நிர்மலா தேவிக்கு தொடர் மிரட்டல்?
குடும்பத்தினரின் ஆதரவு இல்லாமல், வேலையெதுவும் செய் யாமல், ஊராரின் ஏளனப் பார் வைக்கு வேறு ஆளாகி, வழக்கையும் சந்திப்பது எத்தனை கொடுமை யானது? இந்த மனஅழுத்தம்தான் பொதுஇடங்களில் ஒருமாதிரியாக நடக்கச்செய்து, என்னை வேடிக் கைப் பொருளாக்கிவிட்டது. உள வியல் பிரச்சனைகளுக்காக சிகிச்சை எடுத்துக்கொள்ளும் நிலைக்கு தள்ளிவிட்டது’ -நிர்மலாதேவியின் இந்த உள்ளக்குமுறல் நாம் ஏற்கனவே அறிந்ததுதான்.
கடந்த 9-ந் தேதி ஸ்ரீவில்லிபுத் தூர் மகளிர் விரைவு நீதிமன்ற வளா கத்தில் மயங்கிவிழுந்த நிர்மலாதேவி, உடல்நிலை மற்றும் மனநிலை காரணமாகவோ என்னவோ, 23-ந் தேதியும் நீதிமன்றத்தில் ஆஜராகவில் லை. அவர் சார்பில் விடுப்பு மனு மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது.
"நாளைதானே தீபாவளி! இன்று அதிகாலையிலேயே இது என்ன சத்தம்?' என்று அருப்புக்கோட்டை ஆத்திபடி ஏரியாவில் நிர்மலா தேவி தங்கியிருக்கும் வீட்டுக்கு அருகில் வசிப்பவர்கள் வெளியில் வந்து பார்த் தார்கள். அப்போது வீட்டி லிருந்து பொருட்களை தெருவில் வீசிக்கொண்டிருந் தார் நிர்மலாதேவி. பக் கத்த
நிர்மலா தேவிக்கு தொடர் மிரட்டல்?
குடும்பத்தினரின் ஆதரவு இல்லாமல், வேலையெதுவும் செய் யாமல், ஊராரின் ஏளனப் பார் வைக்கு வேறு ஆளாகி, வழக்கையும் சந்திப்பது எத்தனை கொடுமை யானது? இந்த மனஅழுத்தம்தான் பொதுஇடங்களில் ஒருமாதிரியாக நடக்கச்செய்து, என்னை வேடிக் கைப் பொருளாக்கிவிட்டது. உள வியல் பிரச்சனைகளுக்காக சிகிச்சை எடுத்துக்கொள்ளும் நிலைக்கு தள்ளிவிட்டது’ -நிர்மலாதேவியின் இந்த உள்ளக்குமுறல் நாம் ஏற்கனவே அறிந்ததுதான்.
கடந்த 9-ந் தேதி ஸ்ரீவில்லிபுத் தூர் மகளிர் விரைவு நீதிமன்ற வளா கத்தில் மயங்கிவிழுந்த நிர்மலாதேவி, உடல்நிலை மற்றும் மனநிலை காரணமாகவோ என்னவோ, 23-ந் தேதியும் நீதிமன்றத்தில் ஆஜராகவில் லை. அவர் சார்பில் விடுப்பு மனு மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது.
"நாளைதானே தீபாவளி! இன்று அதிகாலையிலேயே இது என்ன சத்தம்?' என்று அருப்புக்கோட்டை ஆத்திபடி ஏரியாவில் நிர்மலா தேவி தங்கியிருக்கும் வீட்டுக்கு அருகில் வசிப்பவர்கள் வெளியில் வந்து பார்த் தார்கள். அப்போது வீட்டி லிருந்து பொருட்களை தெருவில் வீசிக்கொண்டிருந் தார் நிர்மலாதேவி. பக் கத்து வீட்டுக்காரரின் கார் கண்ணாடியை கற்களை வீசி உடைத்தார்.
அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின்பேரில் காவல் ஆய்வாளர் அன்ன ராஜ் அங்குவந்தார். நிர்மலா தேவியின் அண்ணன் ரவி யும் அங்குவர, உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது அந்த வீடு. பலமுறை அழைத்தும் கதவைத் திறக்கவில்லை. பாதுகாப்புக்காக தற்போது வீட்டுவாசலில் காவலர்கள் நிற்கிறார்கள். தனக்கு போனில் மிரட்டல் வருவதாக வும், தனது குழந்தைகள் உயிருக்கு ஆபத்து என்றும் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியனிடம் ஏற்கனவே தெரிவித்திருந்தார் நிர்மலா தேவி. பசும்பொன் பாண்டிய னும் "கவர்னரை மிரட்ட ஆளுங்கட்சியினருக்கு இந்த வழக்கு ரொம்பவே பயன்படு கிறது' என்று பேட்டியெல் லாம் கொடுத்தார். உண்மை யில் நிர்மலாதேவிக்கு என்ன தான் ஆச்சு?
-ராம்கி
அ.தி.மு.க.வை ஓரணியாக்க களமிறங்கிய அமைச்சர்!
