சிக்னல்! பப்ளிக் –-பிரைவேட் -பார்ட்னர்ஷிப்! குமுறும் மக்கள்!

d

"மழைநீர் வடிகால் திட்டம்' என்ற பெயரில், நந்தம் பாக்கத்தில் இருந்து ராமாபுரம் குறிஞ்சிநகர் வரையில் வாய்க்கால் அமைக்க ரூ.39 கோடியே 14 லட்சத்து 14 ஆயிரத்து 28 ரூபாய் ஒதுக்கியது சென்னை மாநகராட்சி.

ssஇந்த ஒப்பந்தத்தை ஏற்று நடத்திய ஈரோட்டைச் சேர்ந்த அன்னை இன்ஃப்ரா டெவலப்பர்ஸ் நிறுவனம், குறிஞ்சிநகர் 2-ஆவது பிரதான சாலையில் மட்டும், வீடுகளின் வாசலில் மூன்றரை அடி உயரத்துக்கு கான்கிரீட் வாய்க்கால் அமைத்து குளறுபடி செய்தது. இதைக் கண்டித்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடந்துவரும் மக்கள் போராட்டத்திற்கு அரசு அதிகாரிகளோ, சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனமோ செவி சாய்க்கவில்லை.

இதுபற்றி ஜூலை 17-19 தேதியிட்ட "நக்கீரன்' இதழில், “ "இப்படி இருந்தா எப்படி வாழ்றது? குமுறும் மாநகர மக்கள்!' என்ற தலைப்பிட்ட செய்தியில் விரிவாக எழுதியிருந்தோம். இப்போது, அதே சாலையின் எதிர்பக்கம் மீண்டும் வாய்க்கால் அமைக்கப்போவதாக, குழி தோண்டிப் போட்டிருக்கிறது அதே ஒப்பந்த நிறுவனம்.

""உயரமான கான்கிரீட்டில் இருந்து கீழே இறங்குவதற்கு வாட்டமாக மக்கள் அமைத்துக்கொண்ட சிமெண்ட் சாய்தளங்கள், நடப்பட்ட செடிகள் என்ற

"மழைநீர் வடிகால் திட்டம்' என்ற பெயரில், நந்தம் பாக்கத்தில் இருந்து ராமாபுரம் குறிஞ்சிநகர் வரையில் வாய்க்கால் அமைக்க ரூ.39 கோடியே 14 லட்சத்து 14 ஆயிரத்து 28 ரூபாய் ஒதுக்கியது சென்னை மாநகராட்சி.

ssஇந்த ஒப்பந்தத்தை ஏற்று நடத்திய ஈரோட்டைச் சேர்ந்த அன்னை இன்ஃப்ரா டெவலப்பர்ஸ் நிறுவனம், குறிஞ்சிநகர் 2-ஆவது பிரதான சாலையில் மட்டும், வீடுகளின் வாசலில் மூன்றரை அடி உயரத்துக்கு கான்கிரீட் வாய்க்கால் அமைத்து குளறுபடி செய்தது. இதைக் கண்டித்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடந்துவரும் மக்கள் போராட்டத்திற்கு அரசு அதிகாரிகளோ, சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனமோ செவி சாய்க்கவில்லை.

இதுபற்றி ஜூலை 17-19 தேதியிட்ட "நக்கீரன்' இதழில், “ "இப்படி இருந்தா எப்படி வாழ்றது? குமுறும் மாநகர மக்கள்!' என்ற தலைப்பிட்ட செய்தியில் விரிவாக எழுதியிருந்தோம். இப்போது, அதே சாலையின் எதிர்பக்கம் மீண்டும் வாய்க்கால் அமைக்கப்போவதாக, குழி தோண்டிப் போட்டிருக்கிறது அதே ஒப்பந்த நிறுவனம்.

