வரம்பு மீறும் விளம்பரங்கள்!

அழகியல் துறை யில் கடந்த 18 ஆண்டு களாக கோலோச்சுகிற அந்த பிரபல நிறுவனம், சேனல்களில் ஒளிபரப்பும் ஹேர்டை ஷாம்பு விளம் பரங்களில் தங்களது தயாரிப்பு குறித்து உயர் வாகப் பேசிவிட்டு, "இனிமேல் சலூனுக்குப் போகாதீங்க' என்று மக்களைக் கேட்டுக் கொள்கிறது.

"நான் ஒரு சினிமாக் காரன் கண்டுபிடிச் சிருக்கேன்' என்று அந்த ஹேர்கலர் ஷாம்பு குறித்து பெருமிதம்கொள் ளும் அந்த நடிகர், "இனி பெண்கள் யாரும் பியூட்டி பார்லருக்குப் போகவேண்டிய அவசியமில்லை' என்கிற ரீதியில் பத்திரிகையாளர் சந்திப்பில் சவால்விடு கிறார்.

ddd

Advertisment

""அந்த ஹேர்கலர் ஷாம்பு நல்லதோ? கெட்டதோ? எதுவாகவும் இருந்து தொலையட்டும். "சலூனுக்கும், பியூட்டி பார்லருக்கும் போகாதீங்க' -இப்படியெல்லாம் விளம்பரப்படுத்தி நடை முறையில் உள்ள தொழில் களுக்கு இடையூறு பண்ணவேண்டுமா?''’ என நம்மிடம் கொதித் தார் அனைத்து மருத்துவ மக்கள் முன்னேற்ற கழகத்தின் விருதுநகர் மா.செ. கண்ணன்.

தொடர்ந்து பேசிய அவர், “""இந்த விளம்பர விவகாரம் குறித்து மருத்துவ சமுதாயத்தினர் மாநில அளவில் கலந்து பேசினோம். இதையெல் லாம் சட்டரீதியில் எதிர் கொள்ள வேண்டிய அவ சியமில்லை. சலூன்களை திராவிட இயக்கத்தின் தொட்டில்கள் என்று பாராட்டினார்கள். திரா விட இயக்கப் பிரச்சாரம் அதிகளவில் நடந்த இட மும் சலூன் கள்தான். தமிழகத்தில் ஆட்சி மாற் றத்திற்கே வழிவகுத் தவை சலூன் கள்தான் என்றால் மிகையாது. காலங்கால மாக மக்கள் சலூன்களைத் தேடி வருகிறார்கள். சேனல் விளம்பரங்களின் மோசடி குறித்து மக்க ளிடம் விளக்குவோம். சலூன்களையோ, அழகு நிலையங்களையோ எந்தக் கொம்பனாலும் முடக்க முடியாது''’என்றார் குமுறலுடன்.

ஒரு தொழில் இன்னொரு தொழிலை நம் கண்முன்னேயே விழுங்கி ஏப்பம் விடப் பார்க்கிறது.

Advertisment

-ராம்கி

போலி பாஸ்போர்ட்டால் கைதான தொழிலதிபர்!

fff

சில தினங்களுக்கு முன்னர் இலங்கையைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவர், போலி பாஸ்போர்ட் வைத்திருந்ததாகக் கூறி சென்னை விமானநிலையத்தில் கைது செய் யப்பட்டார். அவரிடம் நடந்த விசாரணையைத் தொடர்ந்து திருப்பூர் தி.மு.க.வைச் சேர்ந்த ராஜ்மோகன் குமாரும் கைதாகினார்.

இந்த அதிரடிக் கைதின் பின்னணி குறித்து கியூ பிரிவு போலீசாரிடம் கேட்டபோது, “""திருப்பூர் தி.மு.க. வர்த்தக அணி அமைப்பாளரான ராஜ்மோகன் குமார், ராக்கியாபாளையத்தில் போலி பாஸ்போர்ட் தயாரிப்பதற்காகவே ஒரு அலுவலகத்தைத் திறந்து, அதில் பாரதிமணி என்கிற பெண்ணையும் பணியில் அமர்த்தியிருக்கிறார். பாஸ்போர்ட் கேட்டு வருபவர்களிடம் ரூ.30 லட்சம் வரை பெற்றுக்கொண்டு போலியாக பாஸ்போர்ட் தயாரித்துக் கொடுத்திருக்கிறார். குறுகிய காலத்தில் கோடீஸ்வரனாகிய ராஜ்மோகன் குமார், வெளிநாடுகளில் தங்கக் கடத்தலில் ஈடுபட்டதும், அதற்கு சில கஸ்டம் அதிகாரிகள் உடந்தையாக இருந்ததும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரித்து வருகிறோம்''’என்றனர்.

