காங்கிரஸால் தூக்கி வீசப்பட்ட டி.எஸ்.பி.!
கன்னியாகுமரி மாவட் டத்திலேயே மிகப்பெரிய சப்-டிவிஷன் தக்கலை. மத ரீதியிலான சென்சிடிவ் பிரச் சினைகள் அதிகம் உருவாவது இங்குதான். கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்னர் இங்கு டி.எஸ்.பி.யாக நியமிக் கப்பட்டார் கார்த்திகேயன்.
முஸ்லீம் மக்கள் அதிகம் வசிக்கும் மக்காபாளையம், திருவிதாங்கோடு, அழகியமண்டபம் ஆகிய பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி ஊர் வலங்களை சிறு சலசலப்பு இல்லாமல் நடத்தியதோடு, அரசியல் கட்சியினருக்கும் வளைந்து கொடுக்காத நேர்மையான அதிகாரி என பெயரெடுத்தவர்.
இந்நிலையில்தான் அவர் திடீரென நீலகிரிக்கு தூக்கியடிக்கப்பட்டிருக்கிறார். இதுபற்றி விசாரித்தபோது, “காங்கிரஸ் பிரமுகர் செல்வ ராஜ் என்பவர் பெங்களூருவில் இருந்து ரூ.1 கோடி மதிப்பிலான குட்கா போதைப் பொருட்களைக் கடத்திவந்து மார்த்தாண்டத்தில் இரண்டு குடோன்களில் பதுக்கி வைத்திருந்ததை பறிமுதல் செய்ததோடு, பெரிய நெட் வொர்க்கையும் மடக்கினார் கார்த்திகேயன்.
இதிலிருந்து செல்வ ராஜை விடுவிக்க முயன்ற காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார், எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார
காங்கிரஸால் தூக்கி வீசப்பட்ட டி.எஸ்.பி.!
கன்னியாகுமரி மாவட் டத்திலேயே மிகப்பெரிய சப்-டிவிஷன் தக்கலை. மத ரீதியிலான சென்சிடிவ் பிரச் சினைகள் அதிகம் உருவாவது இங்குதான். கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்னர் இங்கு டி.எஸ்.பி.யாக நியமிக் கப்பட்டார் கார்த்திகேயன்.
முஸ்லீம் மக்கள் அதிகம் வசிக்கும் மக்காபாளையம், திருவிதாங்கோடு, அழகியமண்டபம் ஆகிய பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி ஊர் வலங்களை சிறு சலசலப்பு இல்லாமல் நடத்தியதோடு, அரசியல் கட்சியினருக்கும் வளைந்து கொடுக்காத நேர்மையான அதிகாரி என பெயரெடுத்தவர்.
இந்நிலையில்தான் அவர் திடீரென நீலகிரிக்கு தூக்கியடிக்கப்பட்டிருக்கிறார். இதுபற்றி விசாரித்தபோது, “காங்கிரஸ் பிரமுகர் செல்வ ராஜ் என்பவர் பெங்களூருவில் இருந்து ரூ.1 கோடி மதிப்பிலான குட்கா போதைப் பொருட்களைக் கடத்திவந்து மார்த்தாண்டத்தில் இரண்டு குடோன்களில் பதுக்கி வைத்திருந்ததை பறிமுதல் செய்ததோடு, பெரிய நெட் வொர்க்கையும் மடக்கினார் கார்த்திகேயன்.
இதிலிருந்து செல்வ ராஜை விடுவிக்க முயன்ற காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார், எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார் ஆகியோரின் முயற்சி வீணானது. காங்கிரஸ் தரப்பு போராட்டம் நடத்திய நிலையில், செல்வராஜ் மீதான நடவடிக்கையை தவிர்க்கச் சொன்னார் எஸ்.பி. ஸ்ரீநாத். அதேசமயம், பா.ஜ.க.வினரின் போராட்டத்தால் வழக்கு பதியப்பட்டது.
இதனால் கடுப்பான காங்கிரஸ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் டி.ஜி.பி., உள்துறை வரை சென்றனர். இன்னொருபுறம் கல்குவாரி மாஃபியா ஒருவரிடமிருந்து காவல்துறை உயரதிகா ரிகள் இருவர் ஆடி கார் வாங்கிய விவகாரம் வெளியில் கசிந்ததற்கு கார்த்திகேயனே கார ணம் என்ற தகவல் உச்சஅதிகாரிகளை சூடேற் றியது.
பா.ஜ.க.வினர் ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வின் தயவை நாடியும் கார்த்திகேயன் மீதான நடவடிக்கை இனிதே நிறைவேறியது'' என்கின்றனர் விவரமாக.
-மணிகண்டன்
மாணவர்கள் பணத்தைக் கொள்ளையடித்த சி.இ.ஓ.!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 250-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஆண்டு தோறும் நடைபெறும் பொதுத்தேர்வுக்கான கட்டணத்தை திடீரென உயர்த்தி அறிவித்தார் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி மணிவண்ணன்.
மற்ற மாவட்டங்களை விடவும் தேர்வுக் கட்டணம் கூடுதலாக இருப்பதாக பள்ளி தலைமையாசிரியர்கள், பெற்றோர் இந்த முடிவைக் கடுமையாக எதிர்த்தனர். உதாரணத்திற்கு விருதுநகர் மாவட்டத்தில் 6, 7, 8 வகுப்புகளுக்கு வினாத்தாள் கட்டணமாக ரூ.30 வசூலித்தால் திண்டுக்கல்லில் ரூ.50. அதேபோல், 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கு ரூ.60-க்குப் பதிலாக ரூ.90 என நிர்ணயித்து வசூலிக்க சர்க்குலர் அனுப்பினார் சி.இ.ஓ. மணிவண்ணன்.
