மா.செ. கொந்தளிப்பு! மக்கள் அதிர்ச்சி!

விழுப்புரம் அ.தி.மு.க. தெற்கு மா.செ.வும், உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ.வுமான குமரகுரு, தனது மகள் இலக்கியாவின் ssதிருமணத்தை பிரம்மாண்டமாக நடத்தினார். நவ. 17-ந் தேதி உளுந்தூர்பேட்டை டோல்கேட் அருகே, குமரகுரு வின் விநாயகா கல்லூரியில் திருமண வரவேற்பு நடைபெற்றது. முதல்வர், துணை முதல்வர், அமைச் சர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்ட இந்த விழாவுக்கு வந்திருந்த அ.தி.மு.க., பா.ம.க. ஒன்றிய, நகர பொறுப்பாளர்களின் குடும்பங்களுக்கு வேட்டி, சட்டை, பேண்ட், புடவை எடுத்துத் தந்ததோடு, கூட்டத்தைக் கூட்டிவருவதற்கான வாகனச் செலவுக்கு ரூ.2,000 என 45 ஆயிரம் குடும்பங்களுக்கு அன்பளிப்பாகக் கொடுத்து அசத்தினார் மா.செ. குமரகுரு.

முதல்வர் எடப் பாடியுடன் இருக்கும் நெருக்கத்தைக் காரணம் காட்டி, கட்சி நிர்வாகி களை மதிக்காமல் இருந்துவந்த மா.செ., அதில் கிளம்பியிருந்த அதிருப்தியை சரிசெய்து, உள்ளாட்சி, சட்டமன்றத் தேர்தல்களை எதிர்கொள்ளவே இந்த அன்பளிப்புகள் என்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.

நிகழ்ச்சி முடிந்து 22-ந் தேதி களமுதூரில் நடைபெற்ற முதலமைச் சரின் சிறப்பு குறைதீர்ப்பு முகாமில் கலந்துகொண்டார் எம்.எல்.ஏ. குமரகுரு. அப்போது ஆமூர், டி.குளத்தூர், சரவணபாக்கம், மடப்பட்டு, சிறுத்தநூர் கிராமங்கள் புதிய மாவட்டம் கள்ளக்குறிச்சியோடு இணைக்கப்பட்டதை எதிர்த்து, விழுப்புரம் மாவட்டத்தில் நீடிக்க வேண்டி மனு கொடுத்தார்கள் 500-க்கும் மேற்பட்ட கிராம மக்கள். அப்போது கிளம்பிய சலசலப்பு மக்களுக்கும், எம்.எல்.ஏ.வுக்கும் இடையே வாக்குவாதமாக முற்றியது.

Advertisment

கோபத்தின் உச்சத்திற்கே சென்ற எம். எல்.ஏ., "என்னிடம் காசு வாங்கிவிட்டு ஓட்டு போட்டவர்கள் கேள்வி கேட்கக்கூடாது' என்கிற தொனியில் சத்தம் போட்டார்.

இதைக்கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி யில் உறைந்துபோனார் கள்.

-எஸ்.பி.சேகர்

Advertisment

அஜித் அ.தி.மு.க.!

ss

அ.தி.மு.க. பொதுக்குழு கூடி, நடக்கவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் நூறு சதவீத வெற்றியைப் பெற உழைக்குமாறு உத்தரவிட்டிருக்கிறது தலைமை. ர.ர.க்கள் இதற்காக சுறுசுறுப்பைக் கூட்டியிருக்கும் நிலையில், மதுரை மாநகர அ.தி.மு.க.வின் போஸ்டர் ஒன்று பரபரப்பு கிளப்பியது.

அதை ஒட்டியவர் "ரைட்' சுரேஷ். அ.தி.மு.க. நிர்வாகியான இவர், மதுரை மேயர் பதவிக்காக போட்டியிடப்போகும் தன்னை வெற்றிபெறச் செய்யுமாறு அந்தப் போஸ்டரின் மூலம் கேட்டுக்கொண்டுள்ளார். அதோடு நிறுத்தாமல், அஜித் திராவிட முன்னேற்றக் கழகம்(அ.தி.மு.க.) என்று குறிப்பிட்டு, அஜித், எம்.ஜி.ஆர். படங்களையும் போட்டுள்ளார்.

