ஓ.பி.எஸ்.- இ.பி.எஸ்.! ஜெ. விசுவாசி யார்?

துணைமுதல்வர் ஓ.பி.எஸ்.ஸின் தந்தை ஒட்டக்காரத்தேவர் பிறந்தது ஸ்ரீவில்லிபுத்தூரில்தான். சொந்தபந்தங்கள் இங்கு அதிகம் என்பதால் அவரை விட்டுக்கொடுக்காமல் பேசுவார்கள்.

Advertisment

signal

உள்ளாட்சித்தேர்தல் கள ரவுண்ட் அப்பிற்காக, ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்தைக் கடந்தபோது, ஜெயலலிதா மீது உண்மையிலேயே பற்றும் பாசமும் விசுவாசமும் வைத்திருப்பவர் ஓ.பன்னீர்செல்வமா? எடப்பாடி பழனிசாமியா? என்று அ.தி.மு.க.வினர் இருவர் தங்களுக்குள் பட்டிமன்றமே நடத்தினார்கள்.

ஓ.பி.எஸ். ஆதரவாளர் கூறிய விவரங்கள் நமக்கே வியப்பை ஏற்படுத்தி யது. 2016, டிசம்பர் 05 ந்தேதி ஜெயலலிதா இறந்தார். அவர் இறந்த கார்த்திகை பஞ்சமி திதியைக் கணக்கிட்டு திவசம் கொடுக்க ரத்தசொந்தங்கள் யாருமில்லை. எனவே, சாஸ்திர சம்பிரதாயங்களில் பெரிதும் நம்பிக்கையுள்ள ஓ.பி.எஸ்., ஜெ. சார்ந்த அய்யங்கார் வகுப்பினருக்கு மட்டுமே இதுபோன்ற காரியங்களை செய்துவரும் மடம் ஒன்றில், இரு ஆண்டுகளாக திவசம் கொடுத்துவந்தார். சமீபத்தில் மகன் பிரதீப்பை அனுப்பியதால்தான், விவரம் லீக் ஆனது.

இதன்காரணமாக, ஜெயலலிதா ஆன்மாவின் பரிபூரண ஆசியைப் பெறுபவராக இருக்கிறார். ஒருநாள் இரவில் மெரினா கடற்கரையைக் கடக்கும் போது, ஒளிவெள்ளத்தில் மிதக்கும் கலைஞர் சமாதியில், இரவிலும் கூட்டம் கூட்டமாக கலைஞருக்கு மரியாதை செய்வதையும், ஜெ. சமாதியில் என்றைக்கோ அலங்கரித்த பூக்கள் வாடிக்கிடந்ததையும் மகன் பிரதீப் பார்த்துவந்து சொல்லியிருக்கிறார்.

Advertisment

தான் தர்மயுத்தம் தொடங்கிய சமாதி இருளடைந்து கிடப்பதா? என்று புலம்பிய ஓ.பி.எஸ்., தினந்தோறும் அதிகாலை 4 மணிக்கெல்லாம் மலர்களால் ஜெ. சமாதியை அலங்கரிக்கவும், எந்தநேரமும் வெளிச்சம் பாய்ச்சவும் மாதம் ரூ.1,80,000 என ஒருவருக்கு காண்ட்ராக்ட் பேசி முடித்திருக்கிறார். இதையடுத்து ஜெ. சமாதியும் தொடர்ந்து அலங்கரிக்கப்படுகிறது. இதிலிருந்தே ஜெ. மீது விசுவாசம் கொண்டவர் யாரென்று தெரிகிறதா?'' என்று கேட்டார் ஓ.பி.எஸ். ஆதரவாளர்.

-ராம்கி

அரசாங்கத் தையே ஏமாற்றிய அதிகாரிகள்!

signal

இந்தியாவின் சிறந்த கிராமமாக, திருவண்ணாமலை மாவட்டம் கிழக்கு ஆரணி ஒன்றியத்திலுள்ள மொழுகம் பூண்டியை தேர்வுசெய்தது மத்திய அரசு. அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்க்க, அங்குசென்று பார்த்தபோது நமக்கு அதிர்ச்சியே மிஞ்சியது.

99 சதவீதம் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் வசிக்கும் இந்த கிராமத்தில், எந்தவித அடிப்படை வசதியும் செய்துதரவில்லை. சாலையில் வழிந்தோடும் கழிவுநீர், சிதிலமடைந்த கால்வாய்கள் என சுகாதாரத்துக்கு கேடுவிளைவிக் கும் வகையில் இருந்தன. பொதுக்கழிப்பிடமும் இல்லை. இந்த கிராமத்துக்கான ஆரம்ப சுகாதார நிலையம், 12 கி.மீ.க்கு அப்பால் இருக்கிறது. குடி தண்ணீருக்கான பாழடைந்த டேங்குகளில் உப்புநீர் கொட்டுகிறது. காலை ஒருமுறை மட்டும் அரசுப்

Advertisment

பேருந்து வந்துசெல்கிறது. பள்ளி செல்லும் குழந்தைகள் மாலை 5 கி.மீ. தூரம் நடந்தே வீடுசேர்கிறார்கள்.

