dd

மீண்டுமொரு ஜனதா கட்சி? ஒருங்கிணைக்கும் சுவாமி!

ss

1975- 1977 காலகட்டத்தில் மிசா சட்டத்தைக் கொண்டுவந்து, தனக்கு வேண்டாத, தன்னை எதிர்க்கும் அரசியல்வாதிகளைப் பழிவாங்கி எதிரியே இல்லாத சூழலை உருவாக்கினார் அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி. இனி இந்திராவை தனியாக எதிர்ப்பது பயன்தராது என பாதிக்கப்பட்ட வெவ்வேறு அரசியல் தலைவர் களான ஜெயப்பிரகாஷ் நாராயணன், ஜெகஜீவன் ராம், ராஜ் நாராயணன், சந்திரசேகர், வாஜ்பாய், மொரார்ஜி தேசாய், சரண்சிங் உள்ளிட்டவர்களை ஒருங்கிணைத்து ஜனதா கட்சி தொடங்கப்பட்டது; 1977-ல் ஆட்சியையும் கைப்பற்றியது. அப்போது இந்த ஒருங் கிணைப்பின் பின்னணியில் இருந்தவர் ஜனசங்க கட்சியிலிருந்த ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி.

தற்போது அசுரபலத்துடன் ஆட்சி பீடத்திலிருக்கும் பா.ஜ.க., இந்திராகாந்தி பாணியில் தன்னை எதிர்த்த, எதிர்ப்பவர்களை சி.பி.ஐ. போன்ற விசாரணை அமைப்புகளின் மூலம் வழக்குப்போட்டு மிரட்டு கிறது. பா.ஜ.க.வை எதிர்க்கும் அளவுக்கு பலமான எதிர்க் கட்சி இல்லாத சூழலில் சரத்பவார், மம்தாபானர்ஜி, திக்விஜய் சிங், குலாம்நபி ஆசாத், கபில்சிபல், ஜி.கே.வாசன் ஆ

மீண்டுமொரு ஜனதா கட்சி? ஒருங்கிணைக்கும் சுவாமி!

ss

1975- 1977 காலகட்டத்தில் மிசா சட்டத்தைக் கொண்டுவந்து, தனக்கு வேண்டாத, தன்னை எதிர்க்கும் அரசியல்வாதிகளைப் பழிவாங்கி எதிரியே இல்லாத சூழலை உருவாக்கினார் அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி. இனி இந்திராவை தனியாக எதிர்ப்பது பயன்தராது என பாதிக்கப்பட்ட வெவ்வேறு அரசியல் தலைவர் களான ஜெயப்பிரகாஷ் நாராயணன், ஜெகஜீவன் ராம், ராஜ் நாராயணன், சந்திரசேகர், வாஜ்பாய், மொரார்ஜி தேசாய், சரண்சிங் உள்ளிட்டவர்களை ஒருங்கிணைத்து ஜனதா கட்சி தொடங்கப்பட்டது; 1977-ல் ஆட்சியையும் கைப்பற்றியது. அப்போது இந்த ஒருங் கிணைப்பின் பின்னணியில் இருந்தவர் ஜனசங்க கட்சியிலிருந்த ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி.

தற்போது அசுரபலத்துடன் ஆட்சி பீடத்திலிருக்கும் பா.ஜ.க., இந்திராகாந்தி பாணியில் தன்னை எதிர்த்த, எதிர்ப்பவர்களை சி.பி.ஐ. போன்ற விசாரணை அமைப்புகளின் மூலம் வழக்குப்போட்டு மிரட்டு கிறது. பா.ஜ.க.வை எதிர்க்கும் அளவுக்கு பலமான எதிர்க் கட்சி இல்லாத சூழலில் சரத்பவார், மம்தாபானர்ஜி, திக்விஜய் சிங், குலாம்நபி ஆசாத், கபில்சிபல், ஜி.கே.வாசன் ஆகியோருடன் இப்போதும் இணக்கமாக இருக்கும் சுப்பிரமணியன் சுவாமி, "வெவ்வேறு கருத்துடைய நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே பா.ஜ.க.வை எதிர்க்க முடியும்' என தனித் தனியாக பேசிவருகிறார். விரைவில் எதிர்க் கட்சிகளின் ஒருங்கிணைப்பில் ஜனதா கட்சியைப் போல புதிய அமைப்பு உருவாக லாம் என தகவல் வருகிறது.