அமைச்சர் காமராஜின் அண் ணன் கனகசபை உடல் சுகவீனத்தால் சமீபத்தில் காலமானார். அவர் இறந்த அடுத்த பத்து நிமிடங்களில் தனது அக்கா மகன் ஆர்.ஜி.குமாரிடம் ""பகையாளி, பங்காளின்னு பாகுபாடு இல்லாம எல்லாருக்கும் செய்தியைச் சொல்லிடுங்க. திவாகரன் உள்ளிட்ட வி.ஐ.பி.க்களுக்கு நான் சொல்லிவிடு கிறேன்''’என்றார் அமைச்சர் காமராஜ்.
அதன்படியே தி.மு.க., அ.ம. மு.க.வைச் சேர்ந்த நிர்வாகிகள் ஆப்செண்ட் ஆகாமல் ஆஜரானார்கள். அன்று ஊரில் இல்லாததால் மறுநாள் துக்கம் விசாரிக்க வந்திருந்தார் அ.ம.மு.க. முக்கியப்புள்ளியான சிவராஜமாணிக்கம். திவாகரனும், தேசபந்துவும் அடுத்தடுத்து வந்தார்கள். தனியாக சந்தித்துக் கொண்ட இவர்கள் இரண்டரை மணிநேரம் வரை பேசினார்கள்.
இரண்டுநாள் கழித்து அ.ம.மு.க. பொருளாளர் ரெங்கசாமியும், சிவராஜ மாணிக்கமும் அமைச்சரைச் சந்தித்தனர். இந்த சந்திப்பும் இரண்டு மணிநேரம் நடந் தது. இரண்டு சந்திப்பிலுமே தினகரனை மையமாக வைத்தே பேசப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இதுபற்றி அமைச்ச ருக்கு நெருக்கமான அ.தி. மு.க. பிரமுகர் ஒருவர், ""ஜெ. இறந்தபோது ஓ.பி.எஸ். முதல்வராக தொடர்ந்ததற் கும், இ.பி.எஸ். முதல்வராக ஆனதற்கும் பின்னால் திவாகரனின் பங்கு இருந் தது. அதற்கு எதிராக இருந்த தினகரனோடு விரிசல் ஏற்பட்டு விலகினார் திவா கரன். இருந்தும் அமைச்சர் காமராஜோடு சுமுகமாகவே இருந்தார். தற்போது எடப் பாடியின் அனுமதியோடு சந்திப்பு நடந்துவிட, அ.தி. மு.க.வை ஓரணியாக்கும் பேச்சுவார்த்தை நடந்திருக் கிறது. பெங்களூரு புகழேந்தி யைத் தொடர்ந்து, அடுத்த விக்கெட் ரெங்கசாமியாகத் தான் இருக்கும்''’என்றார் உறுதியாக.
-க.செல்வகுமார்
ஓய்வுபெற்ற அதிகாரி! ஓயாத முறைகேடு!
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜன். ஓய்வுபெற்ற அரசு அதிகாரியான இவர், தமிழ்நாடு மாநில ஓய்வுபெற்ற சிவில் சர்வீஸ் அதிகாரிகள் TASCSORA சங்கத்தின் மாநிலத் தலைவராக இருக்கிறார். கோவிந்த ராஜன் துணை தாசில்தாராக இருந்த சமயத்தில், புதுக்கோட்டை மாவட்டத்தில் சர்வே எண்.5893/3-ல் உள்ள நீர்நிலை புறம்போக்கு நிலத்தை துணை வட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் சங்கத்துக்காக, கலெக்டர் ஒப்புதலுடன் ஒதுக்கீடு செய்துள்ளார்.
தற்போது, TASCSORA-வின் புதுக்கோட்டை மாவட்டத் தலைவராகவும் இருப்பதால், நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர், தான் ஒதுக்கீடுசெய்த நிலத்தில், TASCSORA சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட கட்டிடத்தை 2013-ல் கட்டிவிட்டார். அப்போது கலெக்டராக இருந்தவரின் தயவோடு கட்டியதால், கட்டிடத்தின் ஒரு பகுதி அவரின் பெயரிலேயே இன்றும் இருக்கிறது. மேலும், TASCSORA சங்கத்தின் மாநாட்டிற்காக வசூல்செய்த நிதியில் ஆறரை லட்ச ரூபாயை முறைகேடாக எடுத்து, அதையும் கட்டிடத்திற்காக பயன்படுத்தினார் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனையறிந்த TASCSORA சங்கத் தினர், இதுதொடர்பாக ஆர்.டி.ஐ. மூலம் தகவல் கோரியபோதுதான், கட்டிடம் முறையான அனுமதியின்றி கட்டப்பட்டி ருப்பதையும், அது கோவிந்தராஜனின் மகன் சுரேஷ்குமாரின் பெயரில் பதிவு செய்யப்பட்டி ருப்பதையும் கண்டு அதிர்ச்சி யடைந்துள்ள னர். ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகளுக் காக என்று சொல்லிக் கொண்டாலும், "கோட்டீஸ்வரா கேட்டரிங்' என்கிற தனியார் நிறுவனம்தான் அங்கு இயங்குகிறது என்றும் அவர்கள் குமுறுகிறார்கள். நிலநிர்வாக ஆணையர் ஜெயக்கொடியிடம் இதுதொடர்பாக புகார் கொடுத்துள்ளனர்.
இதுபற்றி கோவிந்தராஜனிடம் கேட்டபோது, ""அசோசியேஷனின் பொதுக்குழுவைக் கூட்டி என்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது. என் மீதான புகார் அரசிடம் விசாரணையில் உள்ளதால், பதில்சொல்ல முடியாது''’என்று மறுத்துவிட்டார்.
-மதி