காக்கி அதிகாரியின் டிரான்ஸ்பர் ரகசியம்!

signalதஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் டி.எஸ்.பி. யாக இரண்டு ஆண்டுகள் இருந்துகொண்டு வசூல் வேட்டை நடத்திய ராமச்சந்தி ரன், அவசர அவசரமாக ட்ரான்ஸ்ஃபர் வாங்கி வேலூருக்கு கிளம்பிவிட்டார். ஏனிந்த அவசரம் என்று திருவிடைமருதூர் தாலுகா விற்கு உட்பட்ட போலீசா ரிடம் விசாரித்தபோது…

""டி.எஸ்.பி. ராமச்சந்திரன் திருவிடைமருதூர் வருவதற்கு முன்பு, வேலூரில் மது விலக்குப் பிரிவில் கல்லாக் கட்டியவர். இங்கு வந்த கொஞ்ச நாளிலேயே சாரா யம், மணல் பிசினஸ் கொடிகட்டிப் பறக்க அவர் உதவியதற்காக, கரன்சியை வசூல்செய்து டி.எஸ்.பி யிடம் கொட்டினார்கள்.

திருப்பனந்தாள், பந்தநல்லூர் பகுதிகளில் அ.ம.மு.க.வைச் சேர்ந்த சிலர், டி.எஸ்.பி. ஆதரவோடு மணல்குவாரி நடத்தினார்கள். களமிறங்கிய இன்ஸ்பெக்டர் ஒருவர் மணல்குவாரிக்கு மூடுவிழா நடத்தியதோடு, வழக்குப்பதிவும் செய்தார். இந்த விவகாரம் டி.ஐ.ஜி. லோகநாதன் வரை சென்றதும்தான், டி.எஸ்.பி. ராமச்சந்திரனுக்கு தலைக்கு மேல் கத்தியானது.

Advertisment

இதையடுத்து, திருப்பனந்தாளில் பிடிபட்ட மணல் லாரிக்கு உதவப்போக, அதுவும் டி.ஐ.ஜி. வரை பஞ்சாயத்தானது. தற்போது வேலூர் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவைக் கேட்டு வாங்கியிருக்கிறார். அவரால் ஆதாயமடைந்த காக்கிகள் சிலர் பிரிவு உபசார விழாவுக்கு தயார் செய்தபோது, "அடப் போங்கப்பா... இனி நான் இங்கிருந்தா மணல்குவாரி மேட்டர் வேற லெவலுக்கு கொண்டுபோய் நிறுத்திடும்' என கூறிவிட்டுக் கிளம்பிவிட்டார் டி.எஸ்.பி. ராமச்சந்திரன்'' என்கிறார்கள் விவரமாக.

-க.செல்வகுமார்

போலீஸை அதிர வைத்த முரட்டு போதை!

Advertisment

ss

சென்னை திருவல்லிக்கேணி அருகேயுள்ள மாடாங்குப்பத்தில் ரவுடிகளாக கோலோச்சிய சொறிவிஜய் மற் றும் பல்புகுமார் இடையே நீண்டகால பகை இருந்தது. இதனை சரிசெய்ய சொறிவிஜய்யை தீர்த்துக்கட்டுவதுதான் தீர்வென முடிவுசெய்த பல்புகுமார், அதற்காக நாள் குறித்தார்.

இதனை நோட்டம்விட்ட சொறிவிஜய்யின் தம்பி அறிவழகன், பல்புகுமாரை ஐஸ்ஹவுஸ் பகுதியில் வைத்து கல்லால் அடித்தே கொலைசெய்தார். இந்தக் கொலையில் அறிவழகன் மற்றும் சொறிவிஜய் கைதாகி புழல் சிறையில் அடைக் கப்பட்டனர். ஜாமீனில் வெளிவந்த அறிவழகன், அண்ணன் சொறி விஜய்யை வெளியில் எடுக்கும் முயற்சியில் இருந்தார்.

ss

அப்போதுதான், பல்புகுமாரின் கூட் டாளிகளான வினோத், பாலாஜி, ஜூலி சுரேஷ், ஸ்ரீகாந்த் ஆகியோர் அறிவழகனின் தலையை வெட்டி, மூளையை அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்த தட்டில் வைத்துவிட்டுச் சென்றனர். இந்தக் கொடூரக் கொலைக்கு முன்பாக கொலையாளிகள் முரட்டுப் போதையில் இருந்ததாக சொல்லப் பட்டது.