தனக்குக் கிடைக்குமென காத்திருந்த நிதியமைச்சர் பதவியை அருண் ஜேட்லி பறித் துக் கொண்டதுதான் இதற்குக் காரணமா? என்றால்…"இல்லை இல்லை... அன்றைய சூழலோடு இன்றைய சூழல் ஒத்துப்போவ தால் ஒருங்கிணைக்கிறார்' என்கிறார்கள் சுப்பிரமணியன் சுவாமியின் நெருங்கிய ஆதரவாளர்கள்.

-நாகேந்திரன்

நிர்வாணமும் கலையே! பெண் ஓவியரின் நம்பிக்கை!

ss

தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஓவியர் ரம்யா சதாசிவம். தான் வரைந்த ஓவியங்களுக்காக பிரபுல்ல தணுக்கர் விருது, ஸ்பந்தன் சிறந்த ஓவியக் கலைஞர் விருது உள்ளிட்ட மாநில, தேசிய விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டவர். 2006 லிருந்து வரைந்துவரும் சமகால யதார்த்தவாதி.

சென்னையில் நடக்கின்ற ஓவியக் கண்காட்சிகளில் ரம்யா வின் ஓவியங்கள் தவறாமல் இடம்பெறும். ஓவியக் கண்காட்சிகளை நடத்தியும் வருகிறார். ‘"மனதுக்குத் திருப்தி அளிப்பதே கலை. அதேநேரத்தில், அதன் மூலம் வருமானமும் ஈட்டவேண்டும்'’எனச் சொல்லும் இவர், சமூக ஊடகங்கள் மூலம் ஓவியங்களை விற்பனையும் செய் கிறார்.

இணையதளங்களில் தான் பகிர்ந்த நிர்வாண ஓவியங்களைப் பார்த்த பல ரும் தன்னைப் பற்றி அசிங்க மாகப் பேசி வருவதாக வருத்தம் கொள்ளும் ரம்யா சதா சிவம் அளித்த சமீபத்திய பேட்டியில், “""நியூட் பெயிண்டிங்னு ஒண்ணு கிடையவே கிடையாது. எல்லா சப்ஜெக்ட் மாதிரி அதுவும் ஒரு சப்ஜெக்ட். திராவிடியன் கலர் இன்டியன் ஸ்கின் கலர். என்னைவிட டார்க்கா இருக்கவங்க.. அந்த கலர்மேல லைட் விழும்போது லைட் ரிப்ளக்ஷன் ஷேடோ, அதெல்லாம் கொண்டு வர்றது ரொம்ப கஷ்டமான விஷயம். எல்லா ஆர்டிஸ்டுக்கும் அதை ட்ரை பண்றது ரொம்ப பிடிக்கும். எனக்கும் அந்த மாதிரி ஃபிகரேடிவ் ஒர்க் பண்றது ரொம்ப பிடிக்கும்.

அந்த பெயின்டிங்க நான் ஒரு 100 பேருக்கு காட்டினா.. 70 பேர் இன்பாக்ஸ்ல வந்து தொல்லை பண்றாங்க. தப்பாதான் பேசு றாங்க. ஒரு 20 மெம்பர்ஸ் ஒழுக் கம், கொள்கை, கோட்பாடுன்னு அட்வைஸ் பண்றாங்க. 10 மெம்பர்ஸ்தான் அதை ஆர்ட் ஒர்க்கா பார்க்கிறாங்க. ஒருநாள் இந்த நம்பர்ஸ் அப்படியே ரிவர்ஸ் ஆகும்ங்கிற நம்பிக்கை எனக்கிருக்கு'' என்கிறார்.

