ஆதரவற்ற குழந்தையை அரவணைத்த கைகள்!

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியைச் சேர்ந்த வித்யாவும், மடப்புரத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் கார்த்திக்கும் காதலித்து திருமணம் செய்தவர்கள். இவர்களுக்கு விகாஸ், வரணிகா என இரண்டு குழந்தைகள் பிறந்ததும், திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் கருத்தடை செய் துள்ளார் வித்யா.

ss

ஆனால், மருத் துவர்களின் அலட்சியத்தால் மீண்டும் கருவுற்றிருக் கிறார். காலங்கடந்ததால் கருக்கலைப்பு செய்யவும் வழியில்லாமல் போனது. தவிப்புடனே மூன்றாவது குழந்தையை வயிற்றில் சுமந்த நிறைமாத கர்ப்பிணி வித்யாவை, கணவர் கார்த்திக் எட்டி உதைத் ததில் உதிரப்போக்குடன் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டார். அழகான பெண் குழந்தை அதன்யா பிறந்தது. வித்யா உயிரை விட்டார்.

Advertisment

இந்தக் குழந்தையை திருவாரூர் அறநெறி லயன்ஸ் கிளப் தத்தெடுத் துள்ளது. இதற்கான முதற்கட்ட உதவியைச் செய்வதற்காக, அடாத மழைக்கு நடுவிலும் அறநெறி சங்கத்தினரோடு சென்றார் நமது நக்கீரன் ஆசிரியர். ஆள்நுழைய வசதியில்லாத குடிசையில் இருந்த அதன்யாவையும் அந்தக் குடும்பத்தையும் பார்த்து ஆறுதல் கூறினார். "அவர்களுக்கான ஆதரவும், உதவியும் எந்தத் தடையு மின்றி கிடைக்கும்' என அவர் உறுதியளித்தது பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதைப் பார்த்து கலங்கிநின்ற வித்யாவின் தாயார் ரேவதி (அதன்யாவின் பாட்டி), “""நாற்பது யூனிட் ரத்தம் ஏற்றியும், ஐந்துநாட்கள் தீராத ரத்தப்போக்கால் வித்யா துடிதுடித்து இறந்து போனாள்.

குடும்பக் கட்டுப் பாடை முறையாக செய் யாத டாக்டர்களும், நிறை மாத கர்ப்பிணின்னுகூட பார்க்காமல் என் மகளை, குடித்துவிட்டு எட்டி உதைத்த மருமகன் கார்த் திக்கும்தான் குற்றவாளி கள்'' என அலறினார்.

அறநெறி லயன்ஸ் சங்கத்தைச் சேர்ந்த ராஜ்குமார், ""குழந்தை அதன்யா வின் நலனில் அக்கறை கொள்வோம். அவர் என்ன படிக்க விரும்பு கிறாரோ, அதற்கான உதவிகளை கடைசி வரை செய்வோம்'' என உறுதியளித்தார்.

Advertisment

-க.செல்வகுமார்

கொதி மண்டலமான கொங்கு மண்டலம்!

கொங்கு மண்ட லத்தில் பரவலாகவும் பல உட்பிரிவுகளுடனும் இருப் பது கொங்கு வேளாள கவுண்டர் சமுதாயம். இதில் சில உட்பிரிவினர், ஈரோடு மாவட்டம் சிவகிரி அரு கேயுள்ள பொன்காளியம் மனை குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.

ss

இந்தக் கோவிலின் மூதாதையர்களாக விளங் கும் கூரைகுல, விளையன் குல காளியண்ணன் சிலை கள் தொப்பம்பாளையம் என்ற இடத்தில் உள்ளன. இந்தப் பகுதியில் வசிக்கும் மற்றொரு சமுதாயத்தினர், பொன்காளியம்மன் கோவில் தங்களுக்குத்தான் சொந்தம் என வழிபாட்டு உரிமை கோரிவருகிறார் கள். இது நீண்டகாலமாக தொடரும் பிரச்சினை. காளியண்ணன் சிலைகள் காம்பவுண்ட் மற்றும் இரும்புக் கதவுகளால் பாது காக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், 20-ந் தேதி நள்ளிரவில் பெரிய சுத்தியலுடன் ஹெல்மெட் அணிந்துவந்த ஏழுபேர் கொண்ட கும்பல், காம்ப வுண்ட் கேட்டை உடைத்து, உள்ளே நுழைந்து காளி யண்ணன் சிலைகளை இடித்துத் தள்ளியது. இந்தத்தகவல் காட்டுத்தீ போல் பரவ... ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர் என மேற்கு மாவட்டங்களில் பதற்றம் தொற்றிக் கொண்டது.

