அனுமதியின்றி திறக்கப்பட்ட ஜெ. சிலை!
வீரன் அழகு முத்துக்கோன் சிலையை நிறுவ அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்கு பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. ஆனால், எந்தவித அனுமதியும் பெறாமல், உச்சநீதிமன்றம் 2013-ஆம் ஆண்டு விதித்த உத்தரவையும் மதிக்காமல், மதுரை கே.கே. நகர் ரவுண்டானாவில் ஜெயலலிதா சிலையை, இரவோடு இர வாக திறந்துவிட்டனர் அ.தி.மு.க. வினர். இதுதொடர்பாக மதுரை தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள், மாவட்ட கலெக்டர், போலீஸ் கமிஷனர், மாநகராட்சி கமிஷனர் வரை புகார் மனு கொடுத்துள்ளனர்.
இதுபற்றி பேசிய தி.மு.க. எம்.எல்.ஏ. மூர்த்தி, “""மதுரை மாவட்ட நீதிமன்றம், பெரியார் நுழைவுவாயில் அருகே, ஜெயலலிதாவின் சிலை யை நிறுவ கடந்த மூன்று மாதங்களாக வேலை கள் நடந்துவந்தன. ஏற்கனவே அந்த இடத்தில் இருக்கும் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிப்ப தற்காக அ.தி.மு.க.வினர் கூடும்போது, போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. "பொதுமக்களுக்கு இடைஞ்சலை ஏற்படுத்தும் வகையில், தலைவ
அனுமதியின்றி திறக்கப்பட்ட ஜெ. சிலை!
வீரன் அழகு முத்துக்கோன் சிலையை நிறுவ அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்கு பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. ஆனால், எந்தவித அனுமதியும் பெறாமல், உச்சநீதிமன்றம் 2013-ஆம் ஆண்டு விதித்த உத்தரவையும் மதிக்காமல், மதுரை கே.கே. நகர் ரவுண்டானாவில் ஜெயலலிதா சிலையை, இரவோடு இர வாக திறந்துவிட்டனர் அ.தி.மு.க. வினர். இதுதொடர்பாக மதுரை தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள், மாவட்ட கலெக்டர், போலீஸ் கமிஷனர், மாநகராட்சி கமிஷனர் வரை புகார் மனு கொடுத்துள்ளனர்.
இதுபற்றி பேசிய தி.மு.க. எம்.எல்.ஏ. மூர்த்தி, “""மதுரை மாவட்ட நீதிமன்றம், பெரியார் நுழைவுவாயில் அருகே, ஜெயலலிதாவின் சிலை யை நிறுவ கடந்த மூன்று மாதங்களாக வேலை கள் நடந்துவந்தன. ஏற்கனவே அந்த இடத்தில் இருக்கும் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிப்ப தற்காக அ.தி.மு.க.வினர் கூடும்போது, போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. "பொதுமக்களுக்கு இடைஞ்சலை ஏற்படுத்தும் வகையில், தலைவர்களின் புதிய சிலை களைத் திறக்கக்கூடாது' என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவு இன்று காற்றில் பறக்கிறது. மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவோம்'' என்றார். அ.தி.மு.க. முன்னாள் மா.செ. எம்.எஸ்.பாண்டியனோ, ""2001-ல் அனுமதி வாங்கி வைக்கப்பட்ட தலைவர் எம்.ஜி.ஆர். சிலைக்குப் பக்கத்துலயே தலைவி ஜெயலலிதா சிலை வைச்சிருக்கோம். இதுல என்ன தப்பிருக்கு? எதிர்க்கட்சின்னா இப் படித்தான் சின்னச்சின்ன விஷயத்தை எல்லாம் ஊதிப் பெரிசாக்குவாங்க'' என்கிறார்.
மாவட்ட நிர்வாகம் இதைப்பற்றியெல் லாம் கவலைப்பட்டதாகத் தெரிய வில்லை.
-அண்ணல்
வரிந்து கட்டி இறங்கிய ஆளுங்கட்சி ஒ.செ!
தமிழகத்தில் சில தினங் களாக கொட்டித் தீர்த்தது கனமழை. இதில் நாகை மாவட்டம் வேளாங் கண்ணி, செபஸ்தியர் நகர், சுனாமி குடியிருப்பு நகர், வள்ளியம்மை நகர் போன்ற பகுதிகளில் மழைநீர் வழியாமல் குளம்போல் தேங்கி நின்றது.
அதிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடு ஏற்படவே... பொதுமக்கள் போராட்டத்துக்கு தயாராகினர். இதையறிந்த கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் செபஸ்தியர் நகர் சென்றார். ஏற்கனவே பேரூராட்சி ஊழியர்கள் மோட்டார் மூலம் தண்ணீர் இறைத்தும், சாக்கடைக் கழிவுகளின் அடைப்பால் பலனளிக்காமல் போயிருந்தது. அந்த சமயத்தில் ஊழியர் கள் யாரும் இல்லாத நிலையில், அருகில் மொடமொடப்பான வெள்ளை வேட்டி, சட்டையோடு நின்றுகொண்டிருந்த அ.தி.மு.க. கிழக்கு ஒ.செ. வேதை யனை "தம்பி உள்ள டவுசர் போட்டி ருக்கீங்களா?' என சிரித்தபடி அழைத்தார் அமைச்சர் ஓ.எஸ். மணியன்.
ஆட்சேபணையின்றி ஆமோதித்த ஒ.செ. வேதையன், உடைகளை களைந்துவிட்டு, கழிவுநீர் வாய்க்காலில் இறங்கி, அமைச்சரின் ஆலோசனைப்படி அடைப்பை அகற்றினார். அரு கிலிருந்த மூங்கில் கம்புகளால் தடுப்பு அமைத்து, மீன்வலை களைக் கட்டி கழிவுகளை வடி கட்டி தண்ணீர் மட்டும் செல் லும் வகையில் இறுகக்கட்டி னார். ""அரசியல் பிரமுகர்கள் என்றாலே மக்களுக்கு ஒரு வித அபிப்ராயம் இருக்கிறது. அதில் நான் மாறுபட்ட வன். கஜா புயலின்போதும் மக்களோடுதான் நின்றேன். என் வீட்டில் இப்படி யொரு அடைப்பு ஏற்பட்டிருந்தால் என்ன செய்திருப் பேனோ, அதையே செய் தேன். இதில் வியந்து பார்ப்ப தற்கு ஒன்றுமில்லை'' என்று சகஜமாக கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றார் ஒ.செ. வேதையன்.
-க.செல்வகுமார்
இந்துக் கோவில்களைக் குறிவைக்கும் கும்பல்!
குமரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற சிவன் கோவில்களில் ஒன்றுதான் திக்குறிச்சி மகாதேவர் கோவில். தாமிரபரணி ஆற்றங் கரையில் அமைந்திருக்கும் இந்தக் கோவிலில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31-ந்தேதி மகாதேவர் ஐம்பொன் சிலை மற்றும் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
அறநிலையத்துறையின் சார்பில், மார்த்தாண்டம் போலீசில் கொடுக்கப்பட்ட புகார்மீது 16 மாதங்களாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது. கோயிலில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்படாததால், கொள்ளை யர்கள் குறித்த எந்தத் தடயமும் சிக்காமல் காவல்துறை திணறியது.
இந்த நிலையில்தான், விஜயன் தலைமையிலான தனிப்படை, உண்டியலை மட்டுமே குறிவைத்து கொள்ளையடிக்கும் மாங்கரையைச் சேர்ந்த ஏசுதாஸ் என்பவனை நோட்டம் விட்டது. அவனும் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஷாநவாஸும் அடிக்கடி சந்தித்துக் கொண்டதை வைத்து, ஷாநவாஸைப் பிடித்து விசாரித்தபோதுதான்... ஷாநவாஸ் அவனது இரண்டாவது மனைவி சுமிதா, உசேன் மற்றும் ஏசுதாஸ் ஆகியோர் குமரி கோவிலில் கைவரிசை காட்டியது தெரியவந்தது.
கேரளாவில் பல கோயில்களில் சிலைகளைத் திருடி, பாபு என்பவன் மூலம் வெளிநாடுகளில் விற்றுவந்த இந்த கும்பல், மகாதேவர் சிலையோடு மேலும் சில சிலைகளுடன் பிடிபட்டுள்ளது. முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்த இவர்கள், இந்துக் கோவில்களைக் குறிவைத்து திருடி வந்துள்ளனர். "கேரளாவில் குருவாயூர் கோவிலுக்கு எப்படி இந்து அல்லாதவர்கள் செல்லமுடியாதோ அதுபோலவே, இங்கும் கொண்டுவர வேண்டும்' என்று வலியுறுத்துகிறார் "அகில பாரத இந்து மகாசபை' தலைவர் பாலசுப்பிரமணியன்.
-மணிகண்டன்