நிர்வாணம் இயற்கையானது; இழிவானதல்ல! கலை எந்த வடிவத்தில் இருந்தாலும், எல்லாமே பார்ப்பவர்களின் கண்ணோட்டத் தில்தான் இருக்கிறது.

-ராம்கி

திருநாவுக்கரசரின் பழைய பாசம்! அ.தி.மு.க.வில் குழப்பம்!

ss

திருச்சி விமானநிலைய ஆலோசனைக்குழு உறுப்பினர்களை அவசர அவசரமாக நியமித்து பட்டியல் வெளியானது. திருச்சி அ.தி.மு.க. பொருளாளர் அய்யப்பன், அ.தி.மு.க. பிரமுகர் ஜாக்குலின் ஆகியோரையும் இந்தக் குழுவில் நியமித்திருக்கிறார் குழுத்தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி.

இந்தச் செய்தி பத்திரிகைகளில் வெளியான நிலையில், “"திருநாவுக்கரசர் பழைய பாசத்தைக் காட்டுகிறார். காங்கிரஸில் உழைத்தவர்கள் ஏமாளிகளா?' என சமூக வலைதுதளங்களில் கொந்தளித்தார்கள் திருச்சி காங்கிரசார். அதேபோல், "ஆளுங்கட்சியாக இருந்துகொண்டு பதவிக்காக போய் கையேந்தலாமா?' என அ.தி.மு.க.வினர் மத்தியிலும் கொதிப்பு நிலவுகிறது.

விமானநிலைய ஆலோசனைக் குழுவில் தி.மு.க. மற்றும் காங்கிரஸில் இருந்து முக்கியப்புள்ளிகள் தலா நால்வரை திருநாவுக்கரசர் நியமித்திருக்கிறார்.

விமானநிலையம் கிழக்கு தொகுதிக்குள் வருவதால், அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தானாகவே இந்தக் குழுவில் இணைந்துவிடுவார். அவரது சிபாரிசுதான் அ.தி.மு.க.வினர் இருவரின் நியமனத்துக்குக் காரணம் என்கிற சர்ச்சையும் எழுந்துள்ளது. அவர் குழுவின் துணைத்தலைவர் என்பதால் சிபாரிசு செய்யலாம் என்று காரணம் சொல்லப்பட்டது.

இதை மறுக்கும் குழுவின் நுகர்வோர் அமைப்பில் தொடர்ச்சியாக பங்குவகிக்கும் கே.என்.சேகரன், ""துணைத்தலைவர் என்ற பதவியே இந்தக் குழுவில் கிடையாது. குழுவின் தலைவரான எம்.பி.யின் பரிந்துரையிலேயே நியமனம் நடந்திருக்கிறது. கடந்த ஓராண்டாக குழுவின் ஆலோசனைக்கூட்டம் நடக்க வில்லை'' என்கிறார்.

சர்ச்சை குறித்து விளக்கம்கேட்க திருநாவுக் கரசரைத் தொடர்புகொண்டால், "மீட்டிங்கில் இருக் கிறார்' என்றார் அவரது உதவியாளர். திருச்சி விமான நிலைய இயக்குனர் குணசேகரனிடம் பேசியபோது, ""எம்.பி. யாரைச் சொல்கிறாரோ அவரைத்தான் நியமித்தோம். இதிலுள்ள அரசியலெல்லாம் எனக்குத் தெரியாது'' என்றார்.

இரு கட்சி பெருந்தலைகளின் ஒருங்கிணைப்பில் கிளம்பிய சலசலப்பு ஓய்ந்தபாடில்லை.

-ஜெ.டி.ஆர்.

nkn151119
இதையும் படியுங்கள்
Subscribe