சி.சி.டி.வி. காட்சி களின் அடிப்படையில் வலசையைச் சேர்ந்த ரவி என்பவர் கைது செய்யப் பட்டுள்ளார். மேலும் ஆறுபேரைத் தேடிவருகிறது காவல்துறை. சிவகிரி சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த அனைத்து கிராமங்களிலும் கடையடைப்பு, சாலை மறியல் போராட்டங்களும் நீடிக்கின்றன. இரு சமு தாயத்தினரிடையே சாதிய மோதல் உருவாகலாம் என்பதால், ஏராளமான போலீசார் குவிக்கப்பட் டுள்ளனர். பண்பாட்டுக்கு பேர்போன கொங்கு மண் டலம் கொதிமண்டலமாக மாறியிருக்கிறது.

-ஜீவா தங்கவேல்

சர்ச்சை அமைச்சரின் இன்னொரு பரபரப்பு!

நாங்குநேரி தொகுதியிலுள்ள கரு வேலங்குளத்தில் வீடு எடுத்துத் தங்கி தேர்தல் பணியாற்றினார் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி. அவரை சந்திக்கச் சென்ற கேசவநேரி ஜமாத்தினரிடம் தேவையற்ற வார்த்தை களைக் கொட்டித் தீர்த்து அவமானப்படுத்தியதாக புகார் எழுந்தது.

ss

கேசவநேரி ஜமாத் தினரிடம் பேசியபோது, ""ரேஷன்கடை வேண்டும் என்ற கோரிக்கை மனு வோடு காலை 10:30 மணிக்கு அமைச்சரை சந்தித்தோம். எங்களிடம் அவர், "நீங்கதான் எங்களுக்கு ஓட்டுபோட மாட்டீங்களே. நாங்க எதுக்கு உங்களுக்கு பண்ணித்தரணும்? மனு வைக் கொண்டுபோய் தி.மு.க. எம்.பி.கிட்ட கொடுங்க. பி.ஜே.பி. கூட்டணிங்கிறதுனால இப்படி பண்ணுறீங்க. இப்படியே எங்களை புறக் கணிச்சிக்கிட்டிருந்தா.. ஜம்மு-காஷ்மீர் மாதிரி தமிழ்நாட்டுலயும் ஒதுக்கிவைக்கிற நெலம வந்திரும்னாரு' என் றார்கள்'' குமுறலோடு.

சிறுபான்மையின ரின் கண்டனத்திற்கு ஆளாகியிருப்பது குறித்து அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியிடமே கேட் டோம். ""எப்பவும்போல அன் னைக்கு நைட் 9 மணிக்கு ரவுண்ட்ஸ் போனேன். நைட்டுங்கிறதுனால என்கூட ரெண்டு வண்டி தான் வந்தது. மூணுபேர் கையக் காட்டி நிப்பாட்டி னாங்க. நிற்கக்கூட முடி யாத போதைல இருந் தாங்க. நான் காரைவிட்டு இறங்கல.

"எங்க பகுதிக்கு ரேசன்கடை வேணும்' னாங்க. "ரேசன்கார்டு எத்தனை இருக்கும்'னு கேட்டேன். "நாப்பது, அம்பது வீடு இருக்கும்' னாங்க. "500-ன்னா ஒரு பகுதியா கொடுப்பாங்க. இல்லைன்னா 300 வீடாச் சும் இருக்கணும்'னு சொன்னேன். என்னை ஒருமையில பேச ஆரம் பிச்சாங்க. "நீங்க மொதல்ல தாசில்தார்கிட்ட மனு கொடுங்க. மனுவோட நகலை என்கிட்ட கொடுங்க. வாய்ப்பிருந்தா பண்ணித் தர்றேன்'னு சொன்னேன்.

நான் மோடியை டாடிங்கிறேன்ல... பி.ஜே. பி.க்கு ஆதரவா பேசு றேன்ல... இதையெல்லாம் மனசுல வச்சிக்கிட்டுத் தான், சண்டை இழுத்துற லாம்னு கணக்குபோட்டு வந்திருக்காங்க. நான் அப்படிப் பேசினதுக்கு ஆதாரமிருக்கா? எனக் கென்னமோ வந்தவங்கள பார்த்தா முஸ்லீம் மாதிரியே தெரியல. இதுக்குப் பின் னால நிச்சயமா தி.மு.க.வும் காங்கிரஸும் இருக்கும். எனக்கு எல்லா கடவுளும் ஒண்ணுதான்'' என்று தன் னிலை விளக்கம் அளித் தார்.

-ராம்கி