சிக்னல்! போதை போலீஸின் சோகக் கதை!

ss

போதை போலீஸின் சோகக் கதை!

ssஇந்த மாலைநேரச் சாரல்மழையும், மெல்ல வீசும் குளிர்காற்றும் ஏன்தான் நம்மை இப்படி மயக்குகிறதோ' என யோசித்தபடியே... தனது டூவீலரை டாஸ்மாக் முன்பு ஓரங்கட்டினார் திருப்பூர் மாவட்ட பெருமாநல்லூர் போலீஸ் மயில்சாமி. அடுத்த கணமே டாஸ்மாக் பாருக்குள் நுழைந்த மயில், ஒரு குவார்ட்டரை மடக்கென்று உள்ளே ஏற்றிவிட்டு மழையை ரசித்தார். மழை இன்னமும் மழையாகவே இருக்க, இளையராஜாவின் இசையும் ஜோடி சேர்ந்ததும் லயித்தவர் அடுத்த குவார்ட்டருக்குள் மூழ்கினார்.

வெளியே மழை, உள்ளே குவார்ட்டர் என ஏகத்துக்கும் தண்ணீரில் நனைந்திருந்த மயில், தன் சிறகுகளை உதறிவிட்டு டூவீலரை நோக்கி டான்ஸ் ஆடியபடியே சென்றார். சாதாரண நாட்களிலேயே எக்ஸ்பிரஸ்ஸாக பறக்கும் அவர், பபுள் பவர் குவார்ட்டர்களை சிறகுகளாக பொருத்திக் கொண்டதால் சூப்பர் ஃபாஸ்டாக விரைந்தார். சேவூர் டூ அவிநாசிக்குப் பறந்த மயிலுக்கு நிதானம் கை கொடுக்கவில்லை. அவரின் டூவீலர் அதே சாலையில் சென்றுகொண்டிருந்த பெண் மயில் மீது மோத, சாலையில் விழுந்து துடித்து மயங்கினார். ஊரே திரண்டு யூனிபார்மில் இர

போதை போலீஸின் சோகக் கதை!

ssஇந்த மாலைநேரச் சாரல்மழையும், மெல்ல வீசும் குளிர்காற்றும் ஏன்தான் நம்மை இப்படி மயக்குகிறதோ' என யோசித்தபடியே... தனது டூவீலரை டாஸ்மாக் முன்பு ஓரங்கட்டினார் திருப்பூர் மாவட்ட பெருமாநல்லூர் போலீஸ் மயில்சாமி. அடுத்த கணமே டாஸ்மாக் பாருக்குள் நுழைந்த மயில், ஒரு குவார்ட்டரை மடக்கென்று உள்ளே ஏற்றிவிட்டு மழையை ரசித்தார். மழை இன்னமும் மழையாகவே இருக்க, இளையராஜாவின் இசையும் ஜோடி சேர்ந்ததும் லயித்தவர் அடுத்த குவார்ட்டருக்குள் மூழ்கினார்.

வெளியே மழை, உள்ளே குவார்ட்டர் என ஏகத்துக்கும் தண்ணீரில் நனைந்திருந்த மயில், தன் சிறகுகளை உதறிவிட்டு டூவீலரை நோக்கி டான்ஸ் ஆடியபடியே சென்றார். சாதாரண நாட்களிலேயே எக்ஸ்பிரஸ்ஸாக பறக்கும் அவர், பபுள் பவர் குவார்ட்டர்களை சிறகுகளாக பொருத்திக் கொண்டதால் சூப்பர் ஃபாஸ்டாக விரைந்தார். சேவூர் டூ அவிநாசிக்குப் பறந்த மயிலுக்கு நிதானம் கை கொடுக்கவில்லை. அவரின் டூவீலர் அதே சாலையில் சென்றுகொண்டிருந்த பெண் மயில் மீது மோத, சாலையில் விழுந்து துடித்து மயங்கினார். ஊரே திரண்டு யூனிபார்மில் இருந்த போலீஸ் மயிலைத் தூக்கி நிறுத்த, போதை யில் தள்ளாடினார். உட னடியாக அவரை அவிநாசி போலீஸ் கூண்டுக்குள் அடைத்தார்கள் பொது மக்கள்.

இதனையறிந்த மாவட்ட எஸ்.பி. திஷா மிட்டல், மயி லை மாவட்ட ஆயுதப்படைக்கு அனுப்பிவிட் டார். அன்றி லிருந்து மாலை நேர மழைச் சாரல், மெல்ல வீசும் குளிர்க் காற்று, இளைய ராஜா இசை என்றாலே மயிலுக்கு அன லாகத் தகிக் கிறதாம்.

-அருள்குமார்

அயோத்தி! தஞ்சையிலிருந்து முதல் செங்கல்!

ss

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில், ராமர் கோவில் கட்டுவதற்கு அறக்கட்டளையை உட னடியாக அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறது உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு. பரபரப்பான இந்தத் தீர்ப்பு வெளி யாவதற்கு ஒரு மண்டலத்திற்கு முன்பே, செங்கற்களுக்கு பூஜைசெய்து காத்திருந்தது தமிழ்நாடு தெய்வீக தமிழ்ப் புரட்சிப் பாசறை.

