நக்கீரன் செய்தி எதிரொலி! விசாரணைக்கு அனுமதி!

sssதஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கடந்த 2017-18 காலகட்டத்தில் நடைபெற்ற 40 பேராசியர் களுக்கான நியமனத்தில் முறைகேடு நடந்தது. இதற்கான ஆதாரங்களை ஆர்.டி.ஐ. மூலம்பெற்ற சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான நெடுஞ்செழியன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்குக் கோரினார்.

லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைசெய்ய உத்தர விட்டது நீதிமன்றம். ஆனால், பல்கலைக்கழக சிண்டிகேட் அனுமதியின்றி, பல்கலைக்கழகத்தில் இருப்பவர்களை விசாரிக்கமுடியாது என்பதால், சிண்டிகேட் அனுமதி கொடுக்க நீதிமன்றம் வலியுறுத்தியது.

இதையடுத்து, 09-ந் தேதி கூடிய சிண்டிகேட்டில் வரம்புகளை மீறி கலந்துகொண்ட தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், சட்ட வல்லுனர் களின் ஆலோசனைப் பெறவேண்டும் எனக்கூறி கூட்டத்தை 12-ந் தேதிக்கு ஒத்திவைத்தார். இது தொடர்பான செய்திகளை நக்கீரன் வெளிக்கொண்டு வந்தது.

Advertisment

இந்நிலையில், 12-ந் தேதி சிண்டிகேட் கூடி லஞ்ச ஒழிப்புத்துறைக்குக் கொடுத்த அனுமதிக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, 14-ந் தேதி நீதிமன்றத்திலும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை நவம்பர் 25 ந்தேதிக்கு ஒத்திவைத்ததுள்ளது நீதிமன்றம்.

அடுத்தகட்டமாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்க இருக்கிறது. “நீதிமன்றம் தலையீட்டினால் சிண்டிகேட் அனுமதி கொடுத்திருச்சு. ஆனால், விஜிலென்ஸ் நம்ம அரசாங்கத் தோடதுதானே'' என்ற மிதப்பில் இருக்கிறார்கள் முறைகேட்டில் தொடர்புடைய அரசியல்வாதிகளும், அதிகாரிகளும். அதனால், விசாரணையின் போக்கைப் பொறுத்து, அடுத்த வாய்தாவில் தனிநபர் கமிஷன் விசாரணையை நீதிமன்றத்திடம் கோரலாம் என்ற எண்ணத்தில் உள்ளனர் வாதி தரப்பினர்.

-இரா.பகத்சிங்

Advertisment

லாட்டரி விற்கப்போகும் அரசு! தேதி குறிச்சாச்சு!

sss

லாட்டரி விற்பனையால் கோடிகளில் புரண்டார் லாட்டரி மார்ட்டின். ஆனால், அவர் தனக்கு ஒத்துழைக்காத காரணத்தால், தமிழகத்தில் லாட்டரியைத் தடைசெய்தார் ஜெயலலிதா. கேரளா சென்று லாட்டரி வாங்கி வருபவர்களையும் கைதுசெய்து, லாட்டரி மார்ட்டினின் தொழிலுக்கு செமத்தியாக நஷ்டத்தையும் ஏற்படுத்தினார்.

இதெல்லாம் அந்தக் காலம். ஜெ. மறைவுக்குப் பிறகு 3 நம்பர் லாட்டர் டிக்கெட்டுகள் விற்பனை களைகட்டியது. அதுவும் மேற்குமண்டலமான கோவை, திருப்பூர், நீலகிரி பகுதிகளில் அமோக விற் பனை நடைபெற்றது. தினக் கூலிகள் முதல் காசுள்ள வர்கள் வரை தினந்தோறும் 9, 11, 3 மணி என லாட்டரி அடிக்கும் நேரங்களில் வந்து லட்சங்களைக் கொட்டு வார்கள். போலீசுக்கும் மாதந் தோறும் செட்டில்மெண்ட் சரியாக போய்ச் சேர்ந்ததால், எந்தத் தொல்லையும் இன்றி பிசினஸ் நடந்தது.