திருப்பூர் தி.மு.க. வட்டாரத்தில் விசாரித்தபோது, ""2006-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்துதான் ராஜ்மோகன் குமார் தன்னை வளர்த்துக் கொண்டார். கட்சியின் சீனியர்களுடன் படம் எடுத்துக்கொண்டு, அதைவைத்தே தன்னை பிரபலமானவர் போல காட்டிக்கொள்வார். சில நாட்களாக மா.செ. செல்வராஜைத் தூக்கிவிட்டு, தன் னையே மா.செ.வாக நியமிப்பார்கள் என சொல்லிக்கொண்டி ருந்த நேரத்தில்தான், ராஜ்மோகன் குமார் மோசடிக்காரர் என்பது அம்பலமாகியிருக் கிறது''’என்கின்றனர்.

நடிகைகள், துணை நடிகைகள் மீது அலாதிப் பிரியம் கொண்ட ராஜ்மோகன் குமார், ஓவியமான நடிகையின் மீது ஈர்ப்பாகி, அவர் நடித்த பார்ட்-2 படத்திற்கு பணத்தை வாரியிறைத்து அதில் நடிக்கவும் செய்தார் என்கின்றனர் ராஜ்மோகனை நன்கு அறிந்தவர்கள்.

-அருள்குமார்

சாதி ஈகோ! காலை உடைத்த மஃப்டி போலீஸ்!

திருச்சி மாவட்டம் உறையூர் பாண்டமங்களத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்தவரான இவர், கடந்த ஜூலை 27-ந்தேதி இரவு தனது இருசக்கர வாகனத்தில் பாண்டமங்களம் அருகே சென்றபோது, சாலையை மறித்தபடி நின்ற சிலரைப் பார்த்து வழிவிட்டு நிற்கச் சொல்லியிருக்கிறார்.

sss

உறையூர் எஸ்.ஐ. அழகுமுத்து, சிறப்பு எஸ்.ஐ. செல்லபாண்டியன், சுகுமார் மற்றும் ஓட்டுநர் இளங்கோ வன் ஆகியோர்தான் வழியை மறித்து நின்றவர்கள். மஃப்டியில் இருந்த அவர்கள், ஜெயக்குமாரை நிறுத்தி "எந்த ஏரியாடா நீ?' எனக் கேட்டுள்ளனர். ஊரை அறிந்ததும் "பாண்டமங்களத் துக்காரனுங்க எப்பவும் திமிரு பிடிச்சவனுங்கதான்' என்று சொன்னபடியே, ஜெயக்குமாரை சரமாரியாக தாக்கி காலை உடைத்தனர். அதோடு நிறுத்தாமல் உறையூர் காவல்நிலையத்திற்கு ஜெயக்குமாரைத் தூக்கிச்சென்று, குடித்துவிட்டு போலீசாரை மிரட்டியதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். கால் மூட்டுப்பகுதி நொறுங்கி நடக்கமுடியாத நிலையில் இருக்கும் ஜெயக்குமார், ஜாமீன் வாங்கிய கையோடு தன்னை இந்த நிலைக்குத் தள்ளியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் கொடுத்திருக்கிறார்.

இந்த நடவடிக்கையில் எப்படியும் தாங்கள் சிக்கலாம் என்று அஞ்சியிருக்கும் சம்பந்தப் பட்ட காவலர்கள், ஜெயக்குமார் சார்ந்த பட்டி யல் சமுதாய கட்சியினரை வைத்தே வழக்கை வாபஸ் வாங்கவைக்கும் முயற்சியில் இறங்கி யுள்ளனர். அதுபோக, எஸ்.ஐ. அலாவுதீன், வக்கீல் மணிபாரதி ஆகியோர் பணம் கொடுத்து வழக்கை வாபஸ் வாங்கச் சொல்லி ஜெயக் குமாரை மிரட்டிய கொடுமையும் நடந்துள்ளது.

""எந்தத் தவறும் செய்யாத என் எதிர் காலத்தை கேள்விக்குறியாக்கி விட்டார்கள். தொடர் மிரட்டலால் தீராத மனஉளைச்சலில் இருக்கிறேன்''’என கதறுகிறார் பாதிக்கப்பட்டவ ரான ஜெயக்குமார். அவரைத் தாக்கிய காவலர் களோ, ஜெயக்குமார் குடித்துவிட்டு தகராறு செய்ததாகவும், அவரது பைக் பள்ளத்தில் விழுந்ததால் கால் முறிந்ததாகவும் பழைய பல்லவியைப் பாடுகின்றனர்.

-ஜெ.டி.ஆர்.