தற்போது செங்கற்களுடன் கிளம்பியிருக்கும் அந்த அமைப்பின் நிறுவனர் ஆதி.மதனகோபால், ""சில மாதங்களுக்கு முன்பு சுப்பிரமணியன் சுவாமி பிறந்தநாள் வந்தது. அப்போது அவர், "நவம்பர் 15-ந் தேதிக்குள் தீர்ப்பு வரும். ராமர் கோவில் கட்டச் சொல்வார்கள்' என்று தெளிவாகச் சொன்னார். அப்போதே, பட்டுக்கோட்டை அங்காளபரமேஸ்வரி கோவிலில் ஐந்து செங்கற்களை வைத்து பூஜையைத் தொடங்கினோம். 48 நாட்கள் பூஜை முடிந்தது. தீர்ப்பும் சாதகமாக வந்தது. நவ. 09-ந் தேதி புறப்பட்டுவிட்டோம். போகும் வழியில் வேறு சில இந்து அமைப்புகளும் ஆதரவு தந்து, செங்கற்களை கொடுத்தனுப்பியிருக்கின்றன. 13-ந் தேதி அயோத்தியில் இருப்போம்' என்றார்.

"அறக்கட்டளையே இன்னமும் அமைக்காத நிலையில், உங்கள் செங்கற்களை எப்படி ஏற்பார்கள்?' என்றதற்கு, ""உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., இந்து மகாசபை உள்ளிட்ட அமைப்புகள் மட்டுமே சொந்தம் கொண்டாட முடியாது. இதை வைத்து அரசியலும் செய்யக்கூடாது. ராமர் இந்துக்களுக்கானவர். அதனால், கரசேவையில் ஈடுபட்டவர்கள், அவர்களின் வாரிசுகளை ஒருங்கிணைத்து அறக்கட்டளை அமைத்து, திருப்பணியைத் தொடங்கவேண்டும். கரசேவையில் ஈடு பட்டவன் என்கிற முறை யில் இதைச் சொல்கிறேன்'' என்றார் உறுதியுடன்

"அயோத்தியில் ராமர்கோவில் கட்ட வேண் டும்' என 90 வயதிலும் காத்திருக்கும் நிர்த்திய கோபால்தாஸ் என்ற துறவியிடம் இந்த செங்கற் களை ஒப்படைக்க இருக் கிறார்கள்.

பிறகு ஒட்டுமொத்த இந்து அமைப்புகளையும் ஒருங்கிணைத்து, "அகில பாரத ஸ்ரீராம்சேனா' என்ற அமைப்பை உருவாக்குவது மெகா திட்டமாம்.

-இரா.பகத்சிங்

டி.டி.வி. கூடாரம் காலி! அ.தி.மு.க.வில் பச்சைமால்!

இடைத்தேர்தல் வெற்றியின் களிப்போடு, உள்ளாட்சித் தேர்தலிலும் ஒரு கை பார்த்துவிட திட்டமிட்டிருக்கிறது அ.தி.மு.க. தலைமை. அதற்கு முன்பாகவே அ.ம.மு.க. கூடாரத்தை காலி செய்யும் வேலைகள் மும்முரமாக நடக்கின்றன.

ss

குமரி மாவட்டத்தில் இருந்து அ.ம.மு.க. கிழக்கு மா.செ. பச்சைமாலும், நாகர்கோவில் எக்ஸ் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசனும் இந்த வலையில் விழுந்திருக்கிறார்கள்.

ஜெ. காலத்தில் குமரி மா.செ. பதவி பறிக்கப்பட்டு, அ.தி.மு.க.வில் ஓரங்கட்டப்பட்டவர் பச்சைமால். ஜெ. மறைவுக்குப் பிறகு, தளவாய் சுந்தரத்தின் பலத்தால் குமரியில் டி.டி.வி.க்கு ஒரு மாஸ் இருந்தது. தளவாய் ஓ.பி.எஸ். சிடம் அடைக்கலமான நிலையில், அ.ம.மு.க.வில் இணைந்து பலம் சேர்த்ததால் பச்சைமாலுக்கு கிழக்கு மா.செ. பதவி கொடுத்து அழகு பார்த்தார் டி.டி.வி. அந்த பச்சைமால்தான் தற்போது அ.தி.மு.க.வில் ஐக்கிய மாகிவிட்டார்.

இதன் பின்னணி அறிந்த பச்சைமாலின் ஆதரவாளர்கள் நம்மிடம், ""அ.ம.மு.க. மீதான எதிர்பார்ப்பு, கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகிவிட்டது பலருக்கும். அதில் ஒருவர்தான் பச்சைமால். இனிமேல் கடன் வாங்கி கட்சிக்கு செலவு செய்ய வும் அவர் விரும்பவில்லை. அதுபோக, எம்.பி. தேர்தலின்போது நாகர்கோவிலில் தொண்டர் களுக்கு மத்தியில் டி.டி.வி., பச்சைமாலை கப்சிப் ஆக்கி நோஸ்கட் செய்தார். இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. கிழக்கு மா.செ. அசோகனுடன் நடத்திய பேச்சுவார்த்தையும் டி.டி.வி.க்கு தெரியப்போய், கண்காணிப்புக்கு ஆளானார் பச்சைமால். இந்தச் சூழலில்தான் உள்ளாட்சித் தேர்தலை கணக்கில் வைத்து பச்சைமாலை இழுத்துவிட்டது அ.தி.முக. தலைமை'' என்றனர்.

அ.தி.மு.க.வினர் மத்தியில் விசாரித்தபோது, ""முதலில் மா.செ. பதவிக்கு பச்சைமால் தூதுவிட, கறாராக மறுத்துவிட்டார் இ.பி.எஸ். பிறகு, 2021-ல் குமரி தொகுதியைக் குறிவைத்து, அதே ஒப்பந்தத்துடன் அ.தி.மு.க.வில் இணைந்துவிட்டார்'' என்கின்றனர் சுருக்கமாக.

-மணிகண்டன்

nkn221119
இதையும் படியுங்கள்
Subscribe