ஆனால், சமீபகாலமாக ஜெ. ஆட்சியைப் போலவே, பல இடங்களில் போலீஸ் கெடுபிடி அதிகரித்திருக் கிறது. இதுபற்றி லாட்டரி விற்பனையாளர் ஒருவர் நம்மிடம், ""நல்ல லாபத்துல தான் பிசினஸ் போயிட்டு இருந்தது. அதுக்கேத்த மாதிரி எம்.எல்.ஏ.க்கள், போலீஸை நல்லா கவனிச் சோம். ஒரு இடத்தில் மட்டுமே 200-க்கும் மேற்பட்டவங்க டிக்கெட் போட வருவாங்க. ஆனால், நிலைமை முன்னமாதிரி இல்ல. ஒரேயடியா கைது பண்ணி கூட்டிட்டு போறாங்க. என்னதான் பிரச்சனையின்னு கூடி விசாரிச்சோம். நாங்க கொடுக்கிற லஞ்சப்பணமே எக்கச்சக்கமா இருப்பதால, அந்தத் தொழிலைக் கையிலெடுக்க முடிவு செய் திருக்காம் அரசு. ஏப்ரல் மாதத்துல இருந்து அர சாங்கமே லாட்டரி டிக்கெட் விற்கப்போகுது'' என்றார்.

""இது உண்மைதானா?'' என ஆளுங்கட்சி பிரமுகர் ஒருவரிடம் கேட்டபோது, “""அரசு கஜானா நிறைய வேண்டுமென்றால், இதுமாதிரி வேலைகளை செய்துதான் ஆகவேண்டும். இதற்கு வாய்ப்பிருக்கிறது'' என்றார் சிரித்த படியே.

-அருள்குமார்

கேலிக்கூத்தான நீதிமன்ற உத்தரவு! அமைச்சர் வரை கமிஷன்!

sss

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தனது அதிகார எல்லை வரம்புக்குட்பட்ட 13 மாவட்டங்களில், சவுடு மண் அள்ளுவதற்கு மாவட்ட நிர்வாகங்கள் கொடுத்த அனுமதியை ரத்துசெய்து உத்தரவிட்டது.

மணல் மாஃபியா கும்பல்களோ "சவுடு மண்ணைத் தானே அள்ளக்கூடாது. நாங்க உபரி மண்ணைத்தான் அள்ளுறோம்' என்று நீதிமன்றத் தீர்ப்பையே கேலிக்கூத்தாக்கி மணல் கொள்ளையில் ஈடுபடுகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டயபுரம், விளாத்திகுளம் தாலுகாக்களை உள்ளடக்கிய 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக பாயும் வைப்பாற்றுப் படுகை அவர்களின் கண்ணில் சிக்கியிருக்கிறது. இதற்கு ஏரியா அமைச்சரே உடந்தையாகவும் இருக்கிறார்.

குறிப்பாக எட்டயபுரம் தாலுகா கீழ்நாட்டுக் குறிச்சி, விளாத்திகுளம் தாலுகாவில் பல்லாகுளம் ஆகிய பகுதிகளில், உபரி மண் எனும் பெயரில் மணல்கொள்ளை அரங்கேறி வருகிறது. கீழ்நாட்டுக் குறிச்சியில் பட்டாஎண் 153/1, 2, 3, 154/4, 5, 6 ஆகிய எண்ணில் 2:58 ஹெக்டேர் நிலப்பரப்பில் உபரி மண்ணை அகற்றுவதாகக்கூறி, செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவின் பினாமி யான பால்பாண்டி மணல் கொள்ளையில் ஈடுபடுகிறார். அதுவும் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, காவல்துறை, சுங்கம் மற்றும் கனிம வளத்துறை அதிகாரிகளின் பூரண ஆசியுடன்.

“""50 அடி ஆழம்வரை தோண்டி, 500 லோடு 4 ஆயிரம் யூனிட் மணல்கொள்ளை நடக்கிறது. இதன்மூலம் நாளொன்றுக்கு ஒரு கோடி ரூபாய் அளவுக்கு லாபம் பார்ப்பதாகவும், அதில் அமைச்சர் தரப்புக்கு 40% கமிஷன் போகிறது'' என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

""இதுவரை எட்டயபுரம் வட்டாட்சியர், விளாத்தி குளம் வட்டாட்சியர் சம்பந்தப்பட்ட காவல்நிலையங் களில்கூட இதுவரை உபரிமண் அனுமதிபெற்ற சான்று வழங்கப்படவில்லை. முழுக்க முழுக்க மணல் மாஃபியாக் களும், மாவட்ட உயர் அதிகாரிகளும் கைகோர்த்துக் கொண்டு சகட்டுமேனிக்கு மணலை அள்ளுகின்றனர்'' என்று கொதிக்கிறார்கள் எட்டயபுரம் தாலுகா மக்கள்.

-நாகேந்திரன்