ஏற்கனவே, அரசியலில் நடிகர்களின் எண்ட்ரி, அதகளப் படுத்திக் கொண்டிருக்கும் வேளையில், அஜித் பெயரைத் தாங்கிய போஸ்டரா? என்று "ரைட்' சுரேஷை சந்தித்து கேட்டோம். “""ஆமாங்க, தமிழகத்தின் அடுத்த முதல்வரே அஜித்தான்'' என்று எடுத்த எடுப்பிலேயே நம்மைப் பதறவைத்தவர்...…""கட்சிக்குன்னு ஒரு ஃபேஸ் வேல்யூ வேணுங்க. ஜெயலலிதா இருந்தபோது இருந்த அறிமுகம் இப்ப இல்லையே. ஜெ.வுக்கும் அஜித்தை ரொம்பப் பிடிக்கும்'' என்று படபடவென பேசினார்.

"பின் எதற்காக மன்னிப்பு வீடியோ வெளியிட்டீங்க?' என்றதற்கு, ""அமைச்சர் ராஜேந்திர பாலாஜி என்னைத் தொடர்புகொண்டு, தினகரனாச்சும் அ.ம.மு.க. ன்னுதான் வச்சாரு. அவருக்கே வராத யோசனை, உனக்கு வந்திருக்கே. ஆர்வ மிகுதியில போட்டுட்ட. நம்மக் கட்சிக்காரனா வேற போயிட்ட... சரி இது சம்பந்தமா ஒரு மன்னிப்பு வீடியோவை வெளியிட்டு, பிரச்சினையை முடிச்சிவை'' என்று அன்பாக உத்தரவிட்டதாகக் கூறுகிறார்.

-அண்ணல்

ஆதரவற்றோர் மீது அக்கறை தேவை!

ss

மனநலம் குன்றியவர்கள் குழந்தைக்கு இணையானவர்கள். அவர்கள் குணமாகும்போது, தன்னைப்பற்றிய எந்தத் தகவலை யும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படிப்பட்டவர்கள் கொடுக்கும் குறைந்தபட்ச தகவல்களை சேகரித்து, அவர்களது குடும்பத் தாரோடு சேர்த்துவைக்கும் பணியை செய்து வருகிறார்கள் அஸ்பையரிங் லிவ்ஸ் என்ற அறக்கட்டளையைச் சேர்ந்தவர் கள்.

இதுவரை இந்தியர்கள் நூறு பேரை அடையாளம் கண்டு, அவர்களுக்கு உதவியிருக்கும் இந்த அறக்கட்டளை, முதன்முறை யாக வங்காளதேசத்தைச் சேர்ந்த ஒருவரை மீட்டுள்ளது. ரசாவுல் கரீம், வயது 37. இந்தியா -வங் காளதேசம் எல்லையில் உள்ள பஞ்சகோர் பகுதியில் இருந்து, 12 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வுக்குள் நுழைந்த இவர், மனநலம் குன்றிய நிலையில் கடந்த ஆறு ஆண்டுகளாக கேரளாவின் கொல்லத்தில் உள்ள மனநல காப் பகத்தில் சிகிச்சை பெற்றுவந்தார்.

இவர் தொடர் பான விவரங்களைப் பெற்ற "அஸ்பையரிங் லிவ்ஸ்' குழுவினர், ரசாவுலின் குடும்பத் தாரிடம் தகவல் தெரி வித்தனர். தொடர்ந்து, டெல்லியில் இருக்கும் வங்காளதேசம் தூத ரகத்தில் பேசியபோது முறையான பதில் கிடைக்கவில்லை. சட்ட வல்லுநர்களின் உதவியோடு அணுகிய பிறகே, எல்லையைக் கடந்து செல்வதற்கான உரிமம் கிடைத்திருக்கிறது. அரசுகள் எந்தவித பணஉதவியும் செய்ய வில்லை.

மேற்குவங்கம் மாநிலத்தில் இருக்கும் ஃபுல்பாரி எல்லைக்கு சென்றபோது, ரசாவுலின் குடும் பத்தார், அவரைக் கட்டியணைத்து கண்ணீர்மல்க கூட்டிச் சென்றனர். ரசாவுலை அவரது குடும்பத் தாரோடு அனுப்பிவிட்டு, நம்மிடம் பேசிய அஸ்பையரிங் லிவ்ஸ் அறக்கட்டளையின் நிறுவனர் ஃபாரிஹா சுமன், “""இது போன்ற வர்களை மீட்பதில் சட்ட சிக்கல் கள் நிறையவே இருக்கின்றன. குறிப்பாக எந்த விண்ணப்பத்திலும் தொலைந்துபோனவர் அல்லது மனநலம் குன்றியவர் போன்ற மாற்றுவழிகள் இல்லாததால், சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. மனநலம் குன்றியவர்களின் நிலையை உணர்ந்து, இதில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.

-மதி