பிரிவு மாநிலச் செயலாள ராக சூரிய நாராயணன் என தமிழக பா.ஜ.க.விற்கு கொஞ்சமும் சம்மந்தமில் லாத பலரை நியமித்துள்ளனர். இந்த நிகழ்ச்சி பற்றி எந்த விவரமும் அறியாத மூத்த நிர்வாகிகள், அதில் கலந்துகொள்ள இருந்த பொன்னாரை தடுத்து நிறுத்திவிட்டனர்.
இதனால், மேற்குவங்கத்தில் இருந்து டி.வி. நடிகை ஒருவரை அழைத்து வந்து அறிமுக விழாவை நடத்திவிட் டார்கள் பா.ஜ.க.வின் புதுமுகங்கள். இதுபற்றி பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட மூத்த பா.ஜ.க.வினர் பிரதமர் அலுவலகத் திடம் விளக்கம் கேட்க அழைத்தபோது... ரெஸ்பான்ஸ் இல்லையாம்.
"நம்மவர் மோடி ரத யாத்திரை' என்ற பெயரில், ஜனவரி 11 இந்த ரதயாத்திரை தொடங்குகிறது. மத்திய அரசு இதுவரை 168 திட்டங்களை அறிவித்திருந்தாலும், தொடர்ந்து வாராக்கடன் லிஸ்டில் வரும் முத்ரா கடன் திட்டத்தை முன்னிறுத்தியே ரத யாத்திரையில் பிரச்சாரம் நடத்தவும், அதன்மூலம் பா.ஜ.க.வில் ஆட்களைச் சேர்க்கவும் ஒருங்கிணைப்பாளர் ராம்குமாருக்கு அசைன்மெண்ட் கொடுத்திருக் கிறார்களாம்.
-ஈ.பா.பரமேஷ்வரன்