தேர்தல் களத்தில் தில்லாக ஒரு திருநங்கை!
சமூகத்தில் ஒரு மனிதன், ஆணாகவோ, பெண்ணாகவோ, மாற்றுப் பாலினமாகவோ பிறப்பது எப்படி? கர்ப்பப்பையில் கரு உரு வாகும்போது குரோமோசோம் எனப்படும் இனக்கீற்றே அதனைத் தீர்மானிக்கிறது. இயற்கையின் நியதி இப்படி இருக்கும்போது, மூன்றாம் பாலினம் எனப்படும் திருநங்கைகள் குறித்த புரிதல் இல்லாதவர்களாகவே பலரும் உள்ளனர்.
அதனாலேயே அவர்கள் மனதில் தவறான கண்ணோட்டம் மேலோங்கி நிற்கிறது. இது போன்ற ஒரு சமூகப் பார்வையிலிருந்து முற்றிலும் வேறுபட்டவர்களாக இருக்கிறார்கள் விருதுநகரை அடுத்துள்ள சின்ன பேராலி கிராமத்தினர்.
திருநங்கையான அழகர்சாமி என்ற அழகு பட்டாணியின் சேவை உள்ளத்தை தொடர்ந்து கவனித்து வந்திருக்கின்றனர். 65 வயது அழகு பட்டாணியிடம் "பெரிய பேராலி ஊராட்சிமன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிட நீங்களே தகுதியானவர்' என்று வற்புறுத்தினார்கள். பணபலம் உள்ளவர்கள் மட்டுமே போட்டியிடக்கூடிய உள்ளாட்சித் தேர்தலில், விவசாயக்கூலியான அழகு பட்டாணியின் நற்பண்புகளை அலசி ஆராய்ந்து, அவர் வேட்புமனுத் தாக்கல் செய்வதற்குத் தூண்டுகோலாக இருந்தனர்.
மக்

மக்களின் வேண்டுகோளுக்கிணங்கி, அழகு பட்டாணியும் விருதுநகரிலுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார். கடந்த தடவையும் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, இதே தலைவர் பதவிக்கு இவர் வேட்புமனுத் தாக்கல் செய்தார். "நான், சுகாதாரம் குடிநீர் போன்ற மக்களின் அடிப்படைத் தேவைகளை நிச்சயம் நிறை வேற்றுவேன்' என்று உறுதியளிக்கிறார் அழகு பட்டாணி.
திருநங்கைகளை ஒதுக்கியே வைத்திருக்கும் மக்களிடையே, திருநங்கையான அழகு பட்டாணியின் தலைமைப் பண்பினை அடையாளம் கண்டு, தேர்தலில் போட்டியிடுவதற்கு தூண்டு கோலாக இருக்கின்ற அந்த கிராமத்தினர் பாராட்டுக்குரியவர்களே!
-ராம்கி
பெண் காவல் அதிகாரியால் சின்னாபின்னமான குடும்பம்!
சென்னை சின்னமலை பகுதியைச் சேர்ந்த தொழி லதிபர் மார்ட்டின் என்பவரின் மனைவி பிரின்ஸி, சில தினங்களுக்கு முன்னர் டி.ஜி.பி.யிடம் புகார் மனு கொடுத்தார். அதில், சென்னை மாநகர வடக்கு போக்குவரத்து காவல் துணை ஆணைய ராக இருந்த ஷாமலா தேவி, தனது கணவர் மார்ட்டினைக் கைக்குள் வைத்துக்கொண்டு பல லட்சங்களை வாங்கி யிருப்பதாகக் குறிப் பிட்டிருந்தார்.
இதுதொடர்பாக நம்மிடம் பேசிய பிரின்ஸி, ""பெயிண்டிங் மற்றும் ஈ.பி. காண்ட் ராக்ட் தொழில் மூலமாக போதுமான அளவு மகிழ்ச்சி யோடு, பிள்ளை களுடன் நானும் என் கணவரும் வாழ்ந்துவந் தோம். இந்த நிலையில்தான் 2016 ஆம் ஆண்டு ஒரு கொடுக்கல்- வாங்கல் விவகாரத்தில் உள்ளே நுழைந்தார் ஷாமலாதேவி. தஞ்சாவூரில் இருக்கும் எங்கள் வீட்டில் வாடகைக்கு இருந்த வர்கள் செய்த பிரச்சனையிலும் தலையிட்டு உதவினார். இதில் என் கணவருக்கும், ஷாமலா தேவிக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டது. ஷாமலாதேவியும் அவர் கணவர் திருமுருகனும் கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்தனர்.