வேறுவழியின்றி ரூ.46 லட்சத்தை வசூலித்து தந்து விட்டனர் தலைமையாசிரியர் கள். ஏற்கனவே, பழைய சி.இ.ஓ. ரூ.13 லட்சம் இருப்பு வைத்திருக் கும்போது, குறைந்த செலவே ஆகக்கூடிய பொதுத்தேர்வுக்கு எதற்காக அதிக கட்டணம் வசூலிக்கவேண்டும் என்று கொதிக்கிறார்கள் தலைமை யாசிரியர்கள். சி.இ.ஓ. மணி வண்ணன் மீது பள்ளிகளுக்கு ஆண்டாய்வு விசிட் செல்லும் போது பணம் பார்ப்பது, பணியிட மாற்றத்திற்காக கணிசமாக வசூல்செய்வது போன்ற குற்றச்சாட்டுகள் வேறு வரிசை கட்டுகின்றன.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் சி.இ.ஓ. மணிவண்ணன் தேர்வுக் கட்ட ணத்தை உயர்த்தியது தொடர் பாக கலெக்டரிடம் புகார் தந்தனர். உடனடியாக இந்த முடிவைத் திரும்பப்பெற கலெக் டர் பிறப்பித்த உத்தரவையும் காற்றில் பறக்கவிட்டார் மணிவண்ணன்.
""சென்ற ஆண்டைவிட கூடுதலாக இரண்டு பரீட்சைகள் இருப்பதால் தேர்வுக் கட்ட ணத்தை உயர்த்தினோம். பணம் வசூலித்ததாக சொல்வதெல்லாம் பொய்'' என்று மழுப்புகிறார் சி.இ.ஓ. மணிவண்ணன். ""அவர் வசூல் செய்ததாக சொல்லப் படும் பணத்தைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக் கப்படும்'' என்கிறார் கலெக்டர் விஜய லெட்சுமி.
-சக்தி
நூறே நாளில் கலெக்டருக்கு ட்ரான்ஸ்ஃபர்!
அரியலூர் மாவட்ட கலெக்டராக இருந்த டி.ஜி.வினய் ட்ரான்ஸ்ஃபர் செய்யப்பட்டிருக்கிறார். பொதுமக்களின் நன்மதிப்பை வெறும் மூன்றே மாதங்களில் பெற்ற அவர்மீதான இந்த நடவடிக்கையால் அதிர்ந்து போயிருக்கிறார்கள் பலரும். .
அரியலூர் மாவட்டத்தில் 2,471 நீர்நிலைகள் இருப்பதாக முதன்முறையாக பட்டியல் வெளியிட்டவர் கலெக்டர் வினய். கொள்ளிடம் வழியாக கடலில் கலந்து வீணாகும் பல லட்சம் டி.எம்.சி. தண்ணீரை, அரியலூர் மாவட்டத்தில் தேக்கிவைக்கும் திட்டங்களை செயல் படுத்த முயற்சிசெய்தார் அவர். செந்துறை ஒன்றியத்தில் 153 குளங்கள், ஏரிகளை ஆழப்படுத்த ஒதுக்கிய பெரும்தொகையை செலவு செய்யாமலே வேலை நடந்ததாக பில்போட முயற்சித்தனர் அ.தி.மு.க.வினர். இதுதொடர்பான பொதுமக்களின் புகாரை ஏற்று, தொடர் ஆய்வுகளில் இறங்கினார்.
தளவாய், ஈச்சங்காடு, அயன்தத்தனூர் பெரிய ஏரி மற்றும் புது ஏரி ஆகியவற்றை ஆய்வுசெய்து, மதகு, கலுங்குகள், வரத்து வாய்க்கால்களை சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுச் சென்றார். இந்தப் பணிகள் முழுமையாக நடந்தால் தளவாய் தெற்கில் 460 ஏக்கரும், ஆலத்தியூரில் 160 ஏக்கரும், கடலூர் சம்பேரியில் 1,500 ஏக்கரும் பாசன வசதிபெறவேண்டும் என்று உறுதியாக இருந்தார்.
இப்படி தொடர் ஆய்வுகள் மேற்கொண்டு ஆளுங்கட்சியினர், அதிகாரிகளின் ஊழல் தொழிலில் கை வைத்ததால் நூறே நாட்களில் அதிரடியாக மாற்றப் பட்டிருக்கிறார் ஆட்சியர் வினய். டி.ரத்னா கலெக்டராக வந்திருக்கிறார்.
அரசின் இந்த முடிவை ரத்துசெய்யச் சொல்லும் பொதுமக்கள், “""சிமெண்ட் ஆலைகளால் மாசு, நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு, சட்டவிரோத சுரங்கங்கள் தோண்டுவது போன்ற எண்ணற்ற குற்றங்களையும் வினய் கண்டித்தார். நாங்கள் சந்திக்கும் தலையாய பிரச்சினைகளை தட்டிக் கேட்டதற்காக தூக்கி வீசிவிட்டார்கள். இதைக் கண்டும் காணாதவர்போல் இருக்கிறார் ஊர்க்காரரான கொறடா ராஜேந்திரன்'' என்று கொதிக்கின்றனர்.
-எஸ்.பி.சேகர்