""உயரமான கான்கிரீட்டில் இருந்து கீழே இறங்குவதற்கு வாட்டமாக மக்கள் அமைத்துக்கொண்ட சிமெண்ட் சாய்தளங்கள், நடப்பட்ட செடிகள் என்று 30 அகல சாலை 10 அடியாக சுருங்கிவிட்டது. இப்போது, சாலையின் எதிர்பக்கத்தில் மீண்டும் வாய்க்கால் குழாய்கள் பதிப்பதாக, அதே ஒப்பந்த நிறுவனம் குழிதோண்டி வேலையைத் தொடங்கிவிட்டது. இதற்காக மக்களின் வரிப்பணத்தில் இருந்து மேலும் ரூ.2 கோடியை ஒதுக்கியிருக்கிறது அரசு. இந்தப் பணி முடிந்தால், சாலை வெறும் 4 அடியாகக் குறையும்'' என்று ஆதங்கப்படுகிறார் ஏரியா பிரச்சனைகளுக்காக போராடிவரும் ஏ.ஐ.டி.யூ.சி. தோழர் அய்யாசாமி.

பழனிப் படிக்கட்டில் ஏறுவதுபோன்ற அனுபவம் தந்ததுபோல், குறுகலான பாதையில் நடக்கும் பயிற்சியும் தருவார்கள்போல!

-பரமேஷ்

கடம்பன்குளம் கொலைக்காடு! கண்டுகொள்ளாத அரசு!

ss

""சிவகாசி நகராட்சி லிமிட்டில் உள்ள சிறுகுளம் மற்றும் பெரியகுளம் கண் மாய்கள் மீது அக்கறை காட்டி வரும் அரசுத்துறையினர், பள்ளப்பட்டி பஞ்சாயத்து லிமிட்டில் உள்ள 55 ஏக்கர் பரப்பளவுள்ள கடம்பன்குளம் கண்மாயைக் கண்டுகொள்ளா மல் கைவிட்டனர்'' என்றார், நம்மிடம் கவலையோடு பேசிய சிவகாசியைச் சேர்ந்த சமூகஆர்வலர் கண்ணன்.

தொடர்ந்து பேசிய அவர், ""இந்தக் கண்மாய் பள்ளர்பட்டி பகுதி விவசாயத் துக்கும், பதினான்காயிரம் குடும்பங்களின் நீராதாரத்துக் கும் பெரிதும் பயன்பட்டது. இன்றோ நிலைமை தலை கீழாகிவிட்டது. கருவேல மரங்கள் ஆக்கிரமித்து, அடர்த்தியான காடுபோல் காட்சியளிக்கிறது கண்மாய். நிலத்தடி நீர் முழுவதும் உறிஞ்சப்பட்டு, இன்று காசு கொடுத்து மக்கள் குடிநீரை விலைக்கு வாங்குகிறார்கள். இதைவிட கொடுமையாக... சில சமூகவிரோதிகள், மது அருந்துவது, கட்டப்பஞ் சாயத்து நடத்துவது, பெண்களை இழுத்துவந்து வன்கொடுமை செய்வது போன்ற குற்றச்செயல்களை கண்மாயில் வைத்தே ஈடுபடு கின்றனர்.

இதன் உச்சகட்டமாகத் தான், “கடந்த 24-ந் தேதி முருகன், அர்ஜுனன் ஆகிய இரண்டு சுமை தூக்கும் தொழி லாளர்களை கட்டப்பஞ்சா யத்து நடத்தி... அடித்தே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பள்ளப்பட்டி பஞ்சாயத்து அலுவலகத்தில் கேட்டால், "கடம்பன்குளத்தை தூர்வார அரசு நிதி ஒதுக்க வில்லை' என்று அலட்சியமா கச் சொல்கிறார்கள். மக்களுக்கு வாழ்வளித்த கடம்பன்குளம் இன்று கொலைகாரக் கண்மாய் என்று பெயரெடுத்திருக்கிறது'' என்று புகார் வாசித்தார்.

விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலர் உதய குமாரிடம் பேசினோம். ""அப்படியா சார்? பாதிக்கப் பட்ட மக்கள் சிவகாசி வருவாய் கோட்டாட்சியருக்கு மனு தரட்டும். நிச்சயம் செய்திட லாம்'' என்றார்.