திருச்சியில் கைதான இந்த நால்வர், சாதாரண போதைப் பொரு ளுக்கு பதிலாக வேறு சிலவற்றை பயன்படுத்தியதாக வாக்குமூலம் கொடுத் துள்ளனர். ஓ.சி.பி. பேப்பரை ஆபரேஷ னின்போது தையல்போடும் (Surgical Thread) நரம்பைச் சுற்றி புகைத்தல், இருமலுக்கு உட்கொல்லும் கோடீன் டானிக் மற்றும் ஆஸ்பிரின் மாத்திரையை கோக் போன்ற குளிர்பானத்தில் கலந்து பருகுதல். இது கஞ்சா, அபினை விடவும் அதீத போதை தருமாம். அதுபோக, கையை கீறிக்கொண்டு அந்த ரத்த வாடையோடு கொலை செய்ய கிளம்புவார்களாம். இந்தத் தகவலைக் கேட்டு காவல் துறையினரே அதிர்ச்சி யடைந்ததாக தகவல் வரு கிறது.

தடை செய்யப்பட்ட இந்த போதைதரும் பொருட் களை விற்பனை செய்துவந்த சிவராஜபுரத்தைச் சேர்ந்த பஷில் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

-அ.அருண்பாண்டியன்

டி.எஸ்.பி.க்கு 2 ஆண்டு சிறை!

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டத்திற்கு வெளிநாட்டில் இருந்து தொண்டு நிறுவனங்களின் மூலம் நிதியுதவி செல்வதாக சந்தேகித்த மத்திய உள்துறை அமைச்சகம், தமிழ்நாடு டி.ஜி.பி.க்கு ஒரு கடிதம் அனுப்பியது. அதில், Foreign Contribution (Regulation) Act (FCRI) அனுமதிபெற்ற நிறுவனங்களைக் கண்டறிந்து, ரகசியமாக விசாரணை நடத்தி அறிக்கை தரவேண்டும்' என உத்தர விடப்பட்டிருந்தது.

ss

அனைத்து மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கும் இந்த உத்தரவைப் பின்தொடர ஆணை யிட்டிருந்தார் தமிழக டி.ஜி.பி. இதை வாய்ப்பாகப் பயன்படுத்தி லஞ்சம்கேட்டு மிரட்டிய டி.எஸ்.பி. செல்வமணிக்கு சிறைக் கதவுகள் திறந்திருக்கின்றன.

இதில் பாதிக்கப் பட்டவரும், திருச்சி லால்குடியில் தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்தி வருபவருமான ராஜமாணிக் கம் நம்மிடம், “""நாங்கள் இளைஞர்களாக சேர்ந்து, தமிழக அரசின் குழந்தைத் தொழிலாளர் பள்ளி நடத்திவருகிறோம். ஒரு நாள் க்யூ பிரான்ச் மற்றும் எஸ்.பி.சி.ஐ.டி. உளவுத்துறை அதிகாரிகள் எங்கள் நிறுவனத்தை ரகசியமாக விசாரித்து, எல்லாம் சரியாக இருப்பதாக சொல்லிவிட்டுப் போனார்கள்.

இது முடிந்ததும் "டி.எஸ்.பி. செல்வமணியை ஒருதடவைப் பார்த்திடுங்கள்' என்றார் லால்குடி ஸ்டேஷன் எஸ்.ஐ. சந்திரசேகரன். அவரோ, "உன் அமைப்பையே ஒண்ணுமில்லாம பண்ணிடுவேன். ஒரு ரூபாய்கூட குறையக்கூடாது' என்று மிரட்டி அனுப்பினார். பிறகு ரூ.25 ஆயிரம் கேட்டார்கள். பிறகு டி.எஸ்.பி. சிலம்பரசனின் அறிவுரைப்படி பணம் கொடுப்பதுபோல் நடித்து சிக்கவைத் தோம்'' என்றார்.

ஏழு ஆண்டுகளாக நடந்துவந்த இந்த வழக்கில் டி.எஸ்.பி. சிலம்பரசன் மற்றும் ராஜ மாணிக்கத்தின் விடாப்பிடியான சட்டப் போராட்டத்தால், டி.எஸ்.பி. செல்வமணிக்கு 2 ஆண்டுகளும், எஸ்.ஐ. சந்திரசேகரனுக்கு ஓராண் டும் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்திருக் கிறது திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம்.

-ஜெ.டி.ஆர்.