ss

மாணவப் பருவத்தை மீட்டெடுத்த நிகழ்வு!

ss

அது ஓர் இனிமையான சந்திப்பு. திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழகத்தில் 1984-1987ஆம் ஆண்டுகளில் இளங்கலை அறிவியல் பட்டப் படிப்பு பயின்ற மாணவர்கள் 32 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சந்தித்துக்கொண்ட நிகழ்ச்சி கடந்த 12 மற்றும் 13-ஆம் தேதிகளில் நடைபெற்றது. சில மாதங்களுக்குமுன்... பழைய மாணவர்களான செந்தில்- ஜேக்கப் இல்லத் திருமணத்தில் இந்தச் சந்திப்பிற்கான முன்முனைப்பு செய்யப்பட்டு... அனைவரின் உழைப்பால் இந்த சந்திப்பு சந்தி(த்தி)ப்பாக அமைந்தது. முதல்நாள் நிகழ்ச்சி சிறுமலையில் சைவ-அசைவ விருந்துடன் நடந்தது. ஒவ்வொருவரும் தங்களின் குடும்பம் மற்றும் தொழில்குறித்து மகிழ்ச்சியாகவும், படித்த காலத்திய நினைவுகளை நெகிழ்ச்சியாகவும் பகிர்ந்துகொண்டனர்.

முன்னாள் மாணவர்களின் குடும்பத்தினருக்கும், தகுதிவாய்ந்த ஏழை மாணவர்களுக்கும் கல்வி மற்றும் மருத்துவ உதவிகள் செய்ய ட்ரஸ்ட் ஒன்றை ஏற்படுத்த முடிவெடுக்கப்பட்டது. இரண்டாம் நாள் நிகழ்ச்சி, முன்னாள் ம

மாணவப் பருவத்தை மீட்டெடுத்த நிகழ்வு!

ss

அது ஓர் இனிமையான சந்திப்பு. திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழகத்தில் 1984-1987ஆம் ஆண்டுகளில் இளங்கலை அறிவியல் பட்டப் படிப்பு பயின்ற மாணவர்கள் 32 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சந்தித்துக்கொண்ட நிகழ்ச்சி கடந்த 12 மற்றும் 13-ஆம் தேதிகளில் நடைபெற்றது. சில மாதங்களுக்குமுன்... பழைய மாணவர்களான செந்தில்- ஜேக்கப் இல்லத் திருமணத்தில் இந்தச் சந்திப்பிற்கான முன்முனைப்பு செய்யப்பட்டு... அனைவரின் உழைப்பால் இந்த சந்திப்பு சந்தி(த்தி)ப்பாக அமைந்தது. முதல்நாள் நிகழ்ச்சி சிறுமலையில் சைவ-அசைவ விருந்துடன் நடந்தது. ஒவ்வொருவரும் தங்களின் குடும்பம் மற்றும் தொழில்குறித்து மகிழ்ச்சியாகவும், படித்த காலத்திய நினைவுகளை நெகிழ்ச்சியாகவும் பகிர்ந்துகொண்டனர்.

முன்னாள் மாணவர்களின் குடும்பத்தினருக்கும், தகுதிவாய்ந்த ஏழை மாணவர்களுக்கும் கல்வி மற்றும் மருத்துவ உதவிகள் செய்ய ட்ரஸ்ட் ஒன்றை ஏற்படுத்த முடிவெடுக்கப்பட்டது. இரண்டாம் நாள் நிகழ்ச்சி, முன்னாள் மாணவர் வேல்முருகன் தொகுத்து வழங்க... பல்கலையின் வெள்ளிவிழா அரங்கில் நடந்தது. பதிவாளர் வி.பி.ஆர்.சிவக்குமார் முன்னிலையில், துணை வேந்தர் (பொறுப்பு) எம்.சுந்தரவடிவேலு தலைமையில், முன்னாள் மாணவரும், பல்கலை நிதி அலுவலருமான மணிவேல் வரவேற்புரையாற்றினார். ஓய்வுபெற்ற பேராசிரியர்கள் குருவம்மாள், திலகவதி, முன்னாள் நிதிஅலுவலர் காந்தி, வேந்தரின் தனிச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் தற்போதைய பல்கலைத் துறைத் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டு ஆக்கப்பூர்வமான அறிவுரைகளை வழங்கினர். வேந்தர் கே.எம்.அண்ணாமலை வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார். இந்தச் சந்திப்பிற்கு அடையாளமாக முன்னாள் மாணவர்கள் மரக்கன்றுகளையும் நட்டனர்.

’பிழைப்பு நிமித்தம் உண்டான களைப்பை தீர்த்துக்கொள்ளும் புத்துணர்ச்சி முகாமாக இச்சந்திப்பு அமைந்ததை’ பழைய மாணவர்களின் மனமகிழ்ச்சியில் உணரமுடிந்தது. பழைய மாணவர் என்கிற முறையில் கலந்துகொண்ட நமக்கும் அதே மனமகிழ்ச்சி கிடைத்தது.