ஐம்பதாயிரம் பேர் வாழ்க்கை சம்பந்தப்பட்ட ஒரு கண்மாய் விவகாரம், அர சாங்கத்தின் கண் ணுக்குச் சுத்தமாகத் தெரியவில்லை என்பது கொடுமை தான்!

-ராம்கி

தெருத்தெருவா கிழிக்கப் போறோம்! கட்சித்தாவல் களேபரம்!

ss

அ.ம.மு.க.வினர் அ.தி.மு.க.வுக்குத் தாவு வதும், அதனால் பிரச்சனைகள் கிளம்புவதும் வாடிக்கையாகி வருகிறது. அப்படி தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் அ.தி.மு.க., அ.ம.மு.க.வினர் இடையே கிளம்பிய பிரச்சனை கைகலப்பாகி கைதில் முடிந்திருக்கிறது.

பாபநாசம் அ.ம.மு.க. நகர செயலாளராக இருப்பவர் பிரேம்நாத் பைரன். அதே கட்சியின் சிறுபான்மையினர் பிரிவில் பொறுப்பில் இருந்தவர் அன்வர். இவர் சில தினங்களுக்கு முன்பு, அ.ம.மு.க.வில் இருந்து அ.தி. மு.க.வுக்குத் தாவினார். இதையடுத்து, முகநூலில் பிரேம்நாத்தும், அன்வரும் ஒருவரையொருவர் விமர்சித்து பதிவிட்டுள்ளனர்.

ஒருகட்டத்தில் விமர்சனம் வாக்குவாதமாக மாறிவிட, நேரில் சந்தித்து வாக்குவாதத்தை கைகலப்பாக மாற்றினர். அதோடு நிறுத்தாமல், காவல்நிலையத்தில் ஒருவர் மீது ஒருவர் புகாரும் கொடுத்துள்ளனர். அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு நெருக்கமான ஒருவரின் ஆலோசனைப்படி, மருத்துவமனையில் படுத்துக்கொண்டார் அன்வர். ஆளுங்கட்சி செல்வாக்கைப் பயன்படுத்தி பிரேம்நாத்தைக் கைதுசெய்ய வைத்திருக்கிறார். இதைக் கேள்விப்பட்டு ஆத்திரமடைந்த அ.ம.மு.க. வழக்கறிஞர் அணி, அமைச்சருக்கு எதிராக களமிறங்கி, அன்வரைக் கைதுசெய்யச் சொல்லி போராட்டத்தில் குதித்துள்ளது.

""அ.ம.மு.க. கூடாரம் காலியாவதால் அ.தி.மு.க. மீது அவதூறு பரப்புகிறார்கள். அப்படி செய்ததோடு அடிதடியில் இறங்கியதால் பிரேம்நாத்தை ஜெயிலுக்கு அனுப்பிட்டோம்ல'' என்கிறார்கள் அ.தி.மு.க.வினர். அ.ம.மு.க.வைச் சேர்ந்தவர் களோ, “""எங்ககூட இருந்தவரைக்கும் எங்களைப் புகழ்ந்து பேசிட்டு, அ.தி.மு.க. போனதும் டி.டி.வி.தினகரன் பற்றி கேவலமாகப் பேசுவது நியாயமா? அப்படிப் பேசச்சொல்லி தூண்டிய அமைச்சர் துரைக்கண்ணு, அவர் மகன் அய்யப்பன் பற்றி விரைவில் தெருத்தெருவாக கிழிக்காம விடமாட்டோம்'' என்றனர் ஆத்திரத்துடன்.

""உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பும் வந்தாச்சு, இனி வேடிக்கைக்கு பஞ்சமிருக்காது'' என்கின்றனர் உள்ளூர் அரசியலை கவனித்து வருபவர்கள்.

-க.செல்வகுமார்

nkn111219
இதையும் படியுங்கள்
Subscribe