இதுவா இந்தியாவின் சிறந்த கிராமம் என்று ஆரணி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கேட்டால், "அப்படியா? தகவலே வரலையே' என திகில் கிளப்பி னார்கள். மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “""மத்திய அரசின் அந்தியோதயா திட்டத்தின்கீழ், முன்னேறிய, பின்தங்கிய கிராமங்களைப் பற்றிய புள்ளி விவரங்களை சேகரித்து, அவற்றிற்கு நிதி ஒதுக்கி மேம்படுத்துவார்கள். இதற்காக தமிழகத்தில் மகளிர் மேம்பாட்டு அலுவலகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட புள்ளிவிவரத்தை ஊரக வளர்ச் சித்துறை அதிகாரிகள் சரி பார்க்காமல், மத்திய அரசின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ததுதான் குளறுபடிக்குக் காரணம். இதைநம்பி கிராமத் தைப் பார்வையிட வந்த கலெக்டர் கந்தசாமியே அதிர்ந்து போனார்'' என்கிறார்கள்.

சுற்றியுள்ள 25 கி.மீ. தூரத்திற்கு இருப்புப்பாதையே இல்லாத கிராமத்தில் ரயில் வசதி இருக்கிறது. 45 மாணவர் களுக்கு 45 ஆசிரியர்கள் இருக்கிறார்கள் என்று அடித்துவிட்டதெல்லாம் மொழுகம்பூண்டி கிராமம் 91 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்ததற்கான சாம்பிள்கள்.

-து.ராஜா

எடப்பாடிக்கே பிடிக்காத ஆட்சி நடக்குது!

signal

தமிழகம் முழுவதும் இரண்டு கட்டமாக நடக்கவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்காக, அனல்பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள் அரசியல் கட்சித் தலைவர்கள்.

அப்படி நாகை மாவட்டம் வடக்கு பொய்கைநல்லூர் ஊராட்சியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்துப் பேசவந்த கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், தி.மு.க. தலைவர் ஸ்டாலினை வசைபாடுவதாக நினைத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஒரு பிடி பிடித்தார். இது கூடியிருந்த அ.தி.மு.க. தொண்டர்களை நெளியச் செய்தது.

அவர் அப்படி என்னதான் பேசினார்.…""சோம்பேறியா வீட்டுக்குள்ள படுத்துக் கிடக்கிறவனையும், திருடித் திங்கிற வனையும் உள்ளாட்சியில் கொண்டுவந்துட்டா நீங்க மாட்டிக்கி வீங்க. இப்போ மிக எளிமையான, விவசாயி ஆட்சி நடக்கிறது. அதுதான் எடப்பாடி பழனிசாமிக்குப் பிடிக்கலை. இந்த ஆட்சி கலையப் போகுதுன்னு அவரும் பலமுறை சொல்லிட்டாரு. மூன்றரை ஆண்டுகள் ஆட்சியும் ஓடிவிட்டது. இந்த ஆட்சி நடப்பது எடப்பாடி பழனிசாமிக்குப் பிடிக்கலை'' என்று வார்த் தைக்கு வார்த்தை ஸ்டாலினுக்கு பதிலாக எடப்பாடி பழனிசாமியை வசை பாடியதால் கூட்டத்தில் முணுமுணுப்பு கிளம்பியது.

"அரசின் சாதனைகளைச் சொல்லி ஓட்டு கேட்பாருன்னு பார்த்தால், முதல்வரை விமர்சிக்கிறாரே' என கூடியிருந்தவர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட... வேட்பாளர் ஒருவர் அமைச்சரிடம் சொல்ல முயன்றார். அமைச்சரோ பேச்சை முடித்துவிட்டு கிளம்பிவிட்டார்.

"எனக்குக் கூடத்தான் முதலமைச்சர் ஆகணும் என்கிற ஆசை இருக்கு' என்று பேசி ஏற்கனவே பரபரப்பு கிளப்பியவர் அமைச்சர் ஓ.எஸ்.மணியன். அவர் திவாகரனையோ, அவர் குடும்பத்தினரையோ விமர்சித்துப் பேசமாட்டார். ஆனால், டி.டி.வி. தினகரனை கடுமையாக விமர்சிப்பார். அப்படித் தான் எடப்பாடியையும் பேசியிருக்கிறார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

-க.செல்வகுமார்