ஒருமுறை ஷாமலாதேவி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தபோது, என் கணவர் உடனிருந்து கவனித்துக் கொண்டதைக் கண்டித்தேன். அதன்பிறகுதான் அவர்களுக் குள் நெருக்கம் அதிகமானது. பணமும் நிறையவே கை மாறியது. ஷாமலாதேவியின் கணவர் திருமுருகனிடம் முறையிட்டால், "அவள் என் பேச்சைக் கேட்கமாட்டாள்' என்று புலம்புகிறார். ஷாமலா தேவி தன் அதிகாரத்தை வைத்து என்னை மிரட்டுவதால் புகார் கொடுக்கிறேன்'' என்றார் விளக்கமாக.
இந்தப் புகாருடன் ஷாமலாதேவியும், மார்ட்டினும் தனிமையாக ரூமுக்குள் செல்லும் சி.சி.டி.வி. பதிவை யும் ஒப்படைத்து நீதி கேட்கிறார் பிரின்ஸி. இதுபற்றி மார்ட்டினிடம் கேட்டால், ""ஷாமலாதேவி என் மகளைப் போன்றவர்'' என்றார்.
ஷாமலாதேவியோ, அப்படியெல்லாம் எதுவும் கிடையாது என்றபடி லைனைக் கட் செய்தார்.
-அரவிந்த்
அதிகாரத்தின் பிடியில் தீபத்திருவிழா!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா, தென்னிந்தியாவிலேயே மிகவும் பிரசித்திபெற்றது. காலங்காலமாக மக்கள் திருவிழாவாக இருந்த இந்த விழா, படிப்படியாக அதிகாரத்தில் இருப்பவர்களின் விழாவாக மாறியிருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் மகாதீபம் ஏற்றப்படும் நாளில், ஆணும்பெண்ணும் சமம் என்ற தத்துவத்தை உணர்த்த சிவனும் சக்தியுமாக இணைந்து கொடிமரம் முன்பு மூன்று நிமிடங்கள் காட்சியளிப்பார் அர்த்தநாரீஸ்வரர். மகா தீபத்தையும், அர்த்தநாரீஸ்வரரையும் காண ஏராளமான பக்தர்கள் கோவிலுக்குள் ஆர்வத்துடன் குவிகிறார்கள்.
கடந்தகாலங்களில் சுலபமாக இருந்த விழா, பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் கோவிலுக்கு அனுமதிக்க ‘பாஸ்’முறை கொண்டுவரப்பட்டது. அது தோல்வியடைந்த நிலையில், கட்டளைதாரர், உபயதாரர், கட்டண பாஸ் வைத் திருப்போருக்கு அனுமதிவழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. பல ஆயிரங்களுக்கு கட்டண பாஸ் புரோக்கர்களின் மூலம் விற்பனை யாவதை மாவட்ட நிர்வாகமோ, காவல்துறையோ கண்டுகொள்வதில்லை.
கோவிலுக்குள் அனுமதிக்கப்படும் பக்தர்கள், அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் அமர கொடி மரம், மடப்பள்ளி, மணியக்கார அலு வலக வாயில் என தனித்தனி இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கும். மழையோ, வெயிலோ சிரமம் பார்க்காமல் இந்த இடங்களில்தான் அவர்கள் அமரவேண்டும்.
இந்த ஆண்டு டிசம்பர் 10-ந்தேதி மகாதீபம் ஏற்றப்பட்ட நிலையில், அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அமரும் இடத்திற்கு மட்டும் புதிதாக ஷெட் அமைத்துக் கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள் ளது. கடவுள் அனைவருக்கும் பொது வானவர் எனினும், கட்டணம் செலுத்தி தரிசிக்கும் பக்தர்கள் மழை, வெயிலில் காயும் நிலையில், அதிகாரிகளுக்கு மட்டும் என்ன புதிய சொகுசு என கொதிக்கிறார்கள் பொதுமக்கள்.
இதுபற்றி கருத்தறிய கோவில் இணைஆணையர் ஞானசேகரனைத் தொடர்பு கொண்டபோது நம் அழைப்பை அவர் ஏற்கவில்லை.
-து.ராஜா