-இரா.த.சக்திவேல்

மிசா சர்ச்சைக்கு பதிலடி தந்த கே.எஸ்.ஆர்.!

ssதி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை அரசியல் உலகிற்கு அறிமுகம் செய்ததே அவர் மிசா கால சிறைவாசத்தில் பட்ட அடிகள்தான். ஆனால், மிசா தொடர்பாக விசாரிக்கப்பட்ட ஷா கமிஷன் அறிக்கையில் ஸ்டாலின் பெயர் இல்லை என சர்ச்சை கிளப்பப்பட்டு, அது விவாதமாகி வருகிறது. தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொன்முடியிடம் இது குறித்து ஒரு சேனல் கேட்டபோது, "எனக்கு அதுபற்றி தெரியாது' என்று பதிலளிக்க, அது மேலும் அதிகமான சர்ச்சைகளை உருவாக்கிவிட்டது.

இந்நிலை யில், தி.மு.க.வின் செய்தித் தொடர்புச் செய லாளர் வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ் ணன், மிசா கொடுமைகள் குறித்து பதிவு செய்யப்பட்ட நீதிபதி இஸ்மாயில் தலைமையி லான கமிஷன் அறிக்கையில், மு.க.ஸ்டாலின் சிறைப்பட்ட விவரமும், அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல், சிட்டிபாபுவின் உயிரைப் பறிக்கும் அளவுக்கு நடந்த கொடூரம் ஆகியவற்றுக்கான ஆவணங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். அத்துடன், சென்னை அமெரிக்க தூதரகம் அக்காலத்தில் வாஷிங்டனுக்கு அனுப்பிய கேபிள் செய்தியிலும், மிசா கைதுகள் குறித்து பதிவிடப்பட்டதையும் அதில் கலைஞரின் மகன் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டது தொடர்பான தகவல் இடம்பெற்றிருப்பதையும் எடுத்துக்காட்டியுள்ளார் கே.எஸ்.ஆர்.

அவரைத் தொடர்ந்து தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி எம்.எம்.அப்துல்லா உள்ளிட் டோரும் விரிவான விளக்கம் தந்து சர்ச்சையை அடக்கினர். மிசா கைதுகள் குறித்து கலைஞரின் நெஞ்சுக்கு நீதியை சுட்டிக்காட்டி டிகே.எஸ்.இளங்கோவன் எம்.பி. அறிக்கை வெளியிட்டார்.

-கீரன்

கலாம் வழியில் அசத்திய பொன்ராஜ்

மதுரையில் அப்துல்கலாம் பிறந்தநாளை முன்னிட்டு, மடீட்சியா அரங்கில் அக்டோபர் 16-ஆம் தேதி தமிழகம் முழுவதுமுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குள் சிறந்த பேச்சாளர்களை தேர்வுசெய்ய கருத்தரங்கம் நடைபெற்றது.

ss

கலாமின் மறைவுக்குப்பின் அவரது வழியில் மாணவர் களை ஊக்குவித்து, திறமைகளை வெளிக்கொண்டுவருவதில் ஆர்வம் காட்டிவரும், அப்துல்கலாமின் ஆலோசகரும் உதவி யாளருமான பொன்ராஜ், இந்நிகழ்வில் கலந்துகொண்டார். ஒவ்வொரு மாணவரும் வெவ்வேறு தலைப்புகளில் பேசி பார்வையாளர்களை ஈர்த்தனர். "உருவாக்கு உன் வாழ்வை' என்ற தலைப்பில் சிவகாசி விஜய்யும், "வள்ளுவரின் வழியில்' என்ற தலைப்பில் புதுச்சேரி வெற்றிவேலும், "உயிர்காக்கும் உயிரித் தொழில்நுட்பம்' என்ற தலைப்பில் தேனி அழகேஸ்வரியும், "அப்துல்கலாமின் எளிய வாழ்க்கை முறை' என்ற தலைப்பில் இராமநாதபுரம் அப்ரினும் பேசி அரங்கத்தை ஈர்த்தனர்.

எனினும் கடைசியில் பேசிய மதுரை அப்பர் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஐந்தாம் வகுப்பு மாணவி காவியாவின் பேச்சே உள்ளத்தைக் கொள்ளைகொண்டது. அவரது பேச்சுக்கு அரங்கமே ஒன்ஸ்மோர் கேட்டது. அவருக்கு கேடயமும் அப்துல்கலாமின் புத்தகமும் பரிசாக வழங்கப்பட, குழந்தையோ நக்கீரனில் தொடராக வெளிவந்த "ஆகலாம் அப்துல்கலாம்' புத்தகத்தைச் சுட்டிக்காட்டி பரிசாகப் பெற்றுக்கொண்டது.

கடைசியாக பேசிய பொன்ராஜ், ""ஒவ்வொரு மாணவரும் நல்முத்துகள்தான். அதன் பிரகாசத்தை வெளிக்கொணரும் வேலை நம்முடையது. அப்துல்கலாமின் மனதையும் அசாத்திய அறிவையும் மாணவர்களிடத்தில் விதைப்பதற்கான பணிகளை முன்னெடுப்பதுதான் இனி என் வேலை'' என்றார்.

-அண்ணல்

nkn251019
இதையும் படியுங்